9 Feb 2013

வெளிச்சம்,,,,

  
நடந்து வந்த பாதை இருட்டாகவும் வீடு வெளிச்சமாகவுமாய் ஆகித்தெரிகிறது.

எழுந்து விட்ட அதிகாலையின் ஐந்து மணிப்பொழுதுக்கு வேறெதுவும் வேலையற்றவனாய் டீக்கடையில்  போய் நிற்கிறேன்.

எனது வீட்டிலிருந்து டீக்கடை சற்றே குறைந்த தூரம்தான். ஆனாலும் அதைக் கடக்க டார்ச் லைட்போன்றவஸ்துக்கள்தேவைப்படுகிறதுதான்இடையில் மின் கம்பம் ஏதுமில்லை. அதனால் வெளிச்சமும் இல்லை. அந்த நேரத்தில் விழித்துக்கொண்ட வீடுகளிலிருந்து வருகிற  வெளிச்சம் தவிர்த்து.

குண்டாய் தொந்திபெருத்துத்தெரிபவர்டீக்கடைஉரிமையாளர்.பிரியமும், வாஞ்சையுமாய்  பேசக்கூடியவர்.கடைமுன்தலைதெரிந்தால்போதும்.டீபோட்டுவிடுபராக. அப்படியானவர்  தருகிற டீ திக்காய் இருப்பதை விடுத்து ஒரு கிக்காவே இருக்கும்.டீயை குடித்து விட்டு தள்ளாடாமல் வீடு வருவது அவரவர் சொந்த சாமர்த்தியத்தைப் பொறுத்தது.நானும் அப்படித்தான் வந்து கொண்டிருந்தேன்.

நேற்றைக்கு முன் தினம்தான் புதிதாக மாற்றிய டியூப் லைட். ஏனோ தன் பிடிவாதம் தளர்த்தாமல் அதை இறுக்கமாயும்,பிடிவாதமாயும் அமல் செய்வதாய்கண்ணை மூடி,மூடி  திறக்கிறது.ஸ்டூல் போட்டு மேலேறி திருகிவிட்டால்தான் எரிகிறது.ஸ்டாட்டர் தான் கோளாறு என அதையும் புதிதாய் மாற்றிய பின்பும் கூட இப்படித்தான் தாமதமாகவும், கண்சிமிட்டி முடித்து விட்டுமாய் எரிகிறது.

அப்படி தாமதமாகவும் கண்சிமிட்டியும் தன் பிடிவாதம் தளர்த்தாமல் எரிந்த போதும் கூட அதன் வெளிச்சம் மிக நன்றாகவே இருக்கிறது.

இப்போது நடந்து வந்த பாதையைப்பார்க்கிறேன்,பாதை கொஞ்சம் வெளிச்சப்பட்டுத் தெரிகிறது,விடிந்து விட்டது.

இப்போது நடந்து வந்த பாதையும்,வீடும் வெளிச்சப்பட்டுத்தெரிகிறது. அந்த இளம் காலைப் பொழுதில்/ 

2 comments:

உஷா அன்பரசு said...

//இப்போது நடந்து வந்த பாதையும்,வீடும் வெளிச்சப்பட்டுத்தெரிகிறது//- இனிமை!

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக