5 May 2013

டீக்கடைமுக்கு,,,,,


முதலாமவர்  தங்கத்துரை, இரண்டாமவர் சார்லஸ்,
இரண்டு பேருமே டீக்கடை வைத்திருக்கிறார்கள்.
முதலாமவர் நண்பர்,இரண்டாமவர் தோழர்.
எத்தனை பேர் கூட்டமாக வந்து நின்ற போதும்
இரண்டாமவர் டீ ஆற்றுகிற நிதானத்தில்
அவரது தொழில் அழகு தெரியும்.
பேச்சும்,சிரிப்பும் கலகலப்புமாய்
டீ ஆற்றுகிற முதலாவது நண்பரைப்போலவே
அவர் தருகிற டீயும் சுவை மிகுந்தே/
முதலாமவர் கட்டம் போட்ட கைலியும்,
பூப்போட்ட சட்டையுமாய்/
இரண்டாமவர் பேண்டும்,டீசர்ட்டுமாய்/
முதலாமவர் மாநிறம்,
இரண்டாமவர் சற்றே கருப்பாய்/
முதலாமவர்  சினிமா பார்ப்பதில்
நிறைய விருப்பம் கொண்டவராய்.
இரண்டாமவர் அப்படியில்லை.
இரண்டு பேரில்
இரண்டாமவருக்கு திருமணம் முடிந்து விட்டது.
மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை.
முதலாமவருக்கு இப்பொழுதுதான்
பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு பேரில் முதலாமவர் வாடகை வீட்டில்/
இரண்டாமவர் ஒத்திக்கு வீடு பார்த்து இருக்கிறார்.
உழைப்பின் மக்கள் குடிகொண்டுள்ள பகுதியில்
 இருக்கிற அவர்களின் அன்பின் மனிதர்களாய்/
வெப்பத்தை உள்வைத்து தகிப்பை வெளிப்படுத்துகிறதாய்
அவர்கள் குடியிருப்புப்பகுதியின்  அன்றாடங்கள்.
அவர்களை பார்க்கிற கணங்களிலெல்லாம்
நண்பரும் ,தோழருமாய்நிறைந்திருக்கிற
புடை சூழ் உலகில் வலம் வருகிறதாய் உணர்கிறேன்.
அந்தப்பக்கமாய் செல்கையிலும்,
அவர்களது கடையில் டீ சாப்பிடுகிற தருணங்களிலுமாய்/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பருக்கும் தோழருக்கும் வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்ரி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/