14 Jul 2013

புள்ளிக்கோலம்,,,,


கோலத்தை மிதித்து விட்டேன் ஸாரி.இட்ட புள்ளிகளும்  வரைந்த கோடுகளுமாய் கை கோர்த் துக்காண்பித்த இடத்தில் தன் அமர்வு காட்டிக்கோலம்.

வெள்ளைகளில் புள்ளிவைத்து அதே வெள்ளையில்  அதுசுற்றிலுமாய் அரண் போலகோடிழுத்து வளைந்தும் நெளிந்தும் செல்கிறஒற்றையடிப் பாதை போல தன் அழகு காட்டி  இருந்தது கோலம்.

கலர்ப் பொடிகளில் மிளிர்ந்து தெரிந்த கோலத்தின் நாலாபுறாமும் பூக்கள்ப் பூத்துத் தெரிந்த தாய்பூக்கள்/

இடது கையில் மாவெடுத்து வலது கையில் வரைகிற கலை இங்கு அத்தனைப் பெண்களுக்கும் வாய்க்கப்பெறாததாகவே/

அதிகாலையின் அவசரத்தில் அள்ளிச்சுருட்டி எழுந்து முகம் கழுவி அடுப்பைப் பற்றவைத்துஅதன் மேல்பால்ப்பாத்திரத்தைவைத்து அடுப்பைசிம்மில் வைத்து விட்டுஅவசரஅவசரமாய்வீட்டின் படிதாண்டி ச்சென்று வரைகிற கோலங்கள் இவ்வளவு நன்றாக இருக்க அவர்கள் எங்கு போய் கற்று வந்தார்கள் என்பது தெரியாமலேயே/

இவனுக்குத்தெரிந்துபெண்பிள்ளைகளைசின்னவயதிலிருந்துகோலம்போடகற்றுகொடுக்கவெனஎந்தப்பள்ளிக்கும்அனுப்பியதாக நினைவில்லை எல்லாம் அம்மாஎனும்பல்கலைக்கழகத்திடமிருந்துவருவதுதான் எல்லாம் என நினைக் கிறான்.

முதல் நாள் இரவு சாப்பிடாமல் தூங்கிப்போன கணவன்,அடுத்த வாரம் நடக்கப் போகிற ரிவிசன் டெஸ்டுக்காக அதிகாலை எழுந்து படிக்க வேண்டும் எனச் சொல்லி விட்டு காலை மணிஆறுகடந்துமாய்இன்னும்தூங்குற மூத்தமகள் பள்ளியில்ஸ்போர்ட்ஸ் எனச்சொல்லி விட்டு காலை ஏழு மணிக்கெல்லாம் பள்ளிக்குபோய்விட்டு மாலை ஆறரை மணிக்குத்திரும்பிய மகன் (காலை, மதியம் இரண்டு வேளையும் சாப்பிடவில்லையே எங்கு சாப்பிட்டாய் எனக் கேட்டால் ஸ்போர்ஸ் விழா நடப்பதால் எங்களுக்கு பள்ளியிலேயே சாப்பாடு தந்தார்கள் சாப்பிட்டோம்என்றான்.) என இவர்கள் அடங்கிய குடும்பத்தையும் அரிசி,பருப்பு, அரசலவு, குடும்பத்தின் வரவு செலவு நேற்று துவைத்து மொட்டைமடியில் காயப்போட்டிருந்த துணிகள், (ஏதோ மறதி,எடுக்காமல் விட்டு விட்டேன் என்ன இப்பொழுது?)அக்கம்,பக்கம் அவர்களு டனான பேச்சு ,உறவு, கல்யாண வீடு,,,,இதர,இதர என்கிறாவைகளின் தினம் குவிகிற மனக்குவியலுக்கு மத்தியிலாய் மையம் கொள்கிற எண்ணங்கள் சுமந்தும் காலை வேளையின் சடுத்துக்கு ஆட்பட்டுமாய் அவசர,அவசரமாய் அள்ளித் தெளித்து வரையப்பட்டிருந்த கோலம் அழகாயிருந்தது  பார்ப்பதற்கு/

இன்று விடுமுறை தினம்தானே?ஞாயிறுகளின் விடியல் தோற்றுவிக்கிற ரிலாக்ஸான எண்ணம் தந்த மகிழ்ச்சியில் மனைவியும்,இவனும் அதிகாலை யிலாய் அமர்ந்து டீக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆற்றி,ஆற்றிஊற்றிக்கொடுத்தடீயின் அளவு எவ்வளவு எனத்தெரியவில்லை. அவளும் ஊற்றிக்கொடுத்துக்கொண்டேயிருந்தாள். இவனும்வாங்கிகுடித்துக் கொண்டேயிருந்தான்.என்கிறசொற்க்கட்டு பதிவாகிப்போகிற தினங்களில் கீ,,,,,,,,,என்கிற சப்தம் இழுபட தண்ணீர் ட்ராக்டர்வருகிறதுஅவன்தெரு வழியாக  எட்டிக் கேட்ட சப்தம் கிட்டவரும் முன்குடங்களை க் கழுவி  கையில் காசுடன் ரெடியாய் இருக்கவேண்டும்.

தள்ளுபடியில்  180 ரூபாயில் எடுத்த புடவை அவளுக்கு நன்றாகத்தான் இருக் கிறது. பேங்க் அக்காவும்,அக்கம்,பக்கத்துக்காரர்களும் வைத்த கண் வாங்கா மல் பார்த்துக் கேட்கிற புடவை களில் இதுவும் ஒன்றென இவனது மனைவி நேற்று சொன்ன புடவைமடிப்புசரியஎழுந்தோடிப் போய் குடங்களைக்கழுவி எடுத்து வருகிறாள் தண்ணீர் பிடிக்க/

அவள் எழுந்தோடிப்போகையில் புடவையில் பூத்திருந்த வெந்நிறப்பூக்களில் நான்கை ந்து கழண்டு தரையில் விழுந்து விடுகிறது.

பிஸ்கட் கலர் புடவையிலிருந்து கழண்டு விழுந்த வெந்நிறப்பூக்கள். ஆரஞ்சுக் கலரில் பார்டர் கட்டிய அழகுப்புடவை. அதிலிருந்து கழண்டு விழுந்த பூக்களை இப்பொழுதுஎங்கு கொண்டு சேர்ப்பது,எப்படி பாதுகாப்பது?என்ன மாயம் செய்து  அவைகளை புடவையில் புகுத்துவது மறுபடியுமாய்  என்கிற எண்ணம் மேலி ட்டபோதுதெருமுனையில்சப்தமிட்டதண்ணீர்ட்ராக்டர்வீடுமுன்வரவும்,மனை வி எடுத்தவந்த குடங்கள் தண்ணீரால்நிரப்பப்படவுமான வேலைதற்செயல் ஒற்றுமையாய்/

இரண்டு க்குடங்களுக்கு மூன்றும்,மூன்றும் ஆறு என இவர்கள் வாங்குகிற காசு பத்தின் மடங்காயும்,நூறின் மடங்காயும் பல்கிப்பெருவது எப்போது?இது இவர்களின் கைசேர்வது என்றைக்கு? என்கிற எண்ணத்துடன் தண்ணீர் நிறைந் திருந்த சிவப்புக்கலர் குடம் தூக்கி வாசல்படி நோக்கி எட்டெடுத்து வைத்த போது மிதித்து விடுகிறான் கோலத்தில் மலர்ந்து சிரித்த பூக்கள் மீது/

மிதியின் கனமும்,அழுத்தமும் தாங்காமல் பிசகிப்போன கோலமும், புடவையி லிருந்து சிந்திய பூக்களுமாய் ஒன்றென தெரிய,தெரிவு பட்ட இடத்திலிருந்து தூக்கிய குடத்தின் கனம் கையை இழுக்க ஸாரி சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைகிறான்.

வீட்டிற்குள்நுழைந்தஅவனைவினோதமாய்ப்பார்க்கிறாள் மனைவி. இவனுக்கு த் தெரிந்து பெரும்பாலுமாய் பெண்களால் தன் வீட்டு வாசல்களில் இடப் படுகிற கோலங்கள் தன் வீட்டு ஆண்களாலேயே மிதிக்கப்பட்டும், புள்ளி பிசகடிக்கப்பட்டுமாய்/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கழண்டு தரையில் விழும் பூக்கள் - அருமை...!

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசித்தேன்...

வேல்முருகன் said...

கோலம் வீட்டுக்கு அழகு பதிவும் வண்ணமாக அழகு

Unknown said...

கோலம்...திருக்கோலம்! அழகோ..அழகு!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் த்னபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கவிதை வீதிசௌந்தர் சார்,.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமேஷ் வேங்கடபதிசார்,நன்றி தங்களின் வருகைக்கும் , கருத்துரைக்குமாக/