வெங்காயங்கள் சற்றே பெரியதாகவும், கொஞ்சம் சிறியதாகவும் கண் உருட்டிச்சிரித்தது
பெரிய வெங்காயம் இரண்டு கிலோ,சின்ன வெங்காயம் இரண்டு கிலோ
முன்று தேங்காய்கள் என வாங்கியிருந்தவைகள் பையினுள் தலை பொதியாமல் வெளியில் எட்டிப்
பாத்துக் கொண்டு சிரித்தது நாணாமல் ,கோணாமல்/
ஏன்அப்படிஎதற்காகச்சிரிக்கிறாய் நீ?என்கிற கேள்வியயெல்லாம்
தாண்டிப் பார்க்கையில் உருண்டோடிய வெங்காயத்தை தரை தொட்டு எடுத்து ஏறிட்டு நோக்குகையில்
நான் வெங்காயம்வாங்கியகடைசற்றேமுரண்பட்டுகாட்சியளிக்கிறதாய்/
அதுஅப்படித்தான்.வெங்காயம்,தேங்காய்(“இங்கு தூத்துக்குடி
வாழை இலை கிடைக்கும் என்கிறபோர்டுடன்”)என்கிறவைகளுடன் வெடி பொருட்களுமாய் நிரம்பித்தெரிந்த
கடையாய் அது.
அந்த இடத்தை பொறுத்த அளவிலும் அந்தக் கடையை பொறுத்த அளவிலும் அது ஒரு நகை
முரணாகவே என்னுள் முளைவிட்டு/
முரணாகவே என்னுள் முளைவிட்டு/
உணவுப் பொருள் விற்கிற கடையில் வெடிபொருள் விற்பதும்,
வெடிபொருள் அட்டைப்
பெட்டியுடன் உணவுப் பொருட்கள் கைகோர்த்துக் கொண்டு கிடப்பதும்
பார்ப்பதற்கு ஒரு விதமாகவே/
“அது அப்படியில்ல தம்பி,பந்தியில் யெல போட்டாச்சுன்னா
அதுல சில்லண்டி யெல இருக்கக்கூடாது.அதுஒருசாஸ்திரம்,இப்பத்தான் எதுவும் கெடையாதே/பந்தியில,யெடம்
கெடைச்சாப்போதும்,உக்காந்து சாப்புட்டா சரின்னு போயிற்றாங்களே”,என்றார் முதல் நாளோ
அதற்கு முதல்நாளோ இலைக்கட்டு வாங்கிப் போயிருந்த சமையல்க்காரர்.
கலர்க்கலராய்,டிசைன் தரித்திருந்த நரம்பு பை அது,சிவப்பு,பச்சை
,ஊதா,மஞ்சள் மற்றும் வய்லெட்எனகலந்து கட்டி நிறம்காட்டியபைநீண்டவருடங்களாய் புழக்கத்திலிருக்கிறது,
வாங்கிய விலைக்கு மேலாகவே உழைத்து களைத்துப் போயிருந்த
அடையாளங்கள் அதன் மேனியெங்கும்/
பத்து ரூபாயென முருகன் கோவில் அருகிலிருக்கிற கடையில்
வாங்கியது.அது வாங்கி இருக்கும் இப்போது இரண்டு வருடங்களுக்கும் மேலாக/
மாதத்திற்கு 50 பைசா தேய்மானத்திற்காக கழித்திருந்தாலும்
கூட இடிக்கிற இரண்டு ரூபாயுடன் இன்னும் கொஞ்சமே பணம் சேர்த்தால் ஒரு புதுப்பை வாங்கி
விடலாம் போலிருக்கிறது.
அப்போது காட்டிய பத்திலிருந்து இப்போது பதினைந்தென விலை
சொல்லி கடையில் தொங்கிய பையைத்தான் இப்போது வாங்க வேண்டும் போலிருக்கிறது.
வார் மட்டுமாய் அறுந்து போயிருக்கவில்லை,கீழே விழுந்ததும்
எதுடா சாக்கு என பையே தெரித்துப் போகிறது.
பையைவாங்கவிரைந்துகொண்டிருந்தநான்இப்படியே கை வீசி தெற்குப்பக்கம்
போனால் தங்கப்பாண்டி தோழர்,மற்றும் முத்துக்குமாரையும்,வடக்கே போனால் மணிக்குமார் தோழர்
என எப்பக்கம் சென்றாலும் இன்னும் கிழக்கையும் மேற்கையும் சேர்த்து கூட இருக்கிற நண்பர்களை
பார்த்தும்,பேசியும் விட்டு வரலாம் என்கிற நினைப்புடன் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிப்பிடிக்காமல்உருண்டோடியிருக்கிறவெங்காயங்களைபொறுக்கிகொண்டிருந்தவேளையில்
அன்பின் மனிதர் டேவிட்டும்
ஒரு நிமிடம் தான் கடைக்காரர் என்கிற முக மூடியை கழட்டி கீழேவைத்துவிட்டுஎன்னுடன்சேர்ந்துபொறுக்குகிறார் கீழே சிதறிகிடக்கிற வெங்காயங்களை/
5 comments:
அனுபவம் அருமை. வெங்காயம் உணர்த்துகிறது பல விஷயங்களை. நன்று.
வணக்கம் பாலகணேஷ் சார்,
நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் சரன் சக்திசார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment