10 Mar 2013

கண்ணாடிக்கிளாஸ்,,,,                
டீக்கடைகள் எப்போதுமே மனிதர்களை நெசவிட்டு வைத்திருக்கிறது அல்லது நூற்று வைத்து இருக்கிறது.

பின்னதின் நீட்சிதான் முன்னது என்ற போதிலும் இரண்டும் வேறுபட்டு காட்சியளிப்பைவை
-யாயும்  நூற்புக்கும்,நெசவுக்குமான நூலிழை வித்தியாசங்களை காண்பிப்பதாயும்/

பேமஸ் டீக்கடை.அவர்களாகவேஅப்படியெல்லாம்பெயர்வைத்துக்கொள்வார்களோ?நேற்று பின்  மாலை6.45மணியவில்அந்தக்கடையைகடக்கையில் சூழ்க்கொண்ட எண்ணத்தை சுமந்தவ னாய் கடைக்குள் செல்கிறேன். ஏதாவது சாப்பிட்டால் தேவலாம் போலத் தோன கல்லாவின் மேலிருந்த தட்டில் காணப்பட்ட வடைகளில் கண் பதிகிறது.

பருப்பு வடைகள்,உளுந்த வடைகள்,பஜ்ஜிகள் எனகலந்துகட்டிகாணப்பட்டவைகளில் ஒன்றை எடுத்துக்கடிக்கிறேன்.வடையைகையில்எடுக்கும்போதேதெரிந்தஇறுக்கம்கடிக்கையில்உறுதிப் படுகிறது.யப்பா,,,,கொஞ்சம் அசந்தால்பல் போய் விடும் போலிருக்கிறதே/

உளுந்தவடை உடம்புக்கு நல்லது என்றார்கள். ஆனால் யார் உடம்புக்குஎனச்சொல்லவில்லை. வாங்குபவர் உடம்புக்கா,விற்பவர்உடம்புக்கா?அதைஉறுதிசெய்பராய்டீப்பட்டரையில்  நிற்பவர் தெரிகிறார். களுக், மொளுக்  என உருளைக்கட்டை உடம்போடு/

கடையின்உரிமையாளர்அவர்தானாம்அண்ணன் தம்பிகள் மூவரும் காணாது என மூத்தவரின்  மருமகனும் சேர்ந்து கவனித்துக்கொள்கிற கடையாய்/நால்வருக்கும் இருக்கும் நான்கு விதமான குண வித்தியாசங்களையும்மனோநிலைகளையும் கடைக்கு வருகிறவர்கள்தாங்கித் தான் ஆக வேண்டும்.

அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த பணித்தவறில் லேசாக மனம் உழன்று போன மனதுக்கு ஏதாவது செய்தால் தேவலாம் போலத்தோணிய எண்ணம் உறுதிப்பட்டபோது இரவு மணி  9.00.அந்நேரம் கடை திறந்திருந்தது  ஆச்சரியத்திலும் ஆச்சரியமே/

அலுவலகம் அமைந்திருந்த ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் இருட்டில் பயணித்து இங்கு ரோட்டை கடக்கையில் தோன்றிய  நினைவின் உருவே வலது கையில் வடையும் ,இடது கையில் டீக்கிளாஸீம்/  

சற்றே உற்றுப் பார்த்த போது உள்ளே கட்டிக்கிடந்த முக்கால் கிளாஸ் அளவு மென் திரவத்தைத்தாண்டி தெரிந்த தோழர் கடையும் எப்போதும் மனிதர்களை சுமந்தும், மனிதம் சுமந்துமாய்/

வலது புறமும் இடது புறமும் லாரி ஆபீசுகள் இருக்க இடையில் இருக்கிற சாலையோர திருப்பத்தின் ஓரமாய்அமைந்திருந்த சின்னக் கடையது.கடைஎன்னவோ சின்னதுதான், ஆனால்அவர்உருவம்பெருத்தவராயும்,பெரியமனதுக்குச்சொந்தக்காராயும்/சதியுள்ளவர்களும், வொய்ட் அண்ட் வொயிட் பார்ட்டிகளும் அங்கு வந்து டீக்குடித்து நான் பார்த்ததில்லை. மூட்டைதூக்குபவர்களும்,கூலிவேலைபார்ப்பவர்களும்என்னைப்போன்றமத்தியதரவர்க்கத்தினர்  எப்போதாவதுவந்து போகிற கடையது.

போனமாதம்தான் என நினைக்கிறேன்.மாதம் தன் நடுவகிடைசற்றே ஒதுக்கிக்கொண்ட 18அல்லது 20ஆம் தேதி என்கிறதாய் நினைவு.மழைபெய்துஓய்ந்திருந்தஒரு முன்னிரவு  மாலை.ஊதக்காற்றும்,,பெய்து  முடிந்திருந்த மழையின் சுவடுகளும்,வழக்கம் போலவே சாலை பூசியிருந்த சகதியுமாய் கைகோர்த்துக்கொண்டிருந்த வேளையில்தான் அவரது கடைக்குச் செல்கிறவனாகிப் போகிறேன்.அடைபட்டதீப்பெட்டிக்குள்இருந்த குச்சிகளாய் கடைக்குள் போடப்பட்டிருந்தபெஞ்சில்நான்குபேர்அமர்ந்திருக்கிறார்கள்ஒருவர்நின்று கொண்டிருக்கிறார். நின்றுகொண்டிருப்பவர்டீமாஸ்டராயும்,மர்ந்துகொண்டிருப்பவர்கள் அவர் கொடுக்கிற டீயை  குடிப்பவர்களாயும் காட்சிப்பட்டுத் தெரிகிறார்கள்.

நான்கு பேர் அமர்ந்திருக்கிற பெஞ்சில் நெருக்கி அமர்ந்தால் இன்னும் ஒருவர் சேர்த்து அமரலாம்.அவ்வளவுதான் அந்தக்கடையின் வசதியும், இடமும், டீப்பட்டரை, கல்லா, அதன்மேலிருந்தகடலைமிட்டாய்பாட்டில்,முறுக்குபாட்டில்டீக்கடைக்கேஅடையாளமான  வடைத்தட்டு என காட்சிப்பட இடுப்பில் கைலிமடிப்பில் சொருகப்பட்டிருக்கிற மூடை தூக்குகுகிற ஊக்குகளோடு நின்ற இருவரைத்தாண்டி உள்ளே போவதும் அங்கு போய் அமர்வதும் சாத்தியமில்ல்லை என்பதை சொல்லி விட நான் டீக்கடைக்கு வெளியேயே நிறபவனாய்/

வலது கையில் ஹெல் மெட்டும்,இடதுதோளில்சாப்பாட்டுப்பையும்சுமந்துநின்ற என்னை அந்த இடம்இடைஞ்சல்என கருதி இருக்கலாம்.குடித்து முடித்தகிளாஸை கல்லாவின் ஓரமாய் வைத்து விட்டு உள்ளே அமர்ந்து கொஞ்சமாய் ஆசுவாசம் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் கடைக்குள் நுழைந்த சமயம் தோள்ப்பைதட்டி கல்லாவின் மேல் ஓரத்திலிருந்த கிளாஸ் உடைந்துசிதறிவிடுகிறது.என்னஇதுபார்த்துப்போக வேண்டியதுதானே,,,,?என்கிற சப்தம் வந்து  விடுகிறது கடைக்கு வெளியே நின்று டீக்குடித்து கொண்டிருந்தவரிடமிருந்து/

உடைபட்டகிளாஸின் சில்லுகளை பொறுக்கியவாறும் அதில் தென்பட்ட உருவச்சிதறல்களை பார்த்தவாறும்எனதுதவறுக்காய்வருத்தப்பட்டவாறுமாய்டீமாஸ்டரைபரிதாபமாய்ஏறிட்ட கணம் வெளியே இருந்து வந்த சப்தம் முன் கைஎடுத்து எனது தவறை உணர வைத்து விடுகிறது. அன்று உடைந்த கண்ணாடிக்கிளாஸின் சில்லுகள் மனதை அறுக்க இன்று வரை அந்த கடைப்பக்கம் போக தயக்கம் காட்டுகிறவனாகவே/

ஆனால் கந்தன்டீக்கடைக்குப்போகஅவ்வளவுதயக்கம்காட்டியதில்லை.ஐந்து ரூபாய்க்கு  டீ,இரண்டுரூபாய்க்குவடை,பஜ்ஜி,இனிப்புபோண்டாஎன்றால்கசக்காதுதானேஅதுமட்டுமில்லை  காரணம்.இன்னும் ஈரமும் வாஞ்சையுமாய் இருக்கிற மனிதர்.இப்படியான மனிதர்களைப் பார்ப்பது அரிதிலும்,அரிதாகவே/

பின் மாலைப்பொழுதின்ஒருநகர்வுநாளன்றுநான் வந்த இரு சக்கரவாகனத்தின் முன் டயர் பஞ்சராகிவிடகூடவேசோர்ந்தமனதும்ஒர்க்‌ஷாப்க்காரன்வந்துசக்கரம்கழட்டிபஞ்சர்ஒட்டக்கொண்டு போனபோதுகொஞ்சம்தெம்பாகிப் போகிறது.

கருகருவென முன்காலெடுத்து வைத்து  வேகமாய் சூழ்ந்துவருகிறஇருட்டும், ரோட்டில் இரு சக்கரவாகனத்தில்போய் வருகிற ஓரிவர் தவிர்த்துதனிமையைதத்தெடுத்துக்  கொண்டவனாய் நிற்கிறேன்.எனது இரு சக்கரவாகனத்தில் கையூன்றி/

வலது வலிக்க இடது,இடது வலிக்க வலது, என ஊன்றியகையின்வலுவலியாய் உருவெடுத்து/

வீட்டிற்கு போன்பண்ணிச்சொல்லலாமா?அல்லது நண்பர்கள்,தோழர்கள் யாருடனாவது  போன் பண்ணிப் பேசலாமா?எந்நேரம் வருவானே ஒர்கஷாப்க்காரன்,எப்போதுசெல்வோமோ  வீட்டிற்கு?பஞ்சருக்கு எவ்வளவு ஆகும் எனத்தெரியவில்லை.எனநினைத்த நேரம் ஆணும் பெண்ணுமாய் இருவர் இருசக்கரவாகனத்தில் சப்தமிட்டுக் கொண்டே சென்று கொண்டிருந் --தார்கள்.கணவன் மனைவியாக இருக்கவேண்டும்.வீட்டிற்குவீடுவாசப்படி/

பையில்காசும் இல்லை,ஒர்க்‌ஷாப்க் காரனைஎப்படி சமாளிப்பது எனத்தெரியவில்லை. அந்நேரம்  நினைவிலும் நனவிலும் வந்து நின்றவராய் கந்தன் நிற்கிறார்.

“ஏன் சார் தயங்குறீங்க இப்பிடி?இது ஒங்க கடை மாதிரி.எந்நேரமும்வந்துஎந்த உதவியும்  தயங்காம கேளுங்க என நான் கேட்ட ரூபாய் நூறையும்,பத்து பஜ்ஜிகளையும் கட்டித் தருகிறார்.

ரூபாயை ஒர்க் ஷாப்க்காரருக்கும்,பஜ்ஜியை வீட்டிற்குமாய் எடுத்துக்கொண்டு வந்த நாளன்று மனதில் பதிந்த கந்தன் டீக்கடையும்,தோழர் கடையும்,பேமஸ்கையும் இன்னும் சில கடைகளும்  எப்போதும் மனிதர்களைதன்னகத்தேதக்கவைத்துக்கொண்டும் நெசவிட்டுக் கொண்டுமாய்/ 

7 comments:

 1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete


 2. உங்கள் தளத்தைப் பற்றி சிறு விளக்கம் ...
  காண :
  http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_12.html

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வணக்கம் அரசன் சார் நன்றி
  தங்களின் வருகைக்கும்,வலைச்சர அறிமுகத்திற்கும்/

  ReplyDelete
 5. யதார்த்தமான ஒரு டீக்கடை.. அருமை விமலன் சார்.

  ReplyDelete
 6. வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete