9 Dec 2012

அத்துவானம்,,,,,


                        
எழுதிய கடிதம் வந்து சேர்ந்ததா உனக்கு எனத்தெரியவில்லை.எழுதாத கடித்தின் வரிகள் வார்த்தைகளாய் உருக்கொண்டு அடைகாத்து நிற்கிறது என்னில்/

என்னில் நின்றது பிரதிபலித்து உன்னிலும் விரிய இருக்கிற வேலையில் என்னென்ன பேசினோம், ஏதேது நினைத்துக் கொண்டோம் என்கிற நினைவற்றே இப்போது கேட்கிறேன்.
எழுதிய கடிதம் வந்ததா என/

வரட்டும்வந்துசேரட்டும்.உனக்கும்,எனக்கும் நமக்குமானஉறவைபூக்கச்செய்தும்தக்கவைத்துக்
கொள்கிறதுமான அந்த எழுத்துக்கள் பூத்த பூவின் புதுவாசனையாயும் அறிதலாயும்/

நீளம் கத்தரித்து வெள்ளையாய் செவ்வக வடிவில் தெரிகிற பேப்பராய்அது.வெள்ளைப் பேப்பர், பரிட்சைப்பேப்பர்,பேப்பர்த்தாள்,பேப்பர்க்காகிதம்,,,,,எனபலபெயர்களில்பட்டுத் தெரிந்தஅது என்
கைக்குவந்ததும்கருப்புமைபொதிந்தஎழுத்துக்கள்காட்சிப்படுகிறகடிதமாய் மாறிப் போகிறது 
மென்மை பூத்தும், நினைவுகளின் கிளைபரப்பியுமாய்/

ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,,,,, என்கிற வரிசையில் பக்கங்கள் போதாமல் 16 பக்கங்களில்
கடிதமாய் வார்ப்புற்று வடிவெடுத்து நின்ற அதில் என் மனம் கிளர்த்திய உனது எண்ணங்கள் உன்தலைகோதியும்,உன் கன்னம் தொட்டுமாய் சுழியிடுகிறது.

சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு கிளம்பி 11 மணிக்கும் 10.30 மணிக்குமாய் வீடு தொடுகிற வாழ்க்கை வாய்க்கப்பெற்ற நான் தஞ்சாவூரில் பணி புரிந்த தினங்களின் நகர்வுகளில் நிகழ்ந்தது.

அதுவரைபதியனிடப்பட்டிருந்தவிருதுநகர் மண்ணிலிருந்து பணிமாறுதலில் வேரோடும் வேரடி மண்ணோடும்மட்டுமல்லாது,,,,,,என்கிற உயர் நவிற்சி சொல்லெல்லாம் இல்லாமல் சாதாரணமாகவே“போ,போய்பார், புது வாழ்க்கை, புது மண்,புது  மனிதர்கள்” என உந்தி தள்ளிய
மனதுசுமந்த எண்ண  அலைகளுடனும்,ஆசைகளுடனுமாய் இறங்கி கால் பதித்தமண் அது.
வடக்குவெளி வீதி, பெரிய கோவில், தார்ச்சாலை, பாலம், வாகனங்கள், மனிதர்கள், கடைகள்,
பெட்ரோல் பங்க்,,,,,,அது கடந்து,அது கடந்து என மெடிக்கல் காலேஜ் சாலையில் பயணித்து ரெட்டிப்பாளையம் வருகிற வேளையில் மனதில் உருக்கொள்கிற தங்கும் அறை என்னை கைபிடித்தலைத்துக் கூட்டிச்செல்லும்.

என்னைமட்டுமல்லஎனது மேலாலரையும் என்னுடன் சேர்த்து உள் வாங்கி அடைக்கலம் தந்துகொண்டிருந்தஅறை25ஆயிரம் முன் பணமாயும் மாதம் இரண்டாயிரம்  வாடகையாகவும்
வாங்கிக்கொண்டுஎங்களைதங்கிக்கொள்ளஅனுமதிகொடுத்திருந்ததுபுதுமண்,புது மனிதர்கள்,
புதுவெளி புதுவட்டாரமும் புது பழக்கமுமாய் விரிந்து  காட்சிப்பட்ட மண்ணில் நண்பர்களும்,
மனிதர்களும்அவ்வளவாகபழக்கமாகியிருக்காதநேரம்அலுவலகத்தில்உடன்வேலை பார்ப்பவர்
களைத் தவிர்த்து எவருடனும் அவ்வளவு பரிச்சயமும்,பழக்கமும் இல்லாதிருந்த நாட்களாய் அவை.(வருகிறேன் நான் அங்கு ஆயத்தமாய் இருங்கள் பேசுவதற்கும்,பழகுவதற்கும் என தந்தி கொடுத்தும்,அலை பேசியில் குறுந்தகவல் அனுப்பியும் சொல்லி விட முடியுமா என்ன?)

இருந்தேன்,வேலைபார்த்தேன்,சம்பளம்வாங்கினேன்,சாப்பிட்டேன்.அப்போதுஎன்னிடம் என்ன
இல்லை என்கிறாய் நீ/வேலை பார்க்க அலுவலகம், தங்குவதற்கு இடம்,சாப்பிடுவதற்கு
ஹோட்டல்செலவழிக்கபணம்வைத்தியம்பார்க்கஆஸ்பத்திரி எல்லாம்இருந்தது நான்,நீ,நாங்கள்
நாம் என்கிற பிடிப்பைத் தவிர/

சும்மாசொல்லக்கூடாது.அப்படியானதனித்தஇருப்பை.நான் மற்றும் எனது என மட்டுமே தனித்துகுடிகொண்டிருந்தஉலகமது. அன்றாடங்களில் விடிகிற காலை ஒன்றும் தெரியாது அல்லது ஒன்றையும் பெரிதாய் அறிய வைக்காது. அலுவலகம் விட்டு வந்த மாலை வேளை ஒரு பிரமாண்ட வெற்று வெளியை எதிர் நோக்க செய்து ஏகாந்தத்தை  விதைத்து விடும் உள்ளுள்/

அதுவரைசௌகரியமாகஅல்லதுஉன்னுடனும்பிள்ளைகளுடனும்இருந்துசுகப்பட்டுப்போன,பழகிப்போனமனதுஇப்படிஏகாந்ததேசத்திலும்,அத்துவானவெளியிலுமாய் பிடுங்கி எறியப்பட்ட
நேரமாய்உணர்ந்தபொழுதுஎவ்வளவுநேரம்தான்படிப்பதுஎவ்வளவு நேரம்தான் தோலைக்காட்சி பார்ப்பது?எவ்வளவு நேரம்தான் உடன் தங்கி இருப்பவரிடம் பேசுவது?அல்லது எவ்வளவு வேளைதான் ஏதாவது ஒரு வேலையின் முனைப்பிலும்,கடந்து வந்த பாதையின் தடயங்களை நினைத்துக்கொண்டிருப்பதாய்காட்டிக்கொள்வது?அப்படியெல்லாம்காட்டிக்கொள்ளவும் அது
அல்லாத்துமாய்இருக்கிறநாட்களில்அவிழ்ந்துவிடுகிறமனதில் குடிகொள்கிறதும்,சுழியிகிறதும்  
உனது நினைவும்,பிள்ளைகளதுமாகவே/

இடம் தேடிஓடி இருப்பிடம் அமைத்துக் கொண்ட தெம்புடன் வேலை, சம்பளம் , ஹோட்டல்,
சாப்பாடு,பயணம்,உன்னதும்,பிள்ளைகளதுமாய்சுமந்தநினைவுஎன்கிறநாட்களின் நகர்தலில்
பழகிக்கொள்கிறேன்உனக்கு கடிதமெழுத/

குறுந்தகவல், குறுஞ்செய்தி, அலைபேசி,,,,,,,,, என்கிற மற்றும்மற்றுமான நிறைந்து போன வசதிகள்நம்பிக்கையற்யெல்லாம்இல்லை.

அஞ்சல்அலுவலகத்தில்விற்கும்,கவரும்,ஸ்டாம்பும்நிராகரிக்கப்பட்டுவிடக்கூடாதுஎன்பதற்காக
அல்லாமல் எழுதுவதில் இருக்கிற பிரியம் காரணமாகவும் சௌகரியம் கருதியுமாய் எழுதிக்
கொண்டிருந்தநாட்களில்சிதறித் தோனியவைகளை எழுத்துக்களாய் கோர்த்து எழுதிய கடிதம் வந்து சேர்ந்ததா உனக்கு என கேட்கத்தோணுகிறது.பதிலளி அன்பே/

4 comments:

 1. வழக்கம்போல அருமையான சொற்சித்திரம்
  என்னுள்ளும் பல கடித கால நினைவுகளை
  கிளறிவிட்டுப் போனது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நன்றி ரமணி சார்,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. பத்து வருடங்கள் முன்புவரை நானும் கடிதம் எழுதியுள்ளேன். பலமுறை அந்த சுகமான நிகழ்வுகளை நினைத்து பார்ப்பது உண்டு.

  ReplyDelete
 4. வணக்கம் விச்சு சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete