2 Dec 2012

மஞ்சு விரட்டு,,,,,,



விரட்டப்படுவது ஒன்றாகவும், விரட்டியது நான்காகவும் இருக்கிறது. 

தெற்கிலிருந்து வடக்குப் பார்த்ததாய் நீண்ட சாலை கருநிறம் பூசி தன்னை
அடையாளப்படுத்திக்கொண்டதாயும்,தன்இருசாரியிலும்இருக்கும்கடைகளையும் வீடுகளையும் சுமந்து காட்சிப்பட்டதாய்/ 

ஏதோஒரு பெயர்(சரியாகஞாபகமில்லை)சொன்ன பிராய்லர் கடையில்நானும் எனதுமகனுமாய்நின்றிருந்தோம்ஒண்ணேகால்கிலோகறிக்குசொல்லி விட்டு/ 

ஓட்டிப் போன இரு சக்கர வாகனத்தின் கைபிடித்து நானும் ,பின்இருக்கையில்
கைவைத்துகடையையே வெறித்துப்பார்த்தவனாய் எனது மகனும் நின்று
கொண்டிருந்தவேலையில்எங்ளைக்கடந்த இருசக்கர வாகனங்களும்,
சைக்கிள்களும் அது சுமந்த மனிதர்களுமாய் எங்களை வேடிக்கைபார்த்துக்
கொண்டும்,அவர்களை நாங்கள்வேடிக்கைபார்த்துக்கொண்டுமாய் நின்றிருந்த பொழுதிலுமாய்இருசக்கரவாகனத்தில்எங்ளைக்கடந்தகொத்தனார்ராதாஇந்தப்பக்கம்வேலைஇருப்பதாகசொல்லிச்சென்றார்.

நல்லமனிதர்.அதற்கு அடையாளமாய் வெள்ளைவேஷ்டி,வெள்ளைச்சட்டை
கையில்கோல்ட்கலர்செயின்போட்டவாட்ச்எனதன்னை அடையாளப்படுத்திக்
கொண்ட அவர் அமர்ந்து சென்றது சிவப்புக்கலர் காட்டிய வாகனமாய்/ 

மெதுவாகவந்தஅவர்என்னைப்பார்த்துநிதானித்தாராஅல்லதுஎனது சிரிப்பைப்
பார்த்துநிதானித்தாரா தெரியவில்லை.வாகனத்தைநிறுத்திபேசிவிட்டுச்
சென்றார்.

திரும்பவுமாய் பார்வை பிராய்லர் கடைப்பக்கம் ,எனக்காக வெட்டப்படுகிற 
கோழியின் முழு உரு பார்த்ததாய்/ 

வெட்டுப்படுகிற கோழி,அதன் மேல்ஓங்கி இறங்குகிறகத்தி.அதன்முனை பற்றி 
வலுவாய் இறக்குகிற வளைக்கரமொன்று/ 

வலதுகைகறி வெட்ட,இடது கை அதை பிடித்து ஒதுக்க,நேற்றுவரைஉயிரோடு
 இருந்தவை இன்று கறியாய் அவளது கைகளில் துண்டுபட்டுக் குவிகிறது.

.,,,,,,,,பிராய்லர் என பெயர் தரித்திருந்த பெயர் பல்கையில்,,,,,,,,,,,சாமிதுணை என எழுதியிருந்தார்கள்

வாலோடியாய் நீண்டு தெரிந்தசெவ்வகவடிவப்பலகையில்கடையின்பெயர்,
சுவாமிதுணைஎன்கிறவாசகங்களுடன்ஒருஓரமாய்சதுரமாய்ஒட்டப்பட்டிருந்த கோழி படங்கள்.24 மணி நேரமும் இங்கு கறிகிடைக்கும் என கூவி அறிவித்த வாசகங்களின் கைபிடித்தவாறு/ 

இவை எல்லாவற்றையும் எனக்காக வெட்டப்படுகிறகோழிக்கறியையும்
மகனையும்சாலையையும்,சாலையின்ஜனங்களையும்மாறி,மாறிப்பார்த்தவனாய்நின்றுகொண்டிருந்தவேளையில்வடபுறமிருந்து தென்திசைநோக்கி
ஓடிவந்தஅழுக்குநாயைகோழிக்கறிக்கடையின் முன் படுத்திருந்த நாய் ஒன்று உருமிக் குறைத்து விரட்டுகிறது.அதுவிரட்டவும் அதன் பின்னால் சேர்ந்து கொண்ட மற்ற மூன்றும் அதை மூர்க்கம் கொண்டு விரட்ட அது திரும்பி வால் தூக்கி முறைத்து, முறைத்த கணத்திலேயே வால் மடக்கி உடல் குறுக்கி ஓடிப்பதுங்குகிறது ஒருசந்தினுள்ளாக/ 

விரட்டியது  நான்காவும் விரட்டுப் பட்டது ஒன்றாகவுமாய் இருந்த காட்சி விழி
படர்ந்த வேளையில் எனக்கான கறி கொடுப்பதற்கு ரெடியாகியிருந்தது. 

பையை வாங்கிக் கொண்டு திரும்புகையில் சந்தினுள் நுழைந்தஒற்றை நாய் நான்கு நாய்களை விரட்டியடித்துத் துரத்துகிறது,நான்கின் வேகமும் ஒன்றில் குடிகொண்டதைப்போல/ 

இப்போது  விரட்டுப் படுவது  நான்காயும்  விரட்டுவது  ஒன்றாகவும்  ஆகிப்
போகிறது. 




10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக முடித்துள்ளீர்கள்...

ஆத்மா said...

பெரியதொரு சிறுகதையின் தொடக்கத்தைப் போன்று அழகான ஆரம்பித்து நச் என்று ஒரு நிமிடத்துள் முடித்திருப்பது சொல்கிறது உங்கள் திறமையை

முத்தரசு said...

அட......

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.ன்ஹன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் சிட்டுக்குருவின் ஆத்மா சார்.நன்றி தங்களது வருகைக்கும,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் முத்தரசு சார்,நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

விச்சு said...

எழுத்துநடை நல்லாயிருக்கு சார்.. தினவாழ்வில் ஒரு நிகழ்வு.

உஷா அன்பரசு said...

சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழகாக சிறுகதையாக்கி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு மேடம்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/