மடித்துக்கட்டியிருந்தகாவி நிற வேஷ்டி சாம்பல் கலரில் இருந்தசட்டை.இரண்டுமே அழுக்குப்
படிந்து/
அழுக்கென்றால் அழுக்கு அப்படியொரு
அழுக்கு. “எனக்குப்பிடிக்கும் என்கிற ரகத்தில் இருக்கிறஅழுக்காகஇல்லாமல்இருந்தஅழுக்கது.
எண்ணெய் காணாத பரட்டைத்தலை. அழுக்கு முகம். தொள தொளத்த உடல் என வாடிப்
போய் அமர்ந்தவராய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
சாலைகளின்நான்குமுனைசந்திப்புஅது.கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்குஎனஅறியப்பட்டிருந்ததிசை வழியே தவழ்ந்து வந்த சாலைகளில் தென்திசையிலிருந்துஓடிவந்தசாலையின்
முடிவில்
எல்லோருக்குமாய் வழிவிட்டு இடதுபுறமாய் அமர்ந்திருந்த கடை வழக்கம் போலவே டீக்கடை
-க்கானஅடையாளம்பூசிக்கொண்டுவடைகளில்நான்குவகைகளும்,இனிப்புப்
பணியாரமும்,
டீயும் தினசரிபேப்பர்களும்அவற்றைப்படித்துக்கொண்டிருந்தமனிதர்களைசுமந்துமாய் காட்சி
-யளிக்கிறது.
மதியம் மணி இரண்டின் பணி முடிந்து மூன்றையும்
தாண்டி மூணரையை தொடப் போகிற வேளை.நான் அந்த டீக்கடையில் நிற்கிறேன்.
இன்று அரைத்தேரம், அரைப்பள்ளிக் கூட நேர அலுவலகம். பணி முடிந்து 2.45 ற்கு பஸ்ஸைப்
பிடித்து இங்குவந்துஇறங்கியநேரம்,மணி 3.30.
என்றுமே 2.45 வருகிற பஸ்நாங்கள் போய் காத்திருந்தபொழுது வர வேண்டிய நேரம் தாண்டி
மூன்று மணிக்குதான் வந்தது.”பஸ்
வராது என அலுவகத்தில் ஐந்து நிமிடம் கூடுதலாக அமர்ந்து விட்டால் பஸ் போய் விடுகிறது நம்மை விட்டுவிட்டு.பஸ்வர வேண்டி காத்திருக்கிற
பொழுதுகளில் அது வரதாமதமாவது நம் நேரமே”.என பஸ்ஸிற்காக காத்திருக்கிறவர்களது மனோநிலையை
பிரதிபலித்தார் என கூட இருந்தவர்.
கால்மணி அல்லது இருபது நிமிட நேரங்களை தமது பிரயாண நேரமாக எடுத்துக் கொள்கிற பஸ்ஸிலிருந்து இறங்கி பசிதாங்காமல் டீக்கடையில் வந்து டீக்கு
சொல்லி விட்டு நின்ற நேரம்தான்உருட்டி வைக்கப்பட்டிருந்த இனிப்பு வடைகள் கண்களில் தெரிய ஒன்றை எடுத்து
பிய்க்கிறேன்.
பிய்த்த வடையின் விள்ளல் வலது கையிலிருந்து வாய்க்குப் பயணப்படப் போகிற
வேளை
வடைகளை காத்துக் கொண்டிருந்த தட்டிலிந்து சேர்த்து அள்ளிய வடைகளின் சிதறல்களை கடையின் ஓரமாய் நிமிர்ந்து நின்ற மின் கம்பத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு
இருந்த அவரின்முன்னாலிருந்தபேப்பரில்கொண்டுபோய்வைக்கிறார்டீ
மாஸ்டர்.
என்னது”இதுதயிர்சாதமா”எனகேட்டவாறேஇடதுபுறமாய்இருந்தபொட்டலத்தை சுட்டிக்
காட்டுகிறார்டீ மாஸ்டர். சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர் சாலையின் எதிர்திசையில்கை
நீட்டி
அங்கிருந்தசாப்பாட்டுக்கடையில்வாங்கினதுஎன்பதாய்அடையாளம் காட்டிச்சிரிக்கிறார்.
டீமாஸ்டர்கேட்டது,அவர்,அடையாளம்,,,,,,,,,,,என்கிறபடிமத்திற்கும்,காட்சிப்படலுக்கும் நடுவே
அவர் வேக வேகமாயும் அவசராவசரமாய் அமர்ந்தும்
சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.மாஸ்டர் கொண்டு போய்க்கொடுத்த வடையின் சிதறல்களைஒதுக்கி
வைத்தவாறும்,அவற்றை
ஒவ்வொன்றாய் எடுத்து சாப்பிட்டவாறுமாய்/
அவரைச்சுற்றிப்படர்ந்திருந்த மண்தூசி அதிலிருந்து கிளம்பிய வாடை சாலையில் விரைந்து
கொண்டிருந்தவாகனங்கள்,அவசரம்சுமந்துவிரைந்துகொண்டிருந்தமனிதர்களையும்கணக்கில்
கொள்ளாதவராக/
அவர் சாப்பிடுவதையும் அவரையும், மாற்றிமாற்றி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த
மாஸ்டர் திரும்பி வருகிறார் டீப்பட்டறை நோக்கி/குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர்
திரும்பி வந்த மாஸ்டருக்கு கைகூப்புகையில் கூப்பிய கையின் நன்றி மாஸ்டரின் முதுகில்
பட்டுத்தெரிக்க இதன் மீதெல்லாம் படர்ந்த என் விழிப்பார்வை அதன் இருப்பிடம் தேடிவந்து அமர்ந்து கொள்கிறது.
யார்இவர்?எதற்காகஇங்குவந்துஅமர்ந்திருக்கிறார்.பார்த்தால் பிச்சைக் காரர்போலவோ,அல்லது சாமியார்மாதிரியும்தெரியவில்லை.பின்ஏன்இப்படிஅமர்ந்திருக்கிறார்
இங்கு?
அவர்யாருக்குப் பிள்ளையோ,யாருக்குதந்தையோ,யாருக்குஎன்ன உறவோ எந்த
ஊரோ?ஏன் இங்கு வந்து இப்படி அம்ர்ந்திருக்கிறார்?,,,,,,,,,என்கிற
கேள்வியுடனும் நம் தேசம் சுமந்து நிற்கிற அடையாள மனிதரை பார்த்த அலுப்புடனுமாய்/
4 comments:
சமூகக் காட்சி... ஒரு வித்தியாசம் தெரிகிறது உங்கள் வரிகளில்...
வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
பெரும்பாலும் இப்படி சமூகம் சார்ந்து சிந்திக்கிறவர்கள் மிகவும் குறைவு பாராட்டுகள்
வணக்கம் மாலதி மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment