அப்படியொரு அழைப்பை
நிராக்கிற எண்ணமெல்லாம்
இவனிடம் இல்லைதான்.
பின் ஏன் நிராகரித்தான் அப்படி?
அழைத்தவர்களையும்,
அழைப்பு விடுத்தவர்களையும்
புறக்கணித்து என்பது
அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக/
முள் கீறிய ரணமாய் அவர்களது
பேச்சு பட்டுப்படர்கிற சமயங்களிலும்
தன் இருப்பிட்த்திற்கு ஆபத்து
வந்து விடுமோ என்கிற அச்சத்தில்
அவர்களால் இவன் விலக்கி
வைக்கப்படுகிற போதும்,
வார்த்தைகளால் கீறப்படுகிற சமயத்திலுமாய்
இப்படியாய் ஆகிப்போவது
இவனது இயல்பாய் இருக்கிறது.
வேறென்ன சொல்ல?
2 comments:
ஏதோ ஒரு காரணத்திற்காக விலக்கலும் விலகலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அருமையாக கவிதை யாக்கிவிட்டீர்கள்
வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment