9 Jun 2013

வாட்டர்டேங்க்,,,,,


            
பார்த்துவிட்டுத்தான் சொல்கிறாயா அல்லது உத்தேசமாக ச்சொல்கிறாயா என நான் கேட்ட போது மணி காலை 7.30 லிருந்து 8.00 மணிக்குள்ளாக இருக்கலாம்.எப்போதும் இந்நேரம் கிளம்பியிருப்பேன்.

இன்றைக்கு காலைஎழுந்ததிலிருந்துநான்கு முறையாவது அம்மாபோன்பண்ணியிருப்பார்கள். ஊர்ப்பொங்கலுக்கு அவசியம் வந்துவிடு என/ சரியென கடந்தஒருவாரமாகசொன்ன பதிலைத் தான் இப்போது நான்காவது முறையுமாய் சொல்லிக் கொண்டிருப்பவனாய்/

சொன்ன பதில்,எண்ணப்பிண்ணல்கள் மற்ற மற்றதுடன்  சேர்ந்து கொள்கிற உடல் சோம்பல் என்கிறதாய் கைகோர்த்துகொண்டஎல்லாமுமாய்என்னைவிடுவித்தநேரம்இந்நேரமாய் ஆகிப் போகிறது.

இன்னும் ஒரு மணி நேரத்தி ற்குள் கரண்ட் கட்டாகிவிடும்,ஆகவே மோட்டாரை ஆன் பண்ணி விட்டு மாடிமேல் இருக்கிற டேங்கில் எவ்வளவு  தண்ணீர் இருக்கிறது என பார்த்து விட்டு வாஎன மகனிடம் பணித்துவிட்டு பாத்ரூமிற்குள் செல்கிறேன் அவசரமாக/ அட துண்டெடுக்க மறந்து போனேனே,மறந்தால் என்ன கெட்டுவிட்டது இப்பொழுது?  ஒரு மினி சப்தம் அல்லது பாத்ரூம் கதவை லேசாக ஒரு செல்லத்தட்டு தட்டினால்  துண்டுகைக்குவந்துவிட்டுப்போகிறது இதற்குப்போய்,,,,,,,,

பிளம்பர் சரவணனிடம் இந்த வேலையை ஒப்படைப்பது சாலச்சிறந்தது என பரிந்து ரைத்த உறவினர் ஒருவரை இன்றுவரை மறக்கமுடியவில்லை.சரியான வேலைக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்து அழைப்பது ஒரு தனிக்கலை.அது கைவராத பொழுது அந்தல்,சிந்தலாய் ஆகிப் போகிறது.

மோட்டார் மாட்டுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே விசாரிக்க ஆரம்பித்தது நீண்டு கோடு புள்ளியாய் வந்து ஓரிடத்தில் நின்ற போது அது பிளம்பர் சரவணைனை உருக் காட்டியது.
சரவணன் என உறவினர் சொன்னதும் அவரது போன் நம்பர் அவரது இருப்பிடம் எல்லாம் கேட்டுவிட்டு தொடர்பு கொண்ட போது அவரே மோட்டார் ,பைப்,மற்ற ஜாமான்கள் அதற்கான வேலை செய்ய ஆட்கள் என ஒரு நல்ல ஞாயிற்றுகிழமை வந்து மாடியில் டேங்கை வைத்து வீட்டின் முன் வராண்டாவில் மோட்டாரை வைத்துவிட்டு அடிகுழாய் நின்ற இடத்தில் பைப் இறக்கி கனெக்‌ஷன் கொடுத்து அன்று மாலையே மோட்டாரை ஓட வைத்துவிட்டு போய்விட்டார்.நாளை ஒரு எலக்ட்ரீஷியன் வைத்து சுவிட் போர்ட் மாட்டிவிடுங்கள் எனவும் இரண்டு நாளைக்குக்குள்ளாக பில் தொகையையும் கூலியையும் கடையில் கொடுத்து விடுங் கள் எனவுமாய்  பில்லைக் கொடுத்து விட்டுச்சென்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை அதிகமாய் ஒன்றும் ரிப்பேரல்லாது 5 ஆவது வருடத்தில் காலடி எடுத்துவைத்து வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கிற மோட்டார் இது.

ஓடட்டும் ஓடுகிற வரை என்கிறதான அதிர்ச்சியற்ற மனோநிலையுடன் சுவிட்சைப் போடுகிற ஒவ்வொரு முறையுமாய்எண்ணத்தைதூவுகிறமோட்டார்.போட்ட சுவிட்சின் விசை காற்றுடன் துளையிடப்பட்ட பூமியின் அடியாழம் வரைச்சென்றுஉறிஞ்சி மாடியி லிருக்கும் டேங்கில் தளும்பத்தளும்ப நிரப்பிவைத்துவிட்டுகுழாயைத்திறந்தால்தண்ணீரைவிழச்செய்கிறபைப்பின்  திருக்கில் ஓட்டை விழுந்துவிட்ட நாளில் சரவணனுடன் வேலைபார்க்கும் மற்றொருவர் வந்து வேலைக்கென நின்ற போது ”இன்று நீங்கள் வேலைபார்க்க வேண்டாம்,இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்” என சொல்லி அவரை  திரும்ப அனுப்பிய அன்று என்னிடம் வருத்தப் பட்ட சரவணன் கொஞ்ச நாள் வரை என்வீட்டுப்பக்கம் மோட்டார்ரிப்பேர்ப்பார்க்க  வரவேயி ல்லை.அவரது வருத்தம் அவருக்கு,வேலைக்கு வந்தவர்களை திரும்ப அனுப்பிவிட்டார்கள் என/

சரி பரவாயில்லை,நமது ஆள் போதையில் வீட்டில் வேலைக்குப்போனது தவறு என்கிற சொல் லாறுதலுடன் சற்று நாள்க்கழித்து அவரே வந்து ரிப்பேராகிப்போன பைப்பை சரிசெய்து விட்டு போனவராக/

அன்றிலிருந்து இன்றுவரை  மோட்டாரைப்போட்டவுடன் தண்ணீர் விழுந்து விடுகிற டேங்க் நிறைந்து விட்டதாய்சொன்ன எனது மகனிடம்தான் கேட்கிறேன்.

பார்த்துவிட்டுதான் சொல்கிறாயா அல்லது உத்தேசமாகச்சொல்கிறாயா என/

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாகவே கேட்டீர்கள்...! நாம் தான் சிலவற்றை புரிய வைக்க வேண்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

நாம் தான் சிலவற்றை புரிய வைக்க வேண்டும்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.புரியவைப்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க கேள்விகள்தானே நம்மை சிந்திக்கத்தூண்டுகிறது.

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

ezhil said...

ஆமாங்க இந்த மாதிரி வீட்டு வேலைகளுக்கு நல்ல ஆட்களாக அமைவது கூட பெரிய விஷயம்... அழகான எழுத்து நடை...

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/