Showing posts with label சொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம். Show all posts
Showing posts with label சொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம். Show all posts

7 Jul 2017

நிழல்களை காவு கொண்ட உருக்கள்,,,/

பரந்துபட்ட ஜன்னலின்நிழலை இவனது இடது உள்ளங்காலின்உருமறைத்துக் கொள்கிறது.உள்ளங்காலின் உருவை விட பரந்துபட்ட ஜன்னலின் உரு சற்றே பெரிதாகவும் அகலம் காட்டியுமாய்/

இருந்தபோதும்கூட கால் இருந்த தூரத்தையும் ஜன்னலின் நிழல் படர்ந்திருந்த தூரத்தையும் கணக்கில் கொள்ளும் பொழுது கொஞ்சமும் பிசகு படாமல் மறைப்பு தொடர்கிறதுதான்,கண் முன்னால் வைத்து விட்ட சின்னக்கல் போல/

கிராதி கம்பி வைத்த ஜன்னல் மேலும் கீழுமாய் இழுக்கப்பட்டகம்பிகளால் டிசைன் செய்து நெசவிடப்பட்டிருந்தது அது பார்க்க அழகாகவும் சிறியதா கவும் இருந்தது,

இன்னும் பெயிண்ட செய்யப்படவில்லை.ஜன்னலை வாங்குற பொழுது கம்பி களின் மீது பூசப்பட்டிருந்த ரெட் ஆக்ஸிட் பெயிண்ட் மட்டுமே கொண்டு காட்சிப்பட்டதாக/

இப்பொழுது மரம் விற்கிற விலையில் மரம் வாங்கி ஜன்னல் செய்வது கட்டுபடியாகாதென்றும் அப்படியாய் செய்வது தேவைஇல்லாததென்றும் கூறிய நண்பனின் பேச்சைக்கேட்டு கந்தன் மர டிப்போவில் வாங்கிய ரெடி மேட் ஜன்னல்தான் இது,

ஜன்னல் விற்ற கடையை விட ஜன்னலை வடிவமைத்தவர் பேசிய பேச்சு நன்றாக இருந்தது,எத்தனைக்கு எத்தனை அளவு கொண்ட ஜன்னல் இது,எந்த மரத்தால் செய்தது,நீங்கள் கட்டிய வீட்டில்ப்பொருத்தப்போகிற இடத்திற்கு இந்த ஜன்னலே போதுமா இல்லை இதை விட சற்றே அதிக விலை கொண்ட கொஞ்சம் நயமான மரத்தால் செய்த ஜன்னல் வேண்டுமா எனச்சொல்லி விடு வார்,

அவர் பேசிய பேச்சே ஜன்னலை வாங்க வைத்து விடுகிறது,அல்லது வாங்கு கிற முடிவிற்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

ஜன்னலை வாங்கப்போன அன்று இரு சக்கர வாகனத்தை பாய் சைக்கிள் கடையோரமாய்தான் நிறுத்தியிருந்தான்.ஜன்னலை வாங்கி விட்டு திரும்பி வரும்போது எதிர் வரிசையில் பாய் கடைக்கு எதிர் வரிசயில் இருந்த ரேஷன் கடையில் சீனி மண்ணெண்னை வாங்க கூட்டம் வரிசையாய் வால் பிடித்து நின்றிருந்தார்கள்,

அன்று மதியமே அரிசியும் போடப்போகிறார்கள் எனப்பேசிக்கொண்டார்கள். புதிதாகவந்தஆபீசர்கொடுத்தஆலோசனைதானாம்.முடிந்தால் உணவுப் பொரு ளை யும் எரி பொருளையும் ஒரே நாளில் வழங்குங்கள்,

நமக்காவது உத்திரவாதப் பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது,ரேஷனில் சாமான் வாங்க வருகிறவர்களில் பாதி பேருக்கும் மேலே அந்த உத்திரவாதம் கூட இல்லாத நிலையில் இருப்பவர்கள்.அவர்களுக்கு உதவுவது நாம் செய்த புண்ணியம்/

ஆகவே ரேஷன் வாங்க வருகிற அவர்கள் எரிச்சல் படுத்தினால் கூட கோபப் படாமல் பணியாற்றுங்கள் என சொல்லிவிட்டு விட்டார்.

அவரது சொல்லையே தேவவாக்காக ஏற்று செயல்படுகிற ரேஷன் கடை ஊழியர்களை அந்தக்கடைக்கு வருகிற மக்கள் தூக்கி வைத்து கொண்டாத குறையாகத் தான் வைத்திருந்தார்கள்,.

என்னதம்பி,,,,,,எண்ணெண்னே,என்னங்கய்யா,வாங்க சார்,என்கிற சொல்லாக்க மும் மாரியாதையும்தான் அங்கு ஓடியது.அது தவிர்த்து வேறில்லை.

அந்தக்கடைக்கு ரேஷன் பொருட்கள் இறக்க லாரி வந்து விட்டால் ரேஷன் கடைக்கு எதிர்த்தாற்போல் இருக்கிற பாய் சைக்கிள் கடைக்காரர்களும் அங்கு வந்து போகிறவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

அவ்வளவு இடைஞ்சலான இடத்தில் லாரி வந்து திரும்பி அதன் பின் பக்கம் காட்டி லோடு இறக்கத்தோதாய் நிற்க வைப்பதற்குள்ளாய் போதும் போதும் என ஆகிப்போகும்,

லாரியை நேராக க்கொண்டு வந்து நிறுத்தி ரிவர்ஸ் எடுக்கும் போது மிகச் சரி யாக சைக்கிள் கடை வாசலில் வந்து முட்டும் லாரி,இல்லையெனில் முட்டு வது போல் வரும்,சமயத்தில் சைக்கிள் கடையின் முன் பகுதியில் கொஞ்ச மாய் ஏறித்தான் இறங்க வேண்டி இருக்கும்.

அது பற்றி சைக்கிள் கடை பாயோ லாரி டிரைவரோ கவலைப்பட்டதில்லை. பாயிடம் கேட்டால் வாஸ்தவம்தான் இது கரணம் தப்புனா மரணம்ங்குற யேவாரந்தான்,இருந்தாலும்ஒரு ஐந்நூறு பேரு சாப்புடறதுக்கு பொருள் வருது, அத நம்ம நொட்ட சொல்லி வம்பிழுத்தமாதிரி ஆகிறக்கூடாது,அதான் என்பார்/

பக்கத்து சலூன் கடைக்காரர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பவ ராக இருந்து கொண்டிருப்பவர் பாய் சொன்ன அதே சொல்தான் என்னதும், வேறு பெரிதாக ஒன்றுமில்லை என்பார்.

பாயிடம் புதிதாக சைக்கிள் மாட்டிய ஒரு நாளில் அவர்தான் சொன்னார்,சார் சைக்கிள் மாட்டிறது என்னவோ பையனுக்குத்தான்னாலும் கூட இப்பதைக்கு சைக்கிள் ஒங்களுத்தான் தேவை ,ஏன்னா ஒக்காந்துக்கிட்டே இருக்கீங்க,வயசு ஐமதுக்கு மேல ஆகிப்போச்சி.

எனக்கெல்லாம்அம்பத்திரெண்டுமுடிஞ்சிஐம்பத்திமூணுஅடியெடுத்துவைக்கிது, நான் நின்னுக்கிட்டே தொழில்ப்பண்ணுற ஆளுதான்னாலும் கூட எனக்கு இப்ப கொஞ்சம் யோசனையா இருக்கு பெருத்துப்போன ஒடம்பப் பாத்து.நான் இதோ சைக்கிள்லதான் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கேன் என்பார்.

வாஸ்தவம்தான்அவர் சொல்வதும் இனிமேல் தினம் பத்து கிலோ மீட்டர் தூர மாவது சைக்கிள் ஓட்ட வேண்டும் என முடிவெடுத்தவனாக வந்தவந்தான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட சைக்கிளை தொடக்கூட இல்லை.

மித மிஞ்சிய சோம்பேறித்தனமும் ,மன அலுப்பும் பிறகு பார்த்துக் கொள்ள லாம் என்கிற தள்ளிப்போடலும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

வீட்டை ரீமாடல் செய்து கட்ட வேண்டும் எனச் சொன்னபோது அல்லது அதற் கான வித்தை மனதில் ஊனிய போது மனைவி சொன்னாள், ”செய்யப் போற வேலையோட வேலையா சேத்து அடுப் படியமாத்திக் குடுத்துருங்க,

”இப்ப இருக்கிறயெடத்துல இருந்துக்கிட்டு என்னால நிம்மதியா ஒரு வேலை கூடசெய்ய முடியல,சேந்தாப்புல அரை மணி நேரம் அடுப்படியல நின்னு வேலை செய்ய முடியல, உக்காந்து காய்கறி நறுக்க முடியல, மிக்ஸியில ஒரு சட்னி வச்சி அரைக்க முடியல,ஒரு தோசை சுட முடியல, இட்லி அவி ச்சி எடுக்க முடியல.நின்னு சோறு வைக்க முடியல,வேக்காடா வேர்த்து ஊத்துது. ஒடம்பு.வேலைசெய்யவேஎரிச்சலாப்போகுது,ஏங்ஒடம்பேஎனக்கு அந்நியமாத் தெரியுது,இதுபோலானபொழுதுகள்ல,,,எரிச்சலாவும்கோபமாவும்போகுது,தவிர இப்பிடியேவேக்காட்டுலவெந்துட்டுக்கெடக்குறதுனாலஏதாவதுஒன்னுஒடம்புல வந்து தொந்தரவுங்குற பேர்ல ஒட்டிக்கிருது.

”சமயத்துல பேசாம சமையக்கட்ட வுட்டு ஓடிறலாமான்னு தோணிப்போகுது, அப்பிடிப் போனா எத்தனைக்கு கோவிச்சிக்கிட்டு எங்க போயி நிக்கிறது,நான் மட்டுமா பொம்பளைங்கள்ல பாதிப்பேருக்கு மேல எல்லாரும் அடக்கி வச்சி ருக்குற கோவத்தையும் வேகாலத்தையும் மனசுல வைச்சிக்கிட்டு எங்கிட்டா வது பேறதுன்னா இந்நேரம் கோவிச்சிட்டுப் போயி தெசை தெரியாமயில்ல நின்னுக்கிட்டு கெடந்திருக்கணும்,

“அதெல்லாம் இல்லாம அடுப்படியே கதின்னு கெடக்கமே அதுலயிருந்தே தெரியலையா,நாங்க மீறமாட்டாத ஆளுன்னு/

“நான் பொறந்த வீட்டுலயும் அடுப்படி இருந்துச்சி ,அது விறகு அடுப்புதான், இந்த மாதிரி ரூமு ரூமா பிரிச்சு வைச்ச வீடெல்லாம் கெடையாது,ஒரே ஹால்தான்,அதுலதான் அடுப்படி படுக்க ரூமுன்னு கண்ணாலேயே அளவெ டுத்தது போல நாங்களே பிரிச்சி கட்டி வச்சிருந்தாங்க,

அப்பிடி பிரிச்சி வைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்துச்சி. இல்லை ன்னா வீடு வீடா இருக்காது,ஒரு சத்திரம் போலத்தான் இருக்கும்,மடக்கி வைக்கப்பட்டஒரு ஹால்ல ஒருபக்கம் அடுப்படி,அதுல இருந்து நீண்டு வந்தது போல அடுப்படி இருக்குற வரிசையிலயே தண்ணி வைக்குற யெடம். அடுப் படிக்கும்தண்ணிக்கொடம் வைக்கிற பட்டியக்கல்லுக்கும்ஊடால மடக்குப் போ ட்டு ஒரு யெடம்,

“என்னதான் மண் அடுப்பா இருந்தாக்கூட வெறகு வைச்சி எறிக்கிறதுக்குத் தோதா அமைப்பா நல்லா இருக்கும் பாத்துக்கங்க, அடுப்படி, பொங்கி வைச்ச சோறு கொழம்பு சட்டிகள யெறக்குறதுக்கு அந்தமடக்கு,அத ஒட்டி தண்ணிக் கொடம் வைக்கிற பட்டியக்கல்லுன்னு அமைப்பா இருக்கும்,

சமைக்கிறவுங்களுக்கும்அடுப்படியிலமத்த மத்த வேலை பாக்குறவுங்களுக் கும் ஈஸியா இருக்கும்,

“அந்த ஈஸியும் அமைப்பும் இப்பம் லட்சக்கணக்குல போட்டுக்கட்டுன வீட்ல இல்ல,அந்த சௌகரியமும் காத்தோட்டமும் கூட இல்ல,என்னதான் கேஸ் அடுப்பு,குக்கரு,மிக்ஸி கிரைண்டருன்னு இன்னும் இன்னுமான சௌகரியா மானபலதுவந்துட்டப்பக்கூடவும்அந்த மண் அடுப்புல ஈயச்சட்டியில சமைச்சி சாப்புட்டப்ப இருந்த சௌகரியம் இப்பம் இல்ல,

“ஆமாம் சரி அதெல்லாம் எதுக்கு இப்பம் போயி ஒங்களுக்கு ஞாபகப்படுத்துன மாதிரி படுத்திக்கிட்டு, ஊருலதான் ஒங்க வீடு எங்க வீட்ல இருந்து நாலாவது வீடுதான,என்னத்தையாவது சாக்கு வச்சி மூச்சிக்கு முன்னூறுதரமும்,ஒரு நாளைக்கு நூத்திப்பத்து தடவைக்கு மேலயுமா எங்க வீட்டுக்கு வந்துருவீங்க;

“என்னைய பாக்கணும்ன்னு சாக்கு வச்சித்தான் நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சி போச்சி,எங்க வீட்ல எல்லாருக்கும்.சரித்தான் நல்லபையன் இவனுக்கு நம்ம பொண்ணு வாக்கபட்டா நல்லாயிருப்பான்னு நம்பி அவுங்களும் அனுமதிச் சாங்க,நீங்களூம் அத்தன தடவை வந்தாலும் நீங்களா போட்டுக்கிட்ட ஒரு எல்லைக் கோட்ட தாண்டாத ஒரு ஆளா ஒங்கள் பாவிச்சிக்கீட்ங்க,

“அதமீறிஎன்னையப் பாக்கனும்ன்னு ஆசைப்பட்டாக்கூட கண்ணோட கண்ணா ஒரு பார்வை, அவ்வளவுதான்.அந்த பார்வை கனிஞ்சி நீங்க என்னய கை பிடிச்சப்ப நம்ம ரெண்டு பேருக்கும் மனம் கனிஞ்சி போன மாதிரி மத்த யாருக்கும் நடந்துருக்குமாங் குறது சந்தேகமே/

”அப்பம் வாடகை வீட்ல யெறநூத்தி சொச்சத்துக்கு ஆரம்பிச்ச வாழ்க்கை தோளுக்கு மேலரெண்டு புள்ளைங்க வளந்து நிக்கிற இப்பக்கூட சொந்த வீட்ல தொடருது சந்தோஷமா,

“அந்த சந்தோஷம் நெலைக்கணும் மொதல்ல, எத்தன யெடர் பாடு வந்தாலும் ன்னு சொல்லிக்கிர்றேன்”எனச்சொல்லி ஆரம்பித்த பேச்சை இடைமறித்தவ னாகவும்கவனத்தைதிசைதிருப்பியவனாகவும்சமையலறையைகவனிப்பவ
னாய் அவதாரம் கொள்கிறான்,

டாணாப்பட மடக்கிப் போடப்பட்டிருந்த கடப்பக்கல் மேடை கறுப்பாக உருவம் காட்டி கால் நீட்டி படுத்திருக்கிறது, அதன் மீது மேடையின் நடு நாயகமாய் அமர்ந்திருக்கிற கேஸ் ஸ்டவ்,அதன் இடது புறமாக வைக்கப்பட்டிருந்த மிக்ஸியும் கிரைண்டரும்,வலது புறமாய் வரிசை காட்டி அமர்ந்திருந்த தண் ணீர் குடங்கள் மூன்று, அது போக தண்ணீர் குடங்கள் வரிசை காட்டி நின்றி ருந்த இடத்தை விட்டு சற்று தள்ளி சாப்பாட்டுத்தட்டுகள் மற்றும் கரண்டிகள் வைத்திருந்த சில்வர் ஸ்டாண்ட் அதை ஒட்டி இருந்த சிங்க் மற்றும் இதர இதரவையாய் அடையாளம் சுமந்து கொண்டிருந்த சமையலறையை மாற்ற இவனுக்கு இஷ்டம் இல்லை என்ற போதிலும் மனைவியின் விடாப்பிடியான பிடிவாதமும்,இரைந்து பட்ட இரைஞ்சலும் இவனை சம்மதம் சொல்ல வைத் தது.

இவனுக்கானால்ஒரேபிடிவாதம்கிழக்குப்பக்கமாய்பார்த்துஇருக்கிறஜன்னலை திறந்தால் வருகிற சூரிய வெளிச்சம் சமையலறையில் பட்டால் உடலுக்கு நல்லதுஎன நினைத்தான்.

அதை மனைவியிடம் சொன்ன போது ரொம்ப ஈஸி,என்ன இப்பொழுது புதிதாக கட்ட இருக்கிற சமையறையில் கிழக்குப்பக்கமாய் பார்த்து ஜன்னல் வைத்து விட்டால் முடிந்து போகிறதுவிஷயம் என்றாள்,

சரிதான் அதுவும் என கட்டி முடித்த சமையலறை டைல்ஸ்கள் மீதுதான் ஜன்னலின் வெளிச்சம் விழுந்திருந்தது பரவியும் படர்ந்துமாய்/

பார்க்க ஆடம்பரமாக இல்லாமல் மிகவும் எளிமையாக இல்லாமலும் நடு வாந்திரமாய் இருந்த டைல்ஸ்கள் கண்ணுக்கு லட்சணம் காட்டியே/

நந்து அண்ட்கோவில் டைல்ஸ்கள் வாங்கிய போது டாக்டர் அண்ணனையும் சீனியையும் சொல்ல வேண்டி வந்தது, இருவ ரையும் சொன்னதும் கடைக் காரர்கள் கொஞ்சம் ஒட்டுதலான மாதிரி உணர்ந் தான்.

சொன்ன விலையிலிருந்து படக்கென இறங்கி வந்தார்கள்,இதற்காகவா மது ரை போக நினைத்தோம்,வீட்டை ரீ மாடல் பண்ண வேண்டும் என நினைத்த போது இப்பொழுது புதிதாக வீடு கட்டுறவர்கள் எல்லோரும் போடுகிற மாதிரி பேசாமல் கிராணைட் போட்டு விடலாமா என நினைத்தான்.

மனைவியும்அதையேமுன்மொழிந்தாள்,ஆனால் பணம்தான்,,,,,,,,,?கொஞ்சம் கேள்விக் குறி தாங்கி நின்றது.அதை உடைக்க எப்பொழுதும்தான் இருக்கிறதே மனைவியின் நகைகள்,

எல்லோர் வீட்டிலும் எல்லோருக்கும் ஈஸியாய்ப் போவதும், கைவரப் பெறு வதும் அதுதான்.

மனைவியின் நகைகளை கொண்டு போய் பேங்கில் வைத்து விடுவது, இவனு க்கும்அதுதான் கை கொடுத்தது ,கையிலிருந்த பணம் பாதி வேலைவரை கை கொடுத்தது,

இவனும் மனைவியும் போட்ட கணக்கு இந்த விஷயத்தில் தப்பாகிப் போனது, கையிலிருக்கிறரூபாயைவைத்து மொத்த வேலையையும் முடித்து விடலாம், அப்படியே காணாமல் போனாலும் கொஞ்சம் மட்டுமே கையைப் பிடிக்கும், அந் நேரம் பார்த்துக் கொள்ளலாம்.என்கிற தைரியம் கொண்டும் தாங்கியும்தான் ஆரம்பித்தான் வேலைகளை,

அதுஇப்பொழுதுபேங்கில்நகைகளை கொண்டு வைக்கிறது வரை கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது,டைல்ஸ் கடையில் போய் நின்ற போது டைல்ஸ் எடுத்துக்காட்டியவர்தான் சொன்னார்,

“சார் கிச்சனுக்கான டைல்ஸ்தான,,,,,ஐ திங்,,,என ஆரம்பித்தார் பேச்சை,அவரது பேச்சை இடை மறித்தவனாக இவன் சார்,சார் அதெல்லாம் வேணாம் விடுங்க நான் சாதாரணமான் ஆளு நீங்க எப்பிடின்னு தெரியாது எனக்கு,

பேச்சு பழக்க வழக்கத்தில் இருக் கிற ரிச்னெஸ் வேணாம்.சும்மா சாதாரணமா வே பேசுங்க போதும் என்றவுடன் அவர் இவன் எதிர்பார்த்ததை விட மிகவும் சாதாரணமாக ஆரம்பித்து விட்டார்,

சார் அது வேற ஒண்ணும் இல்ல,பொழப்புக்காக எதையோ தின்ன கணக்குத் தான்.விடுங்க எங்க பாடு எங்களோட,பழக்கிப்போச்சி எங்களுக்கு,இப்ப ஒங்க ளுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க,என ஆடம்பரமற்ற பேச்சில் ஆரம்பி த்து டைல்ஸ் வாங்கியதிலிருந்து பில் போட்டு ஆட்டோவில் ஏற்றும் வரை கூடவே இருந்து நன்றி சொல்லி அனுப்பினார்,

எதற்கு நன்றி எனக்கேட்டதற்கு ஆமாம் நீங்கள் என்னை சாதாரணமாய் இருக்க இன்றிலிருந்துகற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.அப்படி இருத்தலால் மனித மனங் களில்நிறைந்து நிற்கவும் நுழைந்து நிறையவுமாய் இருக்கலாம் என்கிற நிஜத்தை ஆழமாய் என்னில் ஊன்றி விட்டீர்கள் பைசா செலவில்லாமல், அதற்குத்தான் நன்றி எனச்சொன்ன அவரை வாஞ்சையுடன் ஏறிட்டுப் பார்த்து விட்டு வந்தான் டைல்ஸ் ஏற்றிய ஆட்டோவில் டைல்ஸ்ஸோடு டைல்ஸாக/

டைல்ஸை அவன் சொன்ன இடத்தில்வாங்கவில்லை என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்த டைல்ஸ் ஒட்டுபவனிடம் சமாதானம் பேசி அவன் மனம் நீவி விட்டு அவனை ஒட்டச்செய்து விட்டு அன்று கிடைத்த நிம்மதி இப்பொழுது கால் நிழலை அண்ணாந்துபார்க்கும்போது கிடைக்கிறது.

வலது காலின் மீது இடது காலைப் போட்டுப்படுத்திருந்தான்,அது வலிக்கும் போதும் சலித்துப்போகும் போதும் இடது காலின் மீது வலது கால்,

கொஞ்சகாலமாகவேஇடது மற்றும் வலது கால்களின் அடிப்பாதம் வலிக்கிறது ஏனென்ற காரணத்தை சொல்லாமலேயே,/

பெரிதாக ஒன்றுமில்லை,நரம்பு தொடர்பான பிரச்சனைதான் சரியாகிப்போகும் என நூறு ரூபாய்க்கு மாத்திரைகள் கொடுத்தார்,

மாத்திரை வாங்கி வந்த இரவு எல்லோரும் தூங்கிப்போன இரவில் கால்மேல் கால்போட்டு படுத்திருந்த இவனது உள்ளங்காலின் உரு பரந்து பட்டுப் படர் ந்திருந்த ஜன்னலின் நிழலை மறைக்கிறதாய்/

20 Aug 2013

ஆகாரம்,,,




அவளின்அந்த செய்கையும் அவள் அப்படிக்கேட்டதும் முறைதானா அல்லது முறை யில்லையா?என்பதல்ல/கேட்டுவிட்டாள் அவனும் சொல்லி விட்டான்.
காலை வேளையின் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் அவள் வந்து விடுகிறாள். உள்ளங் கையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாரத்தை இறுக்கிப் பிடித்தபடி/

அவள்வந்தநேரமாய்அவன்சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.உலர்ந்ததேகம்,வாடியஉடல்மூப்பைச்சொல்லிச்செல்கிறவயது.இவைகள்சுமந்தஅடையாளங்களுடன்காட்சிப் படுகிறாள்.

நடந்துவந்தஅடையாளமும்அடையாளத்துடன்வந்தநடையுமாய்அவள்துண்டு பட்டுநின்ற காட்சி இன்னும் நினைத்தாலும் மனதில் நிற்கிறமென் படிமமா கவே/

வந்தால் சும்மா இருக்க மாட்டாள்,என்ன ராஜு என்ன செய்யிற,நல்லா இருக்கி யா, புள்ளைங்க எப்பிடி இருக்காங்க?சம்சாரம் நல்லாயிருக்கா?நல்லா பாத்து க்கப்பாஅவள ஓங் உசுருல பாதி அவ, ஆமாம் ஞாபகம் வச்சுக்க,மொதல்ல அவதான் ஓங் ஒலகம் அப்பறம்தான் புள்ளைங்க கூட ஆமாம் ராஜு,ஆமாம் என நிறைய பேசுவாள்.

பொதுவாகவேநடப்பதுதான்இது.மாதங்களின் பத்துநாட்களுக்குள்ளாகவோ அல்லது மாதம் பிறந்த அன்றோ வந்து விடுவாள்.பணம் எடுக்க வேண்டும் எனச் சொல்லியும் கையில் இறுகிப் பிடித்திருக்கிற பணம் எடுக்கிற படிவத்துட னுமாய்/
இந்த தள்ளாத வயதில் தன்னை ஒற்றை இருப்புக்காட்டியும் தக்க வைத்துக் கொண்டுமாய் அவள் அந்த கிராமத்தில்/மகன் வெளியூரில் வசிக்கிறார், பிழைப்பின் அவசியம் கருதியும் வெளியூரில் இருக்கிற தனது சொந்த பேக்ட்ரி யை கவனிக்கவுமாய் அங்கேயே குடுமபத்துடன் இருந்து விடுகிறார்.

மாதம்ஒருமுறைகுடும்பத்துடன்வந்து அம்மாவை பார்த்துவிட்டுச் செல்வார் கள். சொந்தக்கார்,வசதி,உயர் ரக ஆடைகள் நகைகள் உடல் மணக்கிற வாச னை திரவியங்கள் என்கிற ஜாபர்தஸ்துடன்/ வந்தவர்கள் அம்மா,அத்தை, பாட்டி என்கிற சொல்லையும், பாசத்தையும் தவிர்த்து கொண்டு வந்ததின் பண்டங்கள் சிலவற்றுடனுமாய் மாதா மாதம் வங்கியில் பணம் எடுத்துக் கொள்வதற்கான கையெழுத்திட்ட பாரங்கள் சில வற்றை கொடுத்து விட்டுச் செல் வார்கள்.

வங்கியில்அவளது மருமகளின் பெயரில் பணம்போட்டுவைத்திருக்கிறார்கள் . அந்த கணக்கிலிருந்துமாசாமாசம் மருமகள் கையெழுத் திட்ட படிவத்தைக் கொண்டு வந்து பணம் எடுத்துப் போவாள்.

அப்படியாய் மாதா மாதம் அவள் பணம் எடுக்கவருகிறநேரங்களிளெல்லாம் அவளது வருகை இப்படித்தான் இருந்து விடுவதுண்டு.

காலை வேலையின் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் வந்து விடுவாள்/ பெரும் பாலுமாய் அந்நேரமோஅதற்குசற்று முன்பாகவோஅலுவலகம் வந்து விடுகிற வேளை அவன் காலை டிபன் சாப்பிடுவது அலுவலகத்தில் வைத்து தான்.

டப்பாவில்அடைக்கட்ட இட்லி,அல்லது தோசை அல்லது ஏதாவது மிருது பாய் ந்த உணவு வகைகளே அவனது காலை உணவாய் பெரும்பாலுமாய்/

புறப்படுகிறஅவசரத்திலும்,நேரமின்மையின்சுருக்கிலுமாய்காலைச்சாப்பாட்டைபெரும்பாலுமாய் கையில் எடுத்து வந்து விடுவான்.இன்றும் அப்படித்தான் கொண்டு வந்திருந்தான்.

மடக்கி வைக்கப்பட்டிருந்த தோசைகளின் இரண்டின் ஓரமாய் பூத்திருந்த சட்னியின் துணையுடன் வட்ட வடிவ டிபன் பாக்ஸில் அமர்ந்திருந்த தோசை களை பிய்த்து சாப்பிடப் போகிற நேரம்.பிய்த்த தோசையின் விள்ளல் கைக்கும் வாய்க்குமாய் தன் பயணத்தை தொடங்கப் போகிற நேரம்.வந்து விட்டாள் அவள்.

“என்ன ராசு சாப்புடுறியா,? என்ன சாப்பாடு, இட்லியா, தோசையா,அப்பிடியே இந்தக்கெழவிக்கும்ரெண்டுகுடு,சாப்புடுட்டு போய் சேர்றேன்என்கிறபேச்சுடன் பணம் கொடுக்கும் வரைஅவன் முன்பாய் நின்று கொண்டு நகர மறுப்பவ ளாக/

1 Aug 2013

கண்ணாடிக்குமிழ்,,,,,,,


                                   
     
அவளுள் சுடர் விட்டு எழுந்த கோபமும்,கேள்வியும் ஞாயமென்றே படுகிறது அவனுக்கு /

     காலை பதினோரு மணி இருக்கும்.அவன் பணிபுரிகிற நிதி நிறுவனத்திற்கு வருகிறாள்.அடகு வைத்த நகையை மீட்டவேண்டும் என்கிறாள்.

    வீட்டின் அவசர தேவைக்காக வைத்த நகை.ஒரு வருடத்திற்கும் மேலாகிப்போனது. நேற்றைக்கு முதல் நாள்தான் நினைவூட்டல் கடிதம் வந்தது.அவசர,அவசரமாக பணம் புரட்டிக் கொண்டு திருப்ப வந்திருக்கிறேன் என்றாள்.

    பார்க்க பாந்தமாகத்தெரிந்தாள்.ஒல்லியாய் கசலையான  உருவம் தலைக்கு வாரி நெற்றிக்கு இட்டிருந்தாள்.

    நீண்டதாயும் இல்லாமல் கொஞ்சமாயும் இல்லாமல் பின்னலில் கொஞ்சமாக பூ சொருகியிருந்தாள்.

    காட்டனா,பூனம் சேலையா என தெரியாத் ஆளவிற்கு அடர் நிறத்தில் ஒரு சேலை உடுத்தியிருந்தாள்.

   பூப்போட்டுமல்லாமல் ,நவீன டிஸைன்களிலும் அல்லாமல் நடுவாந்திரமாய் உடலில் ஒட்டிக்கொண்டு சிரித்தது.

   வாடிக்களைத்து முகத்தில் ஒட்டியிருந்த ஏழ்மை அவளது நிலைமையை பளிச்சென சொல்லிச் சென்றவாறு/

    பூஒன்றின் மேனியிலிருந்து கசிகிற மெலிதான வாசனை போலானதாய் இருந்த அவளது ஏழ்மைச் சொல்லல் இன்னமும் அவளை அழகாக்கிக்காட்டியதாக/

    பக்கத்து ஊர்தானாம் சொன்னாள்.கணவன் தச்சு வேலை செய்கிறார்.இவர் கிடைக்கிற கூலி வேலைக்க்குச்செல்வாராம்.

    இரண்டு பிள்ளைகள்.அவளது பெண்பிள்ளையை உள்ளூர் பள்ளியிலும்,பையன் வெளியூரி ல் சென்று வேலைபார்க்கவுமாய் இருக்கிற குடும்பம் வயிற்றுக்கும்,வாய்க்குமாய் ஓடுவதாக சொன் னாள்.

    நகர்கின்ற நாட்களின் கனம் மற்றும் லேசுகளில் கோர்த்திருக்கிற கை கோர்வையின் மொத்தத் திற்கும்  உள்ளாகபல்சக்கரத்தில்வாழ்க்கைசீராகவும்,சீரற்றும்ஓடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.
   தம்பி பையனின் மொட்டைக்கு செய்ய வேண்டிய செய்முறை செய்வதற்காக வைத்த நகையை திருப்ப இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது,வந்திருக்கிறேன் என்றவாறு அதற்காக கணக்குப் பார்த்து எழுதப்பட்ட ரசீதுடன் அவனிடம் பணம் கட்டவந்து நின்றாள்.

   மொத்தம் 15530 என போடப்பட்டிருந்தது.பணத்தையும்,ரசீதையும் வாங்கிக்கொண்டு எண்ணிப் பார்த்தான்.

   என்னம்மா எவ்வளவு குடுத்தீங்க எனக்கேட்க அவள் 15530 என சொல்ல அம்மா 100 ரூபாய் குறையாய் இருக்கிறதே எனவும்,சரியாய் எண்ணித்தருமாறும் திரும்பவுமாய் அந்தப்பெண்ணிடம் தருகிறான்.

   அவளும் வாங்கி ஒரு முறை எண்ணிப்பார்த்து விட்டு எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என திரும்பத்தருகிறாள்.எட்டாப்பு வரைக்கு படிச்ச நான் எண்ணுன நோட்டு தப்புன்னுட்டீங்களே?

   “ஏன் எண்ணிக்கையில எப்படி தப்பு வரும்?நான் என்ன அப்பிடியா கொறையா குடுத்து ஒங்கள ஏமாத்திறப்போறேன்”.என வெடித்த வார்த்தைகளுடன் கோபமாக பணத்தைத் தருகிறாள்.

   வாங்கி எண்ணிப்பார்த்தால் சரியாக இருக்கிறது.திரும்பவும் எண்ணுவதாய் பாசாங்கு செய்து விட்டு கொடுத்த பணம் சரியாக இருக்கிறதென வாங்கிப்போட்டு விட்டு ரசீதில் சீல் அடித்துத் தருகிறான்.

   இதில் எங்கு தவறு நடந்தது எனத்தெரியவில்லை.அந்த பெண்ணிடமிருந்து பணம் வாங்கி எண்ணுகையில் தவறாக எண்ணி விட்டானா அல்லது அந்த பெண் இப்போது திருப்பித் தருகையில் நூறை சேர்த்துக்கொடுத்துவிட்டாளா?(கம்பி போட்ட கூண்டுக்குள் அமர்ந்து பணத் துடன் உறவாட ஆரம்பித்த நாளிலிருந்து இப்படித்தான் ஆகிப்போனதாய் நினைக்கிறா ன். எந்த எண்ணிகையில் உள்ள ரூபாய் நோட்டை யார் கொடுத்தபோதும் 1000,500,100,50,20,10 என எதைப் பார்க்கிற போதும் அதன்மீது விழுகிற சந்தேகம் தவிர்க்க முடியாது போலும்.அப்படியான மனோநிலை கோலாச்சுகிற இடத்தில்நின்று பணம் வாங்கிய போது நிகழ்ந்த தவறுதானா அது தெரியவில்லை/)

    எதுஎப்படியாயினும் அவ்வளவுநேரம் நன்றாகவும், இணக்கமாயும்  பேசிய அந்தப்பெண், அவள் மீதும் அவளது, செய்கையின் மீதும் தவறு என சொல்லப்பட்டதும் பொருக்க மாட்டாத வளாய் துள்ளி எழுந்துசட்டெனசுடர்விட்டெழுந்தஅவளது கோபமும்,கோபம் சார்ந்த  ஆழ்ந்த  வருத்தமும்  ஞாயம் என்றே படுகிறது.

    பரவாயில்லை, வேலைத்தளங்களில் இது மாதிரி நாலு விஷயங்கள் வரும்,போகும் அதில் ரெண்டு நல்லதாயும்,ரெண்டு கெட்டதாயும்/

     ஆனால் உரசிக்கொள்கிற சிறு சிக்கி முக்கி கற்களின் முனையில் பற்றிக்கொள்கிற    
     சிறு பொறியைப்போல எள் முனையளவு எழுகிற கோபமும்,ஆதங்கமுமே மனதின்    
     ஏதாவது ஒரு புள்ளியில் ஒன்றினைந்து சட்டெனகோபமாக,கேள்விகளாக
     உருவெடுத்து விடுகிறது போலும்/      

27 Jul 2013

சில்லுமண்,,,,,


 

தெய்வ வழிபாட்டைவெறுத்துஒதுக்குபவனாகஇருந்ததில்லைநான்இதுவரை .

அதே நேரத்தில் தெய்வ நிந்தனையில் முதல் ஆளாய் போய் முண்டியடித்துக் கொண்டு நிற்பவனாயும் இல்லை.

    கோவிலுக்கெல்லாம்செல்வேன் மனைவிமக்களுடன்.ஆனால் சாமி கும்பிடுவதில்லை.

எல்லோரும்கையெடுத்துகும்பிடுகையில்நான்மட்டும்கைகட்டிக்கொண்டு நிற்பேன்.

யாராவது துணைக்கு என்னைப்போல நிற்கிறார்களா என மனதும், புலன்க ளும் தேட யாராவது ஒன்றிரண்டு பேர் நின்றிப்பதைக் கண்டு மனம் சந்தோச மடையும்.

   சமயத்தில் அந்த சந்தோஷமும் கெட்டுப் போகும்.யாரும் துணைக்கு இருக்க மாட்டார்கள்.அந்த மாதிரியான நேரங்களில் எனது மனைவி சாமி கும்பிடகூப்பியகையோடுஎன்னைபக்கவாட்டாக இடிப்பாள்.அதற்கு அர்த்தம்  நீங்களும் கையெடுத்து கும்பிடுங்கள் என.

     கரெக்டாக அவளது முழங்கை எனது அல்லையில் பட்டு வலிக்கும். (எல்லோர் வீட்டிலும் விழும் இடிதானே இது?கொஞ்சம் கனமான கை என்றால் இடுப்பு வலி நிச்சயம்.அது இன்ப வலிதானே,ஒன்றும் செய்யாது.”பூ விழுந்து வலி எடுக்குமா” சமயத்தில் வலிப்பதுதான்.சமயத்தில் வலிக்காமல் இருபதுதான்.இதெல்லாம் போய் சாமி கும்பிட வந்த இடத்தில் வைத்தா நினைப்பது?என மனம் பூட்டுபவர்களில் நானும் ஒருவனாய்/)

    அவளது வற்புறுத்தலுக்காவும் இடித்தலுக்காகவும் கையெடுத்து கும்பிட்டு விடுவேன்.அர்ச்சகர் நீட்டும் தீபாராதனை தட்டில் உள்ள சூடத்தைத் தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வேன்.சிவப்பும்,மஞ்சளுமாய் வெள்ளை நிற சூடத்தின் மேல் ஒற்றை கற்றையாய் எரியும் எந்த தீப ஒளி காற்றில் அசைந் தாடும் நளினமும்,அழகுமே என்னை தொட்டு கும்பிட வைத்துவிடும்.

    அதுமட்டுமல்ல,எனக்காகவும் என்போன்ற எல்லோருக்காகவும் கருவறையிலிருந்து இறங்கி வந்து தீபாராதனை தட்டை காண்பிக்கும் அந்த பெரியவரை(அர்ச்சகரை) அல்லது நடுத்தர வயதுக்காரரை மதிக்கிறதாயும், அவருக்கு கொடுக்கிற மரியாதையாகவும் அந்த செயலை செய்து விடுவது ண்டு.

தொட்டுக்கும்பிட்டகையோடுதட்டின்ஓரத்தில்இருக்கும்திருநீரைபூசிக் கொள்வேன்.

தட்டில் இரண்டு அல்லது மூன்று ரூபாய் காசுகளை போட்டுவிடுவேன் தட்டில் விழுவது அவருக்குப் போய் சேரும் என்கிற நம்பிக்கையில்.

சாமி கும்பிட்டு நகர்ந்ததும் பிரகாரசுற்று.வேண்டுதல்களுடன் பிரகாரத்தைச் சுற்றும் எனது மனைவி மக்களின் முன்னேயோ,பின்னேயோ கையைக் கட்டிக்கொண்டு கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து  நடந்தவாறு செல்வேன்.

  கல்வளர்த்த பெரியதான சுற்றுச்சுவர்கள்,அகண்ட பெரியதான வாசல், பிரமாண்டமாய் தெரியும் கோபுரம் அதன் சிற்பங்கள்,சிலைகள்,சுகந்த வாச னை,சுத்தம்  என இன்னும் இன்னுமான எல்லாமும் ஒரு சேர என்னை பார்க்க அழகாய் இருக்கும் கோவில் எல்லோரையும் கவருவதைபோலவே என்னையும் கவருகிறது. அவ்வளவுதான் எனக்கும் கோவிலுக்கும் உள்ள உறவு.

     நான்இந்தஊருக்குபணிமாற்றம் ஆகி வந்த நாளிலிருந்து இன்றுவரை வாடிக்கையாக ஒரு கடையில் சாப்பிட்டு வருகிறேன்.

     பெரிய கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் வலது புற திருப்பத்தில் அமைந்திருந்த அந்தஹோட்டலில்தான்எனதுதினசரி உணவு.

     இட்லி,தோசை,பூரி,பொங்கல்,இடியாப்பம்,வடை,டீ என்கிற மெனுவில் ஏதாவது ஒன்று எனது வயிற்றை நிரப்புவையாக.ஓடு வேயப்பட்ட பெரிய கடை.ஒரே நேரத்தில் 40 பேர்வரைஅமர்ந்துசாப்பிடலாம்.

    உச்சிவகிடுஎடுத்தவர்கள், அள்ளிமுடிந்தவர்கள்,தலையைகலைத்து விட்டு அசால்டாக இடது கையால் ஒதுக்கி விட்டு,வருபவர்கள்,மிகவும் எளிமையா கவும்,படோடோபமாகவும் இருக்கிற சர்வர்கள் என்கிற மனிதர்களுடன் நகர்கிற கடையாக/

     சமயத்தில் கடை நிரம்பி வழியும். சமயத்தில் கடை மேலே வேயப்பட்டிரு ந்த பழைய ஓடு போல காணப்படும்.

    அந்த காலத்தில் வெறும் டீக்கடையாக மட்டும் இருந்ததாம். காலப் போக்கில் ஹோட்டலாக உருவெடுத்து காட்சியளிக்கும் கடை இப்படி ஆகி இருபது வருடங்கள் இருக்கும் என்றார்கள்.

உழைப்பின் பிரதானம்தான் கடையை உயர்த்தியது என்றார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

    காலையில் அங்கு சாப்பிட்டுவிடுவேன்.மதியம் அலுவகத்திற்கு சாப்பாடு வந்து விடும்.இரவு ஏதாவது ஒன்றை பார்சலாக கட்டிக்கொண்டுபோய் நான் தங்கியிருக்கும் அறையில் போய் சாப்பிடுவேன்.இப்படியான ஏற்பாடுகளின் நடுவேதான் ஒருநாள் கவனிக்கிறேன்.கடை கல்லாவின் முன் உள்ள டேபிளில் வித்தியாசமான ஒன்றை வைத்திருப்பார் கடைக்காரர். இரட்டை யாக,மூன்றாக,நான்காக ஒட்டியிருக்கும் வாழைப் பழங்கள்,உச்சியில் தலை முளைத்தது போல் உள்ள தக்காளி,கைபரப்பி நிற்கும் மனித கூட்டத்தை போல் உள்ள இஞ்சி,,,,,,,,,,, என ஏதாவது ஒன்றை வைத்திருப்பார்.

பார்க்க அழகாகவும் ஒரு ஒழுங்குடனும் இருக்கும். அதன் அருகினிலேயே ஒரு சின்ன எவர்சில்வர் கிண்ணத்தில் விபூதியும்,அதன் அருகில் உள்ள இன்னுமொரு கிண்ணத்தில் குங்குமமும்,அருகருகே இருக்கும்.

       சாப்பிட்டதற்கு காசு கொடுத்து விட்டு நகர்கையில் என் கண்ணை உறுத்தும் திரு நீரிலும்,குங்குமத்திலும் சிறிதுஎடுத்து நெற்றியில் இட்டுக் கொள்கிறேன்தினசரி இல்லாவிட்டாலும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களில்.

 நான் வைத்திருந்த திருநீறு சிறிது நேரம்தான் எனது நெற்றியில் இருக்கப் போகிறதுஎன்றாலும்இதைநான்செய்யகாரணம்என்ன?

தெரியவில்லை.தெரிந்தால் கூறுங்களேன்.

12 Jun 2013

ஆர்மோனியப்பெட்டி,,,,,


   
வந்தகுரல்எத்திசையிலிருந்தெனத்தெரியவில்லை.ஒரேசீராகவும்,அழகாகவும்,லயமாகவுமாய்/

கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என திசை அறியாது விழி விரித்தும் செவிப்புலன்களை  அனுப் பியுமாய் கேட்டபோது வந்த குரல் குயிலினுடையதாய்/

அட மனம் பிடித்த குரல்,கூ,,,,,,க்குக்கூ,,,,,,,கூ,,,,க்குக்கூ,,,,,,இடைவெளிவிட்டு, விட்டு,  ஆகா எப்படி இப்படி,நன்றாக இருக்கிறதே மனம் பிடித்துப்போனவளின் குரல் போல/

நல்ல விஷயம்,,,,,பதிலுக்கு வாயில் இரு கரம் குவித்து கூ,க்குக்கூ,,,,என குரல் கொடுக் கிறான், சுவற்றில் அடித்த பந்தின் விசையாய் திரும்ப வருகிறது பதிலுக்கு குரலும் / கூ,,,,,,,க்குக்கூ,,,/திரும்பவும் இவன் கூ,,,க்குக்கூ,,,,/திரும்பவும் சுவற்றில் அடித்த பந்தாய் கூ,,க்குக்கூ,,, திரும்பவும் அதே கூ,,,குக்கூ,,,,,,திரும்பவுமாய் அதே கூ,,,,,குக்கூ திரும்பதிரும்ப மாறி மாறி ஒலித்துக் கொண்ட குரல்கள் இவனுடையதும்குயிலினுடயதுமாக/

இதென்னஎதிர்ப்பாட்டு,எசப்பாட்டா?இப்படி மாறி,மாறி பண்ணிக் கொண்டிருக்க  ,இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதீர்கள்.ஏரியாவாசிகள் பயந்து போகக்கூடும், குயில் கத்துவதுகூட  சரி,ஒரு வகையில் ஒத்துகொள்ளலாம்,நீங்கள் கத்துவதென்பது வீடுகளில் இருக்கிற சின்னப் பிள்ளைகளுக்குஉடம்புக்குசௌக்கியமில்லாமல்  போய் விடக்கூடும்.ஜாக்கிரதை என்கிற அசரீரி ஒலிக்க வந்த அசரீரியை கணக்கில் கொண்டு  வீட்டுக்குள் போய் விடுகிறான். போவத -ற்கு முன்பாக எதற்கும் இருக்கட்டும் என விழி கழட்டி அனுப்புகிறான் குரல் வந்த திசை நோக்கி,தேடிப்பார்த்துவிட்டு வந்து சொல்ல ட்டும். இவன் அதற்குள்ளாக வீட்டிற்குள் ளாகப்போய் கைகால்,முகம் கழுவிக் கொள்ளலாம்,சற்றே சௌகரியப்படுமானால் குளித்துக் கூட விடலாம் என்கிற நினைப்புடன்.

தோள்ப்பையை கழட்டி  மேஜையிலோ அல்லது அருகாமை இடத்திலோ வைத்த நேரம் போன விழி வெளியெங்கும் தேடிப்பார்த்த அலுப்புடன் திரும்ப வந்து அதனிடத்தில் அமர்ந்து கொள்கிறது.வா,வா என்னானது போன விஷயம் எனக்கேட்க முடியவில்லை. மனம் பிடித்தவ ளுக்கு எழுதிய கடிதம் போனவேகத்தில் திரும்பி வந்ததை போல அது வந்தமர்ந்த சடுதியைப் பார்த்தால் போன வேலையில் வெற்றி இல்லை போல/

மனம் பிடித்த மனைவிகொடுத்ததேனீரையும்,அருகிலும்,சற்றேதூரத்திலுமாய் இருந்த  மகளையும், மகனையும்ஒருசேரபார்த்துவிட்டும்,பேசிகொண்டுமாய்நாவின்சுவையறும்புகளில்  படரவிட்ட தேனீரின் சுவையை உள்வாங்கியவாறு இருந்த நேரம் பரந்த வெளியில் பச்சையும்,பிங்கும் இன்னும் பிற வர்ணங்ளிலுமாய் முளைத்துகாட்சிப்பட்ட வீடுகளையும், அதனுள் குடிகொண்ட மனிதர்களையும் மண்ணையும்,மண்ணின் வாசத் தையும் மேலெழுந்து தழுவியவாறு திரும்பவுமாய் மனம்கவர்ந்தஅதேகுரல் கூ,,க்கு க்கூ,

வந்த குரல் எத்திசையிலிருதெனதெரியவில்லை.ஒரே சீராகவும்,அழகாகவும், லயமாகவுமாய்/ 

4 Feb 2013

மென்முத்தம்,,,,,


                  
வடையை பிய்த்துத் தின்ற கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தர வேண்டும்.

முத்தம் தருவதென முடிவாகிப் போனபின் ஏன் மென்முத்தம் எனத்தெரியவில்லை.                                                
அழுத்தமான ஒரு முத்தமாகவே கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே என்கிறீர்களா
அதுவும் சரிதான்.கொடுக்கிற முத்த்தில் மிச்சம் வைத்து அதை எங்கே கொண்டு போய் சேமிக்க?  எந்த வங்கியும்,எந்த ஒரு தனியார் நிதிநிறுவனமும்ஏற்றுக்கொள்ளவும் அதை சேமித்து வைத்து கொள்ளவும் இயலாதுதானே?

ஒன்றல்ல இரண்டல்ல, மிகச்சரியாக மூன்று முத்தங்கள் கொடுக்கலாம்.  என்பது அவனது நினைப்பாய்/

தினசரி  காலையிலும் மாலையிலுமாய் பதிவாய் டீக்குடிக்கிற கடையது.இன்றல்ல நேற்றல்ல போனவாரத்தின்ஒருநாளில் மாலை வேளைவழக்கம்போலவே அந்தக் கடையோரம் நிற்கிறான். மழைக்குஒதுங்கிநிற்கிறபள்ளிப் பிள்ளைகளைப் போல கைகட்டாமலும் பேண்ட் பாக்கெட் இரண்டில் கையை நுழைத்தவாறுமாய்/

மண் பூத்தும் தார் ஓடியுமாய் கறுத்து நீண்டிருந்த சாலை. அதன் மீது சென்ற  வாகனங்கள்  மனிதர்கள் அனைவரையுமாய் பார்த்த விழியின் குவி மையத்தை எடுத்து கடைக்குள் வைத்த போது அங்கொரு பாட்டி அமர்ந்து வடை கூட அல்ல,பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்நேரம் அதுதான் காணக்கிடைத்ததாய்/

பானாப் பட பெஞ்சுகள் போடப்பட்டிருந்த கடையின் உள் வெளியது.சற்றே விரிந்து தெரிந்த வெளியில் அமர்ந்து டிபன் சாப்பிட இரண்டு பெஞ்சும்,அமர்ந்து கொள்ளவும் டீ சாப்பிடவுமாய் ஒன்றுமாய் என மூன்று பெஞ்சுகளைப்போட்டிருந்தார்கள்.

பத்துக்கு பத்தடி வெளி இருக்கலாம்.வலது ஓரமாய் கடையின் உள் வெளி,இடது ஓரமாய் டீப்பட்டறை, அதன் பின்னே சமையலறை இருக்கலாம் என நினைக்கிறேன்.கையின் கிடுகு வேயப்பட்டிருந்த கூரை மீதிருந்து புகை வந்தது.

அன்றைக்கு என்னமோ டீ நன்றாக இருந்தது.வரி போட்ட கண்ணாடிக்கிளாஸினுள்ளே முக்கால் அளவே நிரம்பியிருந்த கலர் திரவம் நாவின் சுவையறும்புகளை தீண்டி ஒவ்வொரு மிடராய் உள்ளே போன போது ஆ,,,,ஆயாசம்/

உடலின் களைப்பை மட்டுமல்ல ,உள்ளத்தின் களைப்பையும் போக்குகிற சக்தி அந்த திரவத்திற்கு உண்டு போலும்.டீயைஉறிஞ்சியவாறேதிரும்பவுமாய்கடையினுள்ளே பார்வையை  நீட்டிய போதுஒருபிளாஸ்டிக்தட்டில்ஊற்றபட்டிருக்கிறசட்னியில்இரண்டுபஜ்ஜிகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.மூதாட்டி.நடு,நடுங்கியகைகளுடனும்,சுருக்கம் விழுந்த முகத்து ட னுமாய்/ 

பஜ்ஜிகளை சாப்பிட்டுக் கொண்டி ருக்கிற அந்த முதிய கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தரவேண்டும்.

14 Jan 2013

தடம்,,,,,,,,,


                       

ஆறு இட்லிகள்,நான்கு பூரிகள் இவைகள்தான் நான் வாங்கியவையாய் இருந்தது. வெள்ளைக் கலரில்புள்ளிப்புள்ளிகளாய்விழுந்திருந்தசிறு,சிறுபள்ளங்களுடன்தன் மேனியின் அழகு காட்டி சிரித்துநிற்க,அதன்அருகாமையாய்ஒன்றின்பக்கம்ஒன்றாயும், ஒன்றின்  மீது மற்றொன்றும் ஏறி அமர்ந்துவட்டமாய்காட்டிக்கொண்டிருந்தவைகளின்வலது பக்கம் தேங்காய்ச்சட்னியும்,இடது பக்கம் காரச்சட்னியும்/
வெள்ளை,சிவப்பு,,,,,,,,,,,,,,அட இந்தஒற்றுமையைஇதுவரைவரையிலும் எந்தக்கொடியிலும்  பார்த்ததில்லையே?நன்றாகத்தான் இருக்கிறது.இதுவும் பார்ப்பதற்கு.
கிருஷ்ணனைக் காணவில்லை. வேலைக்காரர்கள்தான் இருந்தார்கள்.ப்ரௌன் கலர் பனியன் போட்டு தொந்தி நீட்டிக்கொண்டிருந்தவர் வெள்ளை வேஷ்டியை மடித்து கட்டியிருந்தார் உள் டவுசர் தெரிய /கட்டம் போட்ட லுங்கியில் தெரிந்தவர் அடர் நிற சட்டை அணிந்து கொண்டிருந்தார்அவர் மாட்டாமல் விட்டிருந்தமேல்வரிசை பட்டன் வழியாக அவரது மாரிலிருந்த முடிகள் கறுப்பும்,வெள்ளையும் காட்டி/
நான்கு அல்லது மூன்று வரிசை இருக்கலாம்.இடமும் ,வலமுமாய் மாறி,மாறி போடப் பட்டிருந்த டேபிளில்அமர்ந்துசாப்பிட்டுக்கொண்டிருந்தநால்வருக்கும்ஓடி,ஓடி பரிமாறிக் கொண்டிருந்தவர் இளவயதுக்காரராய்த்தெரிந்தார்.
பூரியைக்கட்டியவரும்,இட்லியைக்கட்டியவரும்சொன்னகணக்கைகல்லாவில் இருந்தவர் சிரிக்க மறந்து வாங்கிப்போடுகிறார்.(அவ்வளவு கறாராக இல்லையென்றால் யாராவது ஏமாற்றி விட்டால்,,?)மீதம்சில்லறையைகொடுக்கையில்கிருஷ்ணன்வீட்டிற்குப்போயிரு ப்பதாகவும் வந்து விடுவார் சிறிது நேரத்தில் எனவுமாய் சொல்கிறார்.
தான் கிருஷ்ணனின் தூரத்து உறவுஎனவும்அவனுக்குஹோட்டல்ஆரம்பிக்க தான்தான் ஆலோசனை கூறியதாகவும் கூறினார்.அவர் சொன்னதை கேட்டவாறும்,சிரித்துவிட்டும் கடையை விட்டு வெளியே வரும் போது கடையின் எதிர் முனையைப் பார்க்கிறான். 
கிழக்கும்மேற்குமாய் நீண்டிருந்த சாலை அது.கறுப்பு உடை அணிந்து அழகு காட்டிக் கொண்டிருந்தது,வலமும்,இடமுமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தவீடுகளுக்கும், கடைக -ளுக்கும் மத்தியில் வலதுஓரம் இட்லிசுட்டவளாய்அமர்ந்துகொண்டிருந்த அவளுக்கு55  வயதிருக்கலாம்,ரோஸ்க்கலரில் நூல்புடவைஅணிந்திருந்தாள்.புடவையின்ஓரம் தெரிந்த வெள்ளை பார்டர் சேலைக்கு அழகு காட்டி அமைந்திருந்ததாய்/
ரோட்டின்ஓரமாய்இட்லிப்பானைக்குபின்னால்அமர்ந்திருந்தஅவர்மாநிறம்தரித்தவளாய்/ வலது ஓரம் இருந்த சட்டியில் பணியாரம்வெந்துகொண்டிருந்தது.மண்அடுப்புதீ காட்டி/ இடது ஓரம் இருந்தஅடுப்பில்இட்லிவெந்துகொண்டிருந்தது.மல்லிகைபூப்போலெல்லாம்  இல்லை.
இட்லியாய் இருக்கும் இட்லி,சட்னி சாம்பாரெல்லாம் கிடையாது.சீனி வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். பார்சலாக இலையில் வைத்தோ அல்லது பேப்பரில் வைத்து கட்டியோ தரமாட்டாள், தூக்கு வாளி அல்லது  நாம் கொண்டு போகிற பாத்திரத்தில் வைத்துக் கொடுப்பார். வேண்டுமானால் சேர்த்து உடன் ரெண்டு பணியாரம் வாங்கிக் கொள்ளலாம்.
அங்குவருபவர்களும்,நான்கு இட்லிகளுக்கு மேல் வாங்கி நான் இதுநாள்வரை பார்த்ததில்லை.
கிட்டத்தட்டஎனக்குநினைவுதெரிந்தநாளிலெல்லாம்இருந்துஇல்லை,பத்துவருடங்களாக அவரை அப்படித்தான் பார்க்கிறேன்.
அப்பொழுது தயக்கமாக வந்த ஒருவர் தான் கொண்டு வந்திருந்த தூக்குச்சட்டியில் ஒரு இட்லி வாங்கிக்கொண்டிருந்தார்.தனது ஒரு வயது குழந்தைக்கு சாப்பிடக்கொடுக்க வேண்டும் என/பத்து வருடங்களுக்கு முன்பு நான் நின்று வாங்கிய அதே இடத்தில்/

23 Dec 2012

லால்சலாம்,,,,(மாமேதை லெனின் வாழ்கை வரலாறு)

                                        
வணக்கம்  தோழர்  லெனின் அவர்களே/ யார்  சொன்னார்கள்  நீங்கள்  இறந்து விட்டதாக?

இறந்தபின்னரும்அவரது செய்கைகளின் மூலமாய் நினைத்துப் பார்க்கப்படுகிற மனிதர்களுள்  ஒருவராய் நீங்கள்/

இன்றும் உலகம் முழுவதுமாய் இருக்கிற கம்யூனிஸ்ட்டுகளாலும் முற்போக்காளர்களாலும் நினைக்கப்படுகிற மனிதராகவும்,அவர்களதுஇதயத்தின் அருகிலிருந்துஅவர்களது சிந்தையை  ஆக்ரமிக்கிறவராகவுமாய் இருக்கிறீர்கள்.

அவர்களின்செவ்வணக்கமும்,அவர்களின் லட்சியமுழக்கமும்,அவர்களின் கொள்கைப்பிடிப்பும் உங்களை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கிறதுதான் லெனின் அவர்களே/

உங்களைப் பற்றியும், உங்களது வீர வரலாறு பற்றியுமாய் நேரிடையாய் பார்த்து எழுதுகிற பாக்கியம் இல்லைதான்.சரி அதற்காக உங்களைப்பற்றி எப்படி எழுதாமல் விடுவது?

அது வேறொரு தேசம்,வேறொரு வேலை முறை,வேறொருவாழ்க்கைமுறை, வேறு  மாதிரியான சம்பங்கள், உணவு, உடை, பழக்கவழக்கங்கள், இருப்பிடம் இத்தியாதி,இதியாதிகள் ஆனால் எங்கும்  இருந்த வர்க்க வித்தியாசம் அங்கும் இருந்ததுதான்.

அதுஆளும் வர்க்கத்திற்கும் ,ஆளப்படுகிறவர்க்கத்திற்கும் இருக்கிற மிகப்பெரிய இடைவெளி/  அதைசுமந்துகொண்டுஉங்களது தேசமும் கஷ்டப்பட்டுநிற்கிறதுஉங்கள்கண் முன்னாலேயே/

ஆனால் ஆளும் ஜார்மன்னனால் உங்கள் ருஷ்யாவே அடிமை தேசமாய்.ஆமாம் லெனின் அவர்களே நீங்கள் பிறக்கும் போதே  தேசமும் அடிமைப்பட்டே/

அது வரலாற்றின் இருண்ட காலம்.1870 ஏப்ரல் 22ல் உங்களது பிறப்பு அந்த இருட்டில் சிறு ஒளியை ஏற்படுத்துகிறது. ஆமாம் அப்படித்தான் சொல்கிறார்கள், உங்களது வரலாற்றை எழுதியவர்கள்.

உங்களது பிறப்பின் போது சிம்பிர்ஸ்க் நகரமே வசந்தத்தில் திளைத்ததாம்.வானம் பாடிகள் இசைக்க வோல்கா ஆறு நடனமிட்டுஅலைபாய,,,வீதிகளிலும், தோட்டங் களிலும்  பட்சிகளின் கீச்சொலியும்,பிர்ச் மரக்கிளைகளிலும் ஸ்தெப்பி புல்வெளி யெங்கும் காற்று களி நடமாடியதாயும் பதிவு செய்கிறார்கள்.

வோல்காஆற்றின்குறுக்கேஉங்கள் குடும்பத்தை தொற்றிக் கொண்டசந்தோசத்துடன்  நீங்கள் பிறந்து படுத்திருந்த தொட்டிலைப்பார்க்கிறார்கள் உங்களது குடும்பத்தார்கள்.

உங்களது பிறப்புபற்றிஉலகவரலாற்றின்காதுகளுக்குஎந்தத்தகவலும் இல்லையாம் அப்போது/

உலகநாட்களின் நகர்வுகள் அதனதன் போக்கில். “உல்யானவ் குடும்பம்”என அழைக்கப்பட்ட  உங்கள் இல்லத்து  உறுப்பினர்கள் எண்ணிக்கை சற்றே அதிகம் தான் .

தந்தை ”இல்யாநிக்கலாயெவிச்,தாயார் மரியா அலெக்ஸாந்திரவ்னா,உங்களது சகோதர, சகோதரிகளான ஆன்னா,அலெக்ஸாந்தர்,திமித்ரி,ஓல்கா,மரியா மற்றும் விளாதிமிர்”,,,,,,,என கொண்ட குடும்பத்தில் உங்களுடன்சேர்ந்துஎட்டுப்பேர் என அறிகிறோம்.அதனால்தானோ என்னவோ,குடும்பப் பற்றும் மனிதர்கள் மீதான மாறாத அன்பும்,பிரியமும்,நட்பும் காதலும், பிடிப்பும், அதீதமாய் இருந்தது உங்களிடம்/

உங்களது சகோதரர்ஆன்னாவும்.அலெக்ஸாந்தரும்உயர்நிலைப்பள்ளியில் பயின்ற பொழுது நீங்கள்தொடக்கக்கணிதமும்,ஆரம்பப்பாடமும்வீட்டிலேயே பயின்றீர்கள்  ஆசிரியர்  மூலமாக/

புத்தகப்பாடங்கள் தவிரவும்உங்களது தாயார்மூலமாகஉங்களுக்குவீரவரலாற்றுக் கதைகளும், உலக நடப்புகளும்,நாடுகளும் என பல கதைகள் சொல்லப்பட்டன. நெப்போலியன் ருஷ்யா மீதுபடையெடுத்ததையும்பரதினோஎன்னும்கிராமத்தின்அருகே அவனுடைய படைகளுக்கும்,  ருஷ்யப்படைகளுக்கும்  நடந்த போர் பற்றிக்கூறினார்கள்.குளிர்கால மாலைகளில் உங்களது தாயார் சொன்ன கதைகள் கணக்கிடவே முடியாதது.

அந்தமாலைநேரங்களும் ,ஜன்னல் கண்ணாடிகளின் மேல் வெண்பனி வரைந்த கோலங்களும்   தாயாரின் குரலும்,புத்தகங்களின் பக்கங்கள் திருப்பப்படும் சரசரப்பான ஒலியும் உங்களை   வேறோர்உலகுக்குஇட்டுச்செல்லும்தோழரே/ மேலும் அந்தக்கதைகள் உங்கள் உள்ளத்திற்கும், வீரத்திற்கும் உரமாய் இருந்து உள்ளது.

புத்தாண்டுவிழாவிற்குமுன்பனிக்காலத்தின்உச்சத்தில்இருந்தமாலை வேளை களில்குழந்தைகள்அதிகஉற்சாகத்துடன்இருப்பார்களாமே?அதற்கு நீங்களும்  உங்கள் குடும்பத்தினரும் விதிவிலக்கா என்ன?அந்தவிதிவிலக்கில்லா சந்தோச த்தையும், விளையாட்டையும் பார்த்து தங்களது தந்தை இப்படிக் கூறினாராம். “இப்பொழுது போல எப்பொழுதும் இப்படியே ஒற்றுமையாகவும்அன்பாகவும் இருங்கள் என் அன்புக்குழந்தைகளே” என்றாராம்.

உங்களது வீட்டுக்குப்பின்னால் இருந்த தோட்டம் சிறியதுதான்.ஆனால் அதில் இல்லாத மரங்கள் இல்லை எனலாம்.அதற்கு மஞ்சள்ச் சோலை என்ற பெயருமாமே?அதிகாலை எழும் நீங்கள்  உடற்பயிற்சி, குளியல் எல்லாம் முடித்து விட்டு தோட்டம் போய் விடுவீர்கள்.இரவில் உதிர்ந்த ஆப்பிளைச் சேகரிப்பதும், பூச்செடிகளுக்கு நீர்பாய்ச்ச கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துவந்து நிரப்புவதும் உங்கள் வேலை.

தினந்தோறும் ருஷ்ய மொழியில் பேசுவதும்,ருஷ்யமொழியில்பயில்வதும் எளிதாய் இருக்கும் ---தான்.ஆனால் வாரநாட்களில் ஒவ்வொரு தினமும்,ஒவ்வொரு மொழியாய்  கற்க வேண்டும் என்பது உங்களது தாயாரின் கருத்து.

இன்று பிரஞ்சு மொழி என்றால்,மறுநாள் ஜெர்மன் மொழி,மறுநாள் வேறு மொழி அதற்கு மறுநாள் இன்னொரு மொழி,,,,,,,,என அயல் மொழிகளைப் பற்றி அறிதல் வேண்டும் என்பது தங்களது தாயாரின் ஆழ்ந்த கருத்து.,,,,,,,,,,,,,,, 

                                                            
                                                                                    தொடரும்,,,,,,,,,,,