28 Nov 2012

வேரூன்றி,,,,,

                                                                             
ஆழ ஊன்றிய இரும்பு சூலாயுதம்ஒன்று அங்குமுளைத்துநின்றுஆலமரத்தின் அடியில்காட்சி 
தருகிறது.

அதன் பின்புலமாய் மரத்தில் ஒற்றையாய் விரித்து தொங்கவிடப்பட்டிருந்த மஞ்சள் துணி,
சூலாயுத்தின் மூன்று முனைகளிலுமாய் குத்தப்பட்டு நின்ற எலுமிச்சம்.

இப்பொழுதுதான்இரண்டுநாட்களுக்குள்ளாககுத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றுசனிக்கிழமைநேற்றுவெள்ளிகும்பிட்டசாமிக்கு பக்தியின் அடையாளமாக குத்தியிருக்க  வேண்டும்.
குத்தப்பட்டிருந்த பழங்களின் முகம் வாடாமலும் அதில்  பூசித்தெரிந்த  குங்குமப்பொட்டும்
இன்னும் அழிந்து தெரியாமல் சற்று பச்சையாகவே/

சூலாயுத்தின்பின்னால் மரத்தில் விரித்து கட்டப்பட்டிருந்த மஞ்சள்த்துணி நான்கு பக்கமும் சிவப்பு நிற பார்டர் காட்டி/

மஞ்சள்த்துணிக்கு மேலாக ஒரு அடி அல்லது ஒண்ணரை அடி இடைவெளி விட்டு மரத்தின் மேலிருந்து தொங்கிய பிளக்ஸ் பேனர் சிவப்புநிறஎழுத்துக்கள்காட்டிகடையின் முகவரியையும்,
கடையின் பெயரையும் தாங்கிச்சென்றது.கூடவே எங்களிடம் பிளக்ஸ் வேலை கொடுத்தால் விரைவான டெலிவரியும்,குறைந்த செலவுமே என சொல்லியது.

பேனருக்கு மேலாக காற்றிலசைந்த மரத்தின் இலைகள் கீழே தரையில் படர்ந்திருந்த மரநிழல் அசைத்தது.

தூசியும்அழுக்குமாய் நெடித்தோங்கி உயர்ந்து பரந்து நின்ற இலைகள் மரத்தின் பரப்பளவு
காட்டியும்,தன் ஆகுருதி சொல்லியுமாய்/

நான் அங்கு போன நேரம் காலை 11.30 இருக்கலாம்.வாட்சைப்பார்க்கவில்லை.(இதை வேறு பார்த்துக்கொண்டு எதற்கு என/)

நண்பர்  வேல்முருகன் அவர்களின்அன்புமேலிட்டஅழைப்புஅது.மனதில்தாங்கிச்செல்கிறேன்,
ஒரு கூட்டம் வாருங்கள்,இலக்கிய பேசவும் மனிதம் தெரிந்து கொள்ளவுமாய்என உரைத்த அவரது சொல்லின் நுனி  பற்றி அவ்விடம் நோக்கி.

கூட்டம்நடந்தஇடமாய்கோட்டிட்டு காட்டப்பட்டிருந்தது ஒரு ஷாப்பிங் காம்ளக்ஸின் அண்டர் கிரண்டவுண்டாய் இருந்தது.

எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த அங்கு இடமில்லைஅவ்வளவு பிஸியாக இருந்தது.
கிடைத்த இடைவெளியில் எனது வண்டியை நிறுத்தி இட்டு நிரப்பி விட்டு கூட்டம் நடக்கிற இடம் நோக்கி செல்லாமென்றால் அதற்கு வாசலாய் சூலாயுதம் தாங்கிய மரத்தின் முன் வெளியே காணப்படுகிறது.

அங்கு நிறைந்திருந்த சைக்கிள்களயும்,வாகனங்களையும் தாண்டித்தான் உள்ளே போக வேண்டுமோதாண்டி என்றால்  ஏறி  மிதித்தா என்னஇல்லையில்லை அப்படியெல்லாம்
வேணாம்எனச்சொன்னஉள்மண்டையின்யோசனைசூலாயுதம்  ஊன்றப் பட்டிருந்த மரத்தின் முன் சைக்கிள்களும்,இரு சக்கரவாகனங்களும் நின்றது போக மிச்சமிருந்த சின்ன வெளியை நடைபாதையாக்கி காண்பிக்கிறது.

ஆயிரந்தான் இருந்தாலும் சூலாயுதம் ஊனப்பட்டிருக்கிற வெளி சாமி குடிகொண்டுள்ள இடமல்லவா?அந்தஇடத்தை செருப்புக்காலுடன் கடப்பதென்றால்  கொஞ்சம் சங்கடமாகவே/
ஆனாலும்சங்கடம் சுமந்த மனதுடன் காலடி எடுத்து வைக்கையில் கவனிக்கிறேன்.

சூலாயுதம் நின்ற மரத்தின் வலது புறமாய் உள்நுழைந்து சென்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த காம்ளக்ஸினுள் டாஸ்மாக் கடையையும்,அதன் முன் குழுமி நின் மனிதர்களையும்/


8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல இடத்தில் இவ்வாறு தான் உள்ளன... ஒரு வேளை அது தான் தெய்வமோ...?

கவி அழகன் said...


அண்ணன் அற்புதமான ஒரு சமுக ஓட்டையை எடுத்து முன் வைத்திருக்கிறீர்கள் , நல்ல விடயம்.

அண்ணன் சொல்வதெண்டு குறை நினைக்க வேண்டாம்
ஒரு இடத்தில இரு சக்கர வாகனம் எண்டு வாசிக்கும் போது உச்சி குளிர்ந்த்தேன் சுத்த தமிழ் என்று. பின் பிஸி, சைக்கிள் எண்டு ஆங்கிலம் வந்திட்டு.

ஒரு இடத்தில் சைக்கிள் இருசக்கர வண்டி என்று மாறி மாறி போட்டு குழப்பிடிங்க .
சிக்கிள் - இரு சக்கர வண்டி . ஈர்ருளி
மோட்டார் வண்டி - மகிழ்ந்துந்துருளி
என்ற தமிழை பாவித்தால் மிக்க சந்தோசப்படுவோம்.

வேல்முருகன் said...

கோவில் உள்ள இடத்தில் குடியிருக்க வேண்டும் என்பர்.
இங்கோ குடி உள்ள இடத்தில் கோவில்?

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வனக்கம் கவி அழகன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வேல் முருகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

இது ஒரு தற்செயல் முரணாகவே நமது சமூகத்தில் வேல் முருகன் சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...