26 Nov 2012

துப்பாக்கிப்பூ,,,,


                              
அவ்வளவு துன்பமாகவா ருக்கிறது திருமண வாழ்க்கை.அவ்வளவு கடினமாகியா போகிறது அதன் இலகுவான மற்றும் கடினமான நகர்வுகள்?

சுழல்கிற சக்கரத்தை இழுத்துப்பிடித்து சுழற்றுகிற கைகள் திடீரென பிரேக்கிட்டு நின்று விடுகிறதா என்னகோபமும்,தாபமும்இன்பமும்  போராட்டமும்பூமணமும்புயலும் மென்
தென்றலும் உடல் வருடிச் செல்லவுமாய் இருக்கிற நாட்கள் அவ்வளவு நரகமாகவா ஆகிப்
போகிறது?

அதுவும் "திருமண வாழ்க்கை பூந்தோட்டமா,போராட்டமா"என  பேசுகிற பொழுதுகளில்?கால் முளைத்தும்,விரிந்த இறக்கைகளின் பரப்புபட்டுப் படர்கிற ஆசை நினைவுகளுடன்திருமண வாழ்க்கையினுள் நுழைகிற அல்லது காலடி எடுத்து வைக்கிற இளைஞனுக்கோ அல்லது யுவதிக்கோ அந்த அனுபவம் சூழ்ந்த உலகு புதிதாய் தெரிகிறது.

துவரை தான் பதியனிடப்பட்ட மண்ணிலிருந்து பிடுங்கி வேரோடு வேறோர்  இடத்தில் 
நடப்படுகிறநிலைநிகழ்ந்துபோகிறது.அதுவும்பெண்ணின் வாழ்வில் முற்றிலும் வேறொன்றாகி/
புது இடம்,புது மனிதர்கள்,புது உறவு,புது வாழ்க்கை மற்றும் புதிதான துவக்கம்.

ஆணுக்கு அப்படியில்லை எனலாம்,தான் இருந்த இடத்திலேயோ அல்லது பணி புரிகிற இடம் சார்ந்தோ வாழ்க்கையை சுழியிட ஆரம்பிக்கிறான்.

திருமணவாழ்க்கைஆரம்பித்துசிறிதுசிறிதாய்நகர்கிறநாட்களில்தனதுமனைவியின் மாதவிடாய் 
பிரச்சனையிலிருந்து கர்ப்பகாலம் வரை கவனம் கொள்ளவேண்டியவனாகிப்போகிறான்.

அதுவரை சந்தித்துப்பேசி உரையாடி கேலி பேசித்திரிந்த உறவுகள்,நட்புகள் ,தோழமை வட்டாரங்கள் டீக்குடித்தகடை,சிகரெட் குடித்த இடம்,சினிமா பார்த்த தியோட்டர் மீசை மயிர் காற்றில் அசைய வேகமாக மிதித்துத்திரிந்த சைக்கிள் இலக்கற்றுதிரிந்தசிந்தனை,படக்கென அவிழ்ந்து விடுகிற மனது,,,,,,ன்கி ஈரம் சுமந்த எல்லாவற்றையும்ஓரம் கட்டிவைத்து விட்டு
தன் மனைவியின் உடல்நிலை குறித்த கவலை கொள்ள வேண்டியவனாகிப் போகிறான்.

அப்படி மனம் முழுக்க தனது மனைவியின் நிலையையும் புது திருமணவாழ்வின்நிலையையும் 
சுமக்கிற நாட்களில் அவன் வேறோரு புது உலகத்தில் சஞ்சரிக்கவனாகிப் போகிறான்.

இது நாள் வரை அவன் மனதுள் குடிகொண்டிருந்த நட்புகளையும்,தோழமைகளையும் சற்றே ஓரம் கட்டவேண்டியவனாகிப் போகிறான்.

மேலும்பணமில்லாததால்பள்ளமிட்டபையைசற்றேதடவிப்பார்த்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு ஆகப்
போகிறது எவ்வளவு,?மருந்து மாத்திரை எவ்வளவு விலை சொல்லுமோ?,,,, என்கிற மெலிதான கவலை வட்டத்தை மனதில் தாங்கி அக்கம் பக்கத்தில் உருட்டிப் பெரட்டி நண்பர்கள் வேல்முருகன்,சரனிதா,ரகுபதி சார்,,,,,இன்னும்இன்னமுமான விரிந்த அவனது நட்பு வட்டாரங்
-களில் யாராவதுதான் ஆஸ்பத்திரி போகிற வேளைகளில் தட்டுப்படுவார்களா அப்படி தட்டுப்
பட்டால் அவர்களிடம் பற்றாகுறைக்கு பணம் வாங்கிக்கொள்ளலாமா?

இதுவரையாரிடமும்அப்படிக்கேட்டதில்லை.இப்போது புதிதாய் அப்படி கேட்கும்பொழுது நட்பு குலைந்து விடாதா,?என்கிற நட்பாசையும், தர்மசங்கடமும்மேலிடமனைவியை ஆஸ்பத்திரிக்கு 
இட்டுச்செல்கையில் தொடங்குகிற அவனது மனப்போராட்டம் வாழ்க்கை எனும் பூந்தோட்டம் அமைக்க போராடுவதானவே அமைந்து போகிறது.

அவ்வளவு வலியிலும்வேதனையிலும்ரத்தப்போக்குகளிலும்அசுத்தத்திலுமாய் பிறக்கிற
அழகான குழந்தை மண்பிளந்து துளிர்த்து நெடித்தோங்கி வளர்கிற மரமாய் தன் பரப்பளவு காட்டி சாதித்து நிற்கிறது.

அப்படிவளர்கிறநாள்வரைஅதுவிழுகிறது.எழுகிறது,அடிபடுகிறது,கைகால்களையும்,உடலையும் 
சிராப்புக்குள்ளாக்கியும்,சேதப்படுத்தியும் கொள்கிறது.பின் எழுந்து நின்று மருந்திட்டுக் கொள்கிறது.அவமானப்படுகிறது,வாழ்க்கை கற்கிறது.

இப்படியான நகர்வுகளுடன் பிறந்ததிலிருந்து தன் வாழ்நாளின் முடிவுவரை பாடம் கற்றுக்
கொண்டு வாழ்கிற மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் விழவும்,எழவும் பின் ஜெயிக்கவுமாய் செய்கிறான்.

போராட்டமாக அமைந்து விடக்கூடாதுவாழ்க்கைஎனபூந்டோட்டம் அமைக்கப்போராடுகிறான்.
தன் துணையையும் பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு/

வாழ்க்கையே போர்களம்,வாழ்ந்துதான் பார்க்கணும்”,,வாழ்ந்துதான் பார்ப்போமே,போராடி பூந்தோட்டம் அமைத்து/

(கடந்த 25.11.12 அன்று காலை விருநகர் "இலக்கியா வாசகர் வட்டத்தின்"   பேசு பொருளாக
அமைந்த “திருமண வாழ்க்கை போர்க்களமே,பூந்தோட்டமே”என்றதலைப்பிலிருந்துபிறந்தது. )

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...
This comment has been removed by a blog administrator.
வேல்முருகன் said...

நல்லபதிவு,
திருமணம் எனும் பூந்தோட்டத்தில் பூத்துகுலுங்க போராடவேண்டியுள்ளது.

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/