1 Dec 2012

பதியம்,,,,,

                         
முனைமழுங்கிக்கிடந்தஊக்கு ஒன்று முன் வாசலில் தலை வைத்து படுத்துக்கிடக்கிறது தன் வெற்று மேனி காட்டி.

வெள்ளை நிறத்தில் அல்ல, வெள்ளி நிறத்தில்  ஒரு அங்குல நீளமே இருந்த கம்பி தலையும்,
உடலும்,முன் முனை கொண்டதாயும்/

முன்முனையைஇழுத்துப்பற்றிக்கொள்கிறதலைப்பகுதியிலிருந்துஒற்றையாய்நீண்டு இறங்கிய மெல்லிய உடல் ஒரு வட்டமடித்து வெட்கிச்சிரித்து மேல் நோக்கி நீண்டு தன் மழுங்கிப்போன மு னைகாட்டி புள்ளியிடாமல் வரையப்பட்டிருந்த கோலத்தின் அருகாமையாயும்அதன் கை
பிடித்துமாய்/

புள்ளிகள்என்பதுஅதன் ஒழுங்கமைவுக்காகவும் ,சுற்றிலுமாய் இழுக்கப்படுகிற கோடுகள் திசைதப்பி போய் விடாமல் இருப்பதற்காகவுமேயன்றி வேறில்லை என்கிற உண்மையை சொல்லிச்சென்ற கோலம் கலர் பூசப்பட்டு/

வெள்ளைநிற கோடுகள் சுற்றிலுமாய் இழுக்கப்பட்டிருக்க அதனுள்ளாய் பூத்திருந்த பூக்கள்
ஆரஞ்சுவர்ணத்தில் சிரித்துக்கொண்டு/

மஞ்சள்,பச்சை,ஊதா,சிவப்பு,,,,,,,,,என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு  கலர்கள் பண்ணிரெண்டை பூசிக்காண்பிக்கும் கோலங்களை வீதிகளில் பார்க்க நேர்கையில் ஓவியர்கள் தோற்று விட்டதாய் தோணுகிறது கோலங்களை வரைந்த கைகள் முன்பாக/

ஹால்,ஹால்தாண்டிவராண்டா,வராண்டாதாண்டிகீழிறங்கியபடிகள்படிகளைதாண்டிவிரிந்திருந்த முன் நடையில் படுத்து விரிந்து கிடந்த வெளியில் உடல் உரசிப்படுத்துக்கிடந்த கோலம்
தன் கைகோர்த்தும்  தனதருகாமையுமாக  சிதறிக்கிடந்த மென்தூவலான  கலர்ப்பொடிக்கு 
மத்தியில் கிடந்த முனை மழுங்கிப்போன ஊக்கை அடையாளம் காட்டிச்சிரித்த்தாய்/

அப்படி அழகாயும் வெட்கியுமாய் சிரித்து தலை கவிழ்ந்து கொண்ட ஊக்கை குனிந்து கையில்
எடுத்தவனாய் விரைகிறான் அதன் தடம் நோக்கி/

2 comments:

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/