நாய்கள் பெருத்த வீதிகளாகஉருமாறி காட்சிப்படுகிறது ஊர்.வீட்டு மாடியில் ஒன்று,பூட்டப்பட்டிருந்த கேட்டின்அருகாமையாய் ஒன்று எனஉருவம் காட்டி நின்று கொண்டிருந்தநாய்களைப் பார்த்ததும்தெருவில் கூட்டமாய் ஓடியவைகள்சற்றே நிதானித்தும் அந்த வீட்டைச்சுற்றிலுமாய் வட்டமிட்டுக்கொண்டு/கருநிறத்தில் முடிகள் அடர்ந்துவெள்ளை நிற வால் வைத்த நாய்தன் பணி இரை தேடுவதும்,பிற நாய்களுடன் சேர்ந்து சுற்றுவதுதான்என்பதாய் சொல்கிறது.செந்நிறத்தில் நாக்கை தொங்க விட்டுத்திரிந்த நாய் வெள்ளை நாயின்உடல் உரசிக்கொண்டு/சாம்பல் நிறத்திலும்,கருஞ்சாந்து கலரிலுமாய்ஓடித்திரிந்தவை வீட்டின் சுவர் உரசிமுகர்ந்து திரிந்தவாறும்,போக்குக்காட்டி ஓடியவாறும்/அடைபட்டுக்கிடக்கிற இரண்டும்சுற்றித்திரிந்த நாய்களின் சுதந்திரத்தைபெற வேண்டியும்,அதை தெரிந்துஏற்றுகொள்ள வேண்டியுமாய்ஆசைப்பட்டு பேச அவைகளைஅருகில் அழைக்கின்றன.இதைப்பார்த்து விட்ட வீட்டுக்காரர்அவரிலும் வளர்ந்த குச்சியொன்றைஎடுத்து வீட்டைச்சுற்றித்திரிந்தநாய்களை விரட்டுகிறார்.பறி போனதன் சுதந்திரம்வீதியில் கிடக்கசோகம் கப்பிய கண்களுடன்கேட்டில் கட்டப்பட்டிருந்த நாய்இழுத்துச்செல்லப்படுகிறது வீட்டினுள்ளாய்மறுபடியும்,மறுபடியுமாய்/
26 Nov 2012
மறுபடியும்,மறுபடியுமாய்,,,,
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
படமும் வரியும் அருமை...
வீட்டுக்காரரை ஒரு கடி கடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...
வீட்டுக்காரை கடிக்காதவரை நாய்கள் நல்லவையாகவே இங்கு/நாய்களுக்கு மட்டும்தானா இது என ஒருபக்கம் தோனாமலும் இல்லை.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
//சோகம் கப்பிய கண்களுடன்
கேட்டில் கட்டப்பட்டிருந்த நாய்
இழுத்துச்செல்லப்படுகிறது//
நிறைய இப்படி பார்த்ததுண்டு..
மிக அருமையான கவிதை
வாழ்த்துகள்
அழகான கவிதை பாரத்யின் கவிதைகளில் ஒன்றை ஞாபகப்படுத்தியது
வணக்கம் மதுமதிசார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வனக்கம் ஹைதர் அலி சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் சிட்டுக்குருவின் ஆத்மா சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
நாய்க்கு எப்படியோ தெருவில் நடக்கும் மனிதர்களுக்கு மகிழ்ச்சிதான். தெருநாய்களை பார்த்து பயப்படவேண்டியுள்ளது.
நண்பரே தங்களின் இந்த சிறந்தப் பதிவு லிங்க் நன்றியுடன் எனது வலைபூவில்...http://parithimuthurasan.blogspot.in/2012/11/puthuagaraathi.html
Post a Comment