11 Jul 2013

ஆலாபனை,,,,,

                       
நிதானித்திருக்கலாம்தான் சற்றே/நின்றிருக்கலாம்தான் அவ்விடத்திலேயே/

மனிதர்களும், மண்ணுமாய் தென்பட்ட நீண்டு விரிந்த மண்மீது நீண்டு விரிந்த கருப்புத் துணியாய் போர்த்தப்பட்டுக்கிடந்த கருநிறம் பூசிய சாலை மீது சென்று கொண்டிருக்கி றேன். நானும் இருசக்கர வாகனமுமாய் கைகோர்த்தும்,உடல் பொதித்துமாய்/

அதென்ன இருசக்கரவாகனத்திற்குவேகம்இவ்வளவுதேவையா?என்றெல்லாம் கேட்கக் கூடாது நீங்கள்.

அல்லம்பட்டி முக்கு ரோடு,கல்லூரி அது தாண்டி விரைவு காட்டி ஓடிய சாலையில் வள்ளிக்குளம் தாண்டியதுமாய் சாலையின் இடதுபுறம்தென்பட்டகூரைவேய்ந்து தென் பட்ட டீக்கடையில் ஒரு சாயாக்குடிப்பது உகந்தது என அறிவிக்கிறது மனது.

மனதின் கோரிக்கையை ஒருபக்கம்ஏற்றுச்சென்றபோதும் கூடசற்றைக்குமுன்பு தானே  அல்லம்பட்டி முக்கு ரோட்டில் டீக்குடித்தாய்,அதற்குள் இன்னொன்று என்றால் தாங்குமா? தேநீரின்ருசிக்காகவும்அதன்மணத்திற்காகவும்நாவின்சுவையறும்புகளைஅடகுவைத்துவிட்டாயோ என்கிற கேள்வியை உள்ளடகிய மனதின் ஊள்ளுணர்வை சற்றே பின் தள்ளிவைத்து விட்டு நகர்கிறவனாகிப் போகிறேன் .

அழுக்கடைந்து தூசி ஏறிய கூரையும்,தன் நிறம் மாற்றி பழுப்புக்காட்டிய மூங்கில்களும் அதில் கட்டப்பட்டிருந்ததூசிஏறியகயிறுகளும்,காட்டியஅடையாளங்களாயும்,காட்சிப்படிமங்களாயும் அந்த டீக்கடை/

தொந்திபெருந்தமாஸ்டர்தன்இடைகுலுங்கஆற்றுகிறடீஅதுஒருமாதிரிதிவ்யமாய்ருசிக்கத்தான் செய்கிறதுஎன்னசமயாசமயங்களில்கப்பென்றுகண்ணைமூடிக்கொண்டுகுடிக்கவேண்டியிருக்கும்.

டீ போதும் வடையெல்லாம் எதற்கு அனாவசியமாக என மாஸ்டரிடம் சொல்லிய டீக்கு காசுகொடுத்து விட்டு நகர்கையில் கைக்கடிகாரம் அலுவலகம் செல்லும் வேளை நெருங்குகி றது என எச்சரிக்கிறது.

இரு சக்கரவாகனத்தை ஸ்டார்ட்பண்ணிகொஞ்சம்தூரமேபோயிருப்பேன்.நான் சென்ற திசையின் எதிர்திசையில்  இரு சக்கரவாகனத்தை சலையின் ஓரமாய் நிறுத்திவிட்டு அதனு டன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார் ஒருவர்.யாராக இருக்கக்கூடும் அவர்.இந்த காலை வேளையில்அவர்ஏன்இப்படிஒருஅனாவசியவேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்?

வண்டி பஞ்சரோ,அல்லது பெட்ரோல் இல்லையா,இல்லை ஸ்டார்டிங் ட்ரபிளா,,,,,,,? அதுவுமில்லையானால் வேறேதேனுமாய் பெரிய அளவில் கோளாறா?எதாக இருந்தாலும் அருகாமையில் இருக்கிற ஒர்க்‌ஷாப்பிற்கு போன் பண்ணிச்சொல்லி விட்டு தேமே என நிற்க வேண்டியதுதானே?அல்லது வண்டியை நிறுத்திவிட்டு ஸ்டைலாக அதன் மீது ஏறி அமர வேண்டியதுதானே கால் மேல் கால் போட்டு/என்கிறசிந்தனைமேலிட்ட  போது சொல்லாமலா இருப்பார்.அவர் இந்நேரம் வரை ,சிந்திக்கலாமா இருப்பார் அது பற்றி?என்பதை மறந்த வனாகிப் போகிறேன்.

தனக்கு வராதவரை பிரச்சச்னையின் தீவிரம் பற்றி யாரும் யோசிப்பதில்லை பெரும்பாலுமாக என்கிற மனோநிலையை உள்ளடக்கியும் பயணியின் மனோபாவதுடனுமாய்/

வண்டியும் அவருமாய் தென்பட்டஇடம்வலது புறமாயும்சென்ற நான் இடது புறமாயும். இரண்டு முனையையும் இணைத்த நூழிலையானபார்வையின் நேர்கோடு நெருங்கிச் செல்லச் செல்ல வண்டியுடன் நிற்பவரின் உருவம்படம் போட்டுக்காண்பிக்கப்பட்டு விடுகிறதாய்.

அடநம்மவைரம்/குட்ட,,,,,,,,,,,பேராண்டிஎன அவரது தாத்தாவால் அன்புடன் அழைக்க  ப்பட்ட வைரம் எங்களுடன் டவுன் ஆபீஸில் பணிபுரிந்தவர்,தாத்தா என்றால் எப்படி  ஆபீஸில் பணி புரிவார்?அவர் 50ஐத்தாண்டியவர்.வைரத்திற்கு நன்றாக  இருந்தால் 25 தாண்டாது.நல்ல மனதிற்குச்சொந்தக்காரர்.கலர் அடிக்கப்பட்ட கோழிக்குஞ்சாய் இறகுவிரித்து பறக்க ஆசைப்படுபட்டவர். விரிந்திருக்கிற வெளிகண்முன்காட்சிப்பட்ட  போதும் பறக்க முடியாத பரிதாபத்துடன் மடக்கிக்கட்டப்பட்ட சுவர்களின் வெப்பம் மிகுந்தநான்குதிசைகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட பஞ்சாரக்கோழிக்குஞ்சாய் அலுவல கம், வேலை,அதன் பரிமாணம் அது தருகிற சுகம்,அசுகம் மற்றும் அதில் வருகிற கோப தாபம் என்கிறவையான பரப்பிற்குள்ளாக மட்டுமே தன்னை அடைத்துக்கொண்டு வாழ்கிறவராய் இருந்த வைரம் என்னுடன் பணி புரிந்தது எனக்கு வாய்க்கப்பெற்ற பாக்கியமாகவே என்றெல்லாம் சொல்லி விட முடியா விட்டாலும் கூட அவருடன் பணிபுரிந்த காலங்கள் தனி அனுபவம் தருபையாகவே/

கோபப்படுவார் சமயங்களில்.முகத்தை த்திருப்பிக்கொள்வார் சமயங்களில். பேச மாட் டார்  நாள்க்கணக்கில்.அப்படியெல்லாம் மிகுந்த அன்புடனும் வாஞ்சையுடனும் மிகவும் பாசமாக தென்படுவார்.மிகைப்பட்ட மனித முரண்களில் இதுவும் ஒன்றுதானே என்கிற ஏற்புடன் அவரிடம் பேசவும் பழகவும் சிரிக்கவுமாய் இருந்த நாட்களில் அவர் அலுவலகத்தில் பசை போட்டு ஒட்டியவராய் என்னுடன் சற்று ஒட்டுதலாய்/இப்போது நானும் அவரும் பணியிட மாறுதலில்வேறு வேறு இடங்களில் தங்களின் அடையாளங்களுடன்/ 

சாலையின் இருமருங்கிலுமாய் இல்லாத மரங்களை நினைத்துக் கொண்டேயும், சாலை யில் விரைந்த கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை கண்ணுற்றவனாய் வந்த நானும் எனது இரு சக்கரவாகனமும் அண்மித்த பொழுது பார்த்த வைரம் இருந்த இடத் தை விட்டு சற்றுத்தள்ளிப்போய்விட்டேன்.

சாலையின் விரைவு மற்றும் எனது மனோ நிலையின் அவசரம் வேகம் எல்லாமும் கை கோர்த்து கொண்டு என்னைஒரு பத்தடி தள்ளிப்போய்க்கொண்டு நிறுத்தி விட்டது.

என்ன இது நிற்கிற வைரத்தைப்பார்க்காமல் இப்படிபோய்க்கொண்டிருந்தால் எப்படி என அறிவுறுத்திய மனக்கட்டின்  சொற்படி  பின்னோக்கிப்பார்த்தபோது வைரம் இன்னும் மல்லுக் கட்டைத்தொடர்கிறவராய்/

இருங்கள்வைரம்மல்லுக்கட்டெல்லாம்இருக்கட்டும்ஒருபுறம்இதோவந்துவிடுகிறேன்.தங்களின் அருகாமையிலாக/

வண்டிக்கோதங்களுக்கோஎன்னஆனதெனச்சொல்லுங்கள்முடிந்ததைச்செய்கிறேன் என்கிற சொல்கட்டைதாங்கி அவரிடம் செல்கிறேன்.

ஊதாக்கலரில் கோடுகள் வரையப்பட்ட குண்டான வண்டி.அவரது உயரத்திற்கு அந்த வண்டியை பிடித்து நிலைநிறுத்தவே சற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.என்ன ஏதென விசாரித்தேன்.பக்கத்தில்லிருக்கிற வொர்க்ஷாப்பிலிருந்துயாரையும்வரச்சொல்லவேண்டுமா?  அல்லதுபெட்ரோல் ஏதும் வாங்கி வரவா?இல்லை வேறேதேனுமான உதவி வேண்டுமா?எனக்கேட்ட போது மறுத்து விட்ட வைரம் மிகவும் நாகரீகமாக உங்களுக்கு எதற்கு வீண் சிரமம், கிளம்புங்கள் நீங்கள் அலுவலகத்திற்கு நேரமாய்விடலாம் உங்களுக்கு .நான்பார்த்துக் கொள்கிறேன்இதுஎனதுபிரச்சனை.இதில்   நேரம்செலவழித்து உங்களது வேலையை மறந்து போக வேண்டாம்,என்றவர் திரும்பத் திரும்பவலியுருத்திச்சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுகிளம்பிவிடுகிறேன்,அவரது  வண்டியை ஏதேனும் செய்து சரி பண்ணி விடலாம் என்கிற நம்பிக்கையுடன் போன நான்.


என்ன ஆச்சரியம் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருந்த அவரது வண்டி நான் எனது இரு சக்கர வாகனத்தைக் கிளப்பவும் ஸ்டார்ட்ஆகிவிடுகிறது.வண்டியில்அமர்ந்தவன் வானத்தைப் பார்க்கிறேன்.தூரத்தே   பறவைஒன்றுஇறகு விரித்தவாறு/ 

2 comments:

  1. தனக்கு வராதவரை பிரச்சனையின் தீவிரம் பற்றி யாரும் யோசிப்பதில்லை.../

    உண்மை தான்...

    ReplyDelete
  2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/

    ReplyDelete