8 May 2013

குச்சிவீடு,,,,,,

                      
கண்ணா டீபோட்டாச்சா எனக்கேட்டவர் பால்க்காரர் என அறியப்படுகிறார்.மெலிந்த தேகம். சிவந்த மேனி.வளர்ந்துதெரிந்தார்.ஒட்டவெட்டியமுடியைஇழுத்துபடியவாரி இருந்தார். அதுவும்  பார்க்க ஒரு புது விதமான ஹேர் ஸ்டைலாக அல்லாமல் நன்றாகவே இருந்தது.சற்றே லூசாக காணப்பட்ட முழுக்கைசட்டையும்,கட்டம் போட்ட கைலியிலும் நன்றாகவே சிரித்துதெரிந்தார்.

டீக்கடைக்கு பக்கத்தில் வலது புறமாய் இருக்கிற லாரி ஆபீஸ்,அங்கு எந்நேரமும் குழுமி இருக்கிறவெளியூர்டிரைவர்கள்கிளீனர்களைக்காணலாம்.அவர்களின்பேச்சும்,மொழியும், நடப்பும்ஆளுக்கு ஆள் சற்றே கூட அல்லாமல்நன்றாகவேவித்தியாசப்பட்டுத்தெரியும். ஓருவர் கேரளா என்றால்,மற்றொருவர் ஆந்திரா.இன்னமும் ஒருவர்ஹிந்திபேசுவார்.இன்னமும்  ஒருவர் வேறொரு பாஷையில் மூழ்கிஇருப்பார்.எட்டுக்குஎட்டேஅளவுகொண்டஅந்த சின்னோ ண்டான லாரி ஆபீஸில் அனைத்து மாநில மொழி பேசுகிற டிரைவர்களையும் எளிதாகக் காணலாம்.அவர்களின் பழக்க வழக்கமும் அங்கே சிதறிக்கிடப்பது கண்கூடு.வெற்றிலை,  பாக்குகளிலிருந்து,பீடி சிகரெட் வரை  எல்லாவற்றிலுமாய் அவர்களின் தனிப்பட்ட டேஸ்ட் களைபார்க்கக் கிடைக்கும்.அள்ளி சிதறிய ரங்கோலியாய் ஏ பலே, பலே,பலே,,,,,,,,,,,,என பஞ்சாபி சிந்து பாடிச்சிரிக்கும்.

கடையின்வலப்புறம்இப்படிஎன்றால் இடதுபக்கமாய் அமைந்துள்ள பார்சல் சர்வீஸ்அலுவலகத் திலிருந்து வரும் உழைப்பின் மக்கள் அப்பொழுதான் வந்திறங்கிய பார்சல் லோடை இறக்கி வைத்து விட்டு உழைப்பின் வேகம் ஆறுவதற்கு முன்பாய் சூடாய் ஒரு டீ சாப்பிட வருவார்கள்.
சட்டையில்லாதவெற்றுமேனியில்தொங்கவிடப்பட்டதுண்டின்முனைஉடலின்வேர்வையில் பட்டு நனைந்திருக்க அதை அள்ளி எடுத்துவேர்வைதுடைத்துக் கொண்டு  வருவார்கள் உடல் மிகுந்த வியர்வை வாசத்துடன்.

துண்டால் துடைத்தால் வியர்வை போய் விடுகிறது.ஆனால் அவர்கள் உடல் அப்பிய அலுப்பை போக்க எதைக்கொண்டு துடைப்பார்கள்.இப்படித்தான் டீக்கடையில் தஞ்சம் அடைகிறார்கள்.
டீக்கடையில் போடப்பட்டிருக்கிற பெஞ்சும் ,அங்கு  அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற வடையும், பாட்டில்களில்  அடைபட்டுகிடக்கிறமுறுக்கு,கடலைமிட்டாய்ரகங்களும்அவர்கள் கைகளிலும்  அவர்களது வாயிலுமாக/

ரை படுகிற நேரங்கள் தவிர்த்து தன்னை யாரும் கைக்கொள்ளாமல்,அல்லது கைப்பற்றாமல் பார்த்துக் கொள்கிற கடைக்காரர்களுக்கு அதுகள் சொல்லும் நன்றி தனியாமே,அப்படியா? எனக்கேட்கிற பால்க்காரர் இவர்கள் அனைவருடனுமாய் பேசுகிறார், சிரிக்கிறார். வாக்குவாதம் செய்கிறார்.அனைவருடனும் அனைவராய் ஒரு சூடான டீயை நாவின் சுவையறும்புகளுக்கு அறிமுகமும் செய்விக்கிறார்.அப்படியேயான இரு இனிய அறிமுகத்துடன் பேசி முடித்து கிளம்பியும் போய் விடுகிறார். அவர் அந்த டீக்கடைக்கும்,இன்னும் இதைப்போல சில கடைகளுக்கும் பால் ஊற்றுகிறார் என்பது மட்டும் தெரியும் எனக்கு. மற்ற்படி அவர் யார் என்ன,அவருடைய பழக்க வழக்கம் என்ன என்பது போன்ற ஆராய்ச்சி இருந்த தில்லை என்னிடம்/

நான் அந்த டீக்கடைக்கு போக நேர்கிற அனோக நாட்களில் அவரை  அங்கு பார்த்து விடுவதுண்டு,இப்படித்தான், தொள,தொளப்பானஉடையுடனும்,ஒட்டவெட்டிய முடியை  படிய சீவிவாறுமாய் காணப்படுகிறார். அங்குஇருப்பவர்களுடன்பேசிகொண்டும் வாதிட்டுக் கொண்டும் சிரித்துக்கொண்டுமாய்/

ஒருநாள்அவர்அங்குகாணக்கிடைக்காவிட்டால் பலமாநிலமொழிபேசக்கூடிய டிரைவர் களும், பார்சல் சர்வீஸில் வேலை பார்க்கிற லோடுமேன்களும்அவரைப்பார்க்கா விட்டால்  அவர்களின் பொழுதுவீண்பொழுதாகித்தான்போகும்என்பதுபோலல்லவாஇருக்கிறது.என்கிறநினைப்புடன்  குடித்த டீக்கு காசு கொடுத்துவிட்டு கிளம்புகையில்எதிர்ப்பட்டதோழர்களும்,நண்பர்களுமாய்  நிறைந்து நின்ற மனதில்அவரும்குடி கொண்டிருக்கிறார்,

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதுகள் சொல்லும் நன்றியையும் ரசித்தேன்...

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

சில மனிதர்களால் மட்டுமே இது முடிகிறது, அவரைப் போல..!
வாழ்த்துக்கள்...!
நேரம் கிடைத்தால் எனது வலைப்பூவின் பக்கம் வாருங்கள்!
www.moongilvanam.blogspot.com

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் சுரேந்திரக்குமார் கனகலிங்கம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சுரேந்திரக்குமார் கனகலிங்கம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

இராஜராஜேஸ்வரி said...

தோழர்களும்,நண்பர்களுமாய் நிறைந்து நின்ற மனதில்அவரும்குடி கொண்டிருக்கிறார்...

அருமை...பாராட்டுக்கள்..

vimalanperali said...

வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/