21 May 2013

சுழற்சி,,,,,,



சுழன்ற சக்கரங்கள் கடந்த தூரம் எவ்வளவு எனத்தெரியவில்லை.அவர் சொல் கிறார், “சார் காலையில நாலு மணிக்கு எந்திரிச்சிருவேன் சார். அப்பிடியே குளிச்சி முடிச்சி சாமிய கும்புட்டுட்டு நடந்து கெளம்பீருவேன் பஸ்டாண்டுக்கு/அங்க போக அஞ்சு மணி ஆயிரும் சார்.அப்பிடியே ஒரு டீயக்குடிச்சிட்டு உக்கா ந்தா மொத பஸ்ஸுஅஞ்சர அஞ்சே முக்காலுக்கு வரும்,ஏறிப்போனம்ன்னா ஆறு மணிக்கல்லாம் ஊருக்கு போயிருவேன் சார். அப்பிடிப் போனாத் தான் ஏதாவது ரெண்டு துணி மணி வரும்.நூறு நாவேலைக்கு போறாவுங்க எல்லா ரும். அதக் கணக்குப் பண்ணி அந்நேரம் போனாத் தான்  ஏதாவது  ரெண்டு தொ ழில்  ஓடும்” என்கிறார்.
சனிக்கிழமை அன்று வழக்கம் போல அரை நாள் அலுவலகம் முடிந்து கிளம் புகிறேன்.பழனிச்சாமிஅண்ணாச்சிகடை.சிகரெட்,பீடி,மிட்டாய்,,மற்றும் ஒரு பக்கம் ஜெராக்ஸ்மிஷினு1மாய்  இருக்கக்கூடிய கடையில் வாங்கிய இரண்டு மேங்கோ சாக்லெட்களில் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு எனதுஇரு சக்கர வாகனத்தைகிளப்புகிறேன்.வண்டியை ஸ்டார்ட்ப் பண்ணி  சில தப்படி தூரமேசென்றநேரம்என்முன்னால்நீண்டகரத்திற்குசொந்தக்காரர்என்னிடம் லிப்ட்   கேட்கிறார்,”சார் போற வழியில் பக்கத்து ஊர்லஎறக்கிஉட்டுருங்க” என/

அவர் ஏறியதுமாய்  கிளம்பிய வண்டி முப்பது அல்லது நாற்பது கிலோமீட்டர் வேகம் காட்டியது. பேச வேண்டுமே அவரிடம் ஏதாவது/ பேசினேன், எந்த ஊர்,என்ன,எங்கு போக வேண்டும் எனக்கேட்ட போது நான் பயணப்படுகிற ஊரே அவரது ஊராயும்  இருக்கிறது.

”நான் டெய்லர் சார்.தள்ளு வண்டியில மிஷின வச்சிக்கிட்டு கெளம்பிருவேன் ஊருஊராஇப்பதைக்குபக்கத்துஊர்லவண்டிநிக்குது சார்.முந்தாநாளு வந்தேன். போற ஊர்கள்ல ஏதாவது நல்ல யெடமாப்பாத்து வண்டிய நிப்பாட்டிட்டு வந்துருவேன்சார்,சமயத்துலயார்வீட்டு வராண்டாவாவது கெடைக்கும், சமய த்துல அனாதைய ஏதாவது ஒரு யெடத்துல சொல்லி நிப்பாட்டிட்டு வர வேண்டியிருக்கும். அப்பிடி யான நேரங்கள்ல ரொம்பவும்தான் சங்கடமாப் போயிரும் சார். ஏன்னா எங்களுக்கு அதுதானசார்சோறுபோடுது” என்றவர் தையல் மிஷினோட அடியில அப்பிடியே நாலு சக்கரத்த வச்சி பிட் பண்ணிருவோம் சார்.அது பாக்க தையல் மிஷின் உக்காந்துருக்குற வண்டி மாதிரிஇருக்கும்சார்.அதஅப்பிடியேதள்ளிக்கிட்டேபோவம் சார்.எந்த திசையில  வண்டி அன்னைக்கிநகர்தோஅங்கதான்  சார் எங்க பொழப்பு.சில நேரம் போறா ஊர்கள்ல சாப்பாடு கெடைக்கும், சில நேரம் அதும் இல்லை.காலையில வெள்ளன வீட்ட விட்டு கெளம்புறதால அப்பிடித்தான் ஆகிப்போகுது  சார்,அந்நேரம் சாப்பாடுன்னு ஒண்ணும்ரெடிபண்ணமுடியாதுசார். அப்பிடியே வந்துர்றதுதான்.சமயத்துலகாலையில்சாப்புடுறஇட்லியையேமத்தியானத்துக்கும்வாங்கிக்ருவேன்.நாலுவயசுலஒருபையன்இருக்கான்சார்.அடுத்து ஒரு பொண்ணு பெத்துக்கலாம்ன்னு ஆசை. எங்க இந்த வருமானத்தநம்பி அப்பிடி யெல்லாம்ஆசைப்படலாமா?அதுநியாயமான்னு  கூட தெரியல சார், அன்றா டம்  எங்க வண்டி கடக்குறதூரம் மாதிரிதான் சார் எங்க பொழப்பும் ஓடிக்கிடே இருக்கு என்கிறார்.

சுழன்ற சக்கரங்கள் கடந்த தூரம் எவ்வளவு எனத்தெரியவில்லை.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலரின் நிலையும் இப்படித்தான் உள்ளது... ஆனால் சந்தோசமாய்...

குட்டன்ஜி said...

பெரும்பான்மையான சக்கரங்கள் இப்படித்தான்!

Yaathoramani.blogspot.com said...

இப்போது எல்லாம் நாகரீகமும்
யூஸ் அண்ட் துரோ கலாச்சாரமும்
வளர்ந்திருக்கிற வேலையில்
இதுபோன்ற டெயிலர்களை
பார்ப்பது கூட அபூர்வமாகத்தான் இருக்கிறது
சொக்கவைக்கும் சொற்சித்திரம்
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வ்ணக்கம் குட்டன் சார்.பெரும்பான்மைகள் கொண்டிருக்கிற கருத்துக்களாயும்,நிஜமாயுமிதுவே/நன்றி .

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/