24 Mar 2013

கண்ணாடிப்பிம்பம்,,,,

எனக்கு 25 வயது.உனக்கு 22./நீ அணிந்திருந்த கறுப்புக் கலர் பேண்ட்டும்,சிவப்புக்கலர் டாப்ஸீமான சுடிதார் கண்ணுக்கு அழகாகஇருக்கிறது பெரும்பாலான உனது உடைகள் கண்ணுக்கு உறுத்தாமலேயே/ உனக்கான உடையை நீதான் தேர்தெடுத்துக்கொள்கிறாயா அல்லது உனது வீட்டார்கள் யாரேனும் தேர்ந்தெடுக்கிறார்களா எனத்தெரியவில்லை.நாம் கைகோர்க்கும் முன்பாய் விஷயங்கள் சில பேச வேண்டும் அன்பே/


நான் சைக்கிளிலும், அவர் இருசக்கரவாகனத்திலுமாய். எனது வண்டி மிதித்தால் போகிறது. அவரதுவண்டிவிசையைதிருகினாலேயேவேகப்படுகிறதுஅவரது வேகத்திற்கு நான் போகவோ, அவரை பின் தொடரவோ இயலாது தான்.ஆனாலும் நாட்களின் நகர்தலில் வாரத்திற்கு ஒரு முறையோ,இரு முறையோ உங்களைப்பார்த்து விட நேர்ந்து விடுகிறது.சமயங்களில் அதன் எண்ணிக்கை கூடிக் குறையலாம்.

அவர் என்ன,நான் என்னகூடிக்கொண்டிருக்கிற எண்ணிக்கைக்கணக்கிட வருகிற போது  
T K R சாலையாய் இருக்கிறது. மதிய வேளை ஆள்நடமாட்டம் மந்தப்பட்டிருந்த நேரத்திலு மாய் கருப்புப்பேண்ட்,வெள்ளைச்சட்டைகாம்பினேசன் போலஜீன்ஸ்பேண்ட்டும்  ஏதாவது ஓரு கலரில்சர்ட்டோ,அல்லது டீசர்ட்டோசுடிதார்,டாப்ஸ்சேலைஎனஉருவகப்பட்டமனிதர்களுக்கு மத்தியிலாகவும்,அவர்களைப் பிளந்தும்சென்ற இருசக்கர வாகனங்களுமாய்சென்ற சாலையில் முளைத்துத்தெரிந்தும் சென்று கொண்டிருந்த நான் பஜாரிலிருந்து வந்து கொண்டிருந்தேன். ஜீன்ஸ் பேண்ட்டும் ஏதோ ஒரு வெளிர் பச்சை நிறத்திலும் இடையில் கோடுகள் ஓடிய டீ சர்ட்டுமாய் சென்று கொண்டிருந்த என் எதிரே  இரு சக்கர வாகனத்தில் அவர் வந்து கொண்டிருக்கிறார்.

இருவருக்குமான இடைவெளி 10 அல்லது 15 அடி இடைவெளி இருக்கலாம். சைக்கிள் சக்கரத்தில் ஒட்டியிருந்தஅழுக்கும்மண்ணுமாய்என்சைக்கிளைமிகப்பழையதாயும், பளிச்சென துடைக்கப்பட்டிருந்ததால் அவரது வண்டி புதியதாயுமாய் காட்சிப்பட்டுத் தெரிகிறது.

எனக்குத்தெரிந்துஐந்துவருடங்களாகஅந்தவண்டிஅவரிடம்இருப்பதாகஅறிகிறேன்,ஹெல்மெட், லைசென்ஸ்,ட்ரங்கன் ட்ரைவ்,,,,,,,,என இன்னும் இன்னுமான நிறைந்து போன பிரச்சனைகளுக்கு மத்தியிலாக எப்படியோ சமாளித்து வண்டியை ஓட்டி காலம் தள்ளி வருகிறார் என அறிகிறேன்,ஒரு இரு சக்கரவாகனத்திற்கு இவ்வளவுகட்டுப்பாடுகளா என ஆச்சரியப்பட முடிகிற  நேரத்திலும் கூட/

ரோடும் ரோட்டில் பூத்திருந்த மண்ணும் ரோட்டோர புழுதியும் மணக்க மறந்திருந்த வேளையாகஅந்நேரம்சாலையையும்சாலையோரத்துக்கடைகளயும் பார்த்தவாறுமாய் வெள்ளை வேஷ்டியும் ஏதோஒருவெளிர்கலரில் சட்டையுமாய் அணிந்திருக்கிறார் அவர்.

அன்றும் இப்படித்தான் அப்புராணியாய் ஒரு கலரில் வேஷ்டியும் சட்டையும் அணிந்து இருந்ததாய் நினைவு/என்ன அப்படி எனத் தெரியவில்லை. அவரது ஆடைகளை கவனிக்க மறந்து அவரை மட்டுமே கவனித்த போது மேல்பட்டன் இரண்டும் மாட்டப்படாத சட்டையும்அள்ளிச்சொருகிய நாலு முழ வேஷ்டியுமாய்தெரிகிறார்..அவ்வளவு வேகமாகஅவர் வண்டி ஓட்டிநான்பார்த்ததில்லை.எந்தகவனத்தில்எதைநோக்கிப்போய்க்கொண்டிருந்தாரோதெரியவில்லைஎன்னைப்பார்த்ததும்சடக்கெனபிரேக்கிட்டுநின்றுவிடுகிறது வண்டிஅது வரை அலைபாய்ந்த மனதும் கண்களும் கொஞ்சம் ஆசுவாசம் கொள்பவையாககண்களில் தேங்கியிருந்த குழப்பமும் உடல் நடுக்கிய பதட்டமுமாய் காணப்பட்ட அவர்வண்டியை நிறுத்தாமலேயேஅதேபதட்டத்துடன்காணப்படுறார் வண்டியிலிருந்துஇறங்கத்தோணாமலும்,  ஏதும்பேசத்தோணாமலுமாய்/

என்ன சார் என்ன விஷயம் என தோளில் கை வைத்ததும்,தலைகுனிந்தவராய் வீட்டுல பையன்தூக்குமாட்டிக்கிட்டான்என்கிறார் .கல்யாணத்துக்கு போயி ருந்தோம்.புருசனும்  பொண்டாட்டியுமா,போயிட்டு வந்து பாக்கையில பேன்ல தொங்கீட்டு இருக்கான் பாவிப் பய.நாங்க பண்ணுன ஒரே தப்பு அவன வீட்ல தனியா விட்டுட்டுப்போனதுஅப்பிடிப் போயிருக்கக் கூடாதுஎன அழுதே விட்டார்பாவம்நானும்அவருடன் மௌனம்காத்து குற்ற மனோ நிலைக்கு ஆளானவனாய் கிளம்புகிறேன்.

சாலையும்சாலையில்விரைகிறமனிதர்களும்,மண்ணும்,மரங்களும்சாலையிலும்,சாலைஓரங்களி லு மாய் படிந்துகிடந்த தூசிகளும்எங்கள் இருவரின் பேச்சை கேட்டவையாய்தெரிகிறது.என்ன  ஏதென விபரம் கேட்கநானும்சொல்லத்துணிவதற்கு  மன பலம் அற்றவராய் அவரும் நிலை கொள்வதற்குதயாராய்இல்லாததுயரத்தருணம்அது.உன்மத்தம்கொண்டமனதுகள் இரண்டு ஊமைத்தனமாய் அழுது வடித்த கண்ணீர் அந்த புளிய மரத்துச்சாலையில் இரண்டு சொட் டாவது விழுந்து தன் கதையை சொல்லியிருக்கலாம்.

அவரும்நானும்அவ்வளவுஅந்நியோன்யம்கலந்துபழகியவர்களில்லை.பார்க்கும்தருணங்களில்பேசிக்கொள்வோம்.முகமன்சொல்லிசிரித்துக்கொள்வோம்அவ்வளவேமிகவும் அரிதாக எங்காவதுஒரு டீக்கடையில்ஒன்றாய் டீ சாப்பிட்டிருப்போம்ஏதாவதுஒருதினத்தில் என்கிற உறவைத்தவிரஇருவருக்குமிடையில்வேறெதுவும்துளிர்த்தும்கிளைத்தும்காணப்பட்டிருக்கவில்லை.

நான்குடியிருந்ததெருவிலிருந்துஆறாவதுதெருவில்வசித்தார்.நான்குடியிருந்தவீட்டின்சொந்தக்காரர்அவரதுவீட்டிலிருந்துநாலாவதுவீட்டில்குடியிருந்தவர்.அவர்களுக்குள் என்ன பழக்கம் என்பது எனக்குத் தெரியவில்லை.

சிறிது,சிறிதாய் சேர்த்து வீட்டின் சொந்தக்கார்ர் என் மீது பெரிய பட்டியலாய் வாசித்த புகாரை மனதில் தாங்கிக் கொண்டிருந்த ஒரு நாளதின் நகர்வில் என்ன சொல்கிறார் உங்களது வீட்டின் உரிமையாளர் என கேட்கிறீர்கள்.நீங்கள் மிகவும் தற்செயலாகவும், யதேச்சையாகவும்/

வீட்டுக்காரர் என்னிடம் வாசித்து விட்டுப் போன புகார் மனுவை அவரிடம் ஒப்படைக்கிறேன்எல்லாம் கேட்டுவிட்டு சரிபோங்கள்கவலை கொள்ளாமல்இனி இது என் பிரச்சனை எனச் சொன்ன ஒரு வாரகாலத்திற்குள் வீட்டின் உரிமையாளர் என்னிடம் கனிவாகப் பேசியது மறக்க இயலாதது.ஆனால் அப்போதெல்லாம் தெரியாது.அவரது வீட்டுப்பெண் பிள்ளை மீது அவரது பையனுக்கிருந்த மன மையல்.அது காதலா அல்லது இரு வித மன ஈர்ப்பாத் தெரியவில்லைவீட்டுக்குத் தெரியாமல் எங்காவது தூரங்களில் சந்தித்துப் பேசிக் கொள்வார் கள் போலும்.அவர்களின் அந்தப்பேச்சும் சந்திப்பும்பரஸ்பரம்இருவர்வீட்டிலுமாய்படம் பிடித்துக் காண்பிக்கப்பட்ட நாளதின் நீட்சியில்தான் அவனது மரணம்நிகழ்ந்துபோகிறது.

12ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான்.சீருடைஅணிந்த சின்ன உடலது.12+5=17  வயது மனதிற்கு என்ன பிடிபட்டிருக்கும் காதல்?பரஸ்பரம் இருவர் வீட்டிலும் அதுதான் நிலை போலும்.சொல்லியசொற்களும்,பேசியபேச்சுக்களும் பயனற்றுப் போன முத்திய நாட்களின் பொழுதில் முடிவை தேடி கொள்கிறான்சடுதியாக.

கலர் கலராய் அவன் உடுத்தித்திரிந்ததும் சைக்கிளில் வித்தை காட்டி ஊருக்குள்ளும் தெருவுக்குள்ளுமாக அவன் வந்த வலமும் பேசித்திரிந்தபேச்சுக்களும்இன்னும் கண்ணுக்குள் நிற்பதாய்/எனஅவரிடம்நிறையபேசித்திரியத்தோணுகிறது.


வருத்தம்சுமக்கிறபோதும்சரி,சந்தோசம்கொள்கிறபோதும்சரிபெரும்பாலுமாய்  டீக்கடைகளே தஞ்சம் கொள்கிற இடமாய் ஆகிப்போகிறது.

முக்கு ரோட்டின் நீண்ட பகுதியாய் வாலோடியாய் இருந்த சாலையது. எதிர் பார்த்த ஒன்று இல்லை என நண்பனின் தொலைபேசி பேச்சில் உறுதிப் பட்டதும் வருத்தம் கொண்ட மனது சென்று கொண்டிருந்த நீளச்சாலையில் இருந்து  விலகி வலது பக்கமாய் ஒதுங்கி டீக்கடையில் தஞ்சம் கொள்ள ஆசை கொள்வதாய்/

டீக்கடைகள் எபோதும் டீக்குடிக்க மட்டுமன்று என்கிற உண்மை உறைத்தது சரியாக நான்கு வருடங்கள் முன்பாக/உறைத்த உண்மையில் உள்ளுள் உள் சென்று கிளறிப் பார்க்க நேரமும்,எண்ணமும் இல்லாமல் டீக்கடையோடு ஒன்றிப் போனபோது என்னில் புலப்பட்ட தெளிவு டீக்கடைகளை மென்மை பூத்த பகுதியாகவும்,வாஞ்சை நிறைந்த ஒன்றாகவும் மாற்றிக் காட்டுகிறது.

நான் போன வேளை மதியம் ஒரு மணி இருக்கலாம்.ஒருமணிக்கென்ன டீ வேண்டிக் கிடக்கிறது, அதுவும் சாப்பிடப்போகிற வேளையில்?என கேட்பவர் களிடம் சிரித்து வைப்பேன். அவர்களுக்கும் தெரியும்,இவன் டீக்காக நாவின் சுவையறும்புகளை அடகுவைத்தவன் என்பது சைக்கிளுக்குஸ்டாண்டைதாங்கு கட்டையாக்கிவிட்டு டீக்கடையைஏறிட்டபோது அவர்கள்கடைமுன் வெளியை க்கூட்டிக்கொண்டிருந்தார்கள்அதில்கசங்கியடீக்கப்புகளும்  மடிக்கப்பட்டிருந்த  பேப்பர்களுமாய்/

டீக்கு சொல்லி விட்டுநின்ற வேளையில்வந்தநண்பர்ஒருவர்”இப்போதான் கம்பெனிக்குப் போய் வந்தேன்.லேபர் பிரச்சனை  மேனேஜரிடம்பேசிவிட்டு வந்தோம்” என்றார்.இது மாதிரியான மனிதர்களைப்பார்ப்பது அபூர்வம். தொழிலாளர்களுக்காகதனதுநேரம் காலம்  எல்லாம் செலவழிக்கிற மனது யாருக்கு கைவரபெறுகிறது இங்கு.அப்படி கைவரப் பெற்ற ஒருவராய் இவரை பார்க்க முடிகிறது.அண்ணாவைப்போல/

அந்நேரம்வேகவேகமாய்டீப்பட்டறையிலிருந்துகழண்டடீமாஸ்டர்வடைகள்வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று வடைத்தட்டில் தூள்களாய் உதிர்ந்து கிடந்ததைவாரி அள்ளி ஒரு பேப்பரில்கட்டிக்கொடுக்கிறார்கடைக்கு வெளியே  நின்ற மூதாட்டியிடம்/

குடித்த டீக்கு சில்லறையை தேடி எடுத்து கொடுத்து விட்டு சைக்கிளில் ஏறி இரண்டு அல்லது மூன்று அடிகள் மிதித்திருப்பேன் .மிகச்சரியாக எதிரே இரு சக்கரவாகனத்தில்நீ/உன்எதிரேசைக்கிளில்நான்.உன்பார்வையில்ஒரு பளிச். அதை மின்னல் என்கிறார்கள் காதல் பாஷையில்/ஆனால் எனக்குத்தான் அது என்னவெனசொல்லத் தெரியவில்லை. உன்வீட்டை கடந்து போகிற தருணங்களிலும்,நீ வீதியில் இருக்கிற கடைகளில் தென் படுகிற நேரங்களிலு மாய்  பளிச்சென அதேபார்வைதான். அந்நேரம்வரைசும்மா இருந்த உன் பார்வைஎன்னைப் பார்த்ததும்அர்த்தம்கொள்கிறதைப்போலஇப்போதும்அர்த்தப்  படுத்திகொள்ளமுடிகிறதுதான்.

ஒரு  முறை அல்ல,பலமுறை இப்படி எதிரெதிராய் நம் விழிகள் கழண்டு பரஸ்பரம் இருவரின் மனதுக்குள்ளுமாய் ஊடுருவிய நிகழ்வு தற்செயல் என ஒத்துக்கொள்ள முடியவில்லை. அது எதாகஇருந்தாலும்அதன் அர்த்தத்திலும்,  பிடியிலும்உறுதியாகஇருக்கட்டும்.

ஆனால் அப்படி சந்தித்துகொண்ட பார்வைகள் காதலாய் நிஜப்படுகிறபோது எனதுடீக்கடை அனுபவத்தையும்,வாழ்வியல்யதார்த்தத்தையும்பேசவேண்டும்  என நினைக்கிறேன்.

அப்படி பேசி பரிமாறிக் கொள்ளப்படுகிற வாழ்க்கை எதார்த்தம் நம்மில் கை கூடுமாயின் 22ம்25யும்கொண்டமனங்கள்இரண்டும்கைகோர்க்கவாய்பிருக்கிறதுதான் அன்பே/

4 comments:

 1. sollich senra vithamum mudiththa vithamum mika mika Arumai thodara vaazhththukkal

  ReplyDelete
 2. வணக்கம் ரமணி சார்.ந்ன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. யதார்த்த வாழ்வின் பதிவுகளாக அமைந்துள்ளது.இயல்பான உங்களுக்கே உரித்தான நடையில் மிளிர்கிறது சொல்சித்திரம்

  ReplyDelete
 4. வணக்கம் டீ என் முரளிதரன் சார்,
  நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete