9 Apr 2013

சுழியிடம்,,,,,,,


           பேச விஷயமற்றதருணங்களிலெல்லாம் இப்படித்தான் சப்பையாகவோ அல்லது     
           உப்புச்சப்பற்றோ பேச  வேண்டியிருக்கிறது ஏதேனுமாய்/

நல்லமனம்,நல்லஉள்ளம்படைத்தவர்களுக்குமட்டுமல்லாதுஅல்லாதவர்களுக்குக்கும்  இப்படித்தான் வாய்த்துப்போகிறது சுழற்சியின் வாய்மையில்/ 
காலையில் அலுவலகம் கிளம்பும்போதே சற்றே ஏற்படுவிட்ட தாமதத்தை தவிர்க்க இயலவில்லை.கைவரப்பெற்றவேலையைஎப்படியேனுமாய்முடித்துவிடவேண்டும்என்கிற சடுதியில் முடிவிலுமாய் காட்டிய பிடிவாதம் இவனை வேலையை  முடிக்க வைத்த போது சற்றே தாமதமாகிப் போகிறது. 

நேரமிருக்கிற பொழுதுகளில் காட்டுகிற நிதானத்தை கைவிட்டு அவசரம் காட்டி 

கிளம்பவேண்டியதாய் இருக்கிறது.30 கிலோமீட்டர் வேகம் செல்கிற வாகனத்தை 40ற்குவேகம்கூட்டச் செய்தால் போய் விடலாம்அலுவலக நேரத்திற்குள்/தவிர கொஞ்சம் நேரம் ஆகி விட்டால் பெர்மிஷன் சொல்லிக் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் காலை டிபனையும் மதியச்சாப்பாட்டையுமாய்இரண்டுடிபன் பாக்ஸ் களில்வாங்கிக்கொண்டுகிளம்பும்போதுகேட்கிறாள்மனைவி.” இன்றைக்கு எதுவும் எடுக்கவா மட்டன்சிக்கன்? நல்ல நாள் என்கிற அடையாளதற்காக இல்லாவிட்டா லும்கூடபையன்கேட்டுக்கொண்டேஇருக்கிறான்.அதற்காகவாவதுஎடுக்கவேண்டும் என்கிறாள்.”இருக்கும் இன்று மாலை வரை கூட கடைகள் எடுத்துக் கொள்எனச்சொல்லி விட்டுக் கிளம்புகிறான். 
சரி அப்ப கிளம்புறேன் என்ற ஒற்றை பேச்சிற்கும்,சொல்லிற்கும்சரிஎன்றபுன்னகை க்கீற்றைஉதிர்த்த மனைவிக்கு  இன்றுதான் பதினெட்டுப் பிறக்கிறதோஅப்படித் தான்இருக்கிறாள்பார்த்தால்இந்த42வயதிலுமாய்.என்னமோவிட்டால்  திரும்பவும்  கல்லூரிக்கு போய்விடுவாயோஎன்பான் பெருஞ்சிரிப்புடன். 

வாங்கியடிபன்பாக்ஸ்களையும்,கைக்குழந்தைபோலிருந்ததண்ணீர்பாட்டிலையும்பைக்குள்வைத்துகொண்டுகிளம்புகையில்வண்டியின்முன்டயரை மாற்றவேண்டும் எனத் தோணுகிறது. 
சுத்தமாக  வழுக்கை விழுந்து விட்டதுஇவன் ஒரு கவனமாய் சாலையில் விரைந்து 

பயணித்துக்கொண்டிருக்கையில்அதுவாட்டுக்குடயர்வெடித்துதொலைத்துவிட்டா ல்,,,,,,பின்டயர்வெடித்தால்கூடஅப்படியேஉட்கார்ந்துவிடும்என்பார்கள். முன்டயர் என்றால்அப்படியேஇழுத்துக்கொண்டுபோய்ஒருஓரம்சேர்த்துவிடவாய்ப்பு உண்டுரகமும்,மிதரகமுமாய்வாகனங்கள்விரைகிறசாலையது.கரும்போர்வைபோர்த்திய நீள்வினையாய்நீண்டோடியசாலையில்விரைகிறகனரகமித ரக வாகனங்கள் மீதுமோதிவிடக்கூடாதுஎன்பதாய்ஏற்படுகிறஜாக்கிரதைஉணர்வுஇப்படியெல்லா ம்   கவனம் கொள்ளச்செய்து விடுகிறது.
இரண்டுநாட்களாகவண்டியைசெட்டுக்குள்நிறுத்தியிருந்தான்.இன்றுதான்எடுக்கிறான்.பெரியதாஎங்கும் வெளியே போக வேண்டியதில்லை என்பது தவிர்த்து இவனுக்கு வெளியே போகிற எண்ணமும் இல்லை.உடல்மூடிக்கொண்ட சோம்பல்  வேறு,சாப்பிட்டு விட்டு அப்படியே படுத்தும் விட்டான். 

கண்விழிக்கையில்மாலைமணிஆறரைஇருக்கலாம்.தூக்கம்கலையாதவிழிகளுடன்  ஒரு செம்பு தண்ணீரைக்குடித்து விட்டு குளித்தான் உடல் அலுப்புப்போகவும் கசகசப்புநீங்கவுமாய்/குளித்துமுடித்துவந்ததும்மனைவிகொடுத்தடீருசிகிறது.டீநன்--றாகயிருந்தது.,,,,,,,,,,,,,,,போல/ 
அன்று ஊடாடிய நினைவுகளுடனும் வேலைகளுடனுமாய்கழிந்தசனிஞாயிறு இரண்டுநாட்களின்முடிவிலுமாய்புலர்ந்தஇன்றுமையம்கொண்டமற்றவைகளுடன்  கிளம்புகிறான் து இரு சக்கர வாகனத்தின் முன் டயரைப்பார்த்தவாறே/ 

அருப்புக்கோட்டை சால்லையில் பயணித்து ஸ்கூலை தாண்டும் போது ஒருவர் லிப்ட் கேட்டு கைநீட்டினார்.அந்த ஸ்கூலின் வாட்ச் மேனாம் அவர்.இங்கு எந்த பஸ்ஸிம் நிற்பதில்லை எனவும் ரொம்ப நேரமாக காத்திருப்பதாகவும் சொன்ன அவர்எப்பவும்ஏழுமணிக்கெல்லாம்போயிருவேன்நானு,இன்னைக்குத்தான்லேட்டுஎன்றார்.அதுவேறொண்ணுமில்லசார்.அமெரிக்கக்கோழின்னுரெண்டுகோழிங்க  வாங்கி வச்சிருதாங்க சார்.அது பாத்தாகடையிலஇந்தபஞ்சுபொம்மை இருக்கும் பாருங்க,அசல் அது மாதிரியே இருக்கு சார்.இன்னைக்கி காலையில பாத்தா றெக்கைகமட்டும்உதிந்துபோயிருக்ககோழிகளக்காணோம்சார்.அத அவுங்களுக்கு சொல்லீரணுமில்லையா? அதான்  ஸ்கூல் நிர்வாகிங்க வந்த ஒடனே சொல்லீட்டு வரேன் சார்.தவிரஇதுஓபன்ஸ்பேஸாவேற இருக்கு சார்.அவுங்கநாய்கள ஸ்கூல் பக்கத்துலயோ,ஹாஸ்டல்பக்கத்துலயோஅண்டவிடக்கூடாதுன்றாங்க/அதுஎப்பிடிவராமஇருக்கும்சொல்லுங்க?காம்பவுண்டுவால்ஏதாவதுஇருந்தாலும்ரிங்கலாம்.இப்பிடிக்கெடக்குறவெளியில்அதுவராமஎங்கபோகும்?ஹாஸ்டல்மிஞ்சுறகறீகோழிமீனுன்னு  நெறைய இருக்கும். 
மத்தியான வேலைக்கு கரெக்டா ஒருமணிக்குவந்துநிக்குங்க,கிட்டத்தட்ட ஒரு அம்பது உருப்படிக்கு கொறையாம இருக்கும்.ராத்திரியும் அந்த மாதிரி சாப்பாட் டுக்கு வந்துரும். அதுக ஒண்ணு மேல ஒண்ணு பெரண்டு விழுகுறதும் சண்ட போட் டுக்கிறதும்ன்னு ஒண்ணு விடாம சாப்புட்டு சுத்தம் பண்ணீரும் அந்த யெடத்த/ 
காலை வேளையில நாங்க ஆளும் பேருமா இருக்குறதால வெரட்டிவிட்ருவோம் அதுகள பக்கத்துல அண்டவிடாம என இன்னும் இன்னுமாய் பலவாறாய் பேசிக்கொண்டு வந்த அவர் இன்னைக்கு ஊருல பொங்கல்,பொண்டாட்டி புள்ளைங்களோட இந்நேரம் வீட்ல இருக்க வெண்டிய ஆளு இங்க கெடந்து மல்லாடிக் கிட்டிருக்கேன், ஹாஸ்டல், காணாமப் போனக் கோழி,நாய்ங்கஸ்கூலு ன்னு  காலையில இருந்து  ஒரு ஐம்பது போனாவது வந்துருக்கும் வீட்லயிருந்து,,, என இறங்க வேண்டிய இடம் வந்தும் பேசிக் கொண்டேயிருந்தார். 
சிலபேருக்கு ப்படித்தான்வாய்க்கப்பெற்று விடுகிறதுபேச்சு.அந்தரகத்தில்இவர் முதலாவதாய் இருந்துவிட்டுப்போகட்டும்பரவாயில்லைஎனஇறக்கிவிட்டு போகும் போது நின்ற சக்தி கடையில்  டீ இல்லை என்றார்.இன்று பொங்கல் சாமி கும்பிட போவதால் கடையை சீக்கிரம் மூடிவிட்டேன் என்றார்.அப்போது சற்று கழித்து  அலுவலகத்தில் வேலை நிமித்த மாய் தலை குனிந்தவன் தலை நிமிர்ந்த போது மணி மாலை ஆறு ஆகிப்போகிறது. 
ஆறு மணியை தாங்கிகொண்டு வீடு வந்த வேளையிலும் பேசஏதும் விசயமற்ற தருணங்களிலுமாய் இப்படித்தான்சப்பையாகவோஅல்லதுஉப்புச்சப்பில்லாமலோ ஏதேனும்பேச வேண்டியிருக்கிறது.   

2 comments:

Muruganandan M.K. said...

சுவையான சிறுகதை
அனுபவப் பகிர்வுபோல
இயல்பானதாக

vimalanperali said...

வணக்கம் முருகானந்தன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/