4 Jun 2013

பாத இடைவெளி,,,,,,,,,


 பையில் விழப்போன நுங்குகளில் சில கீழே தவறி விழுந்ததும் பதைத்துப்போகிறது மனம். ஒன்றல்ல,இரண்டல்ல,நான்கைந்து நுங்குகளாவது இருக்கலாம் என்பது என் எளிய கணக்கு.


எல்லாமே எளிதாகிப்போனால் அப்புறம் எதற்கு,பெரிய,படோடோபமான,ஆடம்பரமான மற்றும், மற்றுமான  என்கிற எண்ணத்துடன் நுங்கு விழுந்த எண்ணத்தை அண்மித்தும், அண் மித் தும் தாண்டியும் போய்க்கொண்டிருக்கிறேன்.

விரைவுச்சாலை அது.சாலைகள் எல்லாமே இப்பொழுது விரைவாகத்தானே இருக்கின்றன.  அது கருஞ்சட்டை அணிந்து கொண்டு நீளமாய் தன் மேனி காட்டுகிற கிராமத்துச் சாலையிலி ருந்துநால்வழிச்சாலைவரைஅப்படித்தானேஇருக்கிறதுஇதில்நகரங்களில் தன் மேனி முழுவது மாய்ளில் தன்  மேனி முழுவதுமாய்  சிமிண்ட் பூசிக் கொண்டிருக்கிற சாலைகளும், டிசைன் கற்கள் பதித்த சாலைகளும் அடக்கம்.சிறிய சாலையிலிருந்து,பெரிய சாலைவரை அப்படி விரைவாய் இருக்கையில் நான் சென்ற சாலை மட்டும் விதிவிலக்கா என்ன?

நிச்சயம் கணவன்,மனைவியாகத்தான் இருக்கவேண்டும்அவர்கள்.மிகப்பெரிய இழைத லுடனும்,புன்முறுவலுடனும்,ஒட்டுதல்காட்டியுமாய்/புதுமணத்தம்பதிகளாய் இருக்கலாம் .
அலுவலகம் செலவதற்காய் அவசரம் காட்டி விரைந்து கொண்டிருக்கிறேன்.கல்லூரி தாண்டி ஒருகிலோ மீட்டரில் வருகிறது அந்த கிராமம் அது.ரோட்டின் இருபுறமும் ஆலமரம், வேப்ப மரம்,புளியமரம் என பச்சை அடர்வுக்கு மத்தியிலாய் காட்சிப்பட்டு தெரிந்த டீக்கடை களையும்,அது சுமந்திருந்த மனிதர்களையும் ரோட்டில் என் எதிரே, பின்னே என விரைந்தும்,மெதுவாயுமாய் வருகிற கனரக,இலகுரக வாகனங்களை, கண்ணுற்றவனாயும், அதன் ஒலி எழுப்பானை கேட்டவனாயும் ஊரை அண்மித்து ரோட்டின்  குறுக்கே கட்டப்பட்டிருந்த வேகத் தடையில் ஏறி இறங்குகையில் விழிவழி புலனாகிறவையாய் அந்த நுங்கு வண்டியும் அதன் முன் நின்ற தம்பதியினருமாய்/

ரோட்டின் ஓரமாய் கூரைகட்டி நின்ற சற்றே பெரியதான டீக்கடைக்கு அருகே தன் ஆகுருதி  காட்டி நின்ற ஆலமரத்தின் கீழ்தான் நின்று வியாபாரம் செய்து கொண்டிருந் தார் வியாபாரி.தள்ளு வண்டி நிறைத்து நிரப்பி காணப்பட்ட இளநீர்க்காய் களும், பனங்காய்களுமாவே/வண்டியைத்தாண்டி கீழேயும்சிறிது உருண்டு கிடக்கிறது வண்டி யின் அருகாமையாக/
பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.கைவிரித்து நின்ற மரத்தின் இலைகளும், கிளைக ளும் அதன் மீதாகவும், ஊடாகவுமாய் பறந்து திரிந்து களிநடம் புரிந்த சின்னஞ்சிறு பறவகளும் அழகு காட்டி சிரித்தபூக்களுமாய்/

சாலையோரம் மரம் மட்டுமாஎன்ன?மரத்தை ஒட்டி நீளமாய் சென்ற  வெளியில் பச்சை காட்டி நின்ற செடிகளும்,புற்களும் குளுமையும்/ காலையின் 9 மணிக்கே சுட்டெரிக்கிற வெயிலுக்கு இது குளுமையாகவே.

காய்ந்த கண்களின் விழிபடர்ந்தபார்வைசற்றேகுலுமைபாய்ச்சியும்,இதம் காட்டியுமாய்/ இரு சக்கரவாகனம்,அதை ஒட்டிக்கொண்டிருந்த நான்,நான் இருசக்கர வாகனம்,,,,,,,, என ரோட்டில் தடம் பதித்து சென்று கொண்டிருக்கையில் கண்ணில் பட்ட காட்சி இதுவாய் இருக்கிறது.

இருக்கட்டுமே,இருந்து விட்டுதான் போகட்டுமே என்ன குறைந்து போனது இப்போது என புறம் தள்ளிவிட்டுப்போக முடியாத காட்சியாய் அது.

அவை வெட்டி வைக்கப்பட்டிருந்த நுங்குகளா,அல்லது அப்பொழுதான் காய்களைச் சீவித் தந்தாரா  என்பதுதெரியவில்லை.ஆனால் நடந்த நிகழ்வு அப்போதுதான்.

வெட்டியநுங்குகளைஎடுத்துபையில்போட்டுக்கொண்டிருக்கையில்சாலையில்சென்ற பேருந்தும், அதன்பின்னால் சென்று கொண்டிருந்த லாரியும் ஒன்றை ஒன்று முந்த முயன்று விடாமல்அடித்த முரட்டு ஹாரன் சப்தம் கணவன்,மனைவி இருவரின் காதைக் குத்த கவனம் சிதறிய கணவனும்,மனைவியும்,ஆளுக்கொருபக்கமாய் பிடித்திருந்த பை தனது அகலத்திறந்த வாயை இறுக மூடிக்கொள்வதாக/

ஆளுக்கொருபக்கமாய்பிடித்திருந்தபையின் கைபிடி நழுவுகிறது.கணவன் முழுதாகவும், மனைவி இன்னமும் லேசாகவும் பிடித்திருந்த பையினுள் அப்போதுதான் போடப்பட்டி -ருந்த ,போடப்பட்டுக்கொண்டிருந்த நுங்குகளில் சில நழுவி மண் தொட்டு விடுகிறது நாணாமல் கோணாமல்/நாணம் கருதவும்கோணல் செய்யவுமாய் இருந்த நுங்குகளில் சில பைக்குள்ளும் பைக்கு வெளியேயும்/கீழே கிடந்த நுங்குகளைகுனிந்து எடுக்கப் போன வியாபாரியை கைகாட்டி வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர் அவர்களிருவரும் இருசக்கர வாகனத்தில்,கவனம் கலைத்த பேருந்து மற்றும் லாரியின் ஹாரன் சப்ததை சபித்தபடி./
கலைந்தகவனத்தை மனமேந்திச்சென்ற அவர்களில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்துசென்றவள்பையைமெதுவாய்திறந்துபைக்குள்மெல்லஎட்டிப்பார்க்கிறாள்.
கண்டிப்பாக அவளது கவலை நுங்குகள் இன்னும் மிச்சம் எத்தனை இருக்கும் என்பதைத்தவிர வேறெதுவாக இருக்க முடியும் ?பையில் போடப்ப்போன நுங்குகளில் சில கீழே தவறி விழுந்ததும் பதறிப்போகிறதுதான் மனம்/

10 comments:

 1. மிகவே அநாயாசமாக உட்கார்ந்து நல்ல ஒரு குறும்படம் பார்த்த உணர்வு உங்களின் எழுத்துகளில் மிளிர்ந்தது சகோதரரே!..

  அற்புதமான காட்சிவிரிப்பு கண்ணில் தோன்றியது அப்படியே...
  அழகாக சொல்லவந்ததை சொன்னவிதம் அருமை.
  நன்கு ரசித்தேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. காட்சி விவரிப்பு வழக்கப்போல் அருமை
  நுங்கை நுங்காக மட்டுமே எடுத்துக் கொள்ளாமல்
  ஒரு படிமமாக யோசிக்கத் தெரிந்தவர்களுக்கு தரும்
  இறுதி வரிகள் கூடுதல் பொருள்
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமை நண்பரே, ஓர் குறும் படத்தினை பார்த்த உணர்வு.

  ReplyDelete
 4. பார்க்கும் காட்சி எல்லாம் அருமையாக பகிர்ந்து கொள்ள உங்களால் தான் முடியும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வணக்கம் இளமதி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் ரம்ணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. வண்க்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 8. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சாஎ.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்திரைக்குமாக/

  ReplyDelete
 9. சகோதரரே...
  // வணக்கம் இளமதி சார்.//
  இப்படிக்கூறியுள்ளீர்கள்... கோபமெதுவுமில்லை.

  ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ளட்டுமே என்பதற்காக கூறுகின்றேன்...
  நான் சகோதரி... :).

  ReplyDelete
 10. வணக்கம் இளமதி அவர்களே.மிக,மிக வருந்துகிறேன்,இனிமேல் சகோதரி எனவே அழைக்கிறேன்,தவறுக்கு மன்னிக்கவும்/

  ReplyDelete