இலக்கு,,,,,,,,
சமீப நாட்களாய் நடு இரவில்
வீட்டின் கதவை பிராண்டுகிற
பூனை கருச்சாம்பல் கலரில்
முறைத்துப்பார்த்து நிற்கிறது.
விரட்டும் போது போய்விடுவதும்
திரும்ப வந்து நடு இரவில்
கதவை பிராண்டுவதுமாய்
இருக்கிற அது தனித்து இருக்கிறதா
அல்லது அதற்கு ஜோடி உண்டா
தெரியவில்லை.
அதன் வேலையே நடு இரவில்
வந்து கதவைப்பிராண்டுவதும்
விரட்டியதும் ஓடுவதுதானா?
வேறேதும் தனித்த திறமைகள்
அதனிடம் உள்ளனவா தெரியவில்லை.
எதாக இருந்தாலும் அதன் அந்நேரத்தைய
தேவை வேறென்னவாய் இருக்கப்போகிறது.
இறுகிமூடப்பட்ட உள்ளங்கையில்
வைக்கப்பட்டிருக்கிற
ஒருகவளம் உணவைத் தவிர/
5 comments:
படமும் கவிதையும் தொட்டு நிற்கின்றது.
சாம்பல் பூனைக்காக ஒரு கவளம் சோறுவைக்க மனம் ஏங்குகிறது.
வணக்கம் மாதேவி மேடம்,சாம்பல் பூனைக்கென்ன எந்த பூனையைக் கண்டாலும் சோறுவைக்கலாமே?
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
பூனைகள் எனக்கும் பல கதைகள் சொல்கிறது. எல்லாமே அதன் வயிற்றுக்குத்தானே....
வணக்கம் எழில் மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment