14 Jul 2013

கோரம்பாய்,,,,,,

படுத்திருந்த பாயை காணவில்லை அதற்குள்ளாக/ 
கூடவே தலையணையையும் சேர்த்து/விரிக்கப்பட்டிருந்த 
பாயும்அது பரவித்தெரிந்த பரப்பும் 
இப்போது வெற்று வெளியாகவே/ 
இரட்டைக்கோரையில் அழுத்தமானபின்னல் கொண்ட பாய் அது/ 
நடமிடும் மயிலும்,பூத்து நிற்கிற பூக்களுமாய் 
கலர்க்காண்பித்து நின்ற பாய் அது.இங்கெல்லாம் 
வாங்காமல்பத்தமடையிலிருந்து வாங்கிக் கொண்டு 
வந்தது.மாப்பிள்ளை சேகர் வேன் ட்ரைவர் 
ஒருமுறை அங்குள்ள ஊர்களுக்கு 
பயணவழியாக போனவன் வாங்கி வந்தான். 
150 ரூபாய் என அவன் சொன்னபோது 
பாயின் விலை தவிர்த்து அதன் டிசைனும்,அழுத்தமுமே 
என்னைக் கவர 
அன்றிலிருந்து இன்று வரை தினம் தவறாமல் 
அதில் படுக்கிற நான் இன்று அதிகாலை படுத்தெழுந்ததும் 
பாயைப்பார்க்கிறேன் காணவில்லை. 
சில்லிட்ட தண்ணீரில் முகம் கழுவி வருவதற்குள்ளான 
ஐந்து நிமிட இடைவெளியில் 
நடமிட்ட மயிலையும்,பூக்களையும் 
சுருட்டி விரலிடுக்கில் வைத்துக்கொண்டது யார்?

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா...!

இராஜராஜேஸ்வரி said...

ஐந்து நிமிட இடைவெளியில்
நடமிட்ட மயிலையும்,பூக்களையும்
சுருட்டி விரலிடுக்கில் வைத்துக்கொண்டது யார்?

யாரது ???

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராஜ்ராஜேஸ்வரி அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Tamizhmuhil Prakasam said...

தோகை விரித்தாடும் மயிலுடன், மலர்ந்து சிரிக்கும் மலர்கள் வரைந்த கோரைப்பாய் அழகாய் கண் முன் நிழலாடுகிறது.

vimalanperali said...

கோரைப்பாய் இங்கு ஒருஉருவகமாகவே. தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக.கோரம் பாய் பின்னியவர்களின் தொலைந்துபோன வாழ்வைப்போல இங்கு காணமல் போய்விட்ட நிறையபேரது பறிக்கப்பட்ட வாழ்க்கைக்கு என பதில் இங்கே என்பது ஒரு மெகா சைஸ் கேள்விக்குறியாகவே/நன்றி.