16 Jan 2013

ஒத்தப்பனை,,,,,


                                                                                                                                                               
சரீரம் பருத்த பாட்டியின் அன்றாடங்கள் எதுவாக இருக்கிறது? அல்லது எதுவாக இருந்தது இதுவரை?

நான் அவள் அருகே சென்று இதெல்லாம் கவனித்ததில்லை.அப்படியெல்லாம்கவனிக்க முடியாதஅளவிற்கு அவளது வீடுதூரம் தொலைவு என்றெல்லாம் கிடையாது.அதற்காக அவளுக்கு அருகில் போயோ அவளை வட்டமிட்டுக் கொண்டோ இருக்க என்கிற இலக்கண த்திற்கு உட்பட்டெல்லாம் இல்லை நானும்!

வழக்கமானதோல்தடித்துப்போனமிடில்கிளாஸ்தனங்களில்பக்கத்துவீட்டுக்காராரிடம்பேசுவது கூட அர்த்தமற்றதாகிப் போகிறது.

அப்படி இருக்கும் போது எப்படி?

எங்களது தெருவின் கடைசியில் இடதுபக்கமுனை திருப்பத்திலுள்ள வீடு.சுந்தரம்  ......  வீடு என்றுதான் அந்த பாட்டியின் வீடு அவரது கணவரின் பெயருடன் ஜாதி சேர்த்து அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. ரேஷன் கார்டிலும் வாக்காளர் அடையாள அட்டை யிலும்  அதுபடியே தான்.
அவர் அவரது வாலிப வயதில்ல் உடலில் உழைப்பின் சக்தி உள்ள வரையிலும் ரயில்வே குட்ஷெட்டில் லோடுமேனாக வேலை பார்த்தவராம்.

லோடு மேன்களில் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்டாகவே!
         
நூறு கிலோ மூடையை கழுத்து நரம்பு புடைக்க ஒற்றைஆளாகதலையில்சுமந்து போகும்  அளவிற்கு பலம் வாய்ந்தவராய்!

சைக்கிளில் அவர் அடிக்கும் லோடுகளுக்கு கணக்கு கிடையாது.எது எதற்கோ  விருது    வழங்கும் அரசாங்கம் அவரையும் அவர் மாதிரியான பிறரையும் கௌரவித்து பட்டம் ஏதேனும் வழங்கியிருக்கலாமே?

பட்டங்களும் கௌரவங்களும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கும் அரசு பணிபுரிபவர்களுக்கு மட்டும் தானா?

இது மாதரி கீழ்த்தட்டில் வேலை செய்பவர்களின் சிறப்புகளை கண்டறிந்து சிறப்பிக்க இந்த அமைப்பு எப்பொழுது முன்வரும் என்பது தெரியவில்லை.

பின் அவர் விஷயத்தில் மட்டும் முளைத்தெழுந்தா வரும் அந்த மனப்பான்மை?

தாத்தா பற்றி பாட்டி இவ்வாறெல்லாம் தொகுத்துச் சொல்லநான்கேட்டிருக்கிறேன்.அவளுக்கு உள்ள பெரும்பிரச்சனையும் கவலையும் அவர்களின் வீடு தெரு முனையில் அமைந்து போனனதைப் பற்றியே.

வீடு திருப்பத்தில் இருப்பதால் தெருவிற்குள் வரும் போகும் டூ வீலரிலிருந்து தண்ணீர் ட்ராக்டர் வரை எங்களது சுவரை இடிக்கிறார் போல திரும்புகிறது.எந்த எடுபட்ட பயலாவது என்றாவது ஒரு நாள் இடித்துவிட்டால்... வீடு என்னத்துக்கு ஆக? என்பது அவளின் கனமான வாதம்

அவளது வாதத்தை சத்தமிட்டு சாட்சிக் கூண்டில் நின்று சொல்லா விட்டாலும் கூட வருகிற போகிறஅங்குஇருக்கிறஅக்கம்பக்கத்தவர்களிடமெல்லாம்சொல்லித் தீர்க்கிறாள்.

நாங்கள் வீடு கட்டும்போது எங்களது நிலத்தில் தான் ரோட்டடிக்கு இடம்ஒதுக்கினோம் ஆகவே இது எங்களது இடம்.இந்த ரோட்டில் யாரும் போகவர உரிமை கிடையாது. நான் ஒரு நாள் முள்ளை வைத்து அடைக்கப் போகிறேன்ரோட்டை என்றான்.

முடிந்தால் அடைத்துக் கொள்ளுங்கள்என்று புதிதாக குடிவந்த கடைசி வீட்டுக்கார க்கும் அவளுக்கும் ஒரு நாள் சண்டையே வந்து விட்டது.

கடைசிவீட்டுக்காரரிடம்அவள்போட்டசண்டைதான் கடைசியிலும் கடைசியாக! அதற்கப்புறம் அந்தத் தெருவிற்கு யாரும் புதிதாக வீடு கட்டியோ வாடகைக்கு குடி வரவில்லை.

ஆமாம் இந்தத் தெருவில் வீடுகட்டிகுடிவந்து விட்டாலும்...?என்றுதான்பேசிக்கொண்டார்கள். அந்தத் தெருவிலுள்ள காலிமனைகளை பார்த்துச் சென்றவர்கள்.

பஞ்சாயத்து யூனியனின் விதிப்படி முறையாக கட்டமைக்கப்பட்ட தெருவோ,ரோடோஅல்ல அது!

வீடு கட்டியவர்கள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வீட்டின் முன் விட்ட ரோட்டடி இடமே இப்போது தெருவாக உருவெடுத்து!

உருவெடுத்தது இப்போது தெருவாக இல்லை.சீமைக்கருவேலை முட்செடிகளும் பார்த்தீனியம் செடிகளுமாய் காலி இடங்களை ஆக்ரமித்து ஓங்கி வளர்ந்து செழிப்புடன் நிற்க அவற்றினூடாக தேங்கி நின்ற மழை நீர் + சாக்கடை நீரில் தாராளமாக பன்றிகள் உழப்பித் திரிந்தது.

அவற்றின் உணவிடமாகவும் உறைவிடமாகவும் ஆகிப் போன இடத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரித்த கொசுக்கள் சைக்ளோத்திரின் காயல்களையும் திரவமருந்துஆகியவற்றையெல்லாம் மீறிபச்சைப்பெயிண்ட்மஞ்சள்பெயிண்ட்வீடுகளுக்குள்படையெடுத்தன. அவற்றின் உயரங்கள் கொசுக்களின் வருகையை துளியளவு கூட தடுத்து நிறுத்தி விட முடியவில்லை.

அப்படியெல்லாம் அவற்றின் வருகையை நிறுத்திவிட முடியாத தெருவாசிகள் அந்தத் தெரு அடங்கிய வார்டு மெம்பர்களிடமும் பஞ்சாயத்து யூனியன் பிரசிடெண்டிடமும் தாங்கள் தெரு மேம்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடந்த நடையின் அடையாளங்களே எங்களது தெருவின் மேம்பாட்டு தடங்கள் ஆகிப் போயின.

இம்மாதிரியானஅழகானதெருவின்ரோட்டிற்குத்தான்இப்படிகச்சைகட்டிக்கொண்டுதிரிகிறாள்  பாட்டி.

அவளும் லேசுப்பட்ட பாட்டியில்லை என்று தான் இந்த வட்டாரத்திலும் தெருவிலும் அவளுக்குப் பெயர்!

இன்று காலையில் கூட வார்டு மெம்பரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.
பிள்ளைகள் பள்ளிக்குப் போக அவரவர்களின் வேலை அவசரம் என தெருவிலிருக்கிற ஆறு வீட்டுக்காரர்கள் சீக்கிரம் சீக்கிரமாக தண்ணீர் பிடித்தது போக கடைசியாக இந்த வயசான கட்டை பிடிக்க ஆறு குடமோ ஏழு குடமோ தான் வருகிறது.நான்  என்ன செய்யட்டும் நீயே சொல்லு என எங்களது வார்டு மெம்பரை பாடாய்ப் படுத்திவிட்டாள்.

அதற்கடுத்து வரும் நாட்களில் அவர் எங்களது தெரு பக்கம் தலைவைத்து படுப்பது சிரமம் என்றே தான் தேன்றுகிறது.

அப்படியான சிரமத்தை எதிர் கொள்ளப் பிடிக்காமலும் அவளின் வாய் வார்த்தையை தாங்காமலும் அவளிடம் யாரும் நெருங்குவதோ தொடர்பான உறவு வைத்துக் கொள்வதோ கிடையாது.

அந்த அளவிற்கான அவள் மீதான எரிச்சலும் கோபமுமே அவள் சிக்குன் குனியா காய்ச்சலில் படுத்தபோதுஅந்ததெருவாசிகள்எவரையும்அவளதுஅருகில்அண்டவிடல்லை.என்னைத்தவிர!

டாக்டரிடம் போய் வருவதிலிருந்து சாப்பாட்டிற்கு... வரை அவள் பட்ட சிரமம்சொல்லிமாளாது.

ஒத்தாசைக்கு தாத்தா இருந்தாலும் அவர் தாத்தாதானே?

அவரவர் அவரவர் பிழைப்பின் முக்கியத்துவம் கருதி ஓடிக் கொண்டிருக்கையில் இந்த சண்டைக்கார பாட்டியின் பின்னால்யார் அலைவது?தெருவாசிகள்பாட்டியை முன்னால் விட்டு பின்னால் பேசுவது நிறையவே!

அந்தப் பேச்சு தப்பித்தவறி அவளது காதில் விழுந்து விட்டாலோ அல்லது அதை கேள்விப் பட்டு விட்டாலோ பேசியவர்கள் மன்னிப்புக் கேட்கிற வரை விட மாட்டாள்.

என்ன தான் பெரிதாக அப்படி சண்டை போட்டாலும் கூட மறுநாளே போய் விடுவாள் அவர்களின் வீட்டிற்கு?

என்ன தங்கச்சி என்ன செய்யிற... என ஆரம்பித்து அதுஎன்னவோபோஎன்னசெய்ய... ? என முடிப்பாள்.

காலை நீட்டி அமர்ந்திருந்த படியிலிருந்து எழுந்தவாறே திரும்பவும் ஒரு கால்மணிநேரமாவது  பேசுவாள்.

அன்றும் அப்படித்தான் கிழிந்து போன ரேஷன் கார்டின் கடைசிப் பக்கப் பேப்பரையும் கார்டையும் தனித்தனியாக கையில் பிடித்துக் கொண்டு வந்திருந்தாள்.

இப்பிடி செஞ்சு தொலைச்சா எப்பிடி? இப்பிடி தனித்தாளாகுடுத்தாஎன்னையை மாதிரி ஆளுக தொலைச்சிட்டு ழுழிக்கவா?நீதான் கோளாறா ஒட்டி கிட்டிக்குடுஎன தரையில் ரேஷன் கார்டை போட்டவாறு கால் நீட்டி அமர்ந்து விட்டாள்.

எனக்குள் கூட எரிச்சல் தான் உதவி கேட்டு வருபவள் இப்படி முகத்தில் அடித்தாற்ப் போல நடந்து கொண்டால்...?

மனைவியை ஏறிட்டேன்.

பல அர்த்தங்களை சொன்ன பார்வையுடன் பார்த்த அவள் ரூமிற்குள் சென்று பசை பாக்கெட்டை எடுத்து வந்தாள்.

நீட்டி அமர்ந்திருந்த கால்களின் தடிமனும் உடலின் பருமனும் களைத்துத் தெரிந்த சுருக்கங்கள் அற்ற உருண்டை முகத்தில் வழிந்தஎண்ணெய்மின்னதண்ணீர் கேட்டாள்.

பாட்டியின் உடன் பிறந்தவர்கள் பத்துப்பேராம் எல்லோருமே அவரவர்களின் பிழைப்பிற்குள்
அடங்கி ப் போன கட்டாயம்.

உள்ளூரிலேயே இருந்த தம்பியும் தங்கையும் அவர்களது பிள்ளைகளும் தோதுப்படுகிற போது வந்து எட்டிப் பார்த்து சாப்பாடுதிண்பண்டம்கைசெலவிற்குஎனகொடுத்துவிட்டுப்போவார்கள்.

மற்றவர்கள் தூரந் தொலைவில் உள்ளதால் வெறும் விசாரிப்பு மட்டுமே அவர்களால் முடிந்தது!

”எங்களை யார் கவனிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் எங்களது சொத்து எல்லாம் எனவும்.ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் இப்பிடியே அல்லாடிக்கிற வேண்டியது -தான் முடியாதப்ப  உடன் பிறப்புக யார் தயவுலயாவது போயி இருந்துக்கிற வேண்டியது தான்” எனவும் சொல்வாள்.சமயங்களில் முதியோர் இல்லங்களைப் பற்றி அக்கறை எடுத்து விசாரிப்பாள்!

ஆனால்தாத்தாவின்எண்ணம்இந்தப்பிரச்சனையில்வேறுமாதிரியாகஇருந்தது.தாத்தாவு -க்கும் பாட்டிக்கும் எது என்றாலும் ஏழாம் பொறுத்தமாகவே.

தாத்தாவை விட பாட்டிக்கு பத்து வயது குறைவு அதனால் வீட்டின் சமையலிலிருந்து நல்லது பொல்லது வெளியூர் பிரயாணம் எல்லாவற்றிலும் பாட்டியின்முடிவே மேலோங்கி நிற்கும்.

அப்படி மேலோங்கி நிற்கும் கால கட்டங்களில் தாத்தா வீட்டின் வெளியே பிளாஸ்டிக் சேர்ப்போட்டு அமர்ந்து விடுவார்.

உழைப்பின் தடங்கள் இன்னும் உருண்டு திரண்டு மிச்சமாய்த் தெரியும் உடம்பில் ஒரு துண்டும் நாலு முழ வேஷ்ட்டியும் மட்டுமேயான காஸ்ட்டியுமுடன் இருக்கும் அவர் அனேக நேரங்களில் வெற்றிலை போட்டு சிவந்த வாயுடனேயே காணப்படுகிறார்.

நீர்க் கட்டுக் காலுடன் அவர் தாங்கி தாங்கி நடந்து சென்று வெற்றிலையை மட்டும் எப்படியாவது வாங்கி வந்து விடுவார்.

பாட்டி கூட சப்தம் போடுவாள் தாத்தாவை!இப்பிடி கடை கடையா வெத்தல வாங்க அலையுற நேரத்துல வீட்டுக்குத் தேவையான காயி கீயி ஏதாவது வாங்கிட்டு வரலாம்ல” என்பாள்.

பாட்டியின் அந்தப் பேச்சுக் கெல்லாம் தாத்தா ஒன்றுமே சொல்வதில்லை எப்போதும்!                                                                                     

ஆனால் அப்படி தெருப்பக்கம்டீக்கடைஎனபோய்வரும்நேரங்களில்தாத்தாதன்னையறியாமல் வேஷ்டியிலேயே மலம் கழித்து விடுவதும் உடல் நடுக்கத்தால் எங்காவது கடை  ஓரம் திண்ணை என உட்கார்ந்து விடுவதும் சமயா சமயங்களில் கிறங்கி கீழே சாய்ந்து விடுவதுமாய் தான் அவரது பெரும்பாலானதினங்கள்கழிந்தன.இதையெல்லாம் பார்த்தவர்கள் சொல்லக் கேட்;டும் கேள்விப்பட்டுமே பாட்டி இப்படி தாத்தாவை சப்தம் போடுகிறாள்.

அன்று ஒரு நாள் இரவு ஹோட்டலிலிருந்து பார்சல் வாங்கி வரும் போது தான் தாத்தா அவரது வீட்டின் படியோரம் விழுந்து கிடந்ததை கவனித்தேன்.நினைவு இருந்தது.

அவரை தூக்கி அமர வைத்து தண்ணீர் குடிக்கக் கொடுத்து நெஞ்சை நீவி விட்டதும் தான் கொஞ்சம் தன்னிலைக்கு வந்தார் மனிதர்.

பாட்டி கடைக்குப் போயிருக்கிறாள் எனச் சொன்ன அவர் சிறிது மௌனத்துக்குப் பின் பையில என்ன புரோட்டா பார்சலா? சால்னா வாடை இங்கன அடிக்குது என்றார்.

ஓரு பொட்டலத்தை எடுத்து அவர் கையில் கொடுத்த போது...அதெல்லாம் ஒரு காலம் பகல் ராத்திரின்னு எந்த நேரம்ன்னு கணக்குக் கெடையாது.

ஆடு,கோழி,மாட்டுக்கறி எல்லாம் சாப்புட்டுட்டு அளவில்லாமவேலசெஞ்சிட்டுத் திரிஞ்ச  நான் இப்ப பச்சத்தண்ணிய பல்லுல ஊத்துறதுக்குக் கூட யோசிக்க வேண்டியதிருக்கு என்றார்.

அவரின் பேச்சிலிருந்த ஏக்கத்தையும் சோகத்தையும் உணர தனி மனம் வேண்டும்.

அங்குட்டிங்குட்டு தூரந்தொலவுல இருக்குற கூடப் பொறந்தவுங்க ரெண்டு பேருமே இங்க வந்துருங்க இங்க வந்துரங்கன்றாங்க,மதுரையில இருக்குற தம்பி வீட்ல தான் கக்கூசு பாத்ரூம் சகிதம் இருக்கு. ஆனா பாட்டிக்கு அங்கன போக மனசு ஒப்பல.தனியாளா இருந்தாலும் இங்கன இருக்குற செளகரியம் அங்க வருமாங்குறா. என்ன இருந்தாலும் இன்னோர்த்தங்க வீட்ல போய் பெட்டிப் பாம்பா எப்படி இருக்க”?அப்பிடீங் குறா என்ன செய்ய சொல்லு?

பேச்சற்றுக் கடந்த சிறிது நேர இடைவெளிக்குப்பின் அவரேதான் தொடர்ந்தார். சீக்கிரமா கொண்டு போ வீட்ல புள்ளைங்க ஆசையா காத்துக் கெடக்கும்.எங்களுக்குத்தான்  இப்பிடி ஒரு குடுப்பினஇல்லாமப்போச்சு,சொல்லும்போதேகுரல்தழுதழுத்துஅழுதவாறே உட்கார்ந்து விட்டார் தாத்தா. பக்கத்திலேயே அவரது கண்ணீரைத் துடைத்தவ ளாய் பாட்டியும்!

பிள்ளைகள் அற்றஅந்தஅனாதைமுதியவர்களைபார்க்கும்போதும்கடக்கும்போதும்அவர்களின் அன்றாடங்கள் சோகம் கப்பிய நினைவுகளுடன் நகர்வதாகவே பதிவாகிறது எங்களுள்!No comments:

Post a Comment