12 Jun 2013

ஆர்மோனியப்பெட்டி,,,,,


   
ந்தகுரல்எத்திசையிலிருந்தெனத்தெரியவில்லை.ஒரேசீராகவும்,அழகாகவும்,லயமாகவுமாய்/

கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என திசை அறியாது விழி விரித்தும் செவிப்புலன்களை  அனுப் பியுமாய் கேட்டபோது வந்த குரல் குயிலினுடையதாய்/

அட மனம் பிடித்த குரல்,கூ,,,,,,க்குக்கூ,,,,,,,கூ,,,,க்குக்கூ,,,,,,இடைவெளிவிட்டு, விட்டு,  ஆகா எப்படி இப்படி,நன்றாக இருக்கிறதே மனம் பிடித்துப்போனவளின் குரல் போல/

நல்ல விஷயம்,,,,,பதிலுக்கு வாயில் இரு கரம் குவித்து கூ,க்குக்கூ,,,,என குரல் கொடுக் கிறான், சுவற்றில் அடித்த பந்தின் விசையாய் திரும்ப வருகிறது பதிலுக்கு குரலும் / கூ,,,,,,,க்குக்கூ,,,/திரும்பவும் இவன் கூ,,,க்குக்கூ,,,,/திரும்பவும் சுவற்றில் அடித்த பந்தாய் கூ,,க்குக்கூ,,, திரும்பவும் அதே கூ,,,குக்கூ,,,,,,திரும்பவுமாய் அதே கூ,,,,,குக்கூ திரும்பதிரும்ப மாறி மாறி ஒலித்துக் கொண்ட குரல்கள் இவனுடையதும்குயிலினுடயதுமாக/

இதென்னஎதிர்ப்பாட்டு,எசப்பாட்டா?இப்படி மாறி,மாறி பண்ணிக் கொண்டிருக்க  ,இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதீர்கள்.ஏரியாவாசிகள் பயந்து போகக்கூடும், குயில் கத்துவதுகூட  சரி,ஒரு வகையில் ஒத்துகொள்ளலாம்,நீங்கள் கத்துவதென்பது வீடுகளில் இருக்கிற சின்னப் பிள்ளைகளுக்குஉடம்புக்குசௌக்கியமில்லாமல்  போய் விடக்கூடும்.ஜாக்கிரதை என்கிற அசரீரி ஒலிக்க வந்த அசரீரியை கணக்கில் கொண்டு  வீட்டுக்குள் போய் விடுகிறான். போவத -ற்கு முன்பாக எதற்கும் இருக்கட்டும் என விழி கழட்டி அனுப்புகிறான் குரல் வந்த திசை நோக்கி,தேடிப்பார்த்துவிட்டு வந்து சொல்ல ட்டும். இவன் அதற்குள்ளாக வீட்டிற்குள் ளாகப்போய் கைகால்,முகம் கழுவிக் கொள்ளலாம்,சற்றே சௌகரியப்படுமானால் குளித்துக் கூட விடலாம் என்கிற நினைப்புடன்.

தோள்ப்பையை கழட்டி  மேஜையிலோ அல்லது அருகாமை இடத்திலோ வைத்த நேரம் போன விழி வெளியெங்கும் தேடிப்பார்த்த அலுப்புடன் திரும்ப வந்து அதனிடத்தில் அமர்ந்து கொள்கிறது.வா,வா என்னானது போன விஷயம் எனக்கேட்க முடியவில்லை. மனம் பிடித்தவ ளுக்கு எழுதிய கடிதம் போனவேகத்தில் திரும்பி வந்ததை போல அது வந்தமர்ந்த சடுதியைப் பார்த்தால் போன வேலையில் வெற்றி இல்லை போல/

மனம் பிடித்த மனைவிகொடுத்ததேனீரையும்,அருகிலும்,சற்றேதூரத்திலுமாய் இருந்த  மகளையும், மகனையும்ஒருசேரபார்த்துவிட்டும்,பேசிகொண்டுமாய்நாவின்சுவையறும்புகளில்  படரவிட்ட தேனீரின் சுவையை உள்வாங்கியவாறு இருந்த நேரம் பரந்த வெளியில் பச்சையும்,பிங்கும் இன்னும் பிற வர்ணங்ளிலுமாய் முளைத்துகாட்சிப்பட்ட வீடுகளையும், அதனுள் குடிகொண்ட மனிதர்களையும் மண்ணையும்,மண்ணின் வாசத் தையும் மேலெழுந்து தழுவியவாறு திரும்பவுமாய் மனம்கவர்ந்தஅதேகுரல் கூ,,க்கு க்கூ,

வந்த குரல் எத்திசையிலிருதெனதெரியவில்லை.ஒரே சீராகவும்,அழகாகவும், லயமாகவுமாய்/ 

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை... ரசித்தேன்...

கூ...க்குக்கூ....கூ...க்குக்கூ.... வாழ்த்துக்கள்...

கவிதை வானம் said...

நல்ல யதார்த்தமான பதிவு...இப்போ நகரில் இதெல்லாம் இல்லை ..வாகனங்களின் இரைச்சல் மட்டுமே

ezhil said...

எங்கள் வீட்டினருகில் நாங்களும் அனுபவிக்கும் இனிய சங்கீதம்....என்று வரையோ தெரியவில்லை...

Tamizhmuhil Prakasam said...

குயிலின் சங்கீதத்திற்கு பின்பாட்டாய் நாமும் பாடினால், குயிலின் இன்னிசைக் கச்சேரி தொடர்ந்து கொண்டிருக்கும்.சிறு பிள்ளைப் பிராயத்து நினைவுகளை கண்முன் நிழலாடச் செய்தது தங்களது பதிவு.நன்றி.

வாழ்த்துகள் !!!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக

vimalanperali said...

வணக்கம் பரிதி முத்தரசன் சார்.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/வாகன்ங்களின் இரைச்சைல் இருந்தால்தான் என்ன>அது மட்டும் காரணமென இல்லை,அதுவும் ஒரு காரணமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக.வீட்டினருகில் கேட்கிற இனிய சங்கீதத்தை கேட்க ஆசைப்படுகிற அதே வேலையில் அதை க் காப்பாற்ற முன் முயற்சி மேற்க் கொள்ளவேண்டியவர்கள் யாரென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாயும் இருக்கிறது.

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக.வீட்டினருகில் கேட்கிற இனிய சங்கீதத்தை கேட்க ஆசைப்படுகிற அதே வேலையில் அதை க் காப்பாற்ற முன் முயற்சி மேற்க் கொள்ளவேண்டியவர்கள் யாரென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாயும் இருக்கிறது.

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/குயிலின் சங்கீதத்திற்கு பின் பாட்டாய் பாடி குயிலின் கச்சேரியை தொடர வைக்க மிக்க ஆசைதான்/

vimalanperali said...

திண்டுக்கல் தனபாலன் சார்.க்குக்கூ,,க்குக்கூ,,,தொடர வாழ்த்துக்கள்.உங்களிலுமாய்/