19 Jul 2013

நினைவாஞ்சலி,,,,,,கடந்து போன சுபயோக சுபதினத்தில்தான் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.தூக்கு மாட்டிக் கொண்டு

வீட்டில் ஆளரவமற்று விடப்பட்ட தனிமையில் அந்தக்காரியம் நடந்திருக்கிறது


ஏன்,எதற்கு,எப்படி என்கிற விவாத வலைக்குள் நுழையும் முன்பாக என்ன நடந்தது எனப்
பார்க்கலாம்

 இன்றைக்கெல்லாம் இருந்தால் அந்தப் பெண்ணிற்கு 21 வயதைத் தாண்டாது.பெண்ணின்
திருமண வயது 19 என்கிற ஆட்டோக்களின் பின்புற வாசகங்களின் படி அவளுக்கு
திருமணமும் செய்து முடித்திருப்பார்கள்.

பார்த்தவுடன்பற்றிக்கொள்கிறஅழகுஇல்லையென்றாலும்கூடதுடைத்துவைத்தஇயல்பான அழகுடன்.பக்கத்துவீட்டுபிள்ளைகளிடம்பழகுகிறசினேகச்சிரிப்பும்,சினேகபாவமும்அரவணை க்கிற பேச்சுமாய் அந்த தெருவில் அவள் குடும்பத்துடன்./

 அம்மா தையல் தைத்து வருமானம் ஈட்டுகிறார்.அப்பா மில் வேலைக்காரர்.இரண்டுபக்கமும்
சிறியதும்பெரியதுமாய் மொட்டை மாடியும்மாடி வீடுமாய் முளைத்துக் கிடக்கிற தெருவில்
உள்ள வேப்பமர காளி கோவில் எதிரில்தான் அவள் வீடுஇவளையும் சேர்த்து வீட்டில் மூன்று
பேர்.ஆண் இரண்டு,பெண் ஒன்றுஅண்ணன்,இவள்,தம்பி என்கிற வரிசைக்கிரமம்./

கட்டியிருக்கிறநைட்டியுடனும்,மேலேபோட்டிருக்கும்துண்டுடனும்அந்தத்தெருவில்உள்ள  பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சென்று வருமளவுபழக்கமும்,சகஜமும்,நெருக்கமும்.

 இறக்கை முளைக்காத பட்டாம் பூச்சியாய் திரிந்த அவளிடம் இவனும்,இவனிடம் அவளும்

மனம் பறிகொடுக்க ஏதுவாய் இருந்திருக்கிறது.

இவள் பழகிய அத்தனை வீடுகளில் ஒரு வீட்டுக்கு பழக்கம் மற்றும் நட்பு முறையில் வந்து
போகும் அவன் B.A முடித்து விட்டுசொந்தமாக ப்ளாஸ்டிக் வியாபாரம் செய்பவனாம்.அது
தவிர்த்து சைடாக பிளைடு ,ஷேவிங் கிரீம் சோப்பு,பவுடர்,ஊறுகாய்,மசால் பொடி என
உள்ளுர் தயாரிப்புகளையும் வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்கிற ஏஜெண்டாய்./

அம்மாதிரியான அவனது வேலையும்,சுறுசுறுப்பும் 10 ஆம் வகுப்பு தாண்டாத அவளை
முழுமையாக அவள்பக்கம் ஈர்த்தும்,சாய்த்தும் விட்டது.

திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட இருவரும் ஆந்திராப் பக்கம் போய் திருமணம்
செய்து கொள்வதென தீர்மானிக்கிறார்கள்.(இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்காது,இருவரும்
வேறு,வேறு ஜாதி என்பதால் என நினைத்துஉள்ளூர் ரிஜிஸ்டர் ஆபீசெல்லாம் இவர்கள்
கண்களில் படாமல் போனதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.

 இருவரின் திருமண விஷயமும் ,அவர்களது பழக்க  வழக்கங்களும்  அந்தத் தெருவில்
 யாருக்கும் தெரியாத படியும்,சந்தேகம் வந்து விடாத படியும் நடந்திருக்கிறது.

அப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த  காதல்திருமணத்தில்
 போய் நின்றபோது .........,,,,பெண் வீட்டார் மிகவும் அதிர்ந்து போனார்கள்.நமது பெண்ணா,
இப்படியா?அவளை சுதந்திரமாக வளர்த்தது நமது முழு தவறு.என்கிற தவறான எண்ணத்துடன்  ஆந்திரா செல்கின்றனர் அவளது அண்ணன்,தம்பி,அப்பா மூவரும்./ 


அந்த ஊரில் அவளை கண்டுபிடிக்க அவள் கொடுத்திருந்த முகவரியே பெரிதும்உதவியிருக் கிறது"நாங்கள்இங்குதான்இருக்கிறோம்,திருமணம்செய்துகொண்டு,எங்களைதேடவேண்டாம். "என்கிற கடிதத்துடன்தான் அங்கு போயிருக்கிறார்கள்.

பத்து நாட்களாய்பிள்ளையைகாணாத தவிப்பை விடவேற்று ஜாதிக் காரனுடன்ஓடிப்போனாளே என்கிற எல்லை மீறிய கோபம் கண்ணை மறைக்க,எல்லை கடந்தது அண்ணன்,தம்பி.அப்பா மூவரின் செயல்களும்.

அவனை அடித்து துவைத்து விட்டு அவன் கட்டிய தாலியை அறுத்தெறிந்துவிட்டுபிள்ளையை கூட்டி வந்து விட்டார்கள் வீட்டிற்குஇம் மாதிரியான நேரங்களிலெல்லாம்அவர்கள் எம்மாதிரியான மன பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை பார்க்க மறுத்து./

 அவளை கூட்டி வந்த நாளிலிருந்து இந்த ஒரு வருடமும் அவள் தன்மையில்தான்,வீட்டுச்

சிறையில் தான்.அவர்கள் குடியிருந்த தெருவை  விட்டு அவளுக்காக இடம் மாறுகிறார்கள்.


அங்கிருந்தால் அக்கம்,பக்கம் என்ன,ஏதென்ற விசாரணை?
     
அவள் பாத்ரூம் போகும் நேரங்கள் தவிர்த்து அவளுக்காக காவல் இருந்தார்கள்அவளது

ஒவ்வொரு அசைவும் ரகசியமாக கண்காணிக்கப் படுகிறது அவளது வீட்டாரால்


 புதிதாக குடிவந்த தெருவில் யாருடனும் பழகிவிடக் கூடாது ,பேசிவிடக் கூடாது என்பதில்

கவனமாக இருந்தார்கள்தெரு முனையில் இருக்கும் காய்கறிக் கடைக்கோ,பலசரக்குக்கடைக் கோ போய் விடக் கூடாது.

பழைய ப்ரண்ட்ஸ்களை பார்க்கப் போகக் கூடாது.தெருவில் வரும் தேய்ப்பு வண்டியில்உள்ள குழாயில்  தண்ணீர் பிடித்து வர அனுமதி கிடையாது.காலையில் வீட்டு வாசலில் துணிகளை தேய்த்து வர அனுமதி கிடையாதுதெரு முனையில்கோலம் போடக் கூடாது.ஒரு கல்யாணம்சடங்குவீடு,வேறுவிழாக்கள்,,வைபங்கள்,சினிமா,சொந்தக்கார்ர்களின் வீடு.........எதுவும் கிடையாது
          
அவளின் கலர்க் கலரான இறக்கைகள் பிய்த்தெறியப்பட்டு நான்குபுறமும்அடைக்கப்பட்ட வீட்டின் சுவர்களுக்குள்ளேயே அவளது குடியிருப்பு.

செவிநிறைந்தவசைச்சொற்களோடும்,மனம் குத்திய இழிவுப் பேச்சுக்களோடும் நடை பிணமாய்
இருந்து வந்திருக்கிறாள்.

 நேர நேரத்திற்கான சாப்பாடு தண்ணி இத்தியாதி,இத்தியாதிகளெல்லாம் கூட அவளதுகுடும்பத் தாராலேயே அவளுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.


 எந்த நேரம் தன் வீட்டார்கள் தன்னுடன் இருப்பார்கள்,?எந்த நேரம் தன்னை வீட்டிற்குள்

வைத்து பூட்டிவிட்டு போய் விடுவார்களோ...,,,, என்கிற எண்ணத்தில்அவள்மனம்பேதலிக் காமலும் இல்லைசமயங்களில்அவளதுபெற்றோர்வெளியூர்போய்விட்டநாட்களில்நாள்முழுவதும் வீட்டிற்குள்  கிடந்து உழல்வாளாம்


சொல்லிப்பார்த்திருக்கிறாள்,கெஞ்சிப்பார்த்திருக்கிறாள்,அழுதும்அடம்பிடித்தும்உண்ணாவிரத மிருந்தும் பார்த்திருக்கிறாள்.வீட்டில்ம்ஹும்......,,,மசியவில்லை,அவளுக்காக

அவளது வீட்டில் பிறப்பிக்கப்பட்ட 144 தளர்த்தப் படவில்லை.


மனம்கிழிந்து,ரணமாகிதுடித்த அவள்,அனைவரும் அவளை வீட்டிற்குள்வைத்துஅடைத்துவிட்ட  சென்று விட்ட ஒரு சுப யோக சுபமுகூர்த்த நாளில் மின் விசிறியில் சேலையால் தூக்கு மாட்டிக் கொண்டு படு கோரமாய் இறந்து போகிறாள்.


 அவள் இறந்து இன்றோடு ஒருவருடம் ஆகிறதுஇந்த ஒரு வருடத்தின் முடிவில் நம்முன்
சில மெகா சைஸ் கேள்விகள் எழாமல் இல்லை.இப்படியாய் சடுதியில் நடந்து முடிகிற கோர
மரணங்கள் எதை  அறிவிக்கின்றன?
 
இப்படியானகோரமரணங்கள்நிகழகாரணம்எதுவாகஇருக்கிறது.இதுமாதிரியானநிகழ்வுகளைப் பற்றிதான நம்மின் பார்வையும் ,நமது சமூகத்தின் பார்வையும்தான் என்ன?இருமனங்களிலும் இழையோடிய காதலில் ஜெயித்து வாழ்க்கையில் வெற்றி கொள்ளும்லட்சியத்துடன் முன்னேறு ப வர்களை பிரித்துப் பார்க்கும் கோரப் பார்வை நமது சமூகஅமைப்பில் எத்தனை காலம்தான் நீடிக்கும்?

  அப்படி நீடிக்கிற கோரப் பார்வையை நீக்குகிற பொறுப்பும்,கடமையும் யாருக்கு உள்ளதாய்
நினைக்கிறோம் என்பதே இந்த எழுத்தின் கேள்வியாக./ 

4 comments:

 1. சம்பவம் கொடுமை... இந்தக் கோரப் பார்வையும் என்று தீருமோ...? தீரும்... எல்லாவற்றிக்கும் ஒரு தீர்வு உண்டு...

  ReplyDelete
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. காதல் செய்ததை குற்றமெனக் கருதி, தனிமையை தண்டனையாய்க் கொடுக்க அது உயிரினைப் பறித்து விட்டது.இந்தக் கொடுமைகள் தீர வேண்டும்.

  ReplyDelete
 4. இருகிறகொடுமைகள் தீர்க்கப்படுகிற நாள்வரை இங்கே இப்படி பார்க்கபடுகிற அவலம் நடக்கும்தான்,தமில் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்டுரைக்குமாக்க/

  ReplyDelete