31 Mar 2013

டீக்கடைபிரவேசம்,,,,,

இன்னமும்தூக்கம்அகலாதகண்களின்அயர்ச்சிநித்திரைக்காய்ஏங்கித்தவிக்கிறதுதான்.கணம்ஏறிய கண்கள் இமைகளை பிரிய விடாமல் பாதுகாப்பவையாயும், திறக்கச் செய்ய மறுப்பவை -யாயும்.

இரவெல்லாம்மணிக்கொருதரம்தன்கண்களைஇறுக்கமூடிக்கொள்கிறமின்சாரத்தினால் போய் விடுகிற தூக்கம் கணகளை சற்றே எரிச்சலுறச் செய்து விடுகிறது.

அது உடல் சூடுதான், வேறொன்றுமில்லை,வாரத்திற்கு ஒரு இளநீர் குடியுங்கள். இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்என தொடர்ந்து  மனைவி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறாள்.ஆனால் இந்த 25 வருட திருமண வாழ்க்கையில் டீக் குடிப்பதில் இருக்கிற ஆர்வம் இளநீர் குடிப்பதில் இல்லை எனவும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுகிட்டத்தட்ட ஒரு கெட்ட வார்த்தை போலவும் ஆகிவிட்ட தருணங்களாய் பதிவாகிப் போகிறது.

கல்லடித்து,சொல்லடித்து,முள்ளடித்து,,,,,,,,,,,பட்டஅடியின் கணமும் ,வீரியமும்  உள்ளின் உள் தைத்த தருணங்களிலிருந்து தப்பித்து தாவிக்குதித்து வசப்படித்திய வாழ்வை நிலையூன்றி கொண்ட வேளையாய் அது.

இதற்கு மேலும் தூங்குவது நன்றாக இருக்காது இந்தபூத உடல் தாங்கி.முன்பு பரவாயில் லை,இப்போது உடல் எடை கொஞ்சம் கூடிப்போனது.கொஞ்சம்என்றால் எவ்வளவு இருக்கும்? ஒரு கால் கிலோ இருக்கலாமா என்றான் நண்பனும் ,தோழனுமானவன்/ அதிர்ஷ்டமாய் வரப் பெற்றபதவிஉயர்வுவந்தசிலதினங்களிலிருந்துஉடல் எடை கூடிப் போகிறது. சைடில் எக்ஸ்ட்ரா  பிட்டிங் மாட்டப்பட்டிருப்பது போல உடல்இருமடங்காகித் தெரிகிறது. இல்லாத அரசலவை அஞ்சறைப்பெட்டியில்தேடித்துழாவுகிற கையாய் வசப்படாத வாழ்க்கையை கைபிடித்து விட்ட திருப்தியும்,அரைமனோநிலையுமாய்இருந்தகணங்களில் கூட அவனது உடல் இவ்வ ளவு கனத்ததில்லை. தினமும் ஐந்து கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து இரண்டு,மூன்று கிலோ மீட்டராவது நடந்த திருப்தியும் அவனில் ஒட்டிக்கிடந்த நேரமது.

ஒன்றல்ல,இரண்டல்ல,மூன்றுநான்குவகைகளிலும்அதைதாண்டியசிலவிஷயமுறைகளிலுமாய் அவனது உடலை வற்புறுத்திப்பழக்கி வைத்திருந்தான்.வீட்டில் போர் இருந்ததுஅடிகுழாய்மோட்டார் போடவில்லை.அப்போது காலையிலும் மாலையிலுமாய் இருபது முப்பது குடங்க ளாவது  தண்ணீர் அடித்து விடுவான்.இது அவனில் காலை எழுந்தவுடன் சுழியிடுகிற முதல் பணியாக/அப்புறம்வீடுகூட்ட,வீட்டின்வெளியில் ,மாடி என எல்லாம் கூட்டி அள்ள,சைக்கிளில் போய் நல்ல தண்ணீர் பிடித்து வர,ஆபீஸிற்கு சைக்கிளில் செல்ல என இவை அனைத்தையும் காலை அலுவலகம் போவதற்குள் செய்துமுடித்துவிடுவான்.இது தவிரஎங்கும் ஏதாவது ஒரு வேலையாக செல்வதானாலும் கூட சைக்கிள்தான்.இப்போது போல கையில் இருசக்கர வாகனம்இல்லைஅப்போது.இருந்திருந்தாலும்ஓட்டியிருப்பானோஎன்னவோஇப்படியெல்லா முமாக வருத்திக்கொண்டிருந்தஉடலைபதவி உயர்வு வந்தவுடன்  போட்டு எடுத்து விட்டான். மேற்ச்சொன்ன பழக்கங்கள் எல்லாம் அவனைவிட்டு மெல்லகழண்டும்,காணாமலும் போயின/

முகம் கழுவுகையில் தரையில் உதிர்ந்து கிடக்கிற வேப்பமர இலைகளும்,கூட்டும் போது விளக்குமாரின்நுனிஉடல்சிலிர்க்கிறதனமும் கண்முன்னே விரிந்து அழகூட்டிய போதிலுமாய்மிஞ்சிய சோம்போறித்தனம் ஒன்றும் செய்ய விடாமல் செய்து விடுகிறது என்கிற நினைப்புடனும்உடல்கனத்துடனுமாய்எழுந்தவேளைகாலை 5.30 இருக்கலாம்.

இந்நேரம் போனால் சரியாய் இருக்கும்.இந்நேரம் மட்டுமல்ல.இன்னும் ஒரு மணி நேரம் முன்னால் போயிருந்தால் கூட சரியாய் இருந்திருக்கும்.தூக்கம் பிடிக்காத ஒரு நாள் அதிகாலை 5.15 க்கு கடைக்குச்சென்றுவிட்டான்.உடல் போர்த்தியிருந்த போர்வையின் கோடுகள் கீழே சரிந்து விழ/தொந்தி பெருத்த பெரியவரின் கடையது. மடித்துக்கட்டிய கைலியும் சரிந்து தெரிந்த தொந்தியின் மீது போர்த்திய பனியனுமாய் நிறைந்து காட்சி அளித்தார்.

“சார் எந்திரிச்ச ஒடனே மொத வேலையா குளிச்சிருவேன்.ஒடம்புல நாலு செம்பு தண்ணி பட்டாத்தான் நமக்கும் கொஞ்சம் தெம்பாவும்,புத்துணர்ச்சியாவும் இருக்குது.அப்பிடியே வந்து அடுப்ப பத்தவச்சி நின்னுருவேன்.அது எந்தமழைநேரம்ன்ம்ன்னாக்கூட சரிதான். என்றார் முன்பு ஒரு நாள்.அது இப்போது ஞாபகம் வர கடந்து தெரிந்த ஞாபகத்தின் கைகோர்ப்பாய் நான் மற்றும் கொத்தனார் டீக்கடைஎன காட்சிப்பட்டுத் தெரிகிறோம்.

கொத்தனார் நல்ல பழக்கம்எங்குபார்த்தாலும் எப்போதுபார்த்தாலும் மிகவும் உரிமை யோடும் ஒட்டுதலோடும்பேசக்கூடியவர்.குடும்பத்திலிருந்து வேலை தளங்களில் நடக்கிற  விஷயங்கள் வரை பகிர்ந்து கொள்ளக்கூடியவர்.வாஞ்சை மிக்கவர். டீக்கடையி ருந்தவீதிமுனையில்தான் அவரது வீடு இருந்தது.அதை ஒட்டி இருந்த பிள்ளையாட் கோவிலுக்கு அவர்தான் பராமரிப்பு. கோவிலைகழுவிவிடுவதிலிந்துபூஜைபண்ணுவதுவரைஅவரேஏதாவது ஒரு விஷேசம் என்றால் பூவந்துவிடும்பூக்காரம்மாவிடமிருந்து,அவர் நாகர்கோவில்காரர் கடைப்பக்கமாய் பூக்கட்டுபவர், மெலிந்த உடலும் கருத்த மேனியுமாய் கருமமே கண்ணாய் இருப்பார்.நார் எடுப்பதும் தெரியாது, பூத்தொடுப்பதும்தெரியாதுஅவ்வளவுவேகம்,அவ்வளவுநரிவிசு.பூப்போட்ட காட்டன் சேலையேஅவளுக்கு நன்றாகத்தான் இருந்திருக்கிறது,துவைத்த சேலையை அப்படியே அள்ளிக் கட்டிக் கொண்டு வருவாள் போலும்.மடிப்பும்,கசக்கலுமாய் தெரியும்.ஆனாலும் பளிச்சென்றுதான்இருப்பாள்.அவளிடம்பூவுக்குகாசுகொடுக்க முயற்சித்து பலமுறை தோற்றுப்  போய் இப்போதெல்லாம் காசு கொடுப்பதேயில்லை.

வீடும்வீட்டைச்சேர்த்துதெருமுனைமடக்கிரோடுபார்த்துஐந்துகடைகளைகட்டி விட்டிருந்தார்டீக்கடைகூட அவரது காம்ப்ளக்ஸ் கடை ஒன்றில்தான் இருந்தது.

மிகவும் சின்னக் கடையது.மூன்று படிகள் கொண்ட வாசலுடன் இருந்த கடையின் முன்னே டீபட்டறையும் பட்டறைக்குப் பின்னே அவருமாய்/அவரது தலைக்கு மேலே தொங்கிய பாக்குகளும்ஓரமாய்ட்ரேயின்மீதுஅடுக்கப்பட்டிருந்தசிகரெட் வகைகளுமாய்/

மஞ்சள் நிறத்தில் சின்னதாய் இருந்த ரேடியோ பார்க்க அழகாயும் சின்னதாயும்/இப்படி ஒரு ரேடியோவைஇப்பொழுதான்பார்க்கிறான்.அவர்500ரூபாய்க்குவாங்கியதாய்ச்சொன்னார்அவ்வளவு விலைக்கு பெறுமா இல்லையா என்பதைவிடஅதிலிருந்துமிதந்துவருகிற பாடல்கள் விலைபெறும் என்பதை முன்னறிவித்துச்செல்கிறது. டீப்பட்டறையின் பின்னால்சற்று இடை வெளி விட்டு இருக்கிற வயர்க்கட்டில் அவர் அவ்வபொழுது ஓய்வெடுத்துக் கொள்வதற்குப் போலமஞ்சளும் சிவப்புமாய் கலர் காண்பித்த வயர்களை சுமந்து கொண்டிருந்த கட்டில் இது போல ஒன்றை நாமும் வீட்டிற்கு பின்ன வேண்டும் எனச் சொல்லிச்செல்கிறது.

இது இப்போதைக்குஅவரது கடையின் தோற்றம்.,இதை எப்பொழுது திசைமாற்றி வைப்பார் எனச்சொல்லிவிட முடியாது. எனக்குத்தெரிந்து அவர் கடையை இப்படி மாற்றி வைத்திருப்பது பத்து தடவைகளுக்குமேலாவதுஇருக்கலாம்.ஒருவேளைவாஸ்து,கீஸ்துபார்ப்பாரோ என்னவோ/

அவரது பையனுக்கு அல்சர் கூடிவிட்டது என போன வாரத்தின் ஒரு நாளில் ஆஸ்பத்திரியில் காண்பிக்க வேண்டும் என்றார்,பதிவாக மில்கள் இரண்டில் மூடை இறக்குற வேலைலோட் மேனாகஇருக்கிறார்அவரதுமகன்..மில்லில்வேலை இல்லாத நாட்களில் வெளியில் வேலைக்குப் போய்க்கொள்வார்.

மனைவி இறந்து போனதிலிருந்து  உடம்பைகவனிக்க மறந்து போகிறான்,சாப்பாடு தூக்கம் மறந்து தண்ணி,வென்னிஎனஇறங்கிவிட்டதாய் வருத்தம் கொள்கிறார்.”மகராசி போனவ போயிட்டா மஞ்சக்காமால நோய் வந்து.ஒத்தப்புள்ளைய வச்சிக்கிட்டு இவன் இப்பிடி குடிகிடின்னு ஒடம்பக்கெடுத்துக்கிட்டான்னா என்ன பண்றது.எங்களுக்கு ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும்.எங்களுக்கு அப்புறம் அவனோட புள்ளைய யாரு பாத்துக்குவான்னு ஒரு   கேள்விஇருக்குல்லசார்”என்கிறார்.அவர்சொல்லிலும்ஞாயம்தென்படாமல் இல்லை. “கல்யாணம் பண்ணிக்கிறச் சொன்னாலும் அது செத்துப்போன பொண்டாட்டிக்கு செய்யிற துரோகமா நெனைக்கிறான்.அதுஅப்பிடியில்லைன்னு சொன்னாலும் கேட்டுகிற மாட்டேங்குறான்,என்ன செய்யன்னு ஒரு எழவும் புரிய மாட்டேங்குது” என்கிற அவரின் வருத்தத்தை கொத்தனாரிடம் பதிவு செய்கிற பொழுதுகளில் நான் கேட்க நேர்ந்ததுண்டு.

ஒங்க வீட்ல ஆம்பளப்பையைன்,எங்க வீட்ல பொம்பளப் புள்ள,ஒங்க மகனாவது மூணு வயசு பையனோட நிக்கிறான்.எங்க புள்ள நெற மாசமா சொமந்துட்டு இருக்கா,இன்னும் அது பாடு பாத்து,பண்டுதம் பாத்து,,,,,,,,,,,,,என்ன்ன்னு காலம் செலுத்தப் போறோம்ன்னு தெரியலஇந்தச் சம்பாத்தியத்தும்சொத்துக்கும்பையன்இருக்கான்,அவன் சென்னையில  வேலைல இருக்கான்அவனுக்கு மட்டுன்னு இருந்தத இனி பொண்ணுக்கும் ஒருபாதி எடுத்து வைக்கணும் என்ன செய்யச்சொல்றீங்க”என்பார்கொத்தனார்.மறுகல்யாணம்ன்னுஏதாவதுபண்ணிவைக்கலாம்ன்னுபேச்செடுத்தாலேமகளும்ஒத்துக்கிறமாட்டேங்குறா,மாப்புளகூடபாத்துறலாம்ன்னு வையிங் களேன்,,,,,,நானும் பலவிதமா யோசிச்சியோசிச்சி ஒன்னும்பொலப்படாம விட்டுட்டேன்பாப்போம்நல்லபடியாகொழந்தபெறக்கட்டும்மொதல்லஅப்புறம்பாக்கலாம்மத்தஎல்லாத்தையும் என இருவருமாய்  பேசிக் கொண்டிருந்த ஒரு நாட்களின் நகர்வுகளில் எனது டீக்கடை பிரவேசம் இப்படித்தான் தூக்கம் கலைந்து நிகழ்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment