18 Jun 2013

தண்ணீர் வளவு,,,,


                              
குளித்த நீர் தோட்டத்தில் கோடு கிழித்தது போல் நீண்ட வாய்க்காலில் நூல்ப்பிடித்து வருகி றதாய்/

வருகிறதண்ணீர் நல்ல தண்ணீரா அல்லது உப்புத்தண்ணீரா என்கிற கணக்கெல்லாம்இல்லை இப்போதைக்கு நல்ல தண்ணீர் என்றே வைத்துகொள்வோம்.ஆனால் அது சோப்பு நீராக/

மென்மையாய் உருண்டு வந்த தண்ணீரில் கொஞ்சம் அங்கு நின்ற வேப்பமரத்திற்கும்,சிறிது வெற்று வெளியிலுமாக/மரம் நோக்கிசென்ற தண்ணீர் மரம் வளர்க்க போவதாயும்,வெற்று வெளியில்பரவியநீர்அங்கிருக்கிறதாவரங்களுக்குஉதவச்செல்வதாய்ச்சொல்லிச்செல்கிறது.

 சென்றநீரின் அருகில்அமர்ந்துதண்ணீர்ப்பருகிக்கொண்டிருந்தமைனாக்கள்இரண்டுதங்களின் நெருக்கம் காட்டி அருகருகாமையாய்  அமர்ந்திருந்த சமயம் ஈரத்துண்டு காயப்போடப்போன என்னைப் பார்த்ததும் பறந்தோடி மறைந்து விடுகிறது.

பாவம் அவைகள்.எடுத்த தாகத்திற்கு தண்ணீர் பருகியதா,இல்லை நான் சென்று கெடுத்து விட்டேனா? அதன் தாகம் எடுத்த வாய்க்கு தண்ணீர் கிடைக்க விடாமல்/என்கிற கேள்விக் குறியுடன் வீட்டினுள் வந்த போது எதிர்ப்பட்ட கண்ணாடி டம்ளரை  எடுத்து தண்ணீர் குடிக்க குடம் திறக்கையில் அங்கு தண்ணீர் இல்லை.இனிமேல்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். சற்றே தள்ளிப் போடுங்கள் உங்களது தாகத்தை என்கிறாள் மனைவி/

13 comments:

reverienreality said...

ஐந்து நிமிடங்கள் முன்பு தான் வாசித்து சென்றேன்...

நீங்கள் அங்கே வந்துள்ளீர்கள்...
பல காரணங்களால் எடுத்து விட்டேன்..சிரமத்துக்கு மன்னிக்கவும்...

உங்கள் படைப்புகளை தவறாமல் வாசிக்கிறேன்...விரைவில் விமர்சனம் எழுத உள்ளேன்...

மறுபடி சந்திக்கலாம் விமலன்ஜி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படைப்பு அருமை. பாராட்டுக்கள்.

Tamizhmuhil Prakasam said...

தண்ணீருக்கான தவிப்பு குறித்த தங்களது சொல் சித்திரம் மிகவும் அருமை ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அய்யா

Yaathoramani.blogspot.com said...

அருமையான சொற்சித்திரம்
ஆயினும் சட்டென முடிந்ததைப்
போல இருந்தது
கவித்துவமான இறுதி வரிகள்
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரெவரி சார்.நன்றி தங்களின் வ
ருகைக்கும்,கருத்துரைக்குமாக/சந்திப்புகள் கருத்துச்சொல்லலும் தொடரட்டும்/

vimalanperali said...

வணக்கம் வை கோபலகிருஷ்ணன் சார்.நன்ரி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்.நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களின் மேலான வரு
கைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருதுரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Anonymous said...

தண்ணீர் பற்றிய அண்ணம் (மேல்வாய்)காயும் கரிகள் மிகச் சிறப்பு.
ரசித்தேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.