தேநீருக்கு பெயிண்ட் அடிக்க முடியுமா என்ன? அடித்திருக்கிறார்களே இந்தக் கொடுமையை
எங்கு போய்ச்சொல்ல?
முழங்கால்
உயரமேஇருக்கிறசில்வர்கேன்அது.கைவைத்து அளந்தால் ஒரு முழமும்சிலஅங்குல உயரமும் காட்டக்கூடும்.ஆனால்
கைவைத்து அளக்க முடியாது. சுட்டுவிடக் கூடும்.
கேனின்
உள்ளே குடிகொண்டிருந்த கலர் திரவத்தைத்தான் தேநீர் என்றார்கள்.ஒரு ஸ்டூல் மீது ஏற்றி
அமரவைக்கபட்டிருந்த கேனின் கீழ்ப்பகுதிலிருந்த குழாயைத் திறந்ததும் கொட்டுற சுடுநீர்
திரவத்தை பேப்பர்க்கப்பில் பிடித்து நிறைத்துக்கொடுப்பராய் அவர் தெரிந்தார்.
பூப்போட்ட
கைலியும், முழுக்கை சட்டை போட்டுத்தெரிந்தவருமான அந்த நபர் மிகச் சரியாக கேனுக்கு எதிரிலேயே
ஒரு அடி இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்.அவரது சட்டையின் நிறமும் அவர் பிடித்துக்கொடுத்த
தேநீரின் நிறமும் /
அவன்
மண்டபத்திற்குள்ளாக நுழைந்த மாலை 5 மணிப்பொழுதிற்கு மண்டபத்தின் வாயிலிலும்,மண்டபத்தின்
உள்ளேயுமாய் சொற்ப அளவில் ஆங்காங்கே தெரிந்தார்கள் நபர்கள்.
ஒன்று
இரண்டு,,,,,,,,,,,என நின்றிருந்தவர்களையும்,அமர்ந்திருந்தவர்களையும் சேர்த்து வைத்து
எண்ணினால் ,,,,,,வேண்டாமே அது அதற்கு அனாவசியமாய் என விட்டு விடுகிறான்.
காம்ளக்ஸ்
பஸ்டாண்டில் நின்று கொண்டு “எந்த பஸ் மண்டபத்திற்குவரஎனஅவருக்கு வணக்கம் சொல்லக்கூட
மறந்துசுரேஷிடம்வழிகேட்டுவந்தடைந்தஇடமாய்கொலுவீற்றிருந்த மண்டபம் அது.பெரிதாக தெரிந்தது.
500 பேர்ஒரே நேரத்தில் உள்ளே இருந்தாலும் ஒன்றும் தெரியாது போலிருக்கிறது.தவிர பால்க்கனியில்
வேறு எப்படியும் 100 பேர் வரை அமரலாம் போலிருக்கிறது.(ஆத்தி
எவ்வளவு பெருசு)நல்ல இடமும், நல்ல மனமும் வாய்க்கப்பெற்றால்
நல்ல மணமாகிற இடமாய் அமையும் போலிருக்கிற துதான். அப்படியாய் காட்சிப்பட்டுத்தெரிந்த
திருமண மண்படபமாய் அது.
அதில்தான்
இன்று மாலை துவங்கி இரவு வரையிலும்,நாளை காலை துவங்கி மாலை வரையிலுமாய் நடக்கவிருக்கிற
மாநாட்டிற்கு வந்திருந்தான்.நல்ல விஷயம்.நன்றாக இருக் கிறது. ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிற
ஊழியர்கள்.அலுவலகள் அனைவரையும் பார்க்கலாம் ,பேசி அளாவளாவ,அளாவளாவி பரிமாறிக்கொள்ள
இங்கு விஷயங்கள் நிறைந்து போய் விரவிக்காணப்படலாம்.
மூலைக்கொன்றாய்
இருந்து பாய்ந்து வந்த நதிகள் கை நிறைய நீர் அள்ளிப்பருகி தன் தாகம் தீர்த்துக்கொண்ட
கண்கொள்ளாக்காட்சியை கண்டு மகிழலாம் உள்ளம் உவகை கொள்ள/எனபேப்பர்கப்பிலிருந்ததேனீரைஉறிஞ்சிக்குடித்தபடிஇருந்தநேரம்அவனைப்போலவே இன் னொருவரும் அரை மனதுடன் அந்ததேனீரைப் பருகிக்கொண்டு/
அவனுக்குள்
எப்பொழுதுமே ஒருபழக்கம் முளைவிட்டு காணப்பட்டதுண்டு. அது நல்ல தானதா,இல்லை கெட்டதானதா என புரியாவிட்டாலும்
இன்றுவரை கடைபிடிக்கிறான் செவ்வனே/ முப்பது வருட பழக்கத்தை திடீரென யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் விடச்சொன்னால்
எப்படி ,,,,,,,,?
குடித்த
தேநீர் நன்றாக இல்லை என்றால் அதை குடித்து
முடித்த வெகு சில நிமிடங்க ளுக்குள்ளாகவே வேறோரு மாற்று டீ சாப்பிட்டாக வேண்டும் என்பதான
கௌரவமான பழக்கமேஅது.அது மாற்றா அல்லது நாவின்சுவைஅரும்புகளுக்குஅவன்தருகிறதிரவத்தீனியா என்பது புரியாமலும்,புடிபடாமலுமாய் இதுநாள்வரை/
அப்படி
இதுநாள் வரை புடிபடாத வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கிற போக்கு இவனுள் தங்கிவிட்ட
நாளிலிருந்து இப்படித்தான்.
தோளில்
படர்ந்த கையின் ஈரம் பற்றி திரும்பிய போது கார்த்திக் அங்கு காட்சிப் பட்டுக் கொண்டு.ஐந்தரை
அடியில் ஒல்லியாய்/
அவரின்
உடைகள் அவருக்காக தைக்கப்பட்டதா அல்லது தைக்கப்பட்ட உடைகளில் அவர்பொருந்திப்போகிறாரா?என்பது
அவரைப்பார்க்கிற கனங்களில் அவனுள் தவறாமல் முளை விடுகிற கேள்வியாய்.பழைய கருப்பு வெள்ளையிலிருந்து
இன்றைய ஜீன்ஸ் டீசர்ட் வரை பொருந்தித் தெரிகிறவராக/என்ன மீசையினுள் எட்டிப்பார்த்த
ஒன்றிர ண்டு வெள்ளை முடிகள் அவர் மூப்பை மெல்ல அறிவித்தன.
அவர்தான்
சொன்னார்,நண்பா அன்பாய் ஒரு டீ சாப்பிடலாம் என.உடனே அவன் சரி எனச்சொல்லியிருக்கலாம்இல்லையென்றால்வரவில்லைஎனச்சொல்லியிருக்கலாம்.
மாறாகமண்டபத்தினுள் அமர்ந்து டீக்கொடுத்துக்கொண்டிருந்தவரை கைகாட்டி அதோ அங்கே இருக்கிறதே டீ இனி ஏன் வெளியில் கடை தேடிப்போக
வேண்டும் அனாவசியமாய் என அவன் சொன்னதுதான் தாமதம்,நான் சொன்னது டீ,நீங்கள் சுட்டிக்
காட்டுகிற இடத்தில் இருப்பது டீயின் மாதிரி.வாருங்கள் போகலாம் என்றழைத்த கார்திக்கின்
அன்புக்குக் கட்டுப் பட்டும்,ஆட்பட்டுமாய் வெளியில் கடை தேடிப்போய் (அதென்ன சார் டீக்கடைகள்
அங்கே வெகுரகசியமாகவும்ஒயின்ஷாப்புகள்வெளிப்படையாகவும்காட்சிப்பட்டுத்தெரிகிறதே???/) தேனீர்
குடித்துவிட்டு வருகிறார்கள்.
தேனீர்
நன்றாகவும் கடைதேடிப்போய் குடித்தது வெகு ரிலாக்ஸாகவும் இருந்தது/ துணை கிடைத்தஆறுதலுடனும்,மாற்றுதேனீர்குடித்து
விட்ட திருப்தியுடனுமாய்ஒன்று சொல்லத் தோனியது.
தேனீர்
தருபவர்களே இனிமேல் தயவு செய்து தேனீருக்கு
பெயிண்ட் அடிக்காதீர்கள். அது தேனீர் திக்காக இருக்கிறது என்கிற எண்ணத்தை மாற்றி கிக்காக
இருக்கிறது எனச்சொல்ல வைத்துவிடுகிறது.
10 comments:
உண்மையைச் சொன்னால் மிக சுமாரான பதிவு, ஆனால் சொல்லிய சங்கதி கணமானது வர்ணம் தீட்டிய தேநீர் போன்றே.
தேனீர் தருபவர்களே இனிமேல் தயவு செய்து தேனீருக்கு பெயிண்ட் அடிக்காதீர்கள். அது தேனீர் திக்காக இருக்கிறது என்கிற எண்ணத்தை மாற்றி கிக்காக இருக்கிறது எனச்சொல்ல வைத்துவிடுகிறது.//
சொன்னதும் சொல்லிச் சென்றவிதமும்
மிக மிக அருமை.சரியான காபி சாப்பிடாதபோது
எனக்கும் அடுத்து நல்ல காபி சாப்பிட்டால்தான்
மனம் ஆறும்.மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
கையில் தேநீருடன்... சொன்னவிதம் - சுவை அருமை...!
வணக்கம் ரமணி சார் நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் நிரஞ்சன் தம்பி சார்,
நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்,நண்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நான் கூப்பிட்டு வரலைன்னாலும் நீங்க கூப்பிட்டீங்க வந்துட்டேன்.
வணக்கம் சந்துரு சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment