எழுதிக்கொண்டிருந்தபேனாவில்தீர்ந்துபோகிறதுமை.இனிஎன்னசெய்ய,எப்படி
எழுத? விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தால்தான்எழுத்திற்கும், எழுதிச் செல்லும் சொல்லிற்கு
மாய் ஒரு இணைப்பும்,தொடர்பும் கிடைக்கும்.
மரக்கலர் மைக்கா ஒட்டிய பரிட்சை அட்டையில் பையனின் தேவையற்ற
கட்டுரை நோட்டை வைத்து எழுதிகொண்டிருந்தான்.எடுத்துகொடுத்த பத்து அட்டைகளில் இது தான்
பிடித்திருக் கிறது என கடைக்காரரிடம் மகிழ்ந்து சொல்லிவிட்டு காசு கொடுத்து வாங்கியது.
கடைக்காரருக்கு விலைகூடிய
அட்டை விற்றுப்போனதில் ரொம்பவும்தான் சந்தோஷம். ”இன்னொன்று கூட எடுத்துக் கொள்ளுங்கள்,
படிக்கிறதங்களது பிள்ளைகளுக்கு உதவும் , பரிட்சை நேரத்தில் அல்லது வேறு எதற்காகவாவது
அவசர வேளையில் வைத்து எழுத, என்ற --வாறும் உங்களுக்கு எதற்கு சார் அட்டை” என்கிற அவரது கேள்விக்கு பதிலேதும் சொல்லா மல் வாங்கி
வந்த அட்டை இது.
அட்டை மீது ஒட்டப்பட்டிருந்த மரக்கலர் மைக்காவில் ஓடிய டிசைன்
கோடுகள் இளம் கறுப் பாயும்,அடர் ப்ரவ்ன்கலர்காட்டியுமாய்/முக்கால்முழஅகலமும்ஒருமுழத்திற்குசற்றே குறைவான நீலமும் உச்சியில் கொண்டைவைத்துதைத்தது போலஇருந்த கிளிப்பு
மாய் அட்டை பார்க்க அழகாக இருந்தது.அந்த அட்டைக்கு கொடுக்கிற விலைஜாஸ்திஎன்கிறஅவனதுஎண்ணத்தை அட்டையின் அழகு அமுக்கி விடுகிறது.
அதை வாங்கி வந்த அன்றிலிருந்து இன்றுவரை அதன் மேல் பேப்பர்
வைத்து எழுதிய வேளைகள் மிகவும் குறைவாகவும்,அதிகமற்றுமாய்/
மலர்கிற பூவின் மென் ஒலியுடன் விளைகிற ஏழுத்துக்கள் அட்டையில்
சொருகப்பட்ட பேப்பரில் உரிரெழுந்து நிற்கிறதாய்/
ஒரு முறையா,இருமுறையா எண்ணிக்கையை கணக்கில் கொள்ள முடியாவிட்டாலும்
கூட,,,,,,, இன்று எழுதிக்கொண்டிருந்த இளவேளையில் மை தீர்ந்து போக நின்றுபோன எழுத்தை எதைக்கொண்டு நீட்டிப்பது,,,,,,,,,?”கவலைகொள்ளாதே மானுடா,அதுதான் அட்டை வாங்கும் போதே
சேர்ந்து வாங்கிய பேனாக்கள் பத்தில் ஆறோ,ஏழோ மீதம் இருக்கும்தானே?அதில் ஒன்றை எடுத்து,,,/என
மனம் செப்பிய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு கடப்பாக்கல் செல்ப்பில் ஒரு ஓரமாய் வைக்கப்பட்டிருந்த
பேனாக்களில் ஒன்றை எடுக்கிறான்.
அட்டைவாங்கியகடையில்அல்லாதுபிறிதொருகடையில்வாங்கியபேனாஅது.ஒன்றா,
இரண்டாமொத்தம்பத்தாய் கையில் பூத்துசிரித்ததை வாங்கிவந்த பொழுதல்லவா? உடல்
பகுதி வெள்ளையாயும்,தலைப்பகுதி கருப்புக்க்குல்லா போட்டது போலவுமாய் மூடி கருப்பா --யும்
கீழ்பகுதி வெள்ளையாகவுமாய் காட்சியளித்த பேனாவில் வெள்ளைப் பகுதியில் இரண் டு கருப்புக்கோடுகள்
நீண்டிருந்தது அழகாக/பார்க்க அணிலின் உடலில் ஒடிய கோடுகளை ப் போல/உயிரோடிய அணிலின் உடலில்
மூன்று கோடுகள் என்றால் உயிரற்ற பேனாவின் உடம்பில் இரண்டு கோடுகள்/
கோடுகளின் நேர்பின்பாக பேனாக்கம்பெனியின் பெயர் இருந்தது.
பேனாவை சுற்றிப் பார்த் தால்தெரிந்தது.அடையாளம்சொல்லிஅதேமாதிரிபேனாவேண்டும் என கேட்ட
போது அதைத் தவிர மற்ற எல்லாப்பேனாக்களும் இருக்கிறது
என்றார்கள் கடைக் காரர்கள்..250 ரூபாய்க்கு விற்கிற பேனா வரை எடுத்துக்காண்பித்தார்கள்.அவ்வளவு
விலைகொடுத்து வாங்குறபோதும் கூட ஒரு இரண்டரை ரூபாய்க்கு வாங்குகிற பேனா எழுதுகிற எழுத்தைத்தானே
இந்த 250ம் எழுதப்போகிறது.ஆனால் இரண்டரைக்கும் 250க்கும் இடைப்பட்ட வித்தியாசம் ஏதாவது
ஒரு முக்கிய செலவை நகர்த்த ஆகிப்போகிறதானே.?
அப்படிஇருந்தும்வீட்டில்ஒரு250அடைபட்டுக்கிடக்கிறது.இவனதுமாப்பிள்ளைவாங்கிக் கொ டுத்தது.இவனாட்டம் ஏதோ எழுதிக்கொண்ருக்கிறான்
பைத்தியக்காரன் போலவும், அப்பு ராணியாகவும்.போகட்டும்தொலைந்து என அவன் வாங்கிக்கொடுத்த
பேனா அப்படியே பாக்ஸோடு இருக்கிறது.இதோ இது போன்று ஏதாவது எழுதுகிற சமயத்தில் ஞாபகத்தில்
வருகிறதுண்டு.
முதல் வேலையாய் பீரோவை திறந்து பார்க்க வேண்டும்.பேனா இன்னும்
அதே இடத்தில் தான்இருக்கிறதா அல்லது கைகால் முளைத்து பள்ளி உயர் வகுப்புப் படிக்கிற
பிள்ளைகள் கைவசம் சென்று விட்டதா தெரியவில்லை.
நான்குகடைகளாவதுஏறிஇறங்கியிருப்பான்.இவன்கேட்டுப்போனபேனாஇல்லைஎன்றார்கள். பஸ்டாண்டிலிருந்துபஜாரின்நடுவரைவந்துவிட்டிருந்தான்அப்போதுதான்
ஞாபகம் வந்ததாக தேன்கனி ஸ்டோரை நோக்கி நகர்கிறான்.
கடையின் உரிமையாளர் இவனது பெயர் சொல்லி அழைக்கிற அளவு பழக்கம்.
25 ஆண்டு காலங்களில் வேரும் விழுதுமாய்/அப்படியான வேர்களும், விழுதுகளும் காசு, பணம்,பொருள்
என்கிற அளவிலாய்/
இவன் போன நேரம் கடையில் கூட்டம் இல்லை. நின்றிருந்த ஒன்றிரண்டு பேரும்
தேவையா னதை வாங்கிக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த நேரம்.
கடைக்காரரிடம் இவன் அடையாளம் சொல்லியும்,கம்பெனியின் பெயர்
பேனாவின் விலை சொல்லியுமாய்கேட்டபோது அடடா,அது கடையின் உள்ளே மேல் ரேக்கில் அல்லவா
இருக்கி றது, அதை ஏணி போட்டு எடுக்க வேண்டும் என அவர் ஏணியை நகர்த்திய போதுஅவரின் சங்கடம்
அறிந்து அவரின் அனுமதியுடன் ஏணியில் ஏறி பேனாக்கள் இருந்த பெட்டிகளை எடுத்துகொண்டு
இறங்குறான்.
கடைக்காரரிடம்பாக்ஸ்களைக்கொடுத்துவிட்டுஅவர்அதிலிருந்துஎடுத்துக்கொடுத்தபேனாக்க ளை வாங்கி வருகிறான்.தேடித்திரியவும் வேண்டாம்,தேவைப்படவும்
செய்கிறது.வாங்கி வந்து விட்டான் மொத்தமாக 25 ரூபாய் கொடுத்து/
யூஸ் அண்ட் துரோ பேனாக்கள் அத்தனையும்.அன்று வாங்கி வந்து
செல்பிலிருந்த டப்பாவில் போட்டு வைத்த பேனாக்களில் ஒன்றைத்தான் இப்போது எடுக்க வேண்டி
இருக்கிறது.
எழுதிகொண்டிருந்த வேளையில் தீர்ந்து போகிறது மை.இனி என்ன
செய்ய,எப்படி எழுத என யோசித்த நேரமாய் செல்ப்பிலிருந்த பேனா கண்சிமிட்டிச் சிரிக்கிறது.
சிரிப்பின் ஆக்ரமிப்புக்கு ஆட்பட்டு இவன் கைதொட்டுஎடுத்த
பேனா மனித வாழ்வை எழுதிச் செல்லும் காற்றின் திசையிலும்,விடுபட்டுப்போன இடத்திலிருந்துமாய்/
9 comments:
கோடிட்ட இடம்
அற்புதம் அய்யா
அருமையாக முடித்துள்ளீர்கள்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமையான சொற்சித்திரம்
கடைசி வரிகள் மிக மிக அற்புதம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சகோதரரே.... ரமணி ஐயா சொன்னதையே நானும் சொல்கிறேன்.
அருமையான சொற்சித்திரம்.
அழகிய எழுத்து நடை.
மிக நுண்னியதான காட்சிகளை எல்லாம் எழுத்தில் வடிக்கும்விதத்தில் கண்ணில் காட்சி தோன்றுகிறது.
முடிவும் சிறப்பு.
வாழ்த்துக்கள்!
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கு,கருத்துரைக்குமாக/
வணக்கம் இளமதி மேடம்.
நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
தங்களது அந்த பேனா எப்போதும் மை தீர்ந்து போகாமல் எழுதிச் செல்லட்டும் மன வெளியெங்கும் மனித வாழ்வை.
வாழ்த்துக்கள்
வணக்கம் சிவக்குமார் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment