23 Apr 2013

மென்மேகம்,,,,,

      

வேகப்படுகிறபொழுதுகள்வாய்க்கப்பெறுகிறபெரும்பாலானநபர்களில்ஒருவனாகிப்  போன ஒரு நாளின் மாலையில் நானும் எனது இருசக்கர வாகனமுமாய் வந்து கொண்டிருக்கிறோம். கூடவே கைகோர்த்துக் கொண்டு வந்த கருநிற சாலையும். அதன் ஓரத்து மண் வெளியும்/ 
ஒரு மென் வரை படம் அவை  போலபின் நோக்கிச் செல்லநாங்கள் முன்நோக்கி நகர்ந்தவறாய்/ கறுத்திருந்த சாலையின் மென் மேனிமீதுந்தவிதநடமாட்டமும் இல்லைஅவ்வளவாக/ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊர்கிற வாகனங்கள் 
தவிர்த்து/

கனரகவாகனங்களைமுந்தமுயல்கிறஇலகுரகவாகனங்களும்,இலகுரகவாகனங்களை முந்த முயல்கிறகனரகவாகனங்களுமாய்பயணப்படுகின்றசாலையில் வெயில் காலத்தில் மனித நடமாட்டம்சற்றுமட்டுப்படுவதை முன்னறிவித்துச் செல்வதாக/
ள் அரவமற்ற தூரங்களை கடந்து நகர்கையில் சாலையின் ஓரமாய் நட்டு வைக்க ப்பட்டிருக்கிற சிறியஊராய்காட்சிப்படுகிறதுஅது.மண்சுமந்தும்மனிதர்கள்சுமந் தும் ஈரம்சுமந்துமாய்நிற்கிறகிராமத்தின்உள்கூடுவிவசாயம்சார்ந்துநிற்கிறகுடும்பங்களைக்கொண்டுகட்டமைக்கப்பட்டதாக/எல்லாம்மானாவாரிநிலங்களாகவே பெரும் பாலுமாய். 

வானம்பெய்தால் செழிப்பு,பொய்த்தால் வறுமைஎனகண்ணைக் கட்டிக்கொண்டு பெரும்பாலுமாய்வறுமைக்குவாழ்க்கைப்பட்டபிழைப்பு/ செழிப்பிற்கும், வறுமைக்கும் ஊடாக வேகமெடுத்துஓடுகிறவாழ்க்கைஇப்போதுஏதோஒரு மென்சொல்லெடுத்து தடைபடுவதாக / 

பருவமழை பொய்த்துப் போகிறது.விதைத்தது கைவர வில்லை.விவசாயத்திற்காய் செய்கிறசெலவுகட்டுபடியாகவில்லை.மொத்தத்தில்பொய்த்துப்பொனது விவசாயம் என நிலங்களை வந்த விலைக்கு விற்று விட்டு விளைநிலங்கள்வீட்டுமனைகளாக மாறி நிற்கிற கோலத்தைகனத்தமனதுடன்பார்க்கிறவர்களாக/அப்படியான மனிதர் களை இன்னும் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டுள்ள ஊரை நெருங்க சற்று தூரத்தே வருகிற போது விழிபடலத்தில் காட்சிப்பட்டவைதான் இப்படியெல்லாம் விரிவுபட்டுத்தெரிவதாக/ 

உதிர்ந்து கிடக்கிறது இலைகள் சாலையை மூடி/வேறெந்த இடத்திலும் எதுவும் தென்பட மறுத்து அது மட்டும் விழி விரிந்த பார்வைக்குப்படுவதாய்/அரசமரத்து இலைகள் அவை.அண்ணாந்து பார்க்கையில் தெரிகிற இலை உதிர்த்த மரம் தனது வெற்றுக் கிளைகளைக்காட்டி/ 

ஆகா என்ன இது இப்படி ஒரு தோற்றத்துடன் உருமாறி காட்சி தருகிறாய் நீ?மற்ற மரங்களெல்லாம் தன் இலைகளை எப்போதோ உதிர்த்து விட்டு இப்போது புதிதாய் துளிர்க்க ஆரம்பித்தும்,கம்பீரம் காட்டியுமாய் அடர்ந்து சிரித்து நிற்கிற பொழுது நீ மட்டும்  விடாப்பிடியாய் உன் மேனியின் ஆடைகளை களைத்து எறிவது போல உனது கிளைகளிலிருந்து இலைகளை உதிர்த்து எறிகிறாயே ஏன்அப்படி?அதுவும் வாகனங்கள் ஊறும் சாலை மீது?ஊர் ஓர சாலைஅது .நிழல் போர்த்திக் கிடக்கும் மரங்களும், மரங்களின்  கீழ் தஞ்சம் கொண்டுள்ள டீக்கடைகளுமாய் இருக்கிற சாலையின் ஓரமாய் மெதுவாய் ஊர்ந்து வரும் போதே பெரிதாய் எதுவுமே  தென்படாத சாலையில் வட்டமாய் கட்டம் கட்டியது போல் உதிர்ந்து கிடந்த இலைகள் தூரத்தில் வரும் போது ஏதோ பார்ப்பதற்கு கண்ணாடிச்சில்லுகள் சிதறிக் கிடப்பது போலவேத் தெரிகிறது. 

மாலை வெயில் பட்டுவெள்ளையாய்,பழுப்பாய்பலகலரில் மின்னுகிறது. தூரத்தில் இருந்து வருகிறவனுக்கு ஒரு சந்தேகம்?என்னடா இது நடு ரோட்டில்இப்படி கண்ணாடிகளாய் உடைபட்டு மின்னுகிறதே?என/ 

ஆமாம் ஆனால் அருகில் வரவர அது உடைந்த கண்ணாடிச்சில்லுகள் இல்லை. மாறாக உதிர்ந்த மரத்துஇலைகள்.பார்க்கிற வேளையிலே அவன் உடல் மீதாய் ஒரு இலைஒன்றுமெல்லிதாய் உதிர்ந்துபடர்ந்து உடல் தழுவிச்செல்கிறது. செல்லட்டும், செல்லட்டும், மெதுவாக,என நினைத்தவாறே மரத்தின் கீழிருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டுகிம்பும்பொழுதுஅவனைக்கடந்தடவுன்பஸ்ஸின்மீதும்ஒரு இலை உதிர்ந்து அழகுகாட்டிச் செல்கிறது.

செல்லட்டும் அதன் திசையில் என உதிர்ந்த இலைக்கு கைகாட்டியவாறே கிளம்பி வருகிறேன்.

4 comments:

 1. ரசித்தேன்...

  Reader-ல் வரவில்லை... முக நூல் மூலம் அறிந்து வந்தேன்...

  ReplyDelete
 2. வணக்கம் சகோ...
  மிக அருமையான நல்லதொரு காட்சி எழுத்துப்பதிப்பு. அப்படியே வாசிப்பதை மறந்து உங்களுடன் இருசக்கரவாகனத்தில் பயணித்து பார்த்துக்கொண்டு போவதான உணர்வினைத்தந்த அழகிய வர்ணனை எழுத்துப் பதிவு.
  உண்மையில் வியந்து படிதேன்.ரசித்தேன்! மனமார்ந்த வாழ்த்துக்கள் பல!

  இவ்வளவுகாலமும் உங்கள் பதிவுகள் எதுவும் என் டாஷ்போர்ட் Reader-ல் வரவில்லை. இன்றுதான் உங்கள் பழைய பதிவுகளைக்காட்டியது. உடனே வந்தேன்.

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் இளம்தி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete