காரணமற்ற காரியங்கள்
விழைகிற தருணங்கள் நம்மில்
நிறைந்தும்
நிறைவற்றுமாய்/
நண்பனைப்பார்க்க
வேண்டும்,
தோழனுடன் பேச
வேண்டும்.
உறவுகளிடம்
கேட்க வேண்டும்.
ஊரிலிருக்கிற
தாயைப்பார்க்கச்செல்ல வேண்டும்.
தோழர் கோட்டையிடமும்,முத்துக்குமாரிடமும்
ஏனைய பிறரிடமுமாய்
பேச வேண்டிய விஷயங்கள்
நிறைந்தே கிடக்கிறதுதான்.
திருமணம்,விஷேச
வீடு,சடங்கு,
ஆஸ்பத்திரி,பாய்
தேநீர் கடை,
சினிமா தியேட்டர்,ப்ரௌசிங்
சென்டர்
இன்னும்,இன்னும்,,,,,,,,,,,,,,,,,
என
எல்லோரிடமுமாய்
சென்று
உறவாடி அளாவளாவ
வேண்டும்
என்கிற நினைவுடனும்,ஆசையுடனுமாய்
கழிகிற பொழுதுகள்
என்னில் காரணமற்ற
காரியங்கள்
விழைகிற தருணங்களை
ஏற்படுத்தி
விடுகிறதுதான்.
2 comments:
புரிகிறது...!
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது
வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment