2 Jun 2013

வல்லினம்,மெல்லினம்,,,,
வணக்கம் பரமு.நீங்கள் இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்,எப்படி இருக் கிறீர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?எதுவும் அறியவில்லை நான் .ஏன்அப்படி இருந்தேன் என்பதற்குஎந்த விளக்கமும் இல்லைஎன்னிடம். ஆனால் நீங்கள் சொன்ன சொல் இன்னும் பசு மரத்தானி போல என்னுள்/

புதுநிறமாக கசலையாய் இருந்த நீங்கள் வேப்பங்குச்சிக்கு கையும் காலும் முளைத்தது போல ஒல்லியாகவும்என்மனம்கவர்ந்தவராயும் அப்படிஇருந்த நீங்கள்சொன்னசொல்இன்னும்பசுமரத்தானிபோல.

இனிஎன்னைபரமுஎனக்கூப்பிடாதீர்கள்,அதுபெண்ணின்பெயரைபோலஅர்த்தம் தருகிறது தவிர நீங்கள் என்னைக் கூப்பிடுகிற தருணங் களில் அதைக் கேட்பவர்கள்பிரியமானவர்களின்பெயர்களை மனம் முழுக்க நிரப்பி சந்தோஷ ப்படக் கூடும்.அந்தசந்தோசத்துடன்அவர்கள் என்னை பார்க்கும் தருணங்களில் நான் ஆண் எனத் தெரிந்த தும் ஏமாந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே,,,,,,,

பரமசிவம்,நல்ல பெயர் அது.உலகைக்காக்கும்பரம்பொருளின் பெயர் என ஆன்மீகவாதிகளாலும்,அழைக்கவும், உச்சரிக்கவும் இலகுவாக, வருகிறது எனஅதுஅற்றவர்களாலும்பேசப்படுகிறபெயர்அது.ஆதலால் மனம் பிடித்து ப் போகிறது.

எனது ஊரிலிருந்துஇரண்டாவது கிலோமீட்டரில் இருந்த ஊரில் தான் குடியிருந்தீர்கள் நீங்கள் கிட்டத்தட்ட கீழூர், மேலூர் போலான ஒருதோற்றம் தருகிற ஊர் அது.நான்வசிக்கிறஊரின்திசையிலிருந்து வந்தால் இரண்டாவது ஊராகவும்,நீங்கள்வசிக்கிறஊரின்திசையிலிருந்துகடந்துவந்தால்முதலாவதாகவும் தென் படுகிற தங்களது ஊரின் மணம்மிக்கமண்ணிலிருந்து நீங்களும், எனது ஊரிலிருந்து நானுமாய் வந்து கைகோர்க்கும் இடம்முக்கிய இடமாய் இருந்திருக்கிறது, ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

என்னஇப்பொழுதுஅதனால்.சொல்லிவிட்டுத்தான்போவோமே.

பெரியாட்கள் சந்திக்கிற இடம் மட்டுமே பேசப்படுகிற இடமாய் சரித்திரப்பதிவு ஆகுமா  என்ன,,,,?

சம்பங்கிவாத்தியார்தோட்டத்தின்அருகாமைப்பகுதிஅதுரோட்டின்மீதான
வளைவிலும்திருப்பத்திலுமாய்இடதுபக்கமாய்அமைந்துமாய் வரைந்து குடி கொண்டுமாய்/

போட்டதெல்லாம் விளைந்தது எனச் சொன்னார்கள்,தப்பித் தவறி யாராவது சேர்ந்தாற்ப்போல ஒருமணிநேரத்திற்கும் மேலாய் நின்று விட்டால் வேர் விட்டு விடும் அப்படி விளைச்சல்காட்டி செழித்துச் சிரித்தமண்ணாய்.

தோட்டத்துக்காரர்களையும்சும்மாசொல்லிவிடமுடியாதுஅவர்களும்உடம்பின் ரத்ததைவேர்வையாய்ஊற்றிமண்ணுக்குஉரமிட்டார்கள், பதிலுக்கான கை மாறாய்மண்பொண்ணாய்மாறிபயிர்களைத்தந்தது.ஆச்சரிமாய் 

அந்தப்பகுதியில் வெங்காயம் எங்குமே விளையாதநேரம்அது, அவர்களது தோட்டத்தில் மட்டும் விளைந்தது.தண்ணீர்வாகும்அதற்கு ஒருகாரணம் என்றார்கள்.அப்படித்தான் இருந்தது.அவர்களது தோட்டத்தின் கிணற்றுத் தண்ணீரும்/வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்தஅந்த தண்ணீரைதனது இரு கைகளாலும் அள்ளிக் குடித்துக்கொண்டிருக்கும் போதுதான்அவருக்காக சாப்பாடு கொண்டுவந்த மகனை மம்பட்டியால் அடித்துக் கொன்றுவிட்டார் தோட்டத்து க்காரர்எனசொல்வார்கள்.

அவரது பேச்சு வீட்டில் எடுபடாத பொழுதாய் இருந்த சமயம்.அவரு டைய தங்கச்சிமகள் வயதுக்கு வந்து நிற்கிறாள் அதை விடுத்து இவன் ஊரில் குடியாவன் பெண்டாட்டியிடம் சல்லாபித்துத் திரிந்திரு -க்கிறான் என்பது தோட்டக்காரரின் கோப மாயும் ஞாயமாயுமாக வே இருந்திருக்கிறது. அந்த ஞாயத்தின் அடியில் வைக்கப்பட்டதடை கல்லாக ஒட்டு மொத்த வீடும் அவருக்கு எதிராய்/

”பொம்பளபல்லஇளிச்சிக்கிட்டுவந்தாஎன்னபண்ணுவான்ஆம்பள. அவனுக்கு தகிரியம் இருக்கு.பாஞ்சிட்டான்,இப்ப என்ன ஒங்க தங்கச்சி பொண்ண கட்டமாட்டேன்னா சொல்றான். அவ பழக்கத்த விட முடியாதுன்னுதான சொல்றான்,கழுதஅது வாட்டுக்கும் இருந்துட்டுப்போகுது ஒருபக்கம், கல்யாணத்தகட்டி வைங்கசரியாப் போகும் எல்லாம்” என்கிற வீட்டாரின் பேச்சு அவரது கோபத்தை மேலும், மேலுமாய் தூபமிட்டு வளர்த்துக் கொண்டி ருந்த நாட்களில் மகன் கொல்லப் படுகிறான் அப்பாவின் கையாலேயே.

அவரைப்பொறுத்தவரைஅவரதுசெய்கைஅவருக்கு ஞாயமாகவே படுகிறது இன்னும்.போலீஸ்,கோர்ட்,வாய்தா, என்றான பின்னும் கூட அவரது மனம் அவரதுசெய்கைக்கு பச்சை கொடி காட்டிக் கொண்டிருந்ததாகவே/

“என்ன இருந்தாலும் போனபுள்ளபோயிட்டான்,இருக்குறவர காப்பாத் தனுமில்ல. அவருதான் குடும்பத்துக்கு ஆதாரம், இருக்குறதக் காப்பா த்த ஆளு வேணுமில்ல.தோட்டம், தொரவு, வீடுன்னு கெடக்கு அனாமத்தா ,,,,,,, பொழப்பு கெடக்கு நடுவீதியில,இவரு தண்டனை ஆயிப்போயிட்டாருன்னா, எப்பிடி,,,,,,?என்கிற கேள்வியான சொல் அவரை காப்பாற்றிக்கொண்டு வந்த பொழுதன்றிலிருந்து இன்றுவரை தரிசாய்க் கிடந்த மண்ணை பொன் விளைகிற பூமியாய் ஆக்கினார். அப்படியான மண்ணின் வாசத்தை முகர்ந்தபடிதான்நமதுசந்திப்பு நடந்திருக்கிறது பெரும்பாலான தினங்களில்/

சார்லஸ் ஆயில் மில் அது.நம்மூர் ரோடு டவுனை அண்மிக்கிற இடத்தில் இருந்தமில். பருத்திவிதையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் என்பதை நான் அங்கு வேலைக்குச்சேர்ந்தபின்தான் கண்ணாரக் கண்டேன். நீங்கள்தான் சொன்னீர்கள்,இப்படிஎண்ணெய்எடுக்கிறவேலைகிட்டதட்ட வருடக்கணக்கில் நடக்கிறது என/இந்த மில் திறந்ததே அதற்காகத்தான், இங்கு அது  மட்டு மே பிரதான வேலை. என எனக்கு முன்பாய் அந்தமில்லில் வருடக்கணக்கில் பணியாற்றி அனுபவப்பட்டதாங்கள் சொன்னீர்கள். கைபிடித்து நடை பழகித் தருகிற பாங்குடன் அந்த மில்லில் வேலைக்குச்சேர்ந்த நாளன்றி லிருந்து நீங்கள்தான் எனக்கு அந்த மில்லைப் பற்றி எல்லாம் சொல்லி த் தருகிறீர்கள்/எது,எது எங்கெங் கு, எவைஎவற்றில் என்னென்ன வேலை செய்ய வேண்டும்?யார்முதலாளி,யார் எந்திரக்காரர் எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள், பகலுக்கு எத்தனை பேர், இரவுக்குஎத்தனை பேர் எனவும் எனது வேலை என்ன இங்கு என்ன எனத் தெளிவுசெய்துஎன்னைமில் முதலாளியிடம்அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். ஒருவெயில்நாள் இரவன்று சாப்பாட்டிற்காய் விடப் படுகிற ஒருமணி நேர இடைவேளையின் போது/

மெலிதானபூமலர்வுபோலானஅறிமுகம்அது.கருப்புநிறகடப்பக்கல்பதிக்க ப்பட்டிருந்தமில்லின்இடதுபுறம்சின்னதாய்ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் இருந்த முதலாளி முதலாளி தோற்றம் தருவதை விடுத்துசாதாரணமாய் தோற்றம்தந்ததே மிகப்பெரியஆறுதலாய்/ முதலாளி,முதலாளி,,,,,,,எனச்சுற்றி வருகிறவர்களை அவர் எப்பொழுதும் பக்கத்தில் அண்டவிடுவதில்லை எனசொன்னீர்கள் நீங்கள்,அவரைப்பாத்துவிட்டுவந்த பிற்பாடானஒருநாளில் நம்மூரு பையன்தான்,விவசாயம் போச்சு ,மழையில்ல,தண்ணியில்ல, அனல டிச்சிப்போயி நின்னான், நாந்தான்இங்ககூட்டீட்டுவந்தேன். எனச் சொன்ன நீங்கள் மில்லுவேல,புதுப்பழக்கம்,வேலையில ஏதாவது சின்ன தப்புத்தண்டா நடந்தாக்கூட பெரிய மனசு பண்ணி நீங்கதான் பொருத்துக்க ணும்.”என்பதில் ஆரம்பித்து என்னுடன் வேலைவந்த சோமுஅண்ணன், கருப்பாயம்மாள், நாகண்ணன்,,,,,,எல்லோரை யும் பற்றி சொன்னீர்கள்.

இதில் சோமு அண்ணனுக்கு கருப்பாயம்மாளை மேய்க்கவே நேரம் சரியாக இருந்ததை ஒருநாளின் இரவு ஷிப்ட்டில் பார்த்துவிட்ட முதலாளி இரண்டு பேரையும் அப்படியே அனுப்பி விட்டார். நடு இரவு அது எனவும் பார்க்காமல்/
அதுபோலவேநாகண்ணனுக்கும்வேலைஒத்துக்கொள்ளவில்லை.

எண்ணெய்க்கக்கல் வாடைக்கு சாப்பிடக்கூட பிடிக்கவில்லை.மீறிச் சாப்பிட் டால் வாந்திதான் வருகிறது எனபோய் விட்டார் வேலையை விட்டும், மில் லை விட்டுமாய்/

உண்மைதான்அவர்சொன்னது.பிழைப்பிற்காகஏதோஒன்றுதின்றகதைதான்.
இரவு ஷிப்ட்டின் போது சாப்பிடுவதற்காக விடப்படுகிற இடை வேளையில் சாப்பிடமுடிவதில்லைவயிறுதீயாய்பசித்தபோதும்கூட/வாயைத்திறந்து வம்பாக வயிற்றுக்குள்தள்ள வேண்டிய கட்டாயத்தில்சாப்பிடமறுக்கிறகோழி யின் வாயைப் பிளந்து வம்பாக தவிட்டைத் திணிக்கிற மாதிரி வம்படியாக தொண்டைக்குழி சங்கடப் படசாப்பிடவேண்டியிருக்கும் கையெல்லாம் அப்பியிருக்கிற எண்ணெய் ,உடலெல்லாம் அப்பியிருக்கிறவியர்வை எல்லாம் கலந்த எண்ணையும்அழுக்குமாய் இதில்எங்கிட்டுச்சாப்பிட?வம்படியாய் சாப்பிட்டுவிட்டுதிரும்பவுமாய்வேலையைஆரம்பிக்கத் துவங்குகிற நேரத்தில்  சாப்பிட்ட உணவு குடலுக்கும்,வாய்க்குமாய்பயணிக்கும் பயணம் இருக்கிறதே, அது ஒரு தனிக்கதை.

அப்படிப்பயணித்த ஒரு நாளன்றின் இரவு ஷிப்ட்டின் போது மாட்டிக் கொண்டிருந்த மிஷின் இருத்தி வைக்கப்பட்ட இடத்தில் சரியாக அமராமல் தன் நிலை விலகி அப்படியே விழுந்து விட எவ்வளவு வேகமாக கையை உருவியும் கூட இடது கையின் ஆள்க்காட்டி விரலின் நுனி அடிபட்டு விடுகிறது. நுனி என்றால் சின்ன நுனியே? நகத்தின் அருகே வலதுபக்கமாய்/ மிஷின் விழுந்த வேகத்தில் அந்த இடம் அப்படியே சப்பளிந்து அதிலி ருந்து தெரித்து தரையில் விழுந்த சதைத்துண்டு தரையில் விழுந்து துடிக்கிறது. மிஷின் விழுந்த வேகம், கையிலிருந்தசதைத் துண்டு.கைதெறித்தவலி எல்லாம்அனுபவித்தவனாயும்பார்த்தவனாயும்அடிபட்டஇடத்தில்எண்ணெயில் நனைத்த துணியை சுற்றிக்கொண்டுதரையில்விழுந்து துடித்தசதைத் துண்டை அதே கையால் எடுத்து வெளியே எறியப் போகையில் எதிரில் வந்த நீங்கள் விஷயம்கேள்விப்பட்டு வா முதலாளியிடம் சொல்வோம். சொல்லி விட்டு ஓய்வெடு ஷிபட் முடிகிறவரை என்கிறீர்கள்/சிறிது நேரம்செட்டில் போய்அமர்ந்திருந்துவிட்டுவேலையைத்தொடர்கிறேன் 

அதுவரைநீங்கள்தான்எனது மிஷினையும் கவனித்துக் கொள்கிறீர்கள்.ஆளுக் கொரு தனிமிஷின்.எனக்கு,உனக்குபொன்னம்மாக்காவுக்கு, சந்திரக்காவுக்கு, மாரியண்ணனுக்குஎனஐந்துமிஷின். பெரிதாய் வாய் பிளந்து நிற்கிற ஐந்திலு மாய் கொட்டப்படுகிற பருத்தி விதைகள் அரைபட்டு ஒருபக்கம் புண்ணாக்கா கவும் , மறுபக்கம் எண்ணெய் யாகவும் வெளியேறுகிற காட்சியைக் காண்பிக் கிற மிஷின்களாயும்/

காலையில்8மணிக்கு வந்தால் இரவு8 மணிக்கு பணி முடிகிற12மணி நேர வேலை  நம்மளது,உடம்பின் முழு இயக்கமும் இயங்கியே ஆக வேண்டும் 12மணிநேரமும்.

அப்படியாய் ரத்ததை வியர்வையாய் சிந்தி உழைப்பாய்க் கொடுத்த நம் இருவருக்குமாய் இரவு ஷிபட் வேலையாய் அமைந்து போனது தற்செயல் ஒற்றுமையே/

இரவுஷிப்ட்டில்ஒருசௌகரியம்.இரவு7.00அல்லது7.15ற்கு சாப்பி ட்டு விட்டு வீட்டை விட்டுக்கிளம்பினால் மில்லுக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு கொண்டு போனால் போதுமானது.

இப்போது போல டிபன் பாக்செல்லாம் அப்போது இருந்ததா, இல்லையா என சரியாகத்தெரிந்திருக்கவில்லைஎனக்கு.பெரியதாக இருக்கிற சில்வர் தூக்கு வாளியே எனது அப்போதைய டிபன் பாக்ஸ்/ஆனால் பகல் சிப்ட் என்றால் அப்படி இல்லை. மதியம் 12 மணிக்கு சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து அல்லது ஆறு மணி வாக்கில் ஒருதரம் சாப்பிட வேண்டியிருக்கும். அதனாலேயே மதியம் சாப்பிடுகையில் மாலை சாப்பிட வேண்டு மே என கூசிக்கூசி சாப்பிட வேண்டியிருக்கும்.

மில்லே உலகமான பொழுதது.அப்படியான நாளன்றின் இரவு சிப்ட் முடிந்து வீட்டிற்குகிளம்பப்போகிறநேரம்.நன்றாகயிருந்தால் இன்னும் அரை மணி நேரமே இருக்கலாம். எரிந்து கொண்டிருக்கிற பாய்லரின் உள் அழகு காட்டிக்கொண்டிருந்த தீ சொல் பேச்சுக்கேளா மல் சட்டென பாய்லரை விட்டு வெளிதாவி வந்து என்னை போர்த்தி எடுத்துவிட்டுச்சென்றுவிடுகிறது.
பாய்லர் ஒட்டு மொத்த மில்லின் இயக்கத்திற்காய் எரி சக்தி தருகிற கொதி கலன்.அதைதொடர்ந்து குறையவிடாமல் செய்ய கடலைப் பொட்டு,விறகு ஏதாவது போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பாய்லர் தொடர்ந்து எரிவதற்கும் அதுதன்கொதிநிலையை குறிப்பிட்ட சூட்டிலிருந்து கீழிறங்காமல் வைத்துக்கொள்ளவுமாய்/

பாய்லர்எரியஎரிய,கொதிநிலைக்கூடக்கூடகடலைபொட்டும், விறகுகளும் காலியாகிக்கொண்டிருக்க,பாய்லரின்முன்நின்றநான் இயந்திர மாய்வேலை செய்துகொண்டிருக்கிறேன்.

வெயிலின்கிரகணங்கள்நான்நின்றஆஸ்பெஸ்டாஸ்கூரைதாண்டிஉள் எட்டிப் பார்க்கிறநேரம்.வீடுகிளம்ப இன்னும் அரை மணியே உள்ளது, சீக்கிரம் போய் கைகால் கழுவிவிட்டு வந்து விட்டால் வேலை முடிந்ததும் சட்டென கிளம்பி ரயில்வேகேட்அருகேஇருக்கிற டீக்கடையில் டீசாப்பிட்டு விட்டுகிளம்பி விடலாம்அப்படியே, என்பது நாம் இருவருமாய் வரைந்து பேசி வைத்திருந்த திட்டம்/

அதை அமுலாக்க சீக்கிரம் கிளம்புவது ஒன்றே இப்போதிருக்கிற தலையாய கடமை என்கிற அவசரத்தில் வேகவேகமாய் கடலைப் பொட்டைபாய்லர் நிரம்பஅள்ளிநிரப்பிவிட்டுபாய்லரின்கதவை மூடப் போகிற நேரம்/

உள்ளிருந்து பறந்து வந்ததீஎன்னைத்தாக்கி விட்டு மறுபடியும் வேக வேகமாய் உள்ளே சென்று விடுகிறது.

அப்படியே உறைந்துபோயும்,கைகால்களில் இருக்கிற முடிகள் கருகிப் போயு மாய் அதிர்ச்சியுற்றுநின்றநேரத்தில்விஷயம்கேள்வி பட்டு ஓடிவந்து அள்ளிக் கொள்கிறீர்கள் நீங்கள். தாய்க் கோழிதன் குஞ்சைஅரவணைத்துக் கொள்கிற வாஞ்சை அந்த அரவணைப்பில் அந்தஅரவனைப்புடன் முதலாளியிடம் என்னைக்கூட்டிச்சென்ற நீங்கள் எனக்காக ஆஸ்பத்திரி செலவு கொடுக்க வேண்டும் என முதலாளியிடம் பேசுகிறீர்கள், அவர்அது எனதுதப்புத்தான் என்றும், இதற்கெல்லாம்மில்பணம் கொடுத்தோ, ஆஸ்பத்திரிக்கு செலவு செய்தோஉதவாதுஎனச்சொன்னதைஎதிர்த்து5வருடங்களாய்வேலை செய்த மில்லிலிருந்து வெளியேறி விடுகிறீர்கள்/

அப்பொழுதிலிருந்துஅடுத்தடுத்தசில தினங்களில் நம் நட்பு வேறு மில்லில் வேலைசெய்வதில்தொடர்ந்ததுஅப்புறமாய் வேலை நிமித்த மாய் நான் ஒருபக்கமும்,நீங்கள் அதே மில்லிலுமாயும் அவரவர் களதுஇருப்பை பதிவு செய்துகொண்டகாலகட்டத்தில்உங்களது அருகாமையிலிருந்து கழண்டு வந்த நான் இன்று தேடுகிறேன் நீங்கள்எங்குஇருக்கிறீர்கள்,எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்,மில்லில்நம்முடன் வேலைசெய்த விதவைப் பெண் கங்காவை திருமணம் செய்து கொண்டீர்களா எனத் தெரிய வில்லை.

அறிகிற அக்கறையுடன் நான்/

6 comments:

 1. அருமையான கடிதம்
  எனக்கும் இப்படி காற்று வெளியில்
  சந்தனமணமாய் கரைத்துவிடக் கூடிய
  பல கேள்விகள் உண்டு
  கண்ணில் தட்டுப்படா நண்பர்களும் உண்டு
  இடங்கள் தங்கள் வர்ணனைகளில் காட்சியாய்
  விரியச் செய்தது தங்கள் எழுத்து
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பெரியாட்கள் சந்திக்கிற இடம் மட்டுமே பேசப்படுகிற இடமாய் சரித்திரப்பதிவு ஆகுமா என்ன...?

  வர்ணனையுடன் கடிதம் அருமை...

  ReplyDelete
 3. படிக்கப் படிக்க எழுத்துக்கள் மறைந்து காட்சிகள் தோன்றும் வண்ணம் அருமையான கடிதம்.

  ReplyDelete
 4. வணக்கம் ரமணிசார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete