15 Apr 2013

பப்ரிமுட்டாய்,,,,,,

     
அன்று சாப்பிட்ட ஆரஞ்சு மிட்டாயின் சுவை இன்றைக்கும் நாவின் சுவையறும்புகளில் நிற்பதாக/ பஜாரில்பீடி ஸ்டோரில் வாங்கிய மிட்டாய் அது.மொத்தமாகஇரண்டு பாக்கெட் வாங்கியிருந்தான் . அரைக்கிலோ பாக்கெட் இரண்டு கேட்டதற்கு அவனை மேலும்,கீழுமாய் பார்த்த கடைக்காரர்ஒருகிலோபாக்கெட்டுகள்இரண்டைஎடுத்துக்கொடுத்துவிட்டார். அவனும் ஒன்றும் சொல்லத்தோன்றாமல் வாங்கிக் கொண்டான்.
 
இப்போதைக்கு ஆரஞ்சு மிட்டாயை கண்ணால் பார்த்ததாக்கூட ஞாபகமில்லை  அவனுக்குள். பெட்டிக்கடைகளின் பீங்கான்பாட்டில்களில்ஆரஞ்சுமிட்டாய்கள்அடைபட்டுக் கொண்டிருந்த இடத்தில் அதை விட உயரமான ப்ளாஸ்டிக் பாட்டில்களில் குட்காக்கள் அடைபட்டு தெரிவ தாக /
இதுமாதிரியான பீடிஸ்டோர்கள்தான் இன்னும் ஆரஞ்சு  மிட்டாயை இன்னும் அழிய விடாமல்  பார்த்து கொள்வதாகவும், பாதுகாத்து வைத்திருப்பதாகவும்/

காலையில்எட்டுமணிகுள்ளாககுளித்தமுடித்துக்கிளம்பிவிட்டான்.வீட்டில்பையில்லை.பிக்
க்ஷாப்பர் பைதான் எல்லாவற்றிற்கும் ஏற்றது என சொல்லி விட இயலவில்லை.பரணிலிருந்து எடுத்து உதறிய போது அதிலிருந்து கிளம்பிய தூசியும் பாச்சான் அரித்து துளையிட்டிருந்த சிறு சிறு  ஓட்டைகளும் அது லாயக்கில்லை என அறிவித்தது.அடுத்த்தாய் இருந்த இரண்டு பைகளுமே அப்படித்தான்.ஒன்றை விட ஒன்று மோசம் அல்லது ஒன்றுக்கு ஒன்று தேவலை யில்லைஎனஅறிவித்ததாய்/உடனே அதை எடுத்துஎரித்து விடுமாறு மனைவியிடம் சொல்லும் போது சின்ன மகன் குறு க்கிடுகிறான். “நல்லாயிருக்குறதப்போயி  எடுக்கு எரிக்கணும் ங்றீ ங்க/எதுக்காகவாது ஆகுமில்ல என்கிறான்.அவனைஏறிட்டுச்சிரித்தவனாய் மனைவியிடம் பணம் வாங்கிக்கொண்டு கிளம்புகிறான். சின்ன மகனை ஆழமாகப்பார்த்தவாறு/

அது அப்படித்தான், இருவருக்குள் ளுமாய்இதுமாதிரியான பேச்சுக்கள் ஏதாவது நடப்பதும் பின் அது மௌனங்களில் முடிவதுமாய் நிகழ்கிற ஜாலம் அவர்களது வீட்டின் சுவர்களுக்குக் கூட அத்துபடி. இதை அறிந்தவளாக அவனது மனைவி பணத்தை கையில் திணிக்கிறாள். இன்னும் காலை டிபன் ரெடியாகவில்லை. வெளியில்ஏ தாவது சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்கிற சொல்லுடனுமாய்/

சமையலறையை எட்டிப்பார்த்த அவன் சரி என்கிற கம்மிய குரலில் வெளியே வருகிறான். சமைய லறையின் கீழிருந்த தண்ணீர் குடங்கள்,கேஸ் அடுப்பு,இட்து ஓரமாய்த்தெரிந்த சிங்க், சிங்கைக்கடந்துமடக்கிக்கட்டப்பட்டிருந்தமேடையில்அடுக்கிவைக்கப்பட்டிருந்தபாத்திரங்கள்  பாத்திரங்களை ஒட்டிஇதமாய்கலர்க்காண்பித்து மேலெழும்பிய சுவர்சுவரின் மீது படிந்திருந்த  சமையல் கேஸின் பிசுபிசுப்பும்,அழுக்கும் என இதரைதரவையாய் நிறைந்து காட்சிப்பட்டவைகளிலிருந்து பார்வையைப்பிடுங்கி வெளியே வரும்போது ஹாலின் பேன் காற்று நன்றாகயிருந்தது.டீ.வி யில் நாயகனும், நாயகியும் ஓடிக்கொண்டிருந்தார்கள். திறந்தி ருந்த ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளி வீட்டை இன்னும் வெளிச்சமாக்கிக்காட்டியது.நடை வாசல் முன் படுத்திருந்த நாய் வாலாட்டி விசுவாசம் காட்டுவதாய்/

பிஸ்கட்டைத்தவிர வேறெதுவும் போட்டாலும் சாப்பிடாத நாய். “பால் சோறு வைத்தால் திங்கும்” எ ன்றார்கள்.விற்கிற விலைவாசியில் அப்படி ஒன்று வைக்க எங்கே போவது?

சாமி ஜாமான் எல்லாம் வாங்கிய பின்தான் ஞாபகம் வந்தது.போகிற போக்கில் வாங்கிப் போட்டுக் கொள்ளலாம்என/

தேங்காய், வாழைப்பழம்,சூடம்,பத்திக்குச்சி எல்லாம்  சொன்ன மனைவி காதோலை கருக மணி சொல்லவில்லை.இப்போது போல அப்போது கையில் செல்போன்இருந்திருக்கவில்லை. இல்லையென்றால் மனைவியிடம் பேசியிருக்கலாம்.சரிஎதற்கும்இருக்கட்டும்என வாங்கிப் போட்டுக் கொண்டான்.

பூப்போட்ட சேலையும்,கருப்பு ஜாக்கெட்டுமாய் இருந்த மனைவி பணமெடுத்துகொடுக்கும் போது ஒன்றும் சொல்லவில்லை.இளைத்தஉடம்பில் களைத்துப் போய் தெரிந்த அவள் அந்தக்காலை நேரத்தில் ஏதாவது வீட்டு வேலைகளை செய்து முடித்திருப்பாள்.முகத்தில் அரும்பிய வேர்வையின் ஈரம் அவள் கொடுத்த பணத்தில் தெரிந்தது.கையிலிருந்த ஈரத்தை உள் வாங்கிய பணத்தை கடைக் காரரிடம் கொடுக்கையில் அது காய்ந்து போய்/

பெரிதாக எங்கும் அலைய வேண்டியிருக்கவில்லை.தெப்பத்தைச் சுற்றி இருக்கிற கடைகளிலேயே எல்லாம் வாங்கி வந்து விட்டிருந்தான்.எப்போது போய் எங்கு சாமி ஜாமான் வாங்கினாலும் சரி. ஒத்தைப்படை எண்ணிக்கையில் வாங்கிவிடுவதுஅவனது வழக்கமாயிரு ந்தது/சாமி ஜாமான் வாங்க வேண்டும் என வீட்டில் சொல்லிவிட்டவர்கள்அதன்எண்ணிக்கை எத்தனையாய்இருக்க வேண்டும் எனச்சொல்லவில்லை. கடைக்கார்ரிடம் போய் வாயை,வாயை மென்று கொண்டு நின்ற போது அவர்தான்சொன்னார்.எல்லாமேஒற்றைப்படையில் இருந்தால்  தேவலாம் என/ அன்று பதிந்த சொல் இன்று வரை மனம் தங்கியதாய்/

வேண்டியான் கடையில் வாங்கிய வாழைப் பழங்களும், சந்திரண்ணாச்சி கடையில் வாங்கிய தேங்காய்களும்,நாட்டுமருந்துக்கடையில்வாங்கிய  காதோலை கருகமணி,சூடம்சாம்பிராணி ஐட்டங்களும்,வெத்திலைக்கூடைக்காரியிடம்வாங்கியவெற்றிலை நிரம்பிய பையுடனுமாய் பீடி ஸ்டோரை தாண்டியபோது மிட்டாய் வாங்கினால் என்னவெனத் தோணியது.கடைக்காரர்கூட முதலில் சாக்லேட் பாக்கெட்டுகள்தான் கொடுத்தார்.விலை அதிகமாயிருந்ததால் ஆரஞ்சு மிட்டா யிக்குத் தாவினான்.அர்ச்சனைத்தட்டெல்லாம் ஏது அங்கு?ஒரு வருடத் திற்கு ஒரு முறையோஅல்லதுஇரண்டுவருடங்களுக்குஒருமுறையோவழிபடப்போகிறகுலதெய்வம் கோவிலில் அது ஏது? கையில் கொண்டு போயிருந்த சில்வர் தாம்பாளத்தில்வைத்துதான் கொண்டு போகிறான்.அவன் மனைவி மகன்களுடன்/

தேங்காய் பழங்களுக்கு மத்தியிலாக ஆரஞ்சு மிட்டாயை பார்த்த பூசாரியண்ணன் இதைத்தான் கேட்டார்.என்னடா இது என.அன்றைக்கு பட்டாளம் அண்ணன்தான் பூசாரி. இடுப்பில் நாலு முழ வேஷ்டியும்,அதன் மேல் கட்டிய துண்டும் வெற்றுடம்புமாய் நின்றார்.சாரு லதா அக்காள்தான் சொன்னாள். தம்பிக்கி இந்த வயசுல மிட்டாயி திங்குற ஆசைவந்துருச்சி போலயிருக்கு என/

மதுரைப் பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறாள். வாக்குபட்டுப் போன ஊர்.வசதியான குடும்பத்தில் வாக்கப்படவில்லை என்ற போதும் வசதியற்ற குடும்பம்என்கிறவகையிலும் இல்லை. இவள் வாக்குப்பட்டுபோகையில் இவளது வீட்டுக்காரர் ஹோட்டல் சப்ளையராய் இருந்தார். திண்டுக்கல் பக்கம் ஏதோ ஒரு ஊரில் எனச் சொன்னார்கள்.மாதம் ஒரு முறைதான் வீடு வருகிறது வழக்கம் எனவும்,அவர் வாங்குகிற சம்பளம் அவரது குடிக்கும் ஆடம்பரத்திற்கும் சரியாகிப்போகும் எனவுமாய் சொன்னார்கள்.இவனோடு சாருலதா அக்கா எப்படி குடும்பம் நடத்தப்போகிறாளோ என ஜாடைபேசியவர்களும்உண்டு. அதையெல்லாம் உடைத்துக்காட்டியவளாகமுண்டி முளைக்கிற பாறைப் பயிராய் திருமணமான சில நாட்களில் கணவனின் பழக்கங்களில் ஓரளவு மாற்றங்களை கொண்டு வந்தது அவளது வைராக்கியம் என்றே சொன்னது ஊர்.

இது போதும் தாயி இனி ஆயிசுக்கும் ஒங்களப்பத்தி நாங்க கவலப்படமாட்டோம் எனச் சொல்லி ஊரிலேயேஅவர்களுக்குசொந்தமாய் ஒருகடைவைத்துக்கொடுத்தார்கள் மாமனாரும் மாமியாயாருமாய் சேர்ந்து/அதற்காக மாமியார் அவரது ரெட்டை வடம் சங்கிலிய கழட்டிக் கொடுத்ததை இப்பொழுதும் நன்றியுடன்சொல்லுவாள்சாருலதாஅக்கா.இதெல்லாம் சாருலாத அக்கா வாக்கப்பட்டு வந்த நேரமா அல்லது அவளுக்கு ஒரு பிள்ளை பிற்ந்துஇரண்டு வருடங்கள் கழித்துகணவன்  மனோ நிலையில் ஏற்பட்ட மாற்றமா தெரியவில்லை.மூன்று வருடங்கள்அவள்பட்டகஷ்டத்திற்கும், அவள் அடைந்தமனவேதனைக்கும்அளவே இல்லை எனலாம். அது சரியாகிப்போன திருப்தி.

அப்படியெல்லாம் இருந்த சாருலதா அக்காவைப் பற்றி அடித்துப்பெய்த மழைக்கும், ஓடையில் சுழித்தோடுகிற வெள்ளத்திற்கும் தெரியும என்ன?
மரங்களும், மழையும்,  மொட்டப்பாறையும் கூட அடித்துப்பெய்கிற மழைக்குக்கூசி குடை கேட்ட காலமது.

திருமணத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாய் என்பதாய் நினைவு.களை எடுத்துவிட்டு காட்டி லிருந்து வந்து கொண்டிருந்த சாருலதா அக்காவை சட்டென போர்த்திக்கொள்கிறது மழை. மழையென்றால்மழைஅப்படிஒருமழைஅவள்வயதிற்குஇப்படிஒருமழையைப் பார்த்ததாய் ஞாபகமில்லை நல்ல மழை,பேய் மழை என்றாள் பின்னொரு நாளில்அவனிடம்.

காட்டிற்கும்வீட்டிற்கும் எப்படியும்  இரண்டு கிலோ மீட்டர் தூரங்களாவது இருக்கும்.பெரிய சாமி வீட்டுக்காடு அது.வரகரசிப் பயிரும், ஊடு பயிராக துவரங்செடிகளுமாய் முளைவிட்டு அவரதுகாட்டையும்,கண்களையும்நிறைத்துவளம்காட்டியநேரமது.காண்ராக்ட்வேலை, மொத்த மாய் ஆறு  பேர் களை வெட்டப்போயிருந்தார்கள்.

குச்சிக்களை,மழை நேரமாதலால் செதுக்கிக்களை லாயக்கில்லை.பத்துபேருக்கான கூலியை காண் ட்ராக்டாய்பேசிஆள்கிடைக்காமல்ஆறுபேர்போய்வெட்டிவிட்டுவந்தார்கள்.சாருலதா அக்காள் தான் போய்காண்ட்ராக்ட்பேசி முடித்துவிட்டு வந்தாள்.அதில் வல்லவள் அவள்.

 “காலம் செய்த கோலமது.நல்லா படிச்ச விவசாய வீட்டுப்புள்ள,இப்பிடி கூலி வேலக் காரங்க மாதிரி  வரிஞ்சிகட்டிக்கிட்டுத்திரியிறா”என்றார்கள்.எட்டாம் வகுப்புவரைடவுனில் படித்தவள். வாழ்க்கை காட்டிய திசை கிராமத்தில் சுழியிட்ட நாளிலிருந்து இவ்வளவையும் கற்றுகொண்டு உழைப்பின் உருவாய் நிற்கிறாள்.

எல்லோரும் அவரவர் நிறையை (பங்கை) களையெடுத்து முடித்து விட்டு நிமிர்ந்த போது சாருலதா அக்கா அவளது வேலையை இன்னும் முடிக்காமல்  வைத்திருந்தாள் கொஞ்சமாக/

இது என்னாடியம்மா புதுக்கூத்தா இருக்கு? எப்பவுமே கால்லசக்கரத்தக்கட்டிவிட்டமாதிரி எங்களு க்கெல்லாம் முன்னாடி வேலைய முடிச்சிட்டு ஓடி வர ஆளு,இன்னைக்கு என்ன பேக்கடிக்கிறா?அது வேற ஒண்ணுமில்ல கல்யாணத்துக்கு நெருங்கி நிக்குறாள்ல, அதான்.,,,,,, என்றகேலிப்பேச்சுகளுக்கு இந்த மாதம் கொஞ்சம் ரத்தபோக்கு அதிகம்,அதனால் வந்தசோர்வுஎனசொல்லி விட முடியவில்லை  அவர்களிடம்/அவர்களில்ஒருத்தி நானும் ஒரு கை தருகிறேன்எனச்சொன்னபோதுவேண்டாம் நீங்கள்  போங்கள் வந்து விடுகிறேன் சொடக்குப்போடும் நிமிடங்களுக்குள்ளாக/என்றவளைவரும்வழியில்  மழை இப்படி வழிமறிக்கும் என நினைக்கவில்லை.
நெருங்கிவிட்டாள் ஊரை,நன்றாகயிருந்தால் இன்னும் அரை பர்லாங் தூரம்தான் .கண்மாய்க் கரை ஏறிவிடலாம்.கண்மாய்க்கரைஏறிவிட்டாலேவீட்டுக்குப்போன மாதிரிதான்.கரைவாசலில் இருக்கிற ஜக்கையா  பேட்டையில் கொஞ்ச நேரம் நின்று விட்டுப்போகலாம்.வருடம் 365 நாட்களும் பத்துப் பேருக்குக்குறையாமல் ஏதாவதுவேலைகொடுத்துக்கொண்டிருக்கிறமினி பேக்ட்ரியாக/

தெப்பமாக நனைந்துவிட்டாள்.இங்கு ஒதுங்கக்கூட இடமில்லை.என்ன செய்ய மழையில் நனைந்து  கொண்டே போய்விட வேண்டியதுதான்.தலை போர்த்திய சேலை எவ்வளவு தாங்கும்?சேலையை இறுக்கக்கட்டியவளாய் நடையில் வேகம் காட்டி ஓடத்தொடங்கினாள். காலில் குத்திய நெருஞ்சி முள்ளை பிடுங்கி எறிந்து விட்டு/

ஒற்றையடிப்பாதையது.மழை இல்லாத நேரத்தில்  தடம் விழுந்த பாதை சிமிண்ட் பூசிய தரையாய் நன்றாகயிருக்கும்.இப்போது மழை நீர் காலைக்கட்டிக்கொண்டு ஓடவிடாமல் தடுக்கியது.  என்ன தான்  புழுதி பூத்திருந்த மண்ணாயிருந்தபோதும் கூடகால்வழுக்கியது, வேகமாய்ஓடமுடியவில்லை. தவங்கி,தவங்கி ஓட வேண்டியிருந்தது.

சின்ன வயதில் பற்றிப்படர்ந்து ஓடித்திரிந்து விளையாடியமண்.தட்டான்பிடிக்கதும்மைச் செடிகளை கைநிறைய பிடித்துக்கொண்டும்,களங்களில் துவரையும், வரகரிசியும் சூடு அடிக்கிற நேரங்களில் சுற்றித்திரிந்த மண் அது. 

உடன் வந்தவர்களை அவசரப்பட்டு அனுப்பியிருக்க வேண்டாமோ,ஒரு நிமிடம் புத்தியை கடன் கொடுத்து விட்ட முட்டாள்த்தனம் நடந்து விட்டது.இனியும் இப்படியெல்லாம் இருக்கக் கூடாது.

அவர்கள் இப்போதுதான் ஓடைதாண்டிகரைஏறியிருக்கக்கூடும்.ஒருவேளைஅவர்களும் ஜக்கையன் பேட்டையில் இருக்கக்கூடும் என நினைத்தவளாய் ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள் நனைந்து தண்ணீர் வழிந்த மரத்தின் கீழ் கோடு இழுத்த்து போல் ஓடிய ஓடையில் புதுத்தண்ணீர்நுங்கும்நுரையுமாககரைபுரண்டுஓடிக்கொண்டிருந்தது.ஓடியதண்ணீ ரின் வேகம்தரையைமட்டுமல்லசாருலதா அக்காவையும் அதிர வைத்தது.அந்த அதிர்ச்சியும்படபடத்த மனதின் வேகத்தையும் போக்குபவர்களாய் தன்னுடன் வேலைக்கு வந்தவர்கள் கரைக்கு அந்தப்பக்கம் நின்று சாருலதா அக்காவை எச்சரித்தபடி இருந்தார்கள்.எச்சரிக்கை எச்சரிக்கையாய் இருந்த போதும் கூட எப்படி அக்கரைக்குப்போவது?ஒரு நிமிடம்தான் அவள் யோசித்திருப்பாள் அப்படி.மறு நிமிடம் அவள் முன் முடிச்சிட்ட நீண்ட சேலை கயிறு போல வந்து  விழுந்தது ஒரு முனையில் கல் கட்டி.கொஞ்சம் அசந்திருந்தால் இவள்மேல் விழுந்திருக்கும்.அதை பற்றிக் கொண்டு கரையேறியபோதுதான் தெரிந்தது,கயிறாக தன் முன் வந்து விழுந்ததுஅங்குநின்றுகொண்டிருந்தஅனைவரின் முடியிடபட்ட சேலை என்பது.

அவர்கள் அனைவருக்குமாய்  கைகூப்பியபோது அவர்கள் அனைவரும்  சாருலதா அக்காவை  வீடு சேர்த்து விட்டுதான் போனார்கள்.

அன்று வீட்டில் விட்ட அவர்களின் ஈரத்தை இன்று வரை மனதில் இருத்தி வாழ்ந்துகொண்டிருக்கிற சாருலதா அக்கா சாமிகும்பிட்டு வந்தவுடன் அவனது கைகளை இறுப்பற்றிக்கொண்டாள்.அவனது மனைவி பிள்ளைகளிடம் அன்பாகப்பேசியவாறு இருந்த வளை எப்படியிருக்கிறீர்கள் நீங்கள் எனக் கேட்ட போது இருக்குறேம்பா,,,,,,,என  தலை குனிந்து கொண்டாள்.

அவன் தற்செயலாய்  கோவிலையும்,பூசாரி அண்ணனையும் ஏறிட்டபோது கோயிலுக்கு வந்திருந்த அனைவரின் கைகளிலும் ஆரஞ்சுமிட்டாய் இருந்தது.

7 comments:

 1. சுவையான ஆரஞ்சு மிட்டாய்...

  Feed Settings- ஏதேனும் மாற்றி விட்டீர்களா...? உங்கள் பதிவுகள் எனது டாஷ்போர்ட்-இல் வருவதில்லை... ஏன் என்று பார்க்கிறேன்... FB-இல் பார்த்து தான் வந்தேன்...

  பதிவை எழுதியவுடன் எனக்கு மெயில் (dindiguldhanabalan@yahoo.com) அனுப்பவும்... நன்றி...

  ReplyDelete
 2. செஞ்சரளி - இந்த பகிர்வு வரை தான் டாஷ்போர்ட்-இல் வந்துள்ளது... கவனிக்கவும்...

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன்சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. நல்ல கதை ஐயா.மிகவும் இரசித்தேன்.

  ReplyDelete
 5. அருமையான சுவையான பதிவு

  ReplyDelete
 6. வணக்கம் வேல்முருகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. வணக்கம் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete