5 May 2013

நட்பூ,,,,,,


      
இயல்பிலேயே மிகவும் நல்லவன் அவன்.
அதிகமான ஆள் பழக்கம் இல்லை.
தீயபழக்கம்,கூடாத சகவாசம்
என்கிற அனாவசியம் கிடையாது.
என்னுடன் எட்டாம் வகுப்புவரை
ஒன்றாகப்படித்தவன்.
நல்ல வகுப்பு த்தோழன் மட்டுமல்ல.
நல்ல நண்பனும் கூட/
நானும்,அவனும் திருமணம் ஆகிற நாள் வரை
ஒருவருக்குள் ஒருவர் குடிகொண்டிருந்தோம்.
அதிர்ந்து கூட பேசாத அவன் இப்போது
எங்கிருக்கிறான்,எப்படியிருக்கிறான்
எனத்தெரியவில்லை.
அவனைப்பார்த்தால் சொல்லுங்கள்
நான் ஒருவன் அவனை விசாரித்தபடியும்,
நினைத்தபடியும் இருக்கிறேன் என.
எனறு அவனது நண்பனைப்பற்றி
சொன்ன டீக்கடைக்காரர்
அன்றிலிருந்து எனக்கும் நண்பராகிப்போகிறார்.

6 comments:

ராமலக்ஷ்மி said...

சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படியே என்னையும் சேர்த்துக்குங்க...

vimalanperali said...

வணக்கம் ராமலக்‌ஷ்மி மேடம்.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

கவிதை வானம் said...

வித்தியாசமான நடையில் அழகான பதிவு

vimalanperali said...

வணக்கம் பரிதிமுத்தரசன் சார்.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/