பார்த்ததையெல்லாம் கை பேசியில்
படம் பிடித்துகொண்டிருந்த
சிறுவனைப் பற்றிஅவனது
தாய் சொல்லிக்கொண்டிருந்தாள்.
நன்றாக ஓவியம் வரைகிறான்.
நிறைய கேள்வி கேட்கிறான்.
நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறான்.
அவனது பசிக்கு தீனியிடவும்,
அணையிட்டு விடவும் முடியவில்லை.
ஒரு வரையறைக்குள் நிற்க மறுக்கிற
அவனது எல்லை நீள்வதாயத்தெரிகிறது.
அவனை ஏதாவது ஒரு வழியில்
சரியாக திசை திருப்பி
கவனம் குவிய வைக்கவேண்டும்
எனவும் நாங்கள் கொடுக்கிறவைகள்
அவனது மூளைக்கும்,எண்ண ஓட்டங்களுக்கும்
போதவில்லை எனவுமாய் சொல்கிற அவள்
அவனை அருகிழலைத்து உச்சி முகர்கையில்
அவளது பிடிக்குள் அடங்காமல் ஓடுகிறான்.
கைபேசியை தூக்கிக்கொண்டே/
No comments:
Post a Comment