20 Nov 2012

பேப்பர்த்தாள்,,,,,காக்கி நிறத்திலும்,வேறு பல வர்ணங்களிலுமாய் இருக்கிற அட்டைகள் உயிர்த்தெழுந்து பேசுவதை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?நான் பார்த்திருக்கிறேன்,அப்படி பார்க்கிற பாக்கியம் கிடைக்கப்பெற்றதெனக்கு கடந்த 18.11.2012 அன்று ஒரு  நண்பகல் நேரத்தில்/

நன்றாகயிருந்தால் ஒரு பெரிய தினசரி காலண்டரின் அளவே கொண்ட அட்டைகள் அவை.

மொத்தம் 21 அட்டைகள்.இருபத்தியொன்றும் ஒன்று சொன்னார்ப்போல ஒரே அளவில் கத்தரித்து வெட்டி எடுக்கப்பட்டது போல/

நாளை நடக்கவிருக்கிற மாநாட்டிலும்,ஊர்வலத்திலுமாய் பிடித்துக்கொண்டு செல்லவும், கோரிக்கை வாசகங்கள் எழுதவும் அட்டைகள் வேண்டும் எங்களுக்குஎன கேட்ட பொழுதில் தோழர்கோட்டை தகவல் சொல்லி அன்பின் மனிதர் சுந்தர்ஜீயிடம் TNGEA அலுவலகத்திற்கு நூல் பிடித்துச் சென்று வாங்கி வந்த அட்டைகள் அவை.

ஒன்று,இரண்டு,மூன்று,,,,,என வரிசையாக ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி மெலிதான (மென்மை பூத்த சணல் கயிறின் பிசுறுகள் சிதறித் தெரிய)சணலால் கட்டி அதை எனது இரு சக்கர வாகனத்தின் முன் வைத்த கணம் அதில் எழுதப்படப்போகிற வாசகங்களைத்
தருகிறேன் எனச்சொன்ன ஆண்டோஅண்ணனின் முகம் பட்டுப்பிரதிபலிக்கிறது லேசாக/

அப்படி பிரதிபலித்த அவரின் இன்முகத்துடனும்,நினைவுகளுடனுமாய் நான் சென்ற இடம் சூப்பர் ஆர்ட்ஸாய் இருந்தது.

அது வெறும் ஓவிய கூடம் மட்டும் அல்ல.தோழைமைகளின் கூட்டுறவு விதைக்கப்பட்டு காட்சிப்படுகிற இடமாய்/

ஓவியம் ,எழுத்து என்கிற எது சம்பத்தப்பட்ட வேலையாயினும் அங்குதான் எங்களின் தஞ்சம் இருக்கும்.

அவர் ஒரு ஓவியர் மட்டுமல்ல,சிறந்த கிரியேட்டரும் கூட,அப்படியான ஓவியர்,கிரியேட்டர்,
நாவலாசிரியர்,தோழர் என்கிற பன்முக பரிமாணங்கள் கொண்ட அவரிடம் தஞ்சம் கொண்ட அட்டைகள் மறுநாள் காலை நான் அதை வாங்கச்சென்ற போது உயிர் பெற்ற எழுத்துக்களாய் நின்று காடசி தந்ததாக/

இப்போது அவை வெறும் அட்டைகளாக தெரியவில்லை.நேற்று மாலை காக்கியும்,இன்னபிற 
வர்ணமுமாய் தன் மேனி காட்டி சிரித்த அட்டைகளின் நிறங்கள் இப்போது ரத்தச்சிவப்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு மனிதஉரிமைகளும்தொழிலாளர்களின் கோரிக்கைகளும் பேசியவாறாய்/
ஒண்ணரை அடி நீளமும்,முக்கால் அடி அகலமும் மட்டுமே கொண்ட இது போன்ற அட்டைகள்தன்மேனிமீதுகோரிக்கைவாசகங்கள்தாங்கிஉயிர்பெற்றுஎழுந்துகாட்சியளிப்பதாயும் வரிய நிலையில் இருக்கிற தொழிலாளர் கோரிக்கைகளை பிரதிபலிப்பதாயும்/

அப்படி பிரதிபலிக்கிற,உயிர்பெற்றெழுந்து உணர்வுகளைச்சொல்லிய வாசகங்கள் அடங்கிய அட்டைகளைஎன்மார்மீதும்,தோள்மீதுமாய்வைத்துசுமந்துசெல்கிறேன்வெறும் அட்டைகளுக்கு உயிர் கொடுத்த தோழர் மணிவண்ணன் அவர்களுக்கு, நன்றி சொல்லியவாறும்,தொழிலாளர் கோரிக்கைகளை அட்டைகளிய என் மார் மீது அள்ளிச் சுமந்தவாறுமாய்/

10 comments:

 1. தகவல்களை அறிந்தேன்...

  எழுத்து நடையை ரசித்தேன்...

  ReplyDelete
 2. தோழரின் கைவண்ணம் பல இடங்களை அலங்கரித்தது. ஆனால் மனித உழைப்பை இயந்திரங்கள் திருடிகொண்டன.

  ReplyDelete
 3. வணக்கம் வேல் முருகன் சார்,பறி போகிற மனித உழைப்பை தின்று செமிக்கிற இயந்திரங்களை கண்டு பிடித்ததும்,கொண்டு வந்ததும் மனிதன்தானே சார்/ஆனால் அதற்கு தன்னை அடகு கொடுத்ததுதான் மிகப்பெரிய கொடுமையாக/

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. நிச்சயமாக அவைகள் உயிருள்ளவை
  பேசும் பொற்சித்திரங்கள் என்பதை
  புரிந்து கொள்ளத் தெரிந்தவர்கள் பாக்கியவாங்களே
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஓவியக் கூடம் மட்டுமல்ல உயிரோட்டம் உள்ள பூங்கா.

  அழகு .

  ReplyDelete
 7. நிச்சயமாக அவைகள் உயிருள்ளவை

  ReplyDelete
 8. வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. மாலதி மேடம் வணக்கம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 10. வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete