23 Dec 2012

லால்சலாம்,,,,(மாமேதை லெனின் வாழ்கை வரலாறு)

                                        
வணக்கம்  தோழர்  லெனின் அவர்களே/ யார்  சொன்னார்கள்  நீங்கள்  இறந்து விட்டதாக?

இறந்தபின்னரும்அவரது செய்கைகளின் மூலமாய் நினைத்துப் பார்க்கப்படுகிற மனிதர்களுள்  ஒருவராய் நீங்கள்/

இன்றும் உலகம் முழுவதுமாய் இருக்கிற கம்யூனிஸ்ட்டுகளாலும் முற்போக்காளர்களாலும் நினைக்கப்படுகிற மனிதராகவும்,அவர்களதுஇதயத்தின் அருகிலிருந்துஅவர்களது சிந்தையை  ஆக்ரமிக்கிறவராகவுமாய் இருக்கிறீர்கள்.

அவர்களின்செவ்வணக்கமும்,அவர்களின் லட்சியமுழக்கமும்,அவர்களின் கொள்கைப்பிடிப்பும் உங்களை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கிறதுதான் லெனின் அவர்களே/

உங்களைப் பற்றியும், உங்களது வீர வரலாறு பற்றியுமாய் நேரிடையாய் பார்த்து எழுதுகிற பாக்கியம் இல்லைதான்.சரி அதற்காக உங்களைப்பற்றி எப்படி எழுதாமல் விடுவது?

அது வேறொரு தேசம்,வேறொரு வேலை முறை,வேறொருவாழ்க்கைமுறை, வேறு  மாதிரியான சம்பங்கள், உணவு, உடை, பழக்கவழக்கங்கள், இருப்பிடம் இத்தியாதி,இதியாதிகள் ஆனால் எங்கும்  இருந்த வர்க்க வித்தியாசம் அங்கும் இருந்ததுதான்.

அதுஆளும் வர்க்கத்திற்கும் ,ஆளப்படுகிறவர்க்கத்திற்கும் இருக்கிற மிகப்பெரிய இடைவெளி/  அதைசுமந்துகொண்டுஉங்களது தேசமும் கஷ்டப்பட்டுநிற்கிறதுஉங்கள்கண் முன்னாலேயே/

ஆனால் ஆளும் ஜார்மன்னனால் உங்கள் ருஷ்யாவே அடிமை தேசமாய்.ஆமாம் லெனின் அவர்களே நீங்கள் பிறக்கும் போதே  தேசமும் அடிமைப்பட்டே/

அது வரலாற்றின் இருண்ட காலம்.1870 ஏப்ரல் 22ல் உங்களது பிறப்பு அந்த இருட்டில் சிறு ஒளியை ஏற்படுத்துகிறது. ஆமாம் அப்படித்தான் சொல்கிறார்கள், உங்களது வரலாற்றை எழுதியவர்கள்.

உங்களது பிறப்பின் போது சிம்பிர்ஸ்க் நகரமே வசந்தத்தில் திளைத்ததாம்.வானம் பாடிகள் இசைக்க வோல்கா ஆறு நடனமிட்டுஅலைபாய,,,வீதிகளிலும், தோட்டங் களிலும்  பட்சிகளின் கீச்சொலியும்,பிர்ச் மரக்கிளைகளிலும் ஸ்தெப்பி புல்வெளி யெங்கும் காற்று களி நடமாடியதாயும் பதிவு செய்கிறார்கள்.

வோல்காஆற்றின்குறுக்கேஉங்கள் குடும்பத்தை தொற்றிக் கொண்டசந்தோசத்துடன்  நீங்கள் பிறந்து படுத்திருந்த தொட்டிலைப்பார்க்கிறார்கள் உங்களது குடும்பத்தார்கள்.

உங்களது பிறப்புபற்றிஉலகவரலாற்றின்காதுகளுக்குஎந்தத்தகவலும் இல்லையாம் அப்போது/

உலகநாட்களின் நகர்வுகள் அதனதன் போக்கில். “உல்யானவ் குடும்பம்”என அழைக்கப்பட்ட  உங்கள் இல்லத்து  உறுப்பினர்கள் எண்ணிக்கை சற்றே அதிகம் தான் .

தந்தை ”இல்யாநிக்கலாயெவிச்,தாயார் மரியா அலெக்ஸாந்திரவ்னா,உங்களது சகோதர, சகோதரிகளான ஆன்னா,அலெக்ஸாந்தர்,திமித்ரி,ஓல்கா,மரியா மற்றும் விளாதிமிர்”,,,,,,,என கொண்ட குடும்பத்தில் உங்களுடன்சேர்ந்துஎட்டுப்பேர் என அறிகிறோம்.அதனால்தானோ என்னவோ,குடும்பப் பற்றும் மனிதர்கள் மீதான மாறாத அன்பும்,பிரியமும்,நட்பும் காதலும், பிடிப்பும், அதீதமாய் இருந்தது உங்களிடம்/

உங்களது சகோதரர்ஆன்னாவும்.அலெக்ஸாந்தரும்உயர்நிலைப்பள்ளியில் பயின்ற பொழுது நீங்கள்தொடக்கக்கணிதமும்,ஆரம்பப்பாடமும்வீட்டிலேயே பயின்றீர்கள்  ஆசிரியர்  மூலமாக/

புத்தகப்பாடங்கள் தவிரவும்உங்களது தாயார்மூலமாகஉங்களுக்குவீரவரலாற்றுக் கதைகளும், உலக நடப்புகளும்,நாடுகளும் என பல கதைகள் சொல்லப்பட்டன. நெப்போலியன் ருஷ்யா மீதுபடையெடுத்ததையும்பரதினோஎன்னும்கிராமத்தின்அருகே அவனுடைய படைகளுக்கும்,  ருஷ்யப்படைகளுக்கும்  நடந்த போர் பற்றிக்கூறினார்கள்.குளிர்கால மாலைகளில் உங்களது தாயார் சொன்ன கதைகள் கணக்கிடவே முடியாதது.

அந்தமாலைநேரங்களும் ,ஜன்னல் கண்ணாடிகளின் மேல் வெண்பனி வரைந்த கோலங்களும்   தாயாரின் குரலும்,புத்தகங்களின் பக்கங்கள் திருப்பப்படும் சரசரப்பான ஒலியும் உங்களை   வேறோர்உலகுக்குஇட்டுச்செல்லும்தோழரே/ மேலும் அந்தக்கதைகள் உங்கள் உள்ளத்திற்கும், வீரத்திற்கும் உரமாய் இருந்து உள்ளது.

புத்தாண்டுவிழாவிற்குமுன்பனிக்காலத்தின்உச்சத்தில்இருந்தமாலை வேளை களில்குழந்தைகள்அதிகஉற்சாகத்துடன்இருப்பார்களாமே?அதற்கு நீங்களும்  உங்கள் குடும்பத்தினரும் விதிவிலக்கா என்ன?அந்தவிதிவிலக்கில்லா சந்தோச த்தையும், விளையாட்டையும் பார்த்து தங்களது தந்தை இப்படிக் கூறினாராம். “இப்பொழுது போல எப்பொழுதும் இப்படியே ஒற்றுமையாகவும்அன்பாகவும் இருங்கள் என் அன்புக்குழந்தைகளே” என்றாராம்.

உங்களது வீட்டுக்குப்பின்னால் இருந்த தோட்டம் சிறியதுதான்.ஆனால் அதில் இல்லாத மரங்கள் இல்லை எனலாம்.அதற்கு மஞ்சள்ச் சோலை என்ற பெயருமாமே?அதிகாலை எழும் நீங்கள்  உடற்பயிற்சி, குளியல் எல்லாம் முடித்து விட்டு தோட்டம் போய் விடுவீர்கள்.இரவில் உதிர்ந்த ஆப்பிளைச் சேகரிப்பதும், பூச்செடிகளுக்கு நீர்பாய்ச்ச கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துவந்து நிரப்புவதும் உங்கள் வேலை.

தினந்தோறும் ருஷ்ய மொழியில் பேசுவதும்,ருஷ்யமொழியில்பயில்வதும் எளிதாய் இருக்கும் ---தான்.ஆனால் வாரநாட்களில் ஒவ்வொரு தினமும்,ஒவ்வொரு மொழியாய்  கற்க வேண்டும் என்பது உங்களது தாயாரின் கருத்து.

இன்று பிரஞ்சு மொழி என்றால்,மறுநாள் ஜெர்மன் மொழி,மறுநாள் வேறு மொழி அதற்கு மறுநாள் இன்னொரு மொழி,,,,,,,,என அயல் மொழிகளைப் பற்றி அறிதல் வேண்டும் என்பது தங்களது தாயாரின் ஆழ்ந்த கருத்து.,,,,,,,,,,,,,,, 

                                                            
                                                                                    தொடரும்,,,,,,,,,,,
                                                                       
                                                         

5 comments:

அழகிய நாட்கள் said...

சாலையோரன் என்ற பெயரில் வந்த லெனின் பற்றிய கடித வடிவிலான சிறி நூலை நான் அறிவேன். நன்றி

vimalanperali said...

வணக்கம் தோழர்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

இராஜராஜேஸ்வரி said...

கிறிஸ்துமஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள்...

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்.
இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.