நான்
போயிருந்த வெங்காயக்கடையது.
சிறியதாயும்
அல்லாமல்,
பெரியதாயும்
அல்லாமல்
நடுவாந்திரத்
தோற்றம்
போர்த்தி
அமர்ந்தது காட்சியளித்ததாய்/
வெங்காய
மண்டி என்றால்
அதில்
வெங்காயங்கள் மட்டும் குடியிருக்கவில்லை.
வாழை
இலை,தேங்காய்கள்,
வெள்ளைப்
பூண்டு என இருந்த
கடையின்
ஒரு ஓரத்திலும்,
பரண்
மீதுமாய் வெடிபொருட்கள்
அடுக்கப்பட்டுத்தெரிகிறது.
வெங்காய்க்கடைக்குள்
வேர்
விட்டிருந்த வெடிபொருட்களின்
மாதிரிகளை
எடுத்துக் காண்பித்துக்
கொண்டிருந்த
கடைக்காரர்
கொடுத்த
இரண்டு தேங்காய்களை
வாங்கிக்கொண்டு
கிளம்புகிறேன்
காய்கறிகள்
வாங்கி வரலாம் என/
வெங்காயக்கடைக்கு
அருகாமையாய்
பூக்கடை,
பூக்கடைக்கு
பக்கத்தில்
இரும்பு
பெயிண்ட் வியாபாரம்,
அதற்கடுத்ததாய்
இருந்த ஜவுளிக்கடையுமாய்
அடுக்கப்பட்டு
தெரிந்த கடைகளுக்கு
மத்தியில்
சிரித்த காய்கறிக்கடைக்காரர்
ஸ்னேகமாய்
சிரித்து நிறுவினார்
காய்கறிகளின்
எடையை/
வாங்கிக்கொண்டு
ரோட்டோரமாய்
அமர்ந்து
செருப்புத்தைத்துக்
கொண்டிருந்தவரிடம்
கொடுத்திருந்த
அறுந்த செருப்பை
தைத்து
வாங்கியவனாகவும்,
வாங்க
வேண்டிய சரக்குகளின்
எண்ணிக்கையை
மனதில்
இருத்தியவனாகவும்,நினைத்தவனாகவும்
நகன்ற
போது கூப்பிட்ட
செருப்புக்கடைக்காரரின்
மகன்
நான்
வாங்கமறந்திருந்த
மீதம்சில்லறையைக்கொடுத்தான்
தன்
பிஞ்சுக்கைகளின் மிருது மாறாமல்/
8 comments:
தன் பிஞ்சுக்கைகளின் மிருது மாறாமல்/
மிருதுவாய மனம் நிறைந்த அருமையான ஆக்கம் .பாராட்டுக்கள்..
சமூகக் கவிதை அருமை....
வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் எழில் மேடம் .நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் வேல்முருகன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
சில பண்புகள் குறிப்பிட்ட சிலரிடம்தான் இருக்கும்..
எல்லோரிடமும் நாம் எதிர்பார்க்க முடியாது
வணக்கம் ஆத்மா சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment