10 Dec 2012

ஸ்வரம்,,,,,,

                 
மூடியிருந்த கதவை திறந்த போது  எதிர்கொண்ட குருவியின் குரல் இனிமை பாய்ச்சியதாய்
என்னுள்/

இடது கையில் சிதறித்தெரிந்த பல்பொடி.வலது கையில் டூத் பிரஷ் தொட்டுத் துலக்கலாம்  என்கிற ஆரம்ப எண்ணத்துடன் நடந்த சமயம் பின் கதைவை திறந்து பின் வெளி சென்று விரிந்திருக்கிற வெற்றுவெளி அடைத்து நிற்கிற வேப்ப மரத்தின் அருகாமயாய் அதன் கை பிடித்துநின்றுதுலக்கிக்கொள்ளலாம்எனஏற்பட்டபிரயாசையில்மனம்உந்தித் தள்ளஹால்,ஹால் தாண்டிய சமையலறை,சமையலறைதாண்டியகுளியலறை,குளியலறையை தாண்டிய பின் கதவைதிறந்தால்தெரிகிற விரிந்த வெளியை மடித்துக்கட்டியலுங்கியுடனும்,வெற்று மேனியில் போர்த்திய துண்டுடனுமாய்எதிர்கொள்கிறேன்.

சிட்டுக்குருவியிலிருந்து கொஞ்சம் பெரிய சைஸாய் தெரிந்தது அது.ஒரு வேளை அதன் அக்காக்குருவியாகவோ,அண்ணன் குருவியாகவோ இருக்கலாம் போலும்/

கொஞ்சம் உருத்திரண்டு சதை வைத்து கண்கள் உருட்டி தலை சாய்க்காமல் விழியோடுவிழி நோக்கி கீச்,,,,,,,,,,என  ஒரு  மென் குரல்  (தொண்டை கட்டியிருக்குமோ அல்லது குரலே
அவ்வளவுதானா?)கொடுத்து விட்டு பறந்து போகாமல் சற்று நகன்றமர்ந்து எனக்கு இல்லை பயம் என்கிற குரல்  ஊன்றி நின்றதாய்/

பயமில்லை போல் அதற்கு.இந்த 52 வயதில் தொந்தி  வைத்து பருத்த என் உடல் கண்டு அதற்கு என்ன பயம் இருக்கப்போகிறது.ஏன் நான் அப்படி நினைக்க வேண்டும் எனத்தெரிய
-வில்லை.இப்படியும் ஒரு நினைப்பு மனச்சமாதானம் கொள்ள/

அது என்னைப்பார்கிறது.நான் அதைப்பார்க்கிறேன்.நான் அதைப்பார்க்கிறேன்,அது என்னைப்
பார்கிறது. மாறி,மாறி நடந்து கொண்ட பார்வை பறிமாற்றங்களுக்கு இடையிலாக வைத்த கண் வாங்காமல் என்னைப்பார்த்த குருவி அருகில் வருவது போலவும் தூர விலகி எட்டெடுத்து வைப்பது போலவுமாய் தாவித்தாவி அமர்கிறது.

அந்த அமர்வு நிலையானதா?அல்லதுதான்பறக்கஎத்தனிக்கிறதயாரிப்பாஎனத்தெரியவில்லை.

தவ்வுகிறது.அமர்கிறது,.இடம் பார்க்கிறது.இடம் மாறுகிறது.சப்தம் கொடுக்கிறது,என்னை நோக்குகிறது.தரை பார்க்கிறது.வலதும்,இடதுமாய் திரும்புகிறது,வைத்த கண்வாங்காமல்
பார்க்கிறது.கை நீட்டினால் ஏறி அமர்ந்து தோளில் இறக்கை போட்டு பேசி நட்பு கொண்டாடிவிடும் போல இருக்கிறதே?அவ்வளவு நட்பு கசிகிறதே அதன் பார்வையில்/

“என்ன செய்கிறாய் நீ?உனது இருப்பு எங்கே?சமீப நாட்களாய் காணமுடியாத உன்னை இப்பொழுதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறதே?யார் நீ?எங்கிருந்து வருகிறாய்?இதற்கு முன்பாக உன்னைப்பார்த்ததில்லையே இப்படி?கண்களில் அன்பொழுகவும்,நட்பு கசியவும் பார்வை படர விடுகிற நீ,,,,,,சிட்டுக்குருவியை விட சற்றே பருத்துக்காணப்படுகிறாய்.ஏறக்
குறைய அழிந்துபோன அல்லது காணக்கிடைகாத ஒரு இனத்தைஉன் மூலமாய் பார்த்து
விடுகிறதிருப்தி எனக்கு.அதுவே பல சமயங்களில் சந்தோஷமளிப்-பதாயும்,ஆறுதல்கொள்ளச்
செய்வதாயும்/

சிட்டுக்குருவின் அதே நிறமும், இறக்கைகளும், நடையும்,  பாவனைகளும் கொண்ட உனது
பெயர் என்ன?உன்னை எப்படி அடையாளப்படுத்தி அழைக்க எனக் கொஞ்சம் சொல்லேன்,,
என அதனிடம் பலவாறாய் சொல் பரப்பிய வேளை எனது விழியும் அதன் விழியுமாய் சந்தித்து கண்இமைக்காமல்பார்த்துக்கொண்டஒரு நேர் கோட்டுப்புள்ளியிலிருந்து விலகி மென்மையாய் தனது பூ உடல் தூக்கிப் பறக்கிறது அருகிலிருந்தவேப்பமரம் நோக்கி/

தினந்தோறுமான அதன் வருகையும்,சப்தமும்,மென் கீச்சிடலும் எது குறித்து எனத்தெரி
யவில்லை.ஆனால்அதனிடம் நிபந்தனையற்ற ஒரு சொல்லை வேண்டுகோய் வைக்க வேண்டி இருக்கிறது.

ரெடியாய்இருக்கிறதுவீட்டின்முற்றம்,உனதுஜோடியையும்,நட்புகளையும்கூட்டிக்கொண்டோ,
தனியாகவோ வா இங்கு கூடு கட்டி வாழ என/  

4 comments:

 1. மிகவும் அருப்புதமான சிந்தனை உண்மையில் ஒரு சிட்டுக் குருவி யுடன் உறவாடி உள்ளத்தை மகிழ செய்வது சிந்தனைக்குரியது பாராட்டுகள்.....

  ReplyDelete
 2. சிட்டுக்குருவியின் உரையாடல் சூப்பர்

  ReplyDelete
 3. வணக்கம் மாலதி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வனக்கம் எஸ் ஆர் ஹெச் அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete