31 Mar 2013

தொடர்பு எல்லைக்குள்,,,,,,,                 
வணக்கம் தோழர்.பலமுறை கூப்பிட்டு விட்டீர்கள்,சில முறை குறுந் தகவலும் அனுப்பி விட்டீர்கள் தங்களது கைபேசி மூலமாக/ 

கடந்த மூன்று நாட்களாய் அடம் பிடித்து அழுகிற குழந்தையாய் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிற தங்களதுபேசிக்கு செவிசாய்க்க க் கூடமுடியாதநிலை.குறுந்தகவலுக்கும்பதில்அனுப்ப முடியவில்லை. 

பொதுவாகவே ஒலிக்கிற போன்கள்யாவும்நல்லவையாகவே இருந்து விடப்போவதில்லை.அதுவுமற்றுநல்லதல்லாமலும்இருந்துவிடப்போ வதுமில்லை.என்னசெய்யநம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் வாக்க ப்பட்டுநிற்கிறசொல்நிரப்பியபோன்கள்எப்போதும்யாரிடமிருந்தாவது  வந்து கொண்டேதான் இருக்கிறது.

எப்போது பேசினாலும் போனை எடுக்காதவர் ஒரு கனத்த மழை நாளின்இரவுபொழுதில்அழைத்துப்பேசினார்.என்ன,ஏது,என்னசெய்கி றாய்,சரி வைத்து விடுகிறேன்.என்கிற மாதிரியான மின்னல்வெட்டுப் பேச்சு.அது,

சரி எதற்காக அவர் பேசினார்,என்ன பேச முற்பட்டார்.அப்படியான ஒரு பேச்சு அந்நேரம் ஏன் அவசியப்பட்டது எதுவும் தெரியவில்லை. மழையும்,இடியும் ,மின்னலும் வருகிற திடீர் தருணங்களைப்போல் அவரிடமிருந்து வந்த பேச்சுக்கும் ஒரு அர்த்தம் இருக்குமோ?பின்பு ஒரு நாள் சாவகாசமாய் கேட்டுகொள்ளலாம்/

உடன் படித்த பெண்ணுக்கு போன் பேசிய போது அந்த போனை எடுத்த போலீஸ்க்காரர் நீங்கள் போன் பண்ணிய நம்பருக்குரியவர் சாலை விபத்தில் இறந்து கிடக்கிறார்,நான் அருகில் இருக்கும் போக்கு -வரத்துப்போலீஸ்க்காரர் என பதில் வந்திருக்கிறது.

காலை வேலை,கூட்டம்,நெரிசல் மிகுந்த சாலை,வெளியூரில் படிக்கிற தனது மகளை பஸ் ஏற்றி விடுவதற்காய் இருசக்கரவாகனத்தில் வந்திருக்கிறார்கள் அப்பாவும் மகளுமாய்/ அப்பா வண்டியை ஓட்ட மகள் பின்னால்/ பஸ்டாண்டைநெருங்குகிறவேளை,பஸ்ஸை  எட்டிப் பிடிக்கிறஅவசரம்சாலையில்விரைகிறகனரகஇலகுரகவாகனங்களும், பாதசாரிகளுமாய்/இவற்றையெல்லாம்கண்ணுற்றவாறும்எதிர்ப்படுகி ற மற்றும் அருகாமையாயும், முன்னும்,பின்னுமாய் வருகிற வாகனங்க ளுக்குவழிவிட்டும்ஒதுங்கியும்மெதுவாய்ஊர்ந்தவாறும்,வேகம்காட்டி யவாறுமாய் வந்த அவர்களின் இருசக்கரவாகனம் பஸ்டாண்டிற்குள் ளாக நுழையப்போகிற வேளையாய் அவர்களின் பின்னால் வந்த மணல் லாரி ஒன்று வேகம் கட்டுப்பட மறுத்து தந்தையும், மகளும் வந்த இருசக்கரவாகனத்தை தட்டி விட்டு அதன் மேலேயே ஏறி சற்றுத்தள்ளிச்சென்று நிற்கிறது. சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்து போகிறார்கள் தந்தையும்,மகளும் என்கிறது துயரச் சொல்லை சொல்லிச் செல்கிறது பதிலாக வந்த குரல். 

காய்கறி வாங்குவதற்காய் லிஸ்ட் வாசித்து  விட்டு கடை  முன் நின்ற போது இறந்து போனார் இன்று காலையில் அவர் தனது 75 ஆவது வயதில் என்கிற குறுஞ்செய்தியும், அதன் பின்னாலேயே போனும் வருகிறது.கொடுத்தலிஸ்டும்நின்றஇடமும்மறந்துபோகஅய்யய்யோ,,எனபெருங்குரலெடுத்துசப்தமிடுகிறவனாகிப்போகிறேன்.கண்கள்கல--ங்கவும், என்ன இது பெரும் துயரம் சுமந்த,,,,,,,,, என்கிற எண்ணத்து டனுமாய்/

லேசால அதிர்ச்சி காட்டிய கடைக்காரர் ”சார் என்ன ஏதும்துக்க ச்செய்தியா,வேணும்ன்னா காய்கறி போடுறத நிப்பாட்டிறவா?என்கிறார்.

இறப்பு என்பது உள்ளதுதான் யாருக்கும் என்கிற நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்த போது  கூட அவன் விதைத்துச்சென்றவை களையும்,விதைத்தவைகள்பலனாய்எழுந்துநிற்கிறதையும் கவனத்தில்  கொள்ள வேண்டியிருக்கிறது.அப்படி அவர் விதைத்தும், உரமிட்டும், உர மூட்டியும் பலனளித்துமாய் சென்ற பலவிஷயங்களில் ஒவ்வொன் றிலு மாய் அவரதுபெயர்பொறிக்கபட்டுள்ளது, நாங்கள் அன்றாடம் சாப்புடுகிற ஒவ்வொரு பருக்கையிலும்  உட்பட/என்கிற நினைவுடன் காய்க்கறி வாங்காமலும் பஜாருக்கு வந்த வேலையை முடிக்காமலும் துயரம் சுமந்தவனாய் செல்கிற வேளையில்தான் நண்பனிடமிருந்து போன்.எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது.  என/

இப்படிசுகமும்துக்கமும்சுமந்துமாய்மாறிமாறிசேதிச்சொல்லிச்செல்கிற செல்பொன்பேச்சுக்கள்பலரிடமிருந்துவந்துகொண்டேதான்இருக்கிறது தோழரே/இருந்தாலும்கடந்தமூன்றுநாட்களாய்அழுதுஅடம் பிடித்து தாயின் முந்தானையை பிடித்துசெல்கிற  குழந்தையாய் தங்களது செல் போன்பேச்சுஒலித்துக்கொண்டேஇருக்கிறது.அப்பொதெல்லாம் நேரமில்லைஇப்போதுஎடுக்கிறேன்,சொல்லுங்கள் தோழர்  பேசலாம்/

6 comments:

 1. வெறுத்தாலும் கூடவே ஒட்டிக்கொள்ளும் நட்பு - தொலை பேசி..

  ReplyDelete
 2. நாலு பேர் பேசுவதுமாதிரி நானும் பேசத்தான்ஆசை....நான் பேசினாலும் அவர் பேசுவது எனக்கு கேட்காவா போகிறது.

  ReplyDelete
 3. வணக்கம் உஷா அன்பரசு அவர்களே.நன்று தங்களின்
  வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் அனானிமஸ் அவர்களே.நன்றி தங்களின் வருகைக்கு/மனம் பேசும் பாஷைக்கு ஏது எல்லை?

  ReplyDelete
 5. தொலைபேசி சிலநேரம் தொல்லை பேசியாகவும் மாறிவிடுகின்றது விமலன் அண்ணா.

  ReplyDelete
 6. பிடித்தது....கொஞ்சம் வார்த்தைகளை பிரித்து எழுதினால் இன்னும் ரசிக்கும்...Fomatting...

  ReplyDelete