25 Jan 2013

கலர்ச்சுவர்,,,,,


             
தரையில் விழுந்த இலையை எடுத்து எறிந்த பொழுது அது சுவரின் ஒரு ஓரம் பார்த்து ஒட்டிக்கொள்கிறதுமிகவும் பாதுகாப்பாக தன் மேனி காட்டி/

மஞ்சளும்,பச்சையும்,பழுப்புமாய் தன் நிறம் காட்டிசிரித்த வேப்பஇலையது. பாத்ரூமின் தரையில் ஈரத்துடன் ஒட்டிக் கிடந்த இலையை அதன் ரம்பம் போன்ற ஊசி முனைபற்கள் மற்றும்அதன் மடங்கல்கள் எதுவும் கையில் கீறிவிடாமல் எடுத்து எறிந்த பொழுது வலப்புறச் சுவரில் போய் ஒட்டிக் கொள்கிறது.

தரையை விட்டு கொஞ்சமாய்மேலெழும்பிகாணப்பட்டரோஸ்க்கலர் சுவரான அது எப்படி அந்தஇலைதன்னில்அமரஅனுமதித்ததுஎனத்தெரியவில்லை?ஆச்சரியத்திலும்ஆச்சரியமாய்/

வழுக்கும் பெயிண்டை தன் மேனியின் மீது பூசி தன்னை அழகு படுத்திகொண்ட சுவர் அது,பாத்ரூம் என்பதால் பொதுவாகவே ஈரமாக இருக்கிறசுவராயும்/அதில் போய் எப்படி பிடிப்புடன் ஒட்டிக்கொண்டு தன் அழகு காட்டி சிரிக்கிறது என்பது மிகவும் கேள்விக்
குறியாகவே/

அது சரி பாத்ரூமிற்குள்  எப்படி வந்தது இலை என்பது  சற்று சங்டமேற்படுத்துகிற கேள்வியாகவே/

வீட்டின் பக்கவாட்டு வெளியில் நின்ற வேப்பமரங்கள்இரண்டிலிருந்து உதிர்ந்தவையாய் இருக்கலாம்.அப்படி அங்கேயே உதிர்ந்து காட்சிப்படுபவை இங்கே வந்துஏன் எட்டிப் பார்க்கவேண்டும்?அல்லது தரையில் விழுந்து ஈரத்துடன் ஒட்டிக்கொண்டு அழிச்சாட்டியம்  பண்ண வேண்டும்? உதிர்ந்து கிடக்கிற இலைகள் பறந்துபோய்அங்கெங்கேனுமாகவோ  விழுகிற போது இது ஏன் இப்படி வந்து?,,,,கொடுமைதான் போங்கள்.

இலையைத்தொட்டுத்தூக்குகிற போது அவனது எண்ணம் எதுவாய் இருந்தது?அல்லது அவனில் விழுந்து அவனது மனம் கிளர்த்திய எண்ணம் எதுவாக இருந்திருக்கவாய்ப்பு இருந்திருக்கும் என்பதுதெரியவில்லை இதுவரை?மண் கீறி துளிர்த்து, வளர்ந்து, கிளைபரப்பி ,நெடித்தோங்கி கால்பாவி நிற்கிறமரங்கள்தனதுஇலையையாருக்கும் தெரியாமல்  ஏன் இங்கு அனுப்ப வேண்டும்? யாராவது பார்த்தால் சொல்லுங்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என?

ஆனால் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது?சுவற்றில் ஒட்டியஇலையிலிருந்து அப்படியே கிளை பரப்பி இலைகள் வைத்து குட்டி போன்சாயாய் இங்கேயே வளர்ந்து நின்று தன் அசைவு காட்டியும்,அழகுகாட்டியும் வளர்ந்து நின்றால் எப்படியிருக்கும்?அங்கு பறப்பனவைகள்  வந்து தங்கி பல்கிப்பெருகி குடும்பம் நடத்தினால் எப்படியிருக்கும்?  சொல்லுங்களேன்  யாராவது?

6 comments:

வேல்முருகன் said...

அழகான கவிதைபோன்ற பதிவு

உஷா அன்பரசு said...

கவிதை பார்வை.. ரசிக்க முடிந்தது.

Anonymous said...

உங்களின் ரசனையான உணர்வுடன் ஒன்றி, இப்பதிவை படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்!
http://www.krishnaalaya.com

vimalanperali said...

வணக்கம் வேல் முருகன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு மேடம்
நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரவி கிருஷ்ணா அவர்களே,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/