தண்ணீர் குடிக்க மறுத்த
ஆடுகள் இரண்டில்கருநிறம் கொண்டது
என்னை ஏறிடுகிறது பரிதாபமாய்/
முதுகில் பள்ளம் விழுந்தசெவலை ஆடு
என்னை உரசிச்செல்கிறது.
உடல் புல்லரித்து நிற்கிறது
உயரம் கொண்ட மாடுகள்.
அதிலும் அந்த மயிலைக்காளையின்
கோபம் உலகக்கோபம் போலும்.
குட்டையாய் கொம்பு வைத்த மாடு
சாதுவாய் நின்று அசைந்தாடியவாறு/
நனைந்து ஈரம் பாரித்திருக்கிற
இலை தலைகளும்,புற்களும்
லேசாக வெயில் பட்டால்
அல்லது மெலிதான காற்று பட்டு படந்தால்
காணாமல் போய்விடக்கூடும்.சாணமும்
கோமியமும்,ஆட்டுப்புழுக்கைகளுமாய்,,,,,
பற்றிப்படர்ந்திர்ந்த தொழுவத்தை
தண்ணீர் விட்டு கழுவியவுடன் பளிச்சிடுகிற
பட்டியல் கற்கள் பதித்த தரையை
ஏறிட்டவாறும்
ஆடுமாடுகளின் இரைகொள்ளா
நிலையையும் கண்ணூற்றாவனாய்
அங்கேயே நிற்கிறேன்
முன் பனிக்காலமொன்றின் காலையில்/
7 comments:
கவிதை காணொளி போல்
காட்சியை விவரித்துப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
காட்சி கவிதை ஆனது அருமை
வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
ஆட்டு மந்தைகள்,மட்டு மந்தைகள் என்று சொலவதுண்டு, அவற்றில்தான் மயிலை மாடு, ஒத்தக்கொம்பு மாடு, என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். என் நினைவுகள் எங்கெங்கோ சென்றது. ம்ம்ம்ம் நல்லாருக்கு.
அருமை.. ரசித்தேன்...
வணக்கம் செம்மலை ஆகாஷ் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment