12 May 2013

ஸ்கீரீன் ஷேவர்,,,,,


                                


எனது பட்டியலில் இப்போது இன்னமும் ஒரு டீக்கடை புதிதாக எனச்சொல்லி விட முடியவில்லை.அதே நேரம் அது இல்லை எனவும் சொல்லிவிட முடிய வில்லை.
தவழ்ந்து நீண்டு இறங்குகிற கருஞ்சாலையின் மேனி மீது அன்றாடம் தன் பாதம் பதிக்கிறமனிதர்களும்வாகனங்களும்இருசக்கரங்களுமாய் அடையாள ப்படுகிறது.
மலர்கிற பூவின்மென்ஓசைமீதுபடிகிறநீர்த்துளிகளாய்வியர்வையின் கோடுக ளை தன்அடையாளங்களாயும் வியர்வைவாசத்தைநறுமணப் பொருட்களாய் பூசிக்கொண்டஉழைப்பின்மக்கள்குடிகொண்டிருந்த பகுதியது. கடை வீதி, காய்கறி மார்க்கெட்,கோயில்,டாஸ்மாக் கடை,கம்யூட்டர் சென்டர் ஜவுளிக் கடை அதி முக்கியமாய்  போலீஸ் ஸ்டேஷன் என வரிசைகட்டி நிறுத்தபட்டி ருந்த கடை தாண்டி அந்த ஏரியாப்பக்கம் போகையில் கண்டிப்பாக இரண்டு டீக்கடைகளில் டீசாப்பிடுகிறபழக்கம்உண்டுஎனக்கு.ஒன்றுநண்பர் கடை, இன்னொன்றும்  நண்பர் கடையே.
முதலாமவர் பொண்ணுப்பாண்டி,இரண்டாமவர் சார்சஸ் விக்டர்.சைக்கிளில் லைட் இல்லாமல் போன ஒரு நாள் இரவின் எட்டு மணிக்கு போலீஸ் பிடித்துக் கொண்டது அல்லம்பட்டி ரயில்வே கேட் அருகே/
அப்பொழுதெல்லாம் பாலம் கட்டியிருக்கவில்லை.பாலம் கட்டுவதற்கான திட்டமாவது இருந்ததா எனவும் தெரியவில்லை. மன்றம் போவதற்காக சைக்கிளில் விரைந்து கொண்டிருந்த பொழுதது.வழக்கமாக  முதல் அல்லது இரண்டாவது ரயில்வே கேட்டின் வழியாகபோய்விடுவேன்.ஆனால் அன்று அல்லம்பட்டி கேட் வழியாய் போகலாம் என நினைத்தது ஏன் என்பது இப்போது நினைவிலில்லை.தவிர மனம் முழுவதுமாக ஒத்திகைப்பார்க்கப் போகும்நாடகத்திற்கான  எண்ண ஓட்டம்தான்  உருவெடுத்து நின்றதே தவிர வேறுன்று மில்லை. இப்படியெல்லாம் நினைக்கவும் இல்லை.இப்பொழுதும் அப்படித்தான்.ஆகப்போகிற காரியம் நினைத்து அதற்கு முன்னேற்பாடாய் இருப்போம்  என்கிற நினைவெல்லாம் இல்லை.நடப்பதுதான் என விட்டு விடுகிறதனம் நிரம்பிப்போய்/
நாடகம்,அதன் பாத்திரங்கள் ,வசனம் அதை எங்கு நடத்துவது என்கிறது மாதிரியான எண்ணங்களை சுமந்துகொண்டு போனவன் இப்படியெல்லாம் போலீஸ் அங்கு லைட் இல்லாத சைக்கிளைப்பிடிப்பார்கள் என எதிர்பார்த் திருக்கவில்லை,கர்நாடகா போய் நாடகம் கற்றுக்கொண்டு வந்ததிலிருந்து இங்குள்ள தோழர்களுடன் சேர்ந்து ஏதாவது பண்ண வேண்டும் என மெலிதாய் முளைவிட்ட ஆசையை அமல்படுத்திக் கொண்டிருந்த நாட்கள் அவை.
இது மாதிரியான வெப்பமாதம் தான் அது.பள்ளிக்கல்லூரிகளுக்குவிடுமுறை  விடப்பட்டிருந்தவெறுமைநாட்கள்.கல்வியின்அவசியம்குறித்துவிழிப்புணர்வை உண்டாக்கக்கூடியநாடகங்களைநடத்த இங்கிருந்து நாங்கள் ஒரு ஐந்து பேர் அனுப்பிவைக்கப் பட்டோம். அந்த ஐந்தில் ஒருவனாய்ப் போனநான் அங்கு நாடகப் பயிற்சிபெற்று அந்த மாநிலத்தில் இருக்கிற கிராமங்களி லும்,நகரங்களிலுமாய் பதினைந்து நாட்கள் நாடகம் நடத்திவிட்டு இங்கு வந்து சேர்ந்த நாளன்றிலிருந்து தூக்கதை எட்டிஉதைத்தஎண்ணமாக இருந்த  அதை செயல் படுத்த பதினைந்து தோழர்களுடன் சேர்ந்து ஒரு நாடகக்குழு ஒன்றை உருவாகிவிட்டான்.
பதினைந்து பேரின் முப்பது கரங்களுக்குள்ளும்,எண்ணங்களுக்குள்ளும் இவனதுகரங்களும் எண்ணங்களும் இருந்ததா அல்லது இவனின் எண்ணமே அவர்களுக்கு முதல் வித்தானதா தெரியவில்லை/ போய் விட்டான் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது,நாடக ப்பயிற்சி.சில நாட்களில் ஒரு சிலர் வர மாட்டார்கள்.ஒரு சில நாட்களில் எல்லோருமாய் வந்து நிற்பார்கள்.இதில் ஆவல் காரணமாய் அந்தப் பகுதியில் குடியிருக்கிற பையன்கள் சில பேர் நானும் வருகிறேன்நடிப்பதற்கு என வருவார்கள்.மற்றஎல்லோரும்எதுவும் தெரியாதது மாதிரி என்னை கையைக்காட்டிவிட தர்மசங்டமாய்நெளிகிறநான் ஏதாவதுசொல்லி சமாளித் -ததாய்  ஞாபகம்/
பொய்தானே ,லேசாய் வருகிற விஷயம் சொல்லி சமாளித்து விடுவேன். அதை ஓரமாய் நின்றுகைகட்டிய வாறாய் கவனித்துக்கொண்டிருப்பார் பொண்ணுப் பாண்டி தோழர்.
தெருவின்முடிவில்இருந்தமன்றம்அன்றாடம்எங்களைத்தாங்கிவந்திருக்கிறது அந்த நாட்களில்  நாடகம் ஒத்திகைபார்க்கவும்,இன்னும் ஒரு சில விஷயங்கள்பேசி பகிர்ந்து கொள்ளவுமாய்/அப்படி இருந்தவர்களில் ஒருவரா ன பொண்ணுப்பாண்டி அந்தஇடத்தில்முக்கியமானவராய் அறியப்படுகிறார். அவர்தான் விஷயம் கேள்விப்பட்டதும் வருகிறார் என்னுடன்.வந்தால் போலீஸ்க்காரருடன் சரி மல்லுக்கு,எங்களது நண்பர் பொய் சொல்ல மாட்டார். அதுதான்  சைக்கிளில் லைட் உள்ளதே,அப்புறமாய் அவரைப் பிடிக்காவிட்டால் என்ன?என்பது அவர் வாதம், லைட் இருப்பது சரி ,அது எரிந்ததா என்பது சைக்கிளைப்பிடித்து கேஸ்புக் பண்ணிய போலீஸ்க் காரர்களின் வாதம். வாதம் விவாதமாகி கடைசியில் மறுநாள் கோர்ட்டில் பைன் கட்டிவிட்டுதான் சைக்கிளை எடுக்க வேண்டி வந்தது.
அப்படி எனக்காக சண்டைபோட்ட நண்பர்.இன்று வரை டீக் கடைக்கு டீகுடிக்க வருகிற ஒருவனாகமட்டும் என்னைப்பார்க்காமல்ஈரமும்,வாஞ்சையுமாய் அனுகுபவர்.
எத்தனை பேர் கடைக்கு டீக்குடிக்க வந்தபோதிலும் ஒவ்வொரு டீயாகஆற்றிக் கொடுப்பவர்.சார்லஸ்விக்டர் அவரது நிதானம் அவருக்கே இருக்கட்டும்,கூட்டம் வரும் போதாவது சற்று மொத்தமாக டீப்போட்டுக் கொடுக்கக் கூடாதா என்கிற வருத்தத்தை பகிர்ந்து கொள்கிற தருணங்களில் கடகடவெனசிரித்து வைப்பார். என்னவென  தனியாகக் கேட்டால் மொத்தமாக டீப்போட்டு இதுநாள்வரை எனக்கு பழக்கம் இல்லை.தவிர ஒவ்வொரு கிளாஸாக டீப்போட்டால்தான்  எனக்கும் திருப்தி.ருசியும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை என்பார்.சரிஅவரது இஷ்டத்திற்கே விட்டுவிடலாம்.அவரைசிரமப்படுத்துவது ,,,,,,,,,வின் படி தண்டைனைக் குரிய குற்றமாய் அறிவிக்கப்பட்டுவிட்டு விடலாம்,ஆகவே வேண்டாம் இந்த விபரீதம் என விட்டாகிவிட்டது.
அப்படியாய் வாய்க்கப்பெற்ற நண்பர்கள் இன்றுவரை நல்ல நண்பர்களாயும் நல்லடீக்கடைக்காரர்களாயும்/ 25 வருடங்களாய் தடம் மாறாத பழக்கம்.
கொடுமை டீக்கடையில்கூடவாஎனநீங்கள்சொல்வது புரிகிறது. வேறென்ன செய்யசொல்லுங்கள்என்கிறவிதமாகவெல்லாம்இல்லை,அன்பும்,  ப்ரியமும்,  மென்மையும், வாஞ்சையுமாய் பேசுகிற ஒரு மிகச்சிலரில் அவரும் ஒருவராகிப் போனபோது அவர்களுடன்தானே நட்பு பாராட்டவேண்டியிரு க்கிறது. தவிர மனம் பிடித்துப்போன,,,,,,,,
எந்த நேரம் எந்த இடம் என இல்லை.எப்போது பேசினாலும் எப்போது அழைத்தாலும் எப்போது போய் பார்த்தாலும் ஒட்டுதலுடன் பேசி அளாவளா வுகிறஅவர்கள்தவிர்த்துவேறுயாரிடம்உறவுவைத்துகொள்ளச்சொல்லுங்கள்.  முடிந்தால் நீங்களும் அப்படி ஒரு நட்பை பாராட்டித் தான்ப்பாருங்களேன் மனிதர்கள் நிறைந்து போன வெளிகளில்/
இந்த வெளிகளில் நீந்திச் செல்கிற சமயம் காட்சிப்படுகிற இரண்டு கடைகளில் இப்போது புதிதாய் ஒன்று முளைவிட்டுத் தெரிய சந்தோஷம் கொண்டு விடுகிறது மனது. நாவின் சுவையரும்புகளைப்பற்றிப் படர்ந்து நிரப்பி பயணபட்டு உணவுப்பாதையில் இறங்குகிறசமயத்தில் களிகொள்கிற மனதாய்ஆட்பட்டுப் போகிறது  மனது.நன்றாக இருக்கிறது டீ.கொடுக்கிற ஆறு ரூபாய்க்கு முக்கால் கிளாஸே நிரம்பித் தெரிகிற மென் திரவமாய் காட்சிப்படுகிற டீயை தந்தவர் பேசிகொண்டிருந்தார் டீயைத்தந்து விட்டு. எனது நண்பரும் நானுமாய் டீக்குடிக்கப் போன சமயத்தில்/
புதுக்கட்டிடம்,முனிசிபல்காம்ப்ளக்ஸ்கடை,சுவர்கள்ஆரஞ்சுவர்ணம்பூசியிருக்க,தரைடைல்ஸ்பதிக்கப்பட்டு/ தரையின் கலரும்,சுவரின் கலரும் கிட்டத் தட்ட ஒன்றாகவே.டீக்கடைக்காரர் அணிந்திருந்த உடைகள் மட்டுமே வேறு கலராக.
தம்பி காபி பார் என்றால் அந்தப்பகுதியில் இருக்கிற குழந்தைக்குக் கூடத்தெரியும். டேப்ரிக்கார்டர்கள் கோலாச்சிக்கொண்டிருந்த காலத்தில் அவரது கடையில் பாட்டுக்குத் தருந்தாற்ப்போல லைட் அமர்ந்து, அமர்ந்து  எரிகிற டேப்ரிக்கார்டரை அவரது கடையில் காணலாம்.தவிர அவர் தீவிர இளையராஜா ரசிகர் வேறு, கடையில் இளையராஜாவின் அருகில் அவர் நின்றவாறு இருக்கிற போட்டோபிரேம் பண்ணப்பட்டு  தொங்கியது.
போட்டோ பிரேமுக்குள் அப்போது   சிரித்த அவர் இப்போது தனியாய் இந்தக்கடையில் நின்று கொண்டு சிரிக்கிறார் எங்களுக்கு டீக்கொடுக்கும் போது/
நாங்கள் டீக்குடிக்கச்செல்லும் போதுகடையின் உரிமையாளர்  கடையில் இருந்த டீ,வி யில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். பழையபடம் ஓடிக் கொண்டிருந்தது. “இப்பொதெல்லாம் எங்க சார்.படம்பார்க்க முடிகிறதா,  பழைய படங்கள்,பழைய படங்களே என்கிறார்.பையங்களும் இதப்பாத்துக் கெட்டுப்போறாங்க சார்,ஒரு பொது ஒழுக்கம் இல்ல,நல்ல பழக்கம் இல்ல, நாலு பேர மதிக்கத்தெரியல.காலேஜ் படிக்கிற என்னோட பையன் காலையில் எந்திரிச்சிசரியாபல்லுகூடவெளக்குறதில்லதலையில எண்ணெய்  கூடதேச்சுக்கிற தில்ல.  கேட்டா ஸ்டைல்ங்குறான்.இப்பியான பழக்கத்தான் இதுக கத்துக்குடுக்குது” என்றவர் அடிக்கடி வாங்க சார் கடைக்குஎன்கிறார்.
“கண்டிப்பா வர்ரண்னேன்” எனச்சொல்லிவிட்டு காசுகொடுத்து விட்டு கிளம்பும் போது பார்க்கிறேன் அவரது வலது கால் வளைந்திருந்தது.இடது காலை விட வளைந்திருந்த வலது கால் உயரம் குறைவாய் இருந்தது.அதை  ஈடு செய்ய வலது காலில்  ஸ்டூல் போல உயரமாக செருப்பு அணிந்திருந்தார். என்ன எனகேட்டபோது ஐந்து வருடங்களுக்கு முன்நடந்தஆக்ஸிடெண்டில் கால்நிலைகுழைந்துபோனதாகசொன்னார்.அப்பொழுதிலிருந்துஇப்படித்தான் என்கிறார்.
அவரிடம்சொல்லிவிட்டுகடையைவிட்டுஇறங்கிவருகையில்தான்கவனிக்கி -றேன்கடையுனுள்ளிருந்தபிரிட்ஜிக்குபக்கத்திலிருந்தவடைச்சட்டிக்கு அடியிலாக கேஸ்அடுப்பில்  நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

No comments: