11 May 2013

பிரியங்கள்,,,,,,


பிரியங்களுக்கு ஆட்பட்டுப் போவது மிகவும் கொடுமையாகவும், தர்மசங்கடம் ஏற்படுத்துவது மாயும்/

அவன் வந்து கொண்டிருந்த மாலை ஆறு மணிக்குஅப்படிஒருமாதிரி யாய் பசிக்கும் என நினைக்கவில்லை.இது நாள் வரை அப்படி ஏற்பட்டதில்லை. அல்சர் கொஞ்சம் கூடிப் போன திலிருந்து தினசரி மாலை 5அல்லதுஆறுமணிக்கெல்லாம்இப்படித்தான் வயிறு அரிக்க ஆரம்பித்து விடுகிறது.

அக்னி நட்சத்திரம், வெயில், அதிகரித்துப்போன அலுவலக வேலை, உடல்புழுக்கம், நமைச்சல், டென்சன்,,,,,, எல்லாம் ஒன்று சேரஉடல் சூடும் அதிகமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரக்க அல்சர் கூடிப் போகிறது தானாக/அதன் விளைவுவாய் இத்தனை நாள் இல்லாத தொந்தரவு இப்போது புதிதாய் தலையெடுத்து நிற்கிறதாய்/

கையிலிருந்த ரூபாயில் 100 ரூபாய்க்கு பெட்ரோல்போட்டு விட்டான் . மிச்சமாக சட்டைப் பையில் பத்து,பத்து ரூபாயாக கிடந்த மாதிரி இருந்தது. அவசரமாய் எட்டிப் பார்த்தபோது தெரிந்தது. எவ்வளவு இருக்கும் என எண்ணவில்லை. அதை நம்பி கடைக்கு போகவும் முடியாது சாப்பிடுவதற்கு என்கிற நினைப்புடன் வந்த போது தென் பட்ட கடை சக்தி கடையாய் இருக்கிறது.

காலை,மாலை இருவேளையிலுமாய் நாவின் சுவையறும்புகளுக்கு ரெகுலராக டீத் தருகிறவர். அவருக்கு ஒரு நன்றி.டீயும்,பேச்சுமாய் கரைகிறகணங்களில்அவர் தருகிற டீயும்,கூரை வேய்ந்த அவரது கடையும்அங்குவருகிறமனிதர்களும்,சுட்டுவைக்கப்பட்டிருக்கிற வடைகளும், பஜ்ஜியும் பார்க்கவும் சாப்பிடவும் கூடநன்றாக இருந்தி ருக்கிறது.

வயிற்றின் பசிக்கும்,பிராண்டலுக்கும் ஒருடீயும், கூடவே ஒரு பஜ்ஜி யுமாய் சாப்பிடலாம் என தலைதூக்கிய நினைப்புடன் டீக்கடையை நோக்கி வந்த சமயம் மனமும்,நாவும் களிகொள்ள வண்டியை ஓரம் கட்டிவிட்டுகடையைஏறிட்டபோதுவணக்கம் சொன்ன சங்கரநாதன் அண்ணாச்சி ”சார் வாங்க டீ சாப்பிடுங்க” என்கிறார், “சாப்புடுவம்” எனச்  சொன்ன அவன் பஜ்ஜியும் சேர்த்து சாப்பிடலாம் என்கிற எண்ணத்தை கைகழுவி விடுகிறான்.

சாப்பாடு,டீ,வடை,பஜ்ஜி,,,,,இதரஇதரஎன்கிறஐயிட்டங்களைமிகவும்நட்பும் தோழமை யும் பாராட்டுபவர்களிடம் தவிர்த்துவேறுயாரிடமும்  ஓசியாக பெறவோ அல்லது அவர்கள் வம்பாக வாங்கிக்கொடுக்கும் போதோமிகவும்தர்மசங்கடப்பட்டிருக்கிறான்.

வேண்டாம்எனபடக்கெனதட்டிவிடவும்முடியவில்லை.வேண்டும் 
எனநிலை கொண்டு நின்று விடவும் முடியவில்லை. ஆகவே வேண் டாம் எனவேபெரும்பாலுமாய் தவிர்த்திருக்கிறான். 
இதுபோன்றநிலைமைகளைதெரிந்தவர்தான்சங்கரநாதன் அண்ணா ச்சி.நல்ல பழகிய மனிதர்தான்,பழகுவதற்கு இனிமை யானவர்தான். இன்னும் சொல்லப்போனால் அவன் மீதும் அவனது நடப்பின் மீதும் பெரும் மரியாதை வைத்திருப்பவர். அன்பும் வாஞ்சையும்மிக்க மனிதர்.  எங்காவது பார்க்க நேர்கிற சமயங்களிலும்,நேரம் வாய்த்து பேச நேர்கிற சமயங்களிலுமாய் அவர் பார்க்கிற ஆட்டு வியாபாரம் பற்றியும் தன் வருமானம்அவர்ஆடு விற்கிற கறிக்கடைகள், அவர்க ளது குண நலன்கள், அவர்களின் பூர்வீகம் பற்றியெல்லாம்பேசுவார். அவரதுபேச்சில் தெரிகிறவெள்ளந்தித்தனம் அவரது நடப்பிலுமாய் வெளிப்படும்.

நல்ல மனிதர்தான்.மனம் பதிந்து போனவர்தான்.ஆனாலும் அவர் வாங்கித்தருகிற டீயை சாப்பிட மனம் கூசித்தான் போகிறாது ஏனோ/

ஆகவே இது போல விஷயங்களை பெரும்பாலுமாய் தவிர்த்திருக் கிறான்.இன்று அதையும் மீறிஎதிர்பாராதவிதமாய்சந்தித்துவி ட்டான் அவரை/


பிரியங்களுக்கு ஆட்பட்டுபோவது மிகவும் தர்ம சங்கடமாகவும், மிகவும் கொடுமையானதாகவுமே சமயா சமயங்களில்/

4 comments:

 1. சில நேரங்களில் சிரமங்கள் தான்...

  ReplyDelete
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. பிரியங்கள் அதிகரிக்கும் போது துன்பங்களும் அதிகரிக்கத்தான் செய்கின்றன

  ReplyDelete
 4. வணக்கம் டினேஷ் சார்.நன்றி தஙகளின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete