28 Apr 2013

கோட்டோவியம்,,,,

   ஓவியர்திரு.மருதுஅவர்கள்வரைந்தகோட்டோவியம்அது.எளிமையாகவும்,அழகாகவும்இருந்தது.
வெள்ளைநிற பிளக்ஸ் போர்டில் மஞ்சள் வண்ண பின்புலத்தில் கருப்புக்கோடுகளால் எழுத்தாளர் அழகர்சாமி அவர்கள் காலமாய் தெரிந்தார் வெள்ளரிப்பிஞ்சு மாலையை சுமந்தபடி.
உலகபுத்தகதினத்தை முன்னிட்டுகடந்து போன ஏப்ரல் 27அன்றுத,மு.எ.க.சசாத்தூர்க் கிளை எழுத்தாளர் கு,அழகிரிசாமி அவர்களின் நினைவைகொண்டாடி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
தலைமை:லட்சுமணப்பெருமாள்,மாவட்டக்குழு,வரவேற்பாக:கிளைச்செயலாளர்விஸ்வநாத், துவக்கஉரையாக:லட்சுமிகாந்தன்மாவட்டச்செயலாளர் ,,,,,,,,எனஇன்னும்இன்னுமாய் நிகழ்வின் நோக்கங்களயும் நிகழ்வு நடக்கவிருக்கிற இடத்தையும் நேரத்தையும் முன்னறிவித்து அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழின் கைபிடித்தவாறே நானும், நாவலாசிரியர் பாண்டியக் கண்ணன் அவர்களுமாய் சாத்தூர் மண்ணில் கால் பதித்த போது மாலை மணி 5.30 இருக்கலாம்.
ஈரம் மிகுந்த மனிதர்களை  சுமந்து கொண்டிருந்த வெப்பமான மண் துகள்களையும் அதில் நடமாடிய மனிதர்களையும் பேருந்து நிலையத்தையும், சாலையையும், மனிதர்களையும், வாகனங்களையும் வெகு முக்கியமாய் சூழலையும் சுமந்தவர்களாயும் பேருந்தை விட்டு இற்ங்கிய சமயம் சாலையோர டீக்கடையில் நின்றிருந்த தோழர்எல்லோருமாய் போயிருக் கிறார்கள் ரயில்வே ஸ்டேசன் நோக்கி,நீங்களும்செல்லுங்கள்அவர்களைபின் தொடர்ந்து/ அங்கிருந்து ஊர்வலமாய் புறப்பட்டு நிகழ்ச்சி நடக்கவிருக்கிற மண்டபத்திற்கு வந்து நிகழ்வை துக்குவதாக ஏற்பாடு என்கிறார் டீயை வாங்கிக்கொடுத்தவாறே/
பொதுவாகவே டீக்க்டைகளில் கொடுக்கிற டீசூடாகஇருக்கும்என்பதுதான்கண் கூடாய். ஆனால் தோழர் வாங்கிகொடுத்த டீக்கிளாஸ் ஈரம் பூத்து/குடித்து முடித்த டீயின் ஈரம் சுமந்தவாறே அப்படியே திரும்பவுமாய் பஸ்ஸேறி ஊருக்குப்போய்விடலாமோ?
ரயில்வேஸ்டேசன்.முன்னொருகாலத்தில்நான்பார்த்தஅடையாளங்களிலிருந்து வேறு பட்டு கொஞ்சவசதிப்பட்டுத்தெரிந்ததாக.வாடைகைடாக்ஸிகளையும்,ஆட்டோக்களையும்  சிமிண்ட் பூசப்பட்டிருந்த முன் வெளியில் சுமந்தவாறு/என்ன தெரிந்த போதும் அதன் சுற்றுப்புறவெளி களில் தலைதூக்கி நின்ற சீமைக்கருவேலை முட்ச் செடிகள் கண்ணுக்குத் தட்டுப்படாமல் இல்லை.
ஐம்பது பேருக்கும் குறையாமல் கூடியிருந்தவர்களின் ஆர்ப்பரிப்புடனும், சந்தோசத் துடனும் கிளையின் துணைச்செயலாளர் பிரியா கார்த்தி அவர்களின் துவக்க உரையு டனும் எழுத்தாளர்களைக்கொண்டாடுவோம் என்கிற ஆர்ப்பரிப்புடனுமாய் ஆரம்பித்த ஊர்வலம் இன்னமும் பழமையான தனது முகத்தை அடையாளமாய் கொண்டிருக்கிற ரயில்வே பீடர் ரோடு வழியாக வந்து பஜாரைக்கடந்து நிகழ்வு நடந்த மிளகாய் வத்தல் வியாபாரிகள் மண்டபத்தில் மையம் கொள்கிறது லயம் மாறாத தப்பிசை ஒலியுடன்/
நிகழ்வின் துக்கமாயும்,சுழியிடலாயும் திரு ,திருவுடையான் அவர்களின் பாடல்.பாடகரே இசைப்பவராயும்,இசைப்பவரே பாடகராயும்தென்படுகிறஅதிசயம்திருவுடையான்அவர்களின்  பாடல் நிகழ்வில் நடப்பதுண்டுதான் எப்போதுமே,அன்றும் அவ்வாறே/
அவரது பாடலுக்கு பின்பாய் நிகழ்வை துவக்கிவைத்துப்பேசிய மாவட்டச்செயலாலர் லட்சுமி காந்தன் அவர்களும்,வரவேற்றவிஸ்வநாத்அவர்களும்,தலைமைதாங்கியலட்சுமணப்பெருமாள் அவர்களும்  நிகழ்வின் மையங்களில் உரை நிகழ்த்திய மாநிலத் தலைவர்திருதமிழ்ச்செல்வன் அவர்களும், மாநிலப்பொறுப்பாளர் திரு எஸ்.ஏ.பி அவர்களும் ,மாநிலக்குழு உறுப்பினர் திரு மணிமாறன் அவர்களும் என இன்னும் இன்னுமாய் நிறைந்து பேசிய அனைவரது பேச்சிலு மாய் மையம் கொண்டிருந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்கள் அந்நேரம் அரங்கம் நிரம்பித் தெரிந்தவராக.சற்றே உற்று நோக்கிபோதுதான் காண முடிந்தது. பேசியவர்கள் அனைவரது உணர்வின்  ஊடாலுமாய் அழகிரிசாமிஅவர்கள் வாழ்ந்து கொண்டிருந்ததை/
இவர்கள் அனைவரது பேச்சின் ஊடாக வெளியிடப்பட்ட கு.அழகிரிசாமி அவர்களின் ஒற்றை சிறுகதையான திரிபுரம் கதையின் பிரசுரமும், அவரது தேர்தெடுத்த கதைகளின் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
நிகழ்வின் முடிவாய் திரு சாரங்கன் அவர்களால் தொகுக்கப்பட்டு திரையிடப்பட்ட  கு.அழகிரி சாமியைப் பற்றிய ஆவணப்படம் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அரங்கம் சுமந்திருந்த அனைவரையும் கட்டிப்போட்டிருந்தது.
அவர் இல்லாத காலங்களில் அவரைப்பற்றி சக எழுத்தாளர்களும்,அறிவுலக பிரபலங்களும், அறிவு ஜீவிகளுமாய் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை உள்ளடக்கிய பதிவாக இருந்த ஆவணப்படம் முடிந்த இரவு 10 மணி 5நிமிடங்களுக்கெல்லாம் நிறைவுறுகிறது  நிகழ்ச்சியும்/
நிகழ்வு முடிந்து அனைவரும் கலைந்து போனபின்பும் சேர்கள் மட்டுமாய் வீற்றிருந்த மண்டபத்தை வெறுமை சூழ நோக்குகையில் அந்த இடத்தில் த.மு.எ.க.ச தோழர்கள் எழுபட்டுத்தெரிகிறார்கள்.அருகில் நெருங்கி அவர்களின் கைபிடித்து விடைபெற்றபோது நிகழ்வு  திரும்பவும் ஆரம்பிக்கப்போவதாய் சொல்லிச்செல்கிறது மனது.

4 comments:

 1. வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி தங்களின் மேலான வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 2. அருமை... நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete