18 Nov 2012

சக்கரம்,,,,,,

     
   அப்படியெல்லாம்இருந்துவிடமுடியுமாஎனத்தெரியவில்லை.ஆனால் அப்படியெல்லாம்தான்
இருந்து விட்டிருக்கிறான்.

 அன்று சனிக்கிழமை,அரைநாள்தான் அலுவலக நேரம்.அவனுடன் சேர்ந்து கொண்டு அரைத்
தேரம்அரைப்பள்ளிக்கூடம் எனகேலிபேசுவதுண்டு அவது அலுவல் பற்றி/

 அப்படியான அரைநாட்களில் 8 மணி நேர வேலையை 4 மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டியஅவசியம்.உடலும்,மனமும் பரபரக்க பிஸிக்கலாயும்,மெண்டலாயும் விரைந்து வேலை பார்க்கவேண்டியகட்டாயம்.கட்டாயம்,நெருக்கடி,விரைவு,,,,இன்னும்இன்னுமானமற்றதெல்லாம்
ஒன்று சேர பற்ற வைத்த தீ திரியில் நகர்ந்து கொண்டிருக்கிறதைப் போல விரைந்து வேலை
நடந்துகொண்டிருந்தநேரம்,கைகள் பணத்தைகணக்குப்போட,கணக்குப் போட்டதை சரி
பார்க்கவுமாய்இருந்த நேரத்தில்தான் அன்பின் மனிதர் ஆண்டோவிடமிருந்து போன்.

அண்ணே வணக்கம்ண்னே,நல்லாயிருக்கீங்களா? சொல்லுங்கண்ணே”- அவன்.

அண்ணேஎனஅவன்சொன்னஅவருக்குஅவனைவிட15வயதாவது குறைவாக இருக்கலாம்.
ஆனாலும்அப்படித்தான்கூப்புடுகிறான்.ஏன்அதுஅப்படிக்கூப்புடுகிறான்,எப்படி வாய்த்தது
அப்படியானஒருநல்வாய்ப்புஎனத்தெரியவில்லை.அவனைப்பொறுத்தவரையில்அதுஒரு பெரிய
குறையாகவோகௌரவக்குறைவானநிகழ்வாகவோ தெரியவில்லை.அவன்அப்படி எண்ணவும் 
இல்லை.அண்ணே,அண்ணே,அண்ணேன்தான், அப்படியாய்  வாய்க்கப்பெற்ற அண்ணனிட
-மிருந்துதான் போன்.

நாளைக்கு நடக்கயிருக்குற ஊழியர் மாநாட்டுலயும்,ஊர்வலத்துலயும் புடிச்சிட்டுப்போக கோரிக்கைஅட்டைரெடிபண்ணனும்னே,முடியுமா,யாறோஒங்களுக்குதெரிஞ்ச ஆர்ட்டிஸ்டு
இருக்காராமே?அவர்ட்டசொல்லிகொஞ்சம்செஞ்சிரலாமா?செரமம் பாக்காமஎன அவர்கூறிய 
வார்த்தைகள் அவரைதர்மசங்கடத்தில் நெளியச்செய்கின்றன.

இல்லண்னேஅதுகொஞ்சம்கூடுதலானவேலை,மொதல்லஆர்ட்டிஸ்ட்ட கேட்டுப்பாக்குறேன்,
அவர்சம்மதம் கேட்டுட்டு ஒப்புதல் கெடைச்சபெறகு  பேசுறேண்ணே ஒங்களுக்கு எனஅவன் 
மும்பரமாய் வேலையில் மூழ்கிய சிறிது நேரத்தில் (அரைமணிப் பொழுதில்) திரும்பவுமாய்
ஒருபோன்,“அண்ணேஎன்னாச்சுன்னே,ஏதாவதுசெய்ய முடிஞ்சதா,கேட்டீங்களா ஆர்ட்டிஸ்ட்
கிட்ட என அவர் சொன்ன போதும் சரி,பேசிய போதும் சரி,அண்ணே கொஞ்சம் டைம்குடுங்க,
நான் இன்னும் ஆர்ட்டிஸ்ட்கிட்ட பேசல,பேசி முடிச்சிட்டு சொல்றேன் என்கிறான்.கூடவே கோரிக்கை வாசகங்களை கேட்க உங்களுக்கு போன் பண்ணத்தானே வேண்டியிருக்கும்?
என்கிற இலவச பேச்சுடனுமாய்/

வேலை முடிந்து போன மதியப்பொழுதில் சம்மதம் கேட்ட ஆர்ட்டிஸ்டிடமிருந்து அது
சாத்தியம்,இல்லை.ஒன்றுசெய்யுங்கள்,நமதுதொழிற்சங்கஅலுவலகங்களில்எங்காவது அளவாக
வெட்டி வைக்கப்பட்ட அட்டைகள் இருக்குமாயின் கொண்டு வாருங்கள்முடித்து விடுவோம் வேலையைஎன அவர் சொன்ன வார்த்தைகள் TNGEA அலுவகத்தை நோக்கி சுழியிட வைக்கிறது அவனை/

சுழியிட்டான்.சாலைப்பணியாளர் சங்கத்தோழர் கோட்டையிடம் பேசினான்.அவர் இருக்கிறது அலுவலகத்தில் எனச்சொன்ன வார்த்தை காதில் தேனூற்ற அவன் ணி முடித்து விருதுநகர் TNGEA அலுவலகம் நோக்கிச் செல்கிறான்.

உழைப்பும் தியாகமும்,அர்பணிப்பும் நிறைந்த அலுவலகம் தோழர் பாலுவையும்,தோழர் முத்துராஜுவையும்,இன்னும்வெகுமுக்கியமாகசுந்தர்ஜீயையும்தன்னில்இருத்திவைத்திருந்தது.அவர்களிடம்பேசிவிட்டும்,சிரித்துவிட்டும்,நட்பும்,தோழமையுமாய் இருந்துவிட்டுசுந்தர்ஜீ
எடுத்துக்கொடுத்தஅட்டைகளைப்பெற்றுக் கொண்டும்,ர்ட்டிஸ்டிடம் கொடுத்துவிட்டு வீடு 
வந்து சேர்ந்த 6 மணிக்கு சரியாக சாப்பிட முடியாத மதியச்சாப்பாட்டின் மிச்சத்தைசாப்பிட்டு
க்கொண்டிருந்த வேளை வந்த போன் அண்ணாவினுடையதாய்/

அவரும் ஆண்டோ அண்ணனின் பேச்சையே முன் மொழிபவராய்.சரி என்ற படியே விழுங்குகிறேன் இரண்டாவது கவளத்தை.ஒன்றும்,இரண்டுமாய் விழுங்கிய கவளங்கள்,,,,,,,,,,,,,,, வயிறு நிறைந்து நிறைவு தந்த போது கை கழுவி தண்ணீர் குடித்து முடித்ததும் போன் வருகிறது.

நீண்ட நேரம் ஒலித்தபோனைகையெலெடுத்த போதுஅதில் தஞ்சாவூர் சக்கரபாணியின் குரல் ஒலிக்கிறது. “பஸ் ஏறுகிறோம் நான்கு பேர் இரவு11மணிக்கு,அதிகாலை விருதுநகர் வந்து விடுவோம்.எங்களுக்கென நடக்கவிருக்கிற மாநாட்டிலும்,ஊர்வலத்திலுமாய் கலந்து கொள்ள ஆகவே மாநாடு நடக்கவிருக்கிற இடத்தின் அடையாளத்தை மட்டும் என கேட்கிறது.

சொல்கிறஅடையாளமும்,இடத்தின்வரைபடமும்உங்களுக்கு பிடிபடாது.ஆகவே நீங்கள் வந்து இறங்கியதும் போன் பண்ணுங்கள் என போனை வைத்ததும் மறுபடி ஒரு போன்,பேசி முடித்த்தும் மறுபடி ஒரு போன்,இப்படி மறுபடி,மறு படி என ,,,,,,,,அரை மணிக்கொருதரமும்,
முக்கால் மணிக்கொருதரமுமாக அழைத்த அழைப்பொலி இரவு மணி பத்தைக் கடந்தும் அடங்கவில்லை.

செய்து முடிக்கச்சொன்ன வேலைகளுடன் இன்னும்,இன்னமுமாய் என சேர்ந்து விட்ட வேலைகளின் முடிச்சு அந்தப்பேச்ச்சுகளில் முடிச்சிடப்பட்ட வேளை தூக்கத்திற்காய் தலை சாய்த்த பொழுது இரவு மணி ஆகிப்போகிறது.

“சார்நாங்கள்பஸ்ஏறிவிட்டோம்.அதிகாலைவந்து விடுவோம், “ஸாரி பார் த டிஸ்டபென்ஸ்” என ஒலித்த குரல் தஞ்சை சக்கரபாணியினுடையதாய்/

இப்படி ஒரு வழியாய் பேசி விட்டும்,பதில் சொல்லிவிட்டும்,சிரித்து விட்டுமாய் போனைவைத்த 
வேளை இரவு மின்சாரம் தன் கண்னை மூடி விடுகிறது.

இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் கண் விழித்தும்,மின்சாரம் உயிர் பெற்ற நேரத்தில் கண் அயர்ந்து கொண்டுமாய் இருந்த இரவு தன்னை முடித்துக்கொண்டு விடியலுக்குள்
காலடி எடுத்து வைத்த அதிகாலை ஐந்து மணிக்கு மீண்டும் தஞ்சை சகோதரர்களிடமிருந்து போன்.நாங்கள் வந்து விட்டோம்,மாநாட்டு பந்தலுக்குப்போக வழிசொல்லுங்கள், போய் விடுகிறோம் நாங்கள் என/

இனி என்ன தூங்க?என வாரிசுருட்டி எழுந்து அணைந்து போன கரண்ட வந்து விட்ட
6மணிக்கு வந்தவிட்டகரண்டின்கைப்பிடித்துக்கொண்டுசோம்பல்முறித்து குளித்தெளுந்து
8 மணிக்கு தேடிப்போன ஆர்ட்டிஸ்ட் தந்த கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை வாங்கிக்
கொண்டு கிளம்புகிறான் (வெறும் அட்டைகளாய் இருந்தவை(உயிர் பெற்றஎழுத்தோவிங்களா
ய்) மாநாடு நடக்கிற இடம் நோக்கி/

நேற்று காலை தொட்டு இன்று காலை வரை அடுத்தடுத்து வந்த வந்து கொண்டிருந்த போன் அழைப்பு ஏதுமின்றியும்,ஓய்வின்றியுமாய்/

இப்படியான ஓய்வறியா ஓட்டம் ஒரு புத்துணர்ச்சியை தந்து கொண்டே/    

2 comments:

  1. புத்துணர்ச்சி எப்போதும், என்றும், எங்கேயும் இருக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
    கருத்துரைக்குமாக/

    ReplyDelete