20 Dec 2012

ஓட்டம்,,,,,,,


                       
எந்த ஒரு தேக்கமும்,முடக்கமும் ஒரு சின்ன அடி எடுத்து வைப்பின் மூலமாக -வும் முனைப்பான ஒரு சிறு ஓட்டத்தின் மூலமாகவும் சரியாகிப்போவதாய்  சொல்கிறார்கள்.

போகக்கூடாது  என  நினைத்த  திருமணத்திற்கு  போனதும்  அப்படித்தான்.
பத்திரிக்கை அழைப்பு,போன்பேச்சு,,,,,,இவை எல்லாவற்றையும் விட தொடர்ந்த கூப்பி டுதலும்,அழைப்பும் உங்களது வருகை அவசியம் குடும்பத்துடன் என்கிற அச்சடிக்கப்பட்ட பேச்சும் அவனது உறக்கத்தில் வந்து உதைக்கிறது.

இத்தனைக்கும் பத்திரிக்கை கொடுத்தவர் வெகுநாள் பழக்கப்பட்ட நண்பர்.
மறுநாள் நடக்கவிருக்கிற மகனின் கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு 9.45 க்கு வந்து பத்திரிக்கை கொடுத்தார்.

மறுநாள் திருமண வீட்டில் எதிர்ப்பட்ட நண்பரின் நண்பர் என்ன பத்திரிக்கை 
ராத்திரிவந்ததாஎனசிரிக்கிறார்.சிரித்துக்கொள்கிறான் அவன் தலையிலடித்துக்
கொண்டே/

திருமண வீடு,கூட்டம்,பந்தி பறுமாறுகிற இடம் என எங்கும் முளைத்து நின்ற 
பார்வையை பெயர்த்தெடுத்து உலவ விட்டான் மண்டபத்தின் வெழியெங்கும்.
பெரும்பாலானமுகம்தெரிந்தநண்பர்கள்மனைவியுடனும்,குழந்தைகளுடனும்/

இவன் மட்டுமேதனித்து நின்றதாய் தெரிந்தது.பொதுவாக இதுவரை நண்பன் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்தோடு போய் வந்து பழக்கமில்லை. பழகிக் கொள்ளலாம் இதன் மூலம் என நினைத்த போதும் நண்பனின் செய்கைஅதை செய்யத்தடுத்ததாக/

பிறகு விடிந்தால் நடக்க விருக்கிற திருமணத்திற்கு முதல் நாள்9.45க்கு வந்து 
பத்திரிக்கை கொடுத்தால்,,,?திருமணத்திற்கு வரவேண்டாம் எனசொல்வது அதன் நோக்கமல்ல. அதற்காக விடுபட்டுப்போய் விடக்கூடாது என்கிறதான அவசரமும் தெரியவில்லை.ஊர் பேசி விடக்கூடாது என்கிற அழைப்பாய் இருக்கலாம்.என்கிறமனப்பிதற்றலும்,அவைகளைச்சுற்றிய எண்ணத்திலுமாக இருந்த பொழுது மாறி,மாறி வந்த அழைப்பும் பேச்சுக்களும் எல்லைக்கப்பால் உள்ள தொடர்புகளும் போக வேண்டாம் என திருமணத்திற்கு போக வைத்து விடுகிறது.

திருமண மணடபத்தைப் பார்க்கிறான்.நிரம்பியிருக்கிறது கூட்டம்.ஆணும்,
பெண்ணுமாய் உடுத்தியிருந்த புதுக்கருக்கும்,மடிப்பும் குலையாத ஆடைகள்.
இதில் நண்பனின் உறவுகளும்,நெருக்கங்களும் மிகவும் பூரித்தும்,மலர்ந்தும்
தெரிந்துமாய்/

சீக்கிரம் திருமணம் முடிந்து விட்டால் கிளம்பிவிடலாம்.மணமேடையைப்
பார்க்கிறான்.தாலிகட்டுகிற அடையாளமே தென்படவில்லை.9.30 டூ 10.30 
முகூர்த்தம்ஆனால்நேரத்தைதாண்டிமணி11ஐஎட்டித் தொட்டுக் கொண்டிருந்
தது.

கைக்கடிகாரம்மணமேடை,என எல்லாவற்றையும் மாற்றி,மாற்றிப்பார்த்தவன் 
மண்டபத்திற்கு வெளியே வந்தான்.நண்பர்கள் சிலரின் போட்டோக்கள் நின்ற 
திருமணவாழ்த்து பிளக்ஸ் மண்டபத்திற்கு எதிரே நின்று அழகு காட்டி சிரித்தது.ஒன்று போதாதென அதே நண்பர்கள் வைத்திருந்தபேனர் அந்த வீதி முழுக்க நான்கு இடங்களில் காட்சிப்பட்டுத் தெரிந்தது.

நன்றாகத்தான் இருக்கிறது இதுவும்.இந்த நண்பர்கள் குழாமில் தானும்
ஒருவனாய் பேன்னரில் காட்சிப்பட்டு சிரித்திருந்தால் பார்க்க நன்றாகவே 
இருந்திருக்கும்.என்னசெய்யஅதிகரித்துவிட்டமனஇடைவெளிஅதற்கெல்லாம் இடம் கொடுக்க தயாராக இல்லை.

திரும்பவுமாய்மண்டபத்திற்குள்போனாலும் பார்த்த நண்பர்களையே எத்தனை  முறை போய்ப்பார்ப்பது?பேசுவது?

கவரில் ரெடியாக போட்டு வைத்திருந்த மொய்ப்பணத்தை தெரிந்த நண்பரிடம்  கொடுத்து மொய் செய்யுமாறு பணித்துவிட்டு கிளம்பும்போதுநண்பனின் மூத்த மகள் இவனை நோக்கி சிரித்தவாறு வருகிறாள்.

”என்ன மாமா இங்க வந்து தனியா நிக்கிறீங்க.கல்யாணம் முடிஞ்சிருச்சுவாங்க  சாப்பிடப்போகலாம் என”/

மனம் அவிழ்ந்து போன அவன் மண்டபத்தினுள் நுழைந்து சாப்பிடுகிற இடம்  நோக்கிசென்றுசாம்பார்வாளியை கையெலெடுக்கிறான்.பந்தி பரிமாறுவதற்கு/


9 comments:

 1. கடமைக்காக கூப்பிடுவது போல கடமைக்கு செல்வதும் தவறுதான். நல்ல நரேஷன்

  ReplyDelete
 2. உறவினர் திருமணத்தில் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
 3. வணக்கம் வேல் முருகன் சார்,
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. வணக்கம் ஆத்மா சார்,அந்த சிம்பலுக்கு என்ன அர்த்தம் தெரியவில்லை.
  பைத்தியக்காரன் அவனாட்டம்
  எழுதுறான் என சிரிக்கிற சிரிப்பா?ச்ச்சும்மா/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டுமே...

  ReplyDelete
 8. வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete