19 May 2013

மெழுகுத்துண்டு,,,,


 அந்தவேனைபின்னோக்கிஇழுத்தவனுக்குஎன்னவயதுஇருக்கும்எனநினைக்கிறீர்கள்ஆறுஅல்லதுஎழாம் வகுப்புப்படிக்கிறவயது இருக்கலாம்.மாநிறமேனியில்கொஞ்சம் பூசினார்ப் போலத் தெரிந்தான்.

கைலியைமடித்துக்கட்டியிருந்தான்.அவனதுபெயர்கண்ணன்.என்னதம்பிஇதெல்லாம் உன்வயதுபையன்களெல்லாம்பெரிமுடாஸீம்டீஸர்ட்டுமாய்அலைகிறபோது நீ மட்டும் இப்பிடி கைலியைடப்பாக்கட்டுக்கட்டிக்கொண்டும்,முண்டாபனியன்போட்டுக் கொண்டும் தலையை படிய வாரிக்கொண்டுதிரிந்தாயானால்,,,,,,,உடை நாகரீகம் பற்றிய உன்வயதொத்தவர் களின் பார்வைஎன்னாவது?எனநினைத்ததைஅவனிடம்கேட்க முடியவில்லை.

காய்கறிக்கடைக்காரர் கருப்பசாமியண்ணனின் வேன் அது.கருப்பாசாமி பாறையில் முளைத்த செடியாய் வேர் விட்டவர்.அவருக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்துசைக்கிளில் புளி வியாபாரம் செய்கிறவர்.சுத்துப்பட்டியில் அவர் கால் படாத ஊர் இல்லை.கும்பலாக நாலு தலை தெரிந்தால் போதும். ”புளிவாங்களையோ,புளி”என்கிற ரிதம் மாறாத குரல் அவரிடமிருந்து ஓங்கி ஒலிக்கும்.

புளிவியாபாரம்பார்த்தமூளைமெல்ல,மெல்லகடைபோட்டுசொந்தஊரில்உட்கார்ந்தால் என்ன,,,?எனயோசித்தபோது வேறு எந்தக்கட்ஃபைக்காரரும் செய்யாத வேலையை செய்தார்.

ஒரு ரூபாய்க்கு புளி,இரண்டு ரூபாய்க்கு எண்ணெய்,ஐம்பது பைசாவிற்கு பொரி கடலை, ஐம்பது பைசாவிற்கு தேங்காய்ச்சில்,,,,எனஇன்னும்பிறவுமாய்சேர்த்து எளியவ ர்களுக்கான இடமாய் தன் கடையை மாற்றிக்கொண்டார்.கேட்டால் சிரிப்பார். கேட்பவர் தோளில் கைவைத் -தோ  அல்லது ஆழமாக பார்த்தவாறோ/
நெருங்கிப்போய்கேட்டால்”அப்படிகைக்கும்,வாய்க்கும்பத்தாமலேயேவளந்துட்டேன்”.ஏங்வயசுல நல்ல சாப்பாட கண்ணுல பாக்க நாலு நாளாவது ஆகும்.வாரத்துல ஒருநாஅப்பிடிசாப்புட்டா அதிசியம்.அதஇப்பநெனைச்சிப் பாக்குறேன்.இப்பிடி யேவாரம் பண்றதால எனக்கு ஒண்ணும் நட்டமில்ல,லாபத்துலகொஞ்சம்கொறையும்இல்லைன்னாரொம்பகூடுதலாலாபம்கெடைக்காது.  அவ்வளவுதான். அதுனால இந்த மாதிரி ஜனங்களுக்கு யேவாரம் செய்யாம இருக்க முடியாது. நான் செய்யலைன்னா இவுங்க ளுக்கு வேற யாரு செய்வா?எல்லாம் ஐஞ்சுக்கும்,பத்துக்குமா காடு கரைன்னும், கொத்த வேலைன்னும் பாக்குற ஜனங்க/என சொன்ன கருப்பசாமி இப்போது புதிதாய் காய்கறிக்கடை போட்டிருக்கிறார்.கோட்டூர் போகிற வழியில்/ அதன் பேரே ரெண்டு ரூபாய்க்கடை.ரெண்டு ரூபாய்க்கு ஒரு கை காய்.நாம் கொடுகிற ஒவ்வொரு இரண்டு ரூபாய்க்கும் ஒரு கைகாய் அதுதான் கணக்கு/அப்படி அவர் கடை ஆரம்பித்த புதிதில் இரண்டு ரூபாய்க்கு போட்ட காய்கறி இப்போது ஆறு ரூபாய்.சுற்றியுள்ள ஊர்களில் இருக்கிற கடைகளுக்கு எல்லாம் இவர் சரக்கு தான். காலை ஆறு மணிக்கு சூடுகட்ட ஆரம்பிக்கிற அவரது வியாபாரம் சுற்றுப்பட்டி  கடைகளுக்கு காய்கறி சப்ளை செய்வதிலிருந்து உள்ளூர்க்கார்களுக்கும்,தன்கடைதேடிவந்துவியாபாரம்வாங்குகிறவர்வரைக்கும்நீண்டபட்டிய லாய் உருவெடுத்துநிற்கும். அது தவிர இப்படி சடுதிகொள்கிற வியாபாரத்தை பத்து மணிக்கு முடித்துக் கொண்டு சுற்றி இருக்கிற ஊர்களுக்கு காய்கறி வியாபரத்திற்கு போய் விடுவார். அதுமட்டுமில்லை சாத்தூரிலிருக்கிற ஒரு அரசுப்பள்ளியின் ஹாஸ்டலுக்கு காய்கறி சப்ளை இவர்தான்.

இவர்கொடுக்கிற காய்கறிக்குஉடனேபணம்கிடைக்காதுமாதம்ஒருமுறைசெக்காகக் கொடுத்து விடுவார்கள்.கண்ணனின்அப்பாமருதண்ணனும்,கருப்பசாமியண்ணனும்ஒன்றாகப்படித்தவர் கள்.ஒன்றாம்வகுப்பிலிருந்துஆறாம்வகுப்புவரை.அதற்கப்புறமாய்  வசதிகாணாமல்மருதண்ண னின்படிப்பைஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டார்கள்.வசதிஎன்பது ஒருபுறம்இருக்கதங்களது தொழிலைத்தொடரஆள் ஒருவர் வேண்டும் என மருதண்ணனின் கையில் ரம்பத்தையும், இழைப்புளியையும் கொடுத்துவிட்டார் அவரது அப்பா/

மருதண்ணன் படிப்பை நிறுத்திய மறுவருடம் கருப்பசாமியண்ணனும் ஏழாம் வகுப்புடன் வியாபாரத்திற்கு தாவிவிட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை உழைப்பின் நுனி பிடித்து, கை ஊன்றி எழுந்து,சுவர் பிடித்து நடந்து,தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து நடந்து தவழ்ந்தேறி வந்தவர்கள்.இன்று அந்த ஊரின் பேசப்படுகிற அடையாள மனிதர்களில் ஒருவர்களாய் ஆகிப்போனார்கள்.

சாரதாக்காவின்கல்யாணவீடுஅது.ஒருவாரமாய்புதுக்களைபூண்டிருக்கிறவீட்டின்முன்தான் கருப்பசாமியண்ணனின்காய்கறிலோட்வேன்நின்றிருந்தது.கருப்பசாமியண்ணனுக்குசாரதாக் கா கழுத்தை நீட்டியிருந்தால் கருப்பசாமியண்ணன்இப்போது சாரதக்கா வீட்டின் முன் போய் நின்றிருக்க மாட்டார்.

ஊதாப்பெயிண்ட்அடித்தவீடு.நாடாக்கமார் தெருதாண்டி,ரெட்டியார் தெரு நுழையும் முன்பாக இடையிலாக இருந்த ஆசாரிமார்தெருவைஒட்டியிருந்த வீடு. ஊதாக்கலர்வண்ணம் மின்னிய வீட்டின் மாடியிலிருந்துமுல்லைபூக்கொடிகாய்த்துத் தொங்கும் சரம் சரமாய்/

வரிசையாக வைக்கப்பட்டிருந்ததொட்டிகளில் ரகத்திற்கு ஒரு செடியாகவும், கன்றுகளாகவும்/ பார்க்கநன்றாகஇருக்கும்,அது போல வீடும் பளிச்சென சுத்தப்பட்டு துடைத்து வைக்கப் பட்டதுபோலவேஎந்நேரமும்.
சாரதாக்காவுக்கும்கருப்பசாமியண்ணனுக்குவாக்கப்படவேண்டும்என்கிறஎண்ணம்மனம் முழுக்கமத்தாப்பூவாய்மலர்ந்திருத்திருந்தது.கருப்பசாமியண்னனுக்கும்அப்படியேஆகியிருந் தது.
ஒல்லியாய்,மாநிறத்தில் நடுவாந்திர உயரத்தில் பளிச்சென துடைத்து வைத்தது போலிருக்கிற சாரதாக்கவைபார்க்கிறபொழுதெல்லாம்மனம்களிகொள்ளாமல் இருந்த தில்லை.

சாரதாக்கவைப்பார்க்கவென்றே கருப்பசாமியண்ணன் வம்பாக ஏதாவது ஒரு வேலை வைத்துக் கொண்டு போவார். கல்யாணம் முடித்து,குடும்பம் நடத்தி பிள்ளை குட்டிகளுடன் நடமாடித் திரிவார் மனதிற்குள்ளாக/

அவர் மனம் முழுக்க இப்பிடி என்றால் சாரதாக்காவின் மனது லேசாய் இல்லை. கருப்பாசாமி ---யண்ணன் அந்ததெருப்பக்கம்வருகிறமாதிரிதெரிகிற நாட்களில்  வீட்டு முன் கலர் கோலம் மின்னும்.ஜடை ஒற்றையிலிருந்து ரெட்டையாய் மாறும். எதற்கெனத் தெரியாமலேயே அந்தத் தெருவில் நாலைந்து முறைகுறுக்குநெடுக்காக  நடப்பாள். கடைக்குப்போக வந்து விட்டு கடைக்குப்போகாமலேயேயார்வீட்டின் முன்பாகவாவது நின்று பேசிக்கொண்டிருப்பாள்.வீட்டு வாசலில் நின்று கொண்டு நன்றாக இருக்கிற தலையை உளைத்துவிட்டுவிட்டு ஜடை பின்னிக்கொள்வாள்டீ.வியில்சப்தமாகபாடல்வைத்துக்கேட்பாள்.கருப்பசாமியண்ணனின் கடைக்குப் போய் அவர் கையால் ஏதாவது ஒரு சாமான் வாங்கி வருவாள். பெரும்பாலுமாய் அப்படி அவள் வாங்குகிற சரக்கு,,(?/)தேன் மிட்டாயாகவே இருக்கும்.

சாரதாக்காவின் அப்பாவிற்கு இது ஜாடை,மாடையாகக்கூடஅல்லாமல்நேரடியாகவே தெரிய அவர்கருப்பசாமியண்ணனிடம்போய்பேசிவிட்டுவந்துவிட்டார்.

“வேணாம்மாப்ளஇது வீண் ஆச,விட்டுருங்க,ஒங்க குடும்பம் ஒரு மொன,எங்க குடும்பம் ஒருமொன,, எப்பிடி ஒட்ட வச்சாலும் ஒட்டாது.,,,,,,,,,,,,,,,என நீளமாக பேசிவிட்டு வந்து விட்டார். அன்று அந்த நினைப்பை கைவிட்டவர்தான். 

மஞ்சள்,பச்சை,பிங்க் என பலவர்ணங்களில் காணப்பட்டவீடுகளின் முன் காட்சிப் பட்ட கோலங்கள்அழிந்தும்,அழியாமலும்/வெள்ளைமாவும்,கலர்மாவுமாய்காட்சிப்பட்ட  கோலங்கள் காட்சிப்பட்ட வீதி சிமிண்ட் பூசப்பட்டிருந்த தரையாய் இருந்ததாக/

மெயின் ரோட்டின் இடது புறம் வாசல் வைத்தது போல் இருக்கிற தெருவில் நுழைந்து நூல் ப் பிடித்துச்சென்றால் அப்படியே கடந்து,நடந்து வந்து இந்தப்பக்கமாய் இருக்கிற மெயின் ரோட்டில் ஏறிக்கொள்ளலாம்.ஊரின்ஆரம்பத்தில்நுழைந்துகடைசியில் வெளி யேறுவது போல/
சைக்கிள்கள்,மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மட்டுமே நுழைந்து வெளி யேறுவதற்கு வசதியுள்ள வீதி அது.அதில் போய் எப்பிடி இந்த வேனை நுழைத்தார்கள் எனத்தெரியவில்லை.  

தெருவின் முனையிலிருந்து பின்னோக்கி முழு உந்து விசையுடன் ஏறிய வண்டியை பின்னோக்கி தொட்டு இழுத்த சிறுவனைப்பார்த்து ஊதாக்கலர் பூசிய வீட்டிலிருந்து வெளியே வந்த  சாரதாக்கா சைகையில் சொல்கிறாள் கவனம் என/

வேனில் முன்னால் அமர்ந்து ஸ்டியரிங்பிடித்துக்கொண்டிருந்தகருப்பசாமியண்ணன் வேனை பின்னோக்கி நகர்த்திக்கொண்டிருந்தவராய்/

8 comments:

 1. சாரதாக்கா சொன்னதை கேட்கணுமில்லே...!

  ReplyDelete
 2. ஆம் கேட்க வேண்டும்தான்.

  ReplyDelete
 3. ஆரம்பித்த இடத்தில் நிறுத்தி முடித்து இடையில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டீர்கள்

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.சாரதாக்காக்கள் சொல்வதைக் கேட்பது ஒருபுறமிருக்க சாரதாக்காக்களின் வடு மிகுந்த நாட்கள் நம் கண்முன் விரிபைவையாக/நன்றி சார்.தங்கள் கருத்துரைக்கு/

  ReplyDelete
 5. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் ம தி சுதா அவர்களே ஆரம்பமும்,முடிவுமாய் உள்ள ஒன்றாக இருக்கிற பிரச்சனை இன்னும் எத்தனையோவாக இருக்கிறது சார். நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. வணக்கம் வேல் முருகன் சார் .
  நன்றி தஙகளின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete