கண்ட கனவு பலிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் பேசவைத்து விடுகிறது.
இரண்டு பெண்கள் ஒரே நிறத்தில் புடவை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.அது திருமண மண்டமா அல்லது வீடா தெரியவில்லை. திருமண மண்டபம்
போல காட்சியளித்த வீடாகவும்,வீடு போல காட்சியளித்ததிருமணமண்டபமா
கவுமே காட்சிப்பட்டுத் தெரிகிறது.
சுவர் பூசியிருந்த கலர் புலப்படவில்லை.பெண்கள் இருவரும்
கட்டியிருந்த புடவையின் கலர் ரோஸ்.அவர்களிடம் போய் கேட்கிறான்.மணிஇரவு
எட்டுக்கு மேலாகிப்போனதே,இந்நேரம் இங்கிருந்து பக்கத்து டவுனுக்குப்போகபஸ்ஏதும் உண்டா என/
நகரிலிருந்து சற்றே உள்வாங்கி நிற்கிற கிராமம் போலும் அது.அதில் எப்படி திருமண மண்டபம்சாத்தியப்பட்டதுஎனத்தெரியவில்லை.அல்லதுஅங்கு
அது எதற்கு என்பதும் புரியாத்தாகவே/
முதல் ரோஸ்க் கலர் புடவைதான் சொன்னாள் ஒரு புடவையை எடுத்து ஜெராக்ஸ்
எடுத்துக் கொண்டார்கள் போலும்.அதேகலர் அதே டிசைன்,ஒன்றுபோல ஓடிய கோடுகளும்,கோட்டின்
மடிப்புகளுமாய்/அதுகூடசரிதான்,அதற்காக இரண்டு பேரும் ஒரே நிறத்திலும், ஒரே அளவிலுமாகவா
இருக்க வேண்டும்? ஒற்றை ஜடை, மல்லிகைச் சரம்,கண்மை லிப்ஸ்டிக் என அமர்ந்திருந்த அவர்களில்
ஒருவரை முதலாமவள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
எங்குபோய்விட்டுஇந்தஇரவில்இங்குவந்தார்கள்என்கிறஞாபமில்லை.அல்லது
தெரியவில்லை. ஒருலோடுவேனில்நாற்காலிபோட்டுஅமர்ந்துவந்து கொண்டிருந்தார்கள்.ஆணும் ,பெண்ணுமாய் இருபது பேருக்கு குறையாமல் இருக்க லாம்.
எல்லோருக்குமாய் மரச்சேர்.இவனுக்கு மட்டும் ஸ்டீல்ச்சேர்.ஊருக்குள் நுழைந்து ஒரு இடது புற திருப்பத்தில் திரும்புகிற போது ஒருடீக்கடை
தெரிகிறது. கடையின் கூரையில் தொங்கிய பெட்ரோமாக்ஸ் லைட்டைச் சுற்றிப் பறந்த பூச்சிகளும்கடையில்விரிந்திருந்ததட்டில்தெரிந்தவடைகளும்பாட்டிலில்அடைக்கப்பட்டிருந்த மிட்டாய்,முறுக்கு
வகைகளும்/கூரை வேயப்பட்டிருந்த கடையை ஒட்டி சற்றுத்தள்ளி ரயில்வே தண்டவாளம் தெரிந்தது.கடையின்
அருகில் ஊனப்பட்டிருந்த போர்டில் ஏதோ எழுதியிருந்தார்கள்.என்னவென தெரியவில்லை.நிதானித்துப்படிக்கவும்
நேரமில்லை.இறங்கி டீக்குடித்தால் நன்றாகயிருக்கும்.
அப்படியான ஒரு நினைப்பு மனதில் தோன்றிய மாத்திரம் வேன் அவனை
விட்டு வெகு தொலைவு சென்றிருந்தது.வலது கையில் சேரை தூக்கிக் கொண்டு இடது கையை வேக
வேகமாக வீசி கொண்டு ஓடுகிறான் அது என்ன மாயம் எனத்தெரியவில்லை. இவன் கண்ட கனவிலெல்லாம்
இதுநாள்வரை ஓட முடிந்திருக்கவில்லை. இப்போது அது சாத்தியப்படுகிறது.
பின்னாடியே விரட்டிப்போய் வேனைப்பிடித்து விட்டான்.வேன் ஒரு திருமண மண்டபத்தின்
முன் நிற்கிறது.வேனிலிருந்து இறங்கிய அனைவரும் கையில் ஏதோ பானம் வைத்து அருந்தி கொண்டிருந்தார்கள்.ஏதாவதுஒருகலர்குளிர்பானமாக
இருக்கலாம்.குளிர் பானத்தின் பேமிலி சைஸ்பேக்கைஒருவர்வைத்துக்கொண்
டிருந்தார் கைக்குழந்தையைப்போல.இந்தக்குளிர் நேரத்தில் இதைப் போய் குடிக்காவிட்டால்
என்னவாம்”?என்கிற நினைப்போடு இவனை அழைத்த இயற்கை அழைப்பிற்கினங்கி திருமண மண்டபத்தின்
பக்கவாட்டாய் இடம் தேடி ஒதுங்குறான் ஒண்ணுக்கிருக்க/
மண்டபத்தின்முடிவுச்சுவர்வரைபோய்வந்துவிட்டான்.மறைவிடம்எங்கும்
தெரியவில்லை.தவிர திருமண மண்டபத்தின் பின் பக்கம் புதர் மண்டிக் கிடந்தது. அங்குசெல்வது உசிதமல்ல என நினைத்துக் கொண்டிருந்த வேளையில்
திருமண மண்டபத்தின் பக்கவாட்டு ஓரமாயும்,பின் பக்க்கடைசியிலுமாய்நின்றகல்மண்டபங்கள்இரண்டில்ஒன்றை
வேரோடு பிடுங்கி புரட்டிக் கொண்டு இருந்தார் ஒருவர்
தனி ஆளாக/
கீழே விழுந்த வேகத்தில் மண்டபத்தின் மேலிருந்த கூம்பு வடிவ முகப்பு உடைந்து சிதைந்து போகிறது. இதையெல்லாம் கண்ணுற்றவனாக வந்த வேலையை சுவரோரமாகநின்று முடித்துக் கொண்டிருந்த
போது அவனை விட்டு சற்றுத் தள்ளி அவனுடன் வேனில் வந்தவரும் நின்று கொண்டு,,,,,,,,,,,/
அவரை இவன் பார்த்துக்கொண்டிருக்கையில் வேன் இவர்கள் இருவரையும்
விட்டுக் கடந்து போகிறது, “என்னவேன்லவந்தவுங்கரெண்டுபேரக் காணோம் என்கிற சப்தமான பேச்சோடு/
இவன் கைகாட்டவும்,சப்தம் போடவுமாய் முயன்ற போது கை தூக்கவும்,வாய்
சப்தம் போடவுமாய் மறுக்கிறது.கால்கள் காட்டிய ஒத்திசைவு, கைகளிலும், வாயிலுமாய் வர மறுக்கிறது.அது
ஏன் என்பது புரியாத்தாகவே/
இந்த இரவில் இங்கிருந்து வெளியேறுவது எப்படி என கைபிசைந்துகொண்டிருந்தவேளையில்
தான் அந்தயுவதிகள்தென்பட்டார்கள்.
“ஒருவரல்லஇருவர்இருக்கிறோம் இங்கு எப்படியாவது இங்கிருந்து வெளியேற வழியிருக்கிறதா
என கேட்க வேண்டும்.அவர்களைப்போய்கேட்டான்,
“இன்னைக்கிவரவேண்டியகடைசிடவுன்பஸ்வரல/உள்ளபோயி உக்காருங்க, யாராவது டூவீலர் வந்தாஏத்திவிடுறோம்.எனக் கூறியவர்கள் இவனிடம் யார் என்னவிபரம்,எனக் கேட்கிறார்கள். இவனும் சொல்கிறான். நாளை நடக்கவிருக்கிற திருமண நிச்சயதார்த்த வீடு இது, வந்து விட்டிருக்கிறீர்கள்அதற்கு,
வந்த இடத்தில்இப்படிஎக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு விட்டீர்கள் எனசொல்கிறார்கள் இருவரும்
சேர்ந்திசைவாக/
மண்டபத்தின் உள்ளே சென்று கூட அமர வேண்டாம்.இதோ இப்படி அமருங்கள் இருவரும் ஏதாவது டூவீலர் வந்தால் ஏற்றி விட்டுகிறோம் என்கிறார்கள். அவர்கள் இருவருமாய்
சொன்னதும் இவன் கையில் கொண்டு வந்திருந்த வேனிலிருந்த சேரிலும் இன்னொருவர் அங்கிருந்த
சேரிலுமாய் அமர்கிறார்.
அந்நேரம்அந்தடீக்கடையின்ஞாபகமும் அங்கு நிறைந்து நின்ற மனிதர்களும்
அவர்களின் நெருங்கிய பேச்சும் ஞாபகம் வருகிறதாய்/
2 comments:
பரவாயில்லையே கனவுகளை ஞாபகத்தில் வைக்க முடிகிறதே?...
வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment